கடந்த 23 சனவரி 2021 அன்று சிங்கையி்ன் தமிழ் வரலாற்றுப் மரபுடைமைக் கழகத்தின் சார்பில் தமிழிசைப் பள்ளி உருவாக்கப்பட்டு தொடங்கப்பெற்றது. இது தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையத்தோடு அலுவல் பூர்வமாக இணைவு பெற்றது.
இந்த தமிழிசைப்பள்ளியில் தமிழில் வாய்ப்பாட்டு இசை வகுப்பு, நாட்டிய வகுப்பு, விணை வகுப்பு, குழலிசை வகுப்பு(புல்லாங்குழல்), வயலின் என்ற பிடில் கருவி போன்ற வாத்திய இசைக் கருவிகளைக்கான பயிற்சி போன்றவற்றைத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடக்கவிழாவும், இணையப் பக்க வெளியீடும் பேராசிரியர் சுப.திண்ணப்பன் தலைமையில், அவரது தலைமையுரையோடு இனிதே நடந்தன. விழாவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலையின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் கோவிந்தசாமி, திருமதி.மீனாட்சி சபாபதி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் இராச.கலைவாணி, புதுமைத்தேனி மா.அன்பழகன், திரு.தனபால்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்தப் பள்ளியின் தோற்ற நோக்கம் பற்றியும் ஆசிரியர்கள் பற்றிய அறிமுகத்தையும் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத் தலைவர் திரு ப.புருசோத்தமன் நிகழ்த்த, வரவேற்புரையை உறுப்பினர் திரு SAM.செந்தில் நிகழ்த்த, நன்றியுரையை உறுப்பினர் திரு கருணாநிதி வழங்கினார். மெய்நிகர் விழாவாக அருகி வழி (சூம்) நடந்த இந்த விழாவினை பட்டயக் கணக்கர் திரு முருகுதமிழ் அறிவன் நெறியாண்டு, தொகுத்து வழங்கினார்.
விழாவில் ஆர்வமுள்ள பெற்றோரும் மற்றோரும் திரளாக இணைந்து விழாவினைச் சிறப்பித்தனர். விழா யூ ட்யூப் வழி இந்தத் தொடுப்பில் மெய்நிகர் விழியமாக ஒளிபரப்பப் பட்டும், சேமிக்கப்பட்டும் உள்ளது.
No comments:
Post a Comment