சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகுமார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்,அது அவரின் பள்ளித் தோழர்களை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி.
அவருடன் எட்டாம் வகுப்பிலோ அதற்கும் கீழான வகுப்பிலோ படித்தவர்கள் சிலர் தொலைக்காட்சியில் தலை காட்டினார்கள்.அவர்களில் சில பெண்களும் அடக்கம்.சொல்லத்தேவையன்றி அவைவருன் அவர்களின் இறுதி 50 களின் வயதில் இருந்தார்கள்.
ஆயினும் அவர்களிடையே பெண்களுக்கு நடிகர் சிவகுமாருடன் பேசுவதற்கும்,அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் மிகவும் சங்கோஜப்படுவது தெளிவாகத் தெரிந்தது.
இத்தனைக்கும் சிவகுமார் ஒன்றும் இன்றைய கனவுக் கதாநாயகன் அல்ல;மேலும் அவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் பள்ளித் தோழர்கள்,எனினும் இவ்வளவு மனத்தடை அவர்களுக்கு இருக்கிறது,இந்த 2008 லும்.
இதே காட்சியை இன்றைய ஒரு கல்லூரிக்கோ அல்லது மெரீனா கடற்கரைக்கோ எடுத்துச் செல்லுங்கள்;இளைஞர்களும்,இளைஞிகளும் உல்லாசமாகப் பேசி சிரித்து விளையாடுவதைப் பார்க்கலாம்.
60 களில் இருந்த ஆண்,பெண்களுக்கிடையேயான மனத்தடைகள் இப்போது இல்லை-கல்லூரி அளவில்.
இதே மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்று,திருமணம் ஆனபின் வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போது இந்த் நட்பும்,அன்பும் உரிமையும் அவர்களிடையே இருக்கிறதா???
60 களை ஒப்பிடும் போது நிச்சயமாக முன்னேற்ற மாறுதல் இருக்கத்தான் செய்கிறது;மறுக்க முடியாது.ஆனால் இந்த நட்பு திருமணத்திற்கு முன்னர் இருந்தது போல இரு பாலரிடமும்,திருமணத்திற்குப் பின்னர் நிலவுகிறதா?
அவர்கள் குறைந்தபட்சம் தினமோ அல்லது வாரம் ஒருமுறையோ தொலைபேசிக் கொள்வதாவது நடக்கிறதா?
சரி,அவர்கள் குடும்ப நண்பர்களாக நீடிக்கிறார்களா?
ஆய்வுக்குரிய ஒன்று !
நிச்சயம் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்க வாய்ப்பிருக்கிறது;இரண்டாம் நிலை நகர்கள் மற்றும் கிராமங்களில் ?????
வெளிநாடுகளில் நெடுங்காலமாக பணியின் பொருட்டோ,தொழிலின் பொருட்டோ தங்கும் நம் மக்களுக்கு இந்த விதமான எண்ணப்பாடுகள் இருக்கின்றனவா என்ற சிந்தனையில் எனக்குப் போதுமான மறுமொழி கிடைக்கவில்லை.ஏனெனின் வெளிநாட்களில் நமக்கு ஒரு சமூகச் சுற்றம் ஏற்படுவதற்கு சுமார் 5 வ்ருடங்களோ அல்லது அதற்கு மேலுமோ ஆகலாம்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் பருவம் பெரும்பாலும் இளமைப்பருவம் முடிந்து 30 களின் துவக்கத்தில் அல்லது 20 களின் இறுதியில் தான் அமைய வாய்ப்பிருக்கிறது.
இந்த காலகட்டத்தில் மறுபாலின நட்பு ஏற்படுவதை விட காதல் ஏற்படவோ அல்லது திருமண நோக்கிலான அறிமுகங்களோதான் பெரும்பாலும் சாத்தியம்.
திருமணத்திற்குப் பின்னர் இந்த மாதிரி மறுபாலின நட்பு ஏற்படுவது சாதாரணமாக காணப்படுவதில்லை என்றே நினைக்கிறேன்...
இதற்கான விதி விலக்குகள் உண்டு;சொல்லப் போனால் விதி விலக்குகள் எங்கேயும் உண்டு.(Exceptions are prevalent everywhere at any scenario) என்பது ஒரு தங்க வாக்கியம்!
ஆக,மறு பாலின நட்பு,ஆரோக்கியமாக நிலவும் சூழல் கல்லூரி மற்றும் அது முடியும் காலம் சார்ந்த பருவத்திலேயே முகிழ்ந்து,முதிர சாத்தியம்.
இந்த சிந்தனையின் நீட்சி,இரு விதப்படும்.
இந்த ஆரோக்கிய நட்பு தொடர்ந்து,குடும்ப நட்பாக,அந்தந்த நண்பர்களின் குழந்தைகளுக்கிடையே வரை நிலவும் நட்பாகக் கிளைப்பது ஒன்று.
அவரவரின் திருமணத்திற்குப் பின்னர் சிலகாலம் தேயும் கால இடைவெளிகளில் சில தொலைபேச்சுக்கள்,பின்னர் எப்போதாவது எங்காவது சந்தித்தால் மட்டும் புன்சிரித்து அளவளாவிப் பின் பிரியும் அளவில் நிற்பது ஒன்று.
மூன்றாவது மோசமான ஒன்று-முற்றாக வெட்டப்படுவது,இதற்கு அவரவரின் சோடிகளிடை நிகழும் மனஅழுத்தங்களும் உளவியல் காரணிகளும் முக்கியக் காரணங்கள்.
முதலும் மூன்றாவது நிலையும் முற்றிலும் புரிந்து கொள்ளப்படக் கூடியவை.
பல திரைப்படங்கள் கூட இந்த நிலைகளை விவரித்து வந்து விட்டன.
கார்த்திக்,ரகுவரன்,ரேவதி நடித்து வெளிவந்த ஒரு படம்,பெயர் நினைவில்லை-இரண்டாவது நிலையைத் தொட்டுச்,பின் மூன்றாம் நிலையை எட்டி, பின்னர் முதல் நிலைக்குத் திரும்புவது போல சித்தரிக்கப்பட்டது.
அத்திரைப்படன் சொல்லும் காரணங்களான பரஸ்பர சந்தேகங்கள் தான் இவ்விதமான நல்ல நட்புகளும் சிதையக் காரணமா?
ஆம் எனில்,இவ்வித பூஞ்சையான(fragile) நம்பிக்கையற்ற ஒரு அடித்தளத்தில் தான் நமது திருமண பந்தங்கள் கட்டப்படுகின்றனவா?அல்லது மனிதனின் ஆதிகால பெண்கள் பொருட்டான உடைமை உணர்ச்சி(ownership) தான் இவற்றிற்கான காரணிகளா?
ஆண்களுக்கிடையான ஆண்பாலின நட்புகளோ,நண்பர் வட்டமோ,பெண்களுக்கிடையான் பெண்பாலின நட்பு,நண்பிகள் வட்டமோ திருமணத்திற்குப் பின்னர் பெருமளவு பாதிக்கப் படுவதில்லை;ஆனால் மறுபாலின நட்பு சிறிதோ,பெரிதான அளவிலோ மாறுதல் அடைகிறது,என்பது அனுபவங்களிலேயே கிடைக்கிறது.
நட்பின் மரியாதையையோ,நண்பர்/நண்பிகளை புண்படுத்தக் கூடாது-அதாவது நட்பினால் அவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படலாம் என்ற நோக்கில்-என்ற அளவில் நட்பை முறித்துக் கொள்வதுதான் நல்லாதா?
கார்த்திக் கூட அந்தப்படத்தில் அதைத்தான் செய்வார்.
ஆனால் திரைப்படங்கள் மூன்று மணி நேர முடிவில் ஒரு சுபம் போட வேண்டும் என்பதற்காக,கணவர்கள் மனைவிக்காக அவரது ஆண் நண்பரை மதிப்பதும்,மனைவிகள் கணவருக்காக அவரது பெண் நண்பர்களை ஏற்றுக் கொள்வதும் நடக்கலாம்.(இதில் கூட இரண்டாவது சூழலைத் திரைப்படங்கள் கூட காட்டியதாக நினைவில்லை !)
உண்மை,நடைமுறை வாழ்வு எத்தகைய தீர்வுகளை,கூறுகளை முன்வைக்கிறது ??????
தபால்கார அப்துல்காதர் - எம். எஸ். கல்யாணசுந்தரம்
-
சென்ற வருஷம் பெர்னாட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது, “இவ்வூரில் பார்க்கத்
தகுதியானவை என்னென்ன?” என்று விசாரித்தார்.
“நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்ட...
1 year ago
கல்லூரி காலம் முடிந்த பின்னர் என்ன நடக்கிறது என்பதை விட
ReplyDeleteகல்லூரி காலத்திலேயே மறு பாலின் நட்பு எப்படி உள்ளது என்பது தான் முக்கிய விஷயம்
“நாம் பிரண்ட்ஸாகவே இருப்போம்” என்ற வசனம் பேசப்பட்ட உறவை திருமணத்திற்கு பின் தொடர பெண்ணிற்கு விருப்பம் இருக்காது அல்லவா
--
//ஆண்களுக்கிடையான ஆண்பாலின நட்புகளோ,நண்பர் வட்டமோ,பெண்களுக்கிடையான் பெண்பாலின நட்பு,நண்பிகள் வட்டமோ திருமணத்திற்குப் பின்னர் பெருமளவு பாதிக்கப் படுவதில்லை;ஆனால் மறுபாலின நட்பு சிறிதோ,பெரிதான அளவிலோ மாறுதல் அடைகிறது,என்பது அனுபவங்களிலேயே கிடைக்கிறது.//
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் ஆணின் ஆண்பாலின நட்பு வட்டத்தை விட ஆணின் மறுபாலின நட்பு வட்டம் குறைவு என்பதும் பெண்ணின் பெண் நட்பு வட்டத்தை விட பெண்ணின் ஆண் நட்பு வட்டம் குறைவு என்பதையும் ஒப்பு நோக்க வேண்டும் என்பது என் கருத்து
-
இதற்கு காரணம் - நட்பு என்பது சேர்ந்து சினிமா செல்வதற்கு, விழாக்களுக்கு செல்வதற்கு என்ற அளவிலேயே பலர் உருவகப்படுத்தியுள்ளார்கள்
வாங்க டாக்டர்..முதல் வருகை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவருக..
//“நாம் பிரண்ட்ஸாகவே இருப்போம்” என்ற வசனம் பேசப்பட்ட உறவை//
காதலிக்க எத்தனித்து இப்படி வசனத்தில் முடியும் உறவுகளைச் சொல்கிறீர்களா என்ன?????
நான் அதற்குள் போகவே இல்லையே !
ஒருவர் காதலிக்க விண்ணப்பித்து மற்றவர் அதை நாசூக்காக மறுதலிக்கத்தான் மேற்கண்ட வசனம் வரும்..நான் சொல்ல விரும்பியது நல்ல நட்பைப் பற்றி மட்டுமே.
//.....குறைவு என்பதையும் ஒப்பு நோக்க வேண்டும் என்பது என் கருத்து//
அதுவும் ஏன் என்பதுவும் கூட பதிவின் ஒரு பாடு பொருளாகக் கொள்ளலாம் !
இந்த விதயத்தில் நான் நிறைய விவாதங்களை எதிர்பார்த்தேன்.
சரி, இப்ப தெளிவாக பேசுவோம். கல்லூரி காலம் முடிந்த பின் மறுபாலின நட்பு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கிய காரணம்
ReplyDeleteகல்லூரி படிக்கும் பொழுதே மறுபாலின நட்பு குறைவாக இருப்பதே என்பது என் கருத்து.
கல்லூரி படிக்கும் பொழுதே மறுபாலின நட்பு குறைவாக இருப்பதற்கு காரணம் என்னவெல்லாம் என்று தொடர்ந்து விவாதிக்கலாம்
அதே போல் கல்லூரி காலம் முடிந்த பின் மறுபாலின நட்பு குறைவாக இருப்பதற்கு உள்ள பிற காரணங்களையும் விவாதிக்கலாம்
சரியான இடத்தைத் தொட்டு விட்டீர்கள் மருத்துவ்ரே..
ReplyDeleteகல்லூரிக் காலத்தில் என்ன காரணம் இருக்க முடியும்,தாழ்வு அல்லது உயர்வு மனப்பான்மையைத் தவிர..
சில ஆண்கள் பெண்கலிடம் பேசினால்,வழிகிறான் என்று கிண்டலடிப்பார்களோ என்ற உயர்வு மனப்பான்மை சார்ந்த தயக்கத்தில் ஒதுங்கலாம்..
சில பெண்கள் இதே விதமான எச்சரிக்கை மனப்பான்மையில் ஒதுங்கலாம்..
ஆனால் அறிவு சார்ந்த தெளிவான மாணவப்பருவம் இவற்றைப் புறந்தள்ளும் சக்தி வாய்ந்தது என்றே நான் நினைக்கிறேன்.
கல்லூரிக்குப் பின் ஆரோக்கியமான புதிய மறுபாலின நட்பு ஏற்படுகிறதா(சென்னை போன்ற மெட்ரோக்களில் சாத்தியம்) என்பதே கேள்வி.
எல்லோரும் ஆட்டோகிராஃப் படக் கணவன் மாதிரி முகமதிப்பில் விதயங்களை எடுத்துக் கொள்கிறார்களா என்ன?
நாம் மதித்த,நம்மைப் பாதித்த அந்த ஆண்/பெண் நண்பர் வலியடையக் கூடாது என்ற காரணத்துக்காகவே ஒதுங்கும் சூழல்கள்தான் இருக்கின்றன..
இவற்றைப் பற்றிய விவாதங்கள்,புரிதல்களுக்கு வழி காட்டும் என நான் நம்புகிறேன்..
நட்பு என்பதில் பேச்சுப் பரிமாற்றம் என்கிற நிலையைத் தாண்டி உணர்வுப் பரிமாற்றம் என்கிற நிலை ஒன்று இருக்கிறது. எதிர் பாலின நட்பில் அந்த நிலையில் சறுக்கல்களுக்கு வாய்ப்புகள் அதிகம். (நான் சறுக்கல் என்பதை உடல்பூர்வமானதாக மட்டும் சொல்லவில்லை). எனவே எதிர்பாலின நட்பினை முதல்நிலை அளவில் மட்டும் வைத்துக் கொள்வது இருவரின் எதிர்கால குடும்ப வாழ்க்கையின் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பதே என் எண்ணம்.
ReplyDelete//எனவே எதிர்பாலின நட்பினை முதல்நிலை அளவில் மட்டும் வைத்துக் கொள்வது இருவரின் எதிர்கால குடும்ப வாழ்க்கையின் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பதே என் எண்ணம்.//
ReplyDeleteம்ம்ம்ம்.... மறுக்க முடியாத கருத்து
ரத்தின சுருக்கம் என்பார்கள்.
இது ரத்னேஷ் சுருக்கமா :) :)
நண்பர் ரத்னேஷ்,
ReplyDeleteசரியான விதயம்.
நான் பேச்சுப் பரிமாற்றத்தையும் உணர்வுப் பரிமாற்றத்தையும் வேறுவேறு விதயங்களாகப் பார்க்கவில்லை.
ஆனால் உணர்வுப்பரிமாற்றம் என்பது தங்கள் கவலைகள்,மகிழ்வுகள் ஆகியவற்றைப் பகிர்வதே.
இந்த வகையான பகிர்தலில்,கவலைககளுக்கான காரணிகள் வெளிக்காரணிகளாக இருக்கும் வரை எந்தப் பிரச்னைகளும் இருக்க வாய்ப்பில்லை;ஆனால் அந்தக் காரணிகள் அந்த நட்பின் கணவராகவோ அல்லது மனைவியாகவோ இருக்கும் பட்சட்தில்தான் மனம் ஒப்பீட்டில் இறங்குகிறது.
நட்பு,நண்பன் அல்லது நண்பியின் நலனை மட்டும் நாடும் குணமுதிர்ச்சி கொண்டிருக்கும் போது எந்த சறுக்கல்களுக்கு வாய்ப்பில்லை.
ஆனால் இந்த வேறுபாடு ஒரு மெல்லிய சவ்வுக் கோட்டினால்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மைதான்!
////இதே காட்சியை இன்றைய ஒரு கல்லூரிக்கோ அல்லது மெரீனா கடற்கரைக்கோ எடுத்துச் செல்லுங்கள்;இளைஞர்களும்,இளைஞிகளும் உல்லாசமாகப் பேசி சிரித்து விளையாடுவதைப் பார்க்கலாம்.////
ReplyDeleteஇந்த மாற்றம் காலத்தின் கட்டாயம். அவ்வளவுதான்! இதற்கு prize & price என்ற இரண்டும் உண்டு!
உண்மை திரு சுப்பையா அவர்களே.
ReplyDeleteஎன்னுடைய பார்வை prizes குறைந்து price அதிகமாகி விட்ட சூழலியே,ஆரோக்கியமான நட்பின் அவசியங்களைப் பேசுகிறது.