ஒரு அவசிய முன்னுரையும்,எச்சரிக்கையும்(!?) :
இந்தப் பதிவுத் தொடரை என்னுடைய இன்னொரு வலைமனையான மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற பக்கத்தில் எழுதுவேன் என்றே முதலில் அறிவித்திருந்தேன்.
ஆனால் அதில் சில தொழில்நுட்பப் பிரச்னைகளால் திரட்டிகளில் இணைப்பதில் சங்கடங்கள் தோன்றின.
எனவே எனது முக்கிய வலைப் பக்கமான சங்கப்பலகையிலேயே தினமொரு பாடல் வெளிவருகிறது.
ரசிப்பதோ,தவிர்ப்பதோ உங்கள் கைகளில் !
:))
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
_________________________________________________________________________________
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. - திருக்குறள் 1-1
நூல்: திருக்குறள்
அதிகாரம்-கடவுள் வாழ்த்து
பாடல் எண்-1
சொற் பொருள்:
அகரம்- தமிழ் மொழியின் எழுத்துக்களின் முதல் எழுத்தான 'அ'
ஆதி பகவன்-முழுமுதற் கடவுள்
பொருள்:
எழுத்துகளுக்கெல்லாம் அ'கரம் எவ்வாறு முதலாக விளங்குகிறதோ,அது போல இந்த உலகம் கடவுளை முதலாகவும் அடிப்படையாகவும் கொண்டிருக்கிறது.
டிட் பிட்ஸ்:
தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்று.சொல்லப்போனால் உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே என்பதற்கான புறச்சான்றுகளையும்,விவாதச் சான்றுகளையும் எளிதாகக் காண இயலும். இது பற்றி விளக்கமாக கந்தையா,பாவாணர்,மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் பலர் பல நூல்களில் விளக்கி எழுதியிருக்கிறார்கள்.
தமிழ் மொழியின் மொழி அமைப்புக் கட்டு வியக்க வைப்பது.
தமிழின் இன்றைக்குக் கிடைத்த முதல் நூலாகக் கருதப் படும் தொல்காப்பியமே ஒரு மொழிக்கான இலக்கண நூல்.
எழுத்து,சொல்,பொருள் என மொழியின் அடிப்படைகளுக்கான விதிகளை தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கும் ஒரு நூல்,இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் காலத்தால் மிக முந்தைய நூல்.
அத்தகைய எழுத்துக்களுள் முதன்மையான, உயிர் எழுத்துக்களில்,இன்னும் முதன்மையாக,முதல் எழுத்தாக வருவது அ' என்ன அகரம்.
அகரம் என்ற சொல்லே வியந்து பார்த்து ஆய்வுக்குட்படுத்த வேண்டியது. மெதுவாக இச்சொல்லை எழுத்து எழுத்தாக உச்சரித்துப் பார்த்தால்,சில ஆழ்ந்த பொருள் உங்களுக்கு விளங்கும்.
மனிதன் ஓசை எழுப்பும் விதம் வாய்,நாக்கு,தொண்டையில் உள்ள குரல்நாண் போன்ற உடற்கருகவிகளின் மூலமே.இதில் அ என்ற எழுத்து, மிகுந்த முயற்சியன்றி, தொண்டைக்கு அருகில்,குரல்நாணில் இருந்து எழுப்பப் படும் சப்தம்;அடுத்ததாக உள்ள க' மூக்கின் அடிப்பாகமான உள்நாக்குக் கருகில் உள்ள இடத்திலிருந்த எழுப்பப் படும் சப்தக் குறியுடன் விளங்குவது.அ என்ற எழுத்தை நோக்க இன்னும் சிறிது அதிக முயற்சி தேவைப் படும் உச்சரிப்பு,க' எழுத்துக்கு வேண்டும். அடுத்த எழுத்தான ர' வாய்க்குள் இன்னும் சிறிது முன்வந்து,நாக்கின் மேலண்ணத்தில் மேல் பற்கள் வரிசைக்கு சிறிது மேல் புறத்திலிருந்து எழும் ஓசைக்குரியது.க'வை உச்சரிப்பதை விட இன்னும் சிறிது முயற்சி ர'வை உச்சரிப்பதற்கு வேண்டும். கடைசி எழுத்தான ம்' வாயின் வெளிப்புறமான உதடுகள் மூடிய நிலையில் வெளிப்படும் ஓசை.
ஒரு மொழியின் எழுத்துகளின் வரிசையைப் பொதுவாகக் குறிக்கும் அகரம் என்ற சொல்லின் உச்சரிப்பிலேயே, தொண்டையின் குரல் நாண்,உள்நாக்கு,மேலண்ணம், நுனி நாக்கு மற்றும் உதடுகள் என ஓசை எழுப்பும் கருவிகள் அனைத்தும் சிறிது சிறிதாக, ஒத்திசைந்து எழுப்பப்படும் ஓசைகளைக் கொண்டதாக அமைந்திருப்பது எவ்வளவு விந்தை?!
இன்னும் அகரம் என்ற சொல்லின் எழுத்துக்களான
அ-உயிர் எழுத்து
க-மெய்-வல்லினம்
ர-மெய்-இடையினம்
ம்-மெய்-மெல்லினம்
என்றும் அழகாக எழுத்துகளின் வகைப்படுத்தல்களில் ஒவ்வொரு வகைக்கும் ஒரு எழுத்தைச் சேர்த்துக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சொல் அகரம்.
இவ்வளவு நுணுகிய அமைப்புச் சிறப்புடன் கூடிய மொழி உலகில் எங்காவது உண்டா??
இது போன்ற பல ஆய்வு விளக்கங்கள், தமிழே, பேசத் தெரிந்த மனிதன் ஆக்கிய உலகின் முதல் மொழி, என்று நிறுவப் போதுமானவையும் துணையானவையும் ஆகும்.
1 | 365

சிறப்பான தொடக்கம்... பாராட்டுக்கள்...
ReplyDeleteவிளக்கமான உரை...
வாழ்த்துக்கள்... நன்றி...
பாராட்டுக்கும் உற்சாகமான ஆதரவிற்கும் நன்றி தனபாலன்.
Deleteஅகரத்தின் விளக்கம் அருமை.
ReplyDeleteநன்றி முரளிதரன்.
Deleteமொழிக்கு முதலே அகரம்தானே..
:)
தமிழ் இனிமை
ReplyDeleteஅகரத்துக்கே இவ்வளவு சிறப்பெனில் தமிழின் இனிமையைச் சொல்லவும் வேண்டுமோ?!!!
அ. உயிரெழுத்து
ம். மெய்யெழுத்து
மா. உயிர்மெய் எழுத்து
தமிழின் இனிமைக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையா?
தங்களின் தமிழ்த் தொண்டுக்குத்
தலை வணங்குகிறேன்!!!