குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, November 13, 2024

208 - பாரதி களஞ்சியம் - ஐநூறு அறிஞர்களின் கட்டுரைகள் கொண்டு ஆக்கப்படும் தொகுப்பு

பாரதி களஞ்சியம் என்ற ஒரு தொகுப்பு தமிழகத்தின் ஐநூறு அறிஞர்கள் பாரதியை அறிந்து படைத்தளித்திருக்கும் ஐநூறு கட்டுரைகளின் தொகுப்பாக, பத்து தொகுதிகள் உள்ள, சுமார் 5000 பக்கங்கள் உள்ள நூற்தொகுதியாக வெளிவர இருக்கிறது. வர்த்தமானன் பதிப்பகம் இந்த பெருஞ்செயலில் ஈடுபட்டிருக்கிறது. 




இந்த ஐநூற்றுவரில் ஒருவனாக எனது கட்டுரையும் இணைந்திருக்கிறது என்று அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். பாரதி என்னும் பன்முகப் பாவலன் என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை இடம்பெறுகிறது. 

கட்டுரையின் முன்னோட்டம் இவ்வாறு தொடங்குகிறது...


()


பாரதி என்னும் பன்முகப் பாவலன்

முன்னுரை:

பாரதி என்ற சொல்லே ஒரு மந்திரம்.

உலகின் மாபெரும் கவிஞர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. அவர்கள் வாக்கினில் பிறந்த சொற்கள் தனித்தன்மையுடையனவாக இருக்கும். அவை எளிய சொற்களாகவே இருக்கலாம், ஆனால் அவை சுட்டும் பொருளுடன் இணைந்து வரும் போது அவற்றிற்குத் தனியொளி உண்டாவதை இயல்பாகப் பார்க்கலாம். உன்னதக் கவிகளுக்கான இலக்கணம் அவர்களின் சொற்கள் வழி விளையும் இம்மாயமே.

சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து என்பது நாவலப் பெருமகன் வாக்கு. உன்னதக் கவிகளின் சொற்கள் அவ்விதமான தனித்தன்மை பொருந்தியன. அத்தகு சொற்களே வாக்காகின்றன.

பாரதியோ 'மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்று முழக்கமிட்டு வந்தவன். தனது சொற்தேர்வின் சிறப்பைப் பற்றிய அவனது நம்பிக்கைதான் தன்னைக் கவியரசர் என்று அவனைச் சொல்லிக் கொள்ள வைத்தது. சொல் ஒன்று வேண்டும்; தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் ஒன்று வேண்டும்' என்று முரசறைய வைத்தது. அந்தச் சொல் உண்மையின் ஒளியை ஏந்தி வரும் போது, அது வாக்கு ஆகின்றது. எல்லாச் சொல்லும் சொல்லன்று; கவியின் நில்லாச் சொல்லே சொல் என்று சொல்லத்தக்க சொல், வாக்காவது கவி வாக்கினில்தான். இப்போது அடுத்த வாள்வீச்சு வந்து விழுகின்றது, உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்!’. பாரதியின் சொற்கள் அனைத்தும் அழிவில்லாதொளிர்வதன் கூறு இதுதான். அவை அவனது உயிரின் ஒளியையும் கொண்டு, வெறும் சொல்லாக மட்டுமின்றி, வாக்காகவும் மாறுகின்றன. எனவே உண்மையைத் தேடுபவனே கவி என்ற கருதுகோள் ஏற்பட்டது.

அதனையும் தான் எழுதிய நூலொன்றில் பதிவு செய்கிறார் பாரதி. அரவிந்தரின் நூலொன்றுக்கு எழுதிய முன்னுரையில் 'And whatever aspect of the poetic art may appeal most to the mind of the lay leader, the poet themselves have always regarded true poetry as the right expression of the soul truth of things. The vedic name for the poet Kavi, means a seer. எனவே கவி என்பவன் உண்மையைத் தேடுபவன். கவியின் சொல் ஒளி வாக்கு. எனவேதான் பாரதியின் வாக்கினில் 'ஒளி உண்டாவது' பற்றிய பேச்சு வருகிறது.

இந்த ஒளி வாக்கும் எதன் பொருட்டுப் பிறந்தது, எதன் பொருட்டு ஒளி வீசிற்று என்று சிந்திக்க வேண்டுமல்லவா? அதற்கும் கவி வாக்கிலேயே விடை வந்து விடுகிறது. அரசியல், பண்பாட்டு, பொருளாதாரப் புலங்களிலே புத்தொளியைப் பாய்ச்சி ஒரு புதிய மரபை உண்டாக்கத் துடிக்கும் ஒரு சிந்தனை. அதுவும் எப்படிப்பட்ட சிந்தனை? தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் இல்லையென்ற வசை என்னால் கழிந்தது என்ற அவனை முழக்கமிட வைத்தது அந்த சிந்தனைதான்; அது

புவியனைத்தும் போற்றிட வான் புகழ்படைத்துத்

தமிழ் மொழியைப் புகழிலேற்றும்

கவியரசர் தமிழ் நாட்டுக் கில்லையெனும்

வசையென்னாற் கழிந்த தன்றே!

என்று பறைசாற்றும் துணிவைக் கொண்டிருந்த சிந்தனை ! எத்துனை திடமும், அறிவும், திறமும் கொண்டிருந்தால் இத்தகைய ஒரு பறைசாற்றல் ஒருவருக்கு இயலும்? ஆக, மந்திரம் போல் ஒரு வாக்கு, அந்த வாக்கினில் சுடரும் ஒளி, ஒளியுண்டாக்கும் அவ்வாக்கு படைத்துக் காட்டப் போகும் புதிய சிந்தனை என்று இத்தனை விடயங்களும் தீர்மாணிக்கப்பட்டு வெளிவருகின்றன. இவற்றை அகத்தில் கண்ணுற்றுத் தெளிவாக முன்வைத்த ஒன்றிலேயே, பாரதியின் தனித்தன்மை செறிவாகப் புலப்பட்டு விடுகிறது. இந்தத் தனித்தன்மை வாய்ந்த கவியின் மனவெளிக் கூறுகள் வெளிப்பட்ட அறிவொளியின் நிறப்பிரிகைகளினூடே சிறிது பயணித்துப் பார்ப்போம்.....

()

அடக்க விலையில் ரூ 2500 க்கு இந்தப் பத்துத் தொகுதிகளும் முன்பதிவுக்குக் கிடைக்கின்றன. விவரங்கள் இணைப்பில். 

பாரதி களஞ்சியம் தொகுதியை வாங்கிப் படித்து தமிழின்பம் பெற அன்போடு அழைக்கிறேன். 





No comments:

Post a Comment

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...