தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்
முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்
பின் பயக்கும் பீழை பெரிது
நூல்: மூதுரை
ஆசிரியர்: ஔவையார்
பாடல் எண்: 3
முக்கிய சொற்கள்:
தொடங்கும் கால- தொடங்கும் பொழுது
மடம்-அறியாமை
நெடுங்காமம்- நெடிது காமத்தில் திளைத்திருத்தல்
பீழை-துன்பம்
முற்றிழாய் - முடிந்த தொழில்களையுடைய நகைகளை அணிந்திருக்கும் பெண்(அழைப்பு விகுதி)
பாடல் பொருள் :
நகைகளை அணிந்த, வினைகளை முடித்திருக்கும் பெண்ணே, கல்வியானது கற்கத் தொடங்கும் போது துன்பமாக இருப்பது போல் தோன்றினும் பின்பு இன்பம் கொடுக்கும்;அதுவல்லாமலும் அறியாமையை அகற்றி அறிவைக் கொடுக்கும்; ஆனால் காமம் தொடக்கத்தில் தரக் கூடிய சிறிதளவே நிலவும் இன்பத்தைக் கொடுப்பினும்,இன்ப நுகர்ச்சிக்குப் பின்னால் தரக் கூடிய துன்பம் மிகப் பெரிது.
டிட் பிட்ஸ்:
- கல்வி கற்காது,காதல்,காமம் என்று பொழுதைப் போக்கும் வழக்கம் எக்காலத்திலும் இருந்திருப்பதை இப்பாடல் சொல்கிறது. :)
- காமத்திலும் காதலிலும் இன்புற்று கல்வியை மறப்பவர்களுக்கு,காமத்தை எடுத்துக் காட்டி கல்வியை வலியுறுத்தும் விதமாக உள்ள பாடல்.
- கல்வி கல்லாது,திருமணத்தை நாடும் பெண் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது இந்தப் பாடலின் விளிப்பு.
- அறியாமை(மடம்) நீங்கவே அதுனுள்ளிருந்து அறிவு வெளிப்பட்டு ஒளிவீசும் என்ற குறிப்பையும் தருகிறது.
5 | 365
அருமை... நன்றி சார்...
ReplyDeleteஅனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
நன்றியும் வாழ்த்துக்களும் தனபாலன் சார்.
ReplyDelete