நட்சத்திர வாரத்தில் ஒரு மீள்பதிவு போடலாம் என்ற அறிவிக்கப்படாத விதிக்கு ஏதுவாக இந்த ஒரு பதிவு.என்ன ஒரு மீள்பதிவாக இல்லாமல் எனது இதுவரை எழுதிய பதிவுகளில்,எனக்கு திருப்தி அளித்த,அல்லது பரவலாக பாராட்டுப் பெற்ற சில பதிவுகளை அறிமுகப் படுத்தலாம் என விழைவு.
எனவே....அனுபவியுங்கள்,யாரு விட்டா????
1.பதிவுகள் எழுதலாம் என்பது திடீரென்று எடுத்த ஒரு முடிவு.எழுத்துப் பயிற்சி இருந்தாலும்,பதிவுகளின் வசதியும்,தமிழ்மணம் மற்றும் திரட்டி வசதிகளும் ஒரே நேரத்திலேயே அறிமுகம் ஆயின.எனவே முதல் பதிவுக்கென ஏதும் புதிதாக யோசித்து ஆரம்ப அமர்க்களங்கள் செய்து எழுதவில்லை, just like that எழுத ஆரம்பித்தேன்.ஆனால் எழுதிய விதயம் கொஞ்சம் ஆழமானதுதான், 1-நாம் என்ன செய்ய முடியும் ? என்ற தலைப்பில்..
2.சுதந்திர தினத்தன்று எழுதிய ஒரு பதிவு.பதிவிம் அடக்கம் என்னவோ முதல் பதிவின் தொடர்ச்சியே என எண்ணுகிறேன்.. 60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 2
3.இளமையின் நினைவுகள் எப்போதும் அழகானவை.அழகான எல்லாமே மகிழ்வானவை-A thing of Beauty is Joy forever ! எப்போதோ எழுதிய ஒரு கவிதை இந்தப் பதிவில் ! தேவதைகள் மறையும் பொழுது...
4.நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கான மன,மற்றும் சமூகக் காரணிகளை அலசிய இந்த இரு பதிவுகளும் சில நண்பர்களால் பெரிதும் பாராட்டப் பட்டன.
சரத்குமார விஜயகாந்தர்கள்,
சரத்குமார விஜயகாந்தர்கள் 2
5.பாலியல் கலிவியின் தேவை மற்றும் அல்லது பற்றி விவாதித்த இந்த பதிவு வந்த அல்லது அடுத்த வாரத்தில் விகடன் இதழிலும் இதே பொருள் தொடப்பட்டிருந்தது.இது திண்ணை இதழிலும் வந்தது.
^^^ பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை
6.என்னுடைய ஐயாவைக் குறித்து எழுதப்பட்ட இந்தப்பதிவு,எனக்கும் படித்த சிலருக்கும் பெரும் நெகிழ்வை ஏற்படுத்திய ஒன்று.என்னவோ இதை எழுத வேண்டும் எனத் தோன்றியது,இந்தப் பதிவு வெளியிட்ட சில மாதங்களில் அவர் மறைந்தார்... 27-வாழ்க்கை,குடும்பம்,மகவு ??????????
7.ஐடியாளர்களின் பார்வை குறித்த இந்தப்பதிவும் சில நல்ல விவாதங்களை ஏற்படுத்தியது,சில தூற்றல்களையும் கூட... 31- ^^^ ஐடி'யாளர்களின் பார்வை சரியா,தவறா?
8.புதுக்கவிதையையும் ரசிக்கப்பிடிக்கும் நான் ஒரு மரபு நேசன்.நன்றாக வந்திருக்கிறது என்று நான் நம்பும் ஒரு விருத்தம் இது... 37.அந்தக் கணமும் , சில பொழுதுகளும்...
9.தெகா எழுதிய ஒரு பதிவில் சில கருத்துக்கள் சொல்லப் போக,எழுந்த யோகாசனத்தைப் பற்றிய விளக்கப்பதிவு இது. 40.யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும்
10.சில சிறுவயது நினைவுகள் சுவாரசியம் கொண்டுவருபவை,அந்த வகையில் இது பரவலாக ரசிக்கப்பட்ட ஒரு பதிவு. 49.லாம்ப்ரட்டா ஸ்கூட்டரும்,ஆண்கள் வயதுக்கு வருவதும்
11.ஜப்பானின் 5S உற்பத்தி முறைகளைப் பற்றிய அலசிய இதுவும் நான் விரும்பும் பதிவுகளுல் ஒன்று. 58.^^^ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
12.பெ.நா.அப்புஸ்வாமி பற்றி எழுதிய,எனக்குத் திருப்தியளித்த,பலரின் பாராட்டுக்களைப் பெற்ற பதிவு. 59.^^^அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன்
13.தமிழுக்கும் சிவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேசும் இப்பதிவு எழுதத் தூண்டிய விதயம் ரவிசங்கரின் பதிவில் ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களே.இது எழுதுவதற்காகவே நான் நிறையப் படிக்க வேண்டியிருந்தது.இன்னும் இந்தத் தொடர் பதிவை நான் முடிக்க இயலவில்லை.ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை இத் தொடர்பதிவு தரும் என நான் நம்புகிறேன். 66.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும் !
மற்றபடி நட்சத்திர வாரம் வந்தால் எழுத வேண்டும் என்றே குறித்து வைத்திருந்த பல தலைப்புகளில் எழுத இயலாது போயிற்று...காரணம் நேர மேலாண்மையில் ஏற்பட்ட சிக்கல்கள்.நட்சத்திர வாரம் தொடங்கிய நாள் அன்று பணி நிமித்தம் நான் அயல்நாட்டில் இருந்தேன்,அன்று நடு இரவுதான் சிங்கப்பூருக்கு வந்தேன்,தொடர்ந்த அவசர அலுவல்கள் காரணமாக நட்சட்திரமாக எழுத எண்ணியிருந்த பல விதயங்கள் எழுத இயலவில்லை..எனினும் அவை குறித்து சமயம் கிடைக்கும் போது எழுதுவேன்.
அவசரமாகத் தயாரித்த இன்னும் மூன்று தலைப்புகளில் பதிவுகள் முக்கால் வாசி முடிந்து நிற்கின்றன;இயன்றால் அடுத்த நட்சத்திரம் மேடையைப் பிடிக்கும் முன் நாளை அவற்றை அரங்கேற்ற முயற்சிக்கிறேன்.
ஒரு நல்ல வாசிப்பை அளிக்க வேண்டும் என்றெண்ணிய எனது முயற்சி,என் விழைவுக்கேற்ற வகையில் நிறைவேறாதது எனக்கு வருத்தமே..மற்றபடி வாய்ப்புக்கு தமிழ்மணத்திற்கும்,வாசித்த அனைவருக்கும் நன்றி !
தபால்கார அப்துல்காதர் - எம். எஸ். கல்யாணசுந்தரம்
-
சென்ற வருஷம் பெர்னாட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது, “இவ்வூரில் பார்க்கத்
தகுதியானவை என்னென்ன?” என்று விசாரித்தார்.
“நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்ட...
1 year ago
//தொடர்ந்த அவசர அலுவல்கள் காரணமாக நட்சட்திரமாக எழுத எண்ணியிருந்த பல விதயங்கள் எழுத இயலவில்லை..எனினும் அவை குறித்து சமயம் கிடைக்கும் போது எழுதுவேன்//
ReplyDeleteநட்ச்சத்திர வாரத்தின் போது இல்லை என்றால் என்ன..உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.
உங்களுடைய லாம்ப்ரட்டா பதிவு ரொம்ப பிடித்தது :-)
//வாய்ப்புக்கு தமிழ்மணத்திற்கும்,வாசித்த அனைவருக்கும் நன்றி !//
நல்ல பதிவுகளை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கும் நன்றி
நன்றி நண்பர் கிரி..
ReplyDeleteஇருந்தாலும் நட்சத்திரமாக எழுதினால் பார்வைக்களம் அதிகமாக இருக்கும் இல்லையா?
நான் சொல்ல எண்ணியிருந்த சில விதயங்கள் அதிகமான பார்வைக்களத்திற்குப் போக வேண்டும் என் எண்ணியிருந்தேன்..
அதனால் என்ன..காலம் நிறைய இருக்கிறது !
நிறைய பதிவுகளை தர இயலா விட்டாலும், படிக்காத பல நல்ல பதிவுகளின் சுட்டிகளைக் கொடுத்ததற்கு நன்றிகள்!!!
ReplyDeleteதமிழ்ப்பிரியன்,நிறைய கொடுக்க விருப்பும் தகுதியும் இருந்தும் நேர மேலாண்மை சொதப்பி விட்டது-எனவேதான் பருந்துப் பார்வை..
ReplyDelete//நான் சொல்ல எண்ணியிருந்த சில விதயங்கள் அதிகமான பார்வைக்களத்திற்குப் போக வேண்டும் என் எண்ணியிருந்தேன்//
ReplyDeleteவழிமொழிகிறேன்.
////மற்றபடி நட்சத்திர வாரம் வந்தால் எழுத வேண்டும் என்றே குறித்து வைத்திருந்த பல தலைப்புகளில் எழுத இயலாது போயிற்று...////
ReplyDeleteஅதனால் என்ன? மின்னுகின்ற எழுத்தெல்லாம் நட்சத்திர எழுத்துக்கள்தான்.தொடர்ந்து எழுதுங்கள். வாரம் மாதத்தை எல்லாம் மறந்துவிட்டு!
நண்பர் சுப்பயா அவர்களே,உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
ReplyDeleteநட்சத்திர வாரத்தின் முதல் பதிவின் முதல் பின்னூட்டம் உங்களுடையதே என நினைக்கிறேன்.
மீண்டும் நன்றிகள்.