உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
நூல் : திருமுறை(பத்தாம் திருமுறை-திருமந்திரம்)
ஆசிரியர் : திருமூலர்
பதிகம் : மூன்றாம் தந்திரம்( காரிய சித்தி)
பாடல் எண்-13
பதம் பிரித்த பாடல்:
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
திருமந்திரம் திருமுறைகளின் தொகுப்பில் பத்தாம் திருமுறையாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது.
திருமுறைகளின் மற்றைய ஆசிரியர்களின் காலம் நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகே வருகிறது.ஆனால் திருமந்திரம் திருக்குறளின் காலத்திற்கு முந்தையதாகவே இருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
காரணம் திருமந்திரக் கருத்துக்களில் இருக்கும் ஆழமும், திருமூலர் ஒரு சித்தராகவும் அறியப்படுவதால். திருமூலர் நரை,மூப்பு,திரை( தலை நரைத்தல்,உடம்பு மூப்படைதல்,கண் பார்வையிர் திரை விழுந்து பார்வை குறைதல்) ஆகியவை இல்லாமல் பல நூற்றாண்டுகள் வாழ்ந்ததாகவும், ஆண்டுக்கொரு பாடலாக 3000 பாடல்கள் இயற்றியதாகவும் ஒரு கூற்று உண்டு.
இன்றைய கருத்தில் இவற்றை மறுதளிப்பார்கள் இருப்பினும்,திருமூலர் பல பாடல்களில் காலத்தை வென்று வாழும் முறைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.இது அவ்வகைப் பாடல்களில் ஒன்று.
பொருள்:
உடம்பு அழியும் போது,அந்த உடம்பைப் பற்றி நின்ற உயிரும் இறந்து அழிந்து செயலின்றி நிற்கிறது.
எனவே உடம்பு அழியும் போது,உயிர் இயங்கி அடைய வேண்டிய குறிக்கோள்களான தவமாகிய துணையைப் பெறுதல்,மற்றும் இறையுணர்வை அடைதல் ஆகியவை இயலாத காரியமாகி விடுகின்றன.
எனவே நான் உடம்பு அழியாது நிலைபெற்று நிற்பதற்கான வழிகளை அறிந்து,உடலை வளர்ந்து அழியாது நிலைபெறச் செய்வதன் மூலம்,உயிர் அல்லது ஆன்மாவினை வளர்த்து நிலைபெறச் செய்து,ஆன்மாவின் குறிக்கோள்களை அடைய எத்தனிக்கிறேன்.
டிட் பிட்ஸ்:
- ஒரு மனிதன் முதலில் அடையாளப் படுத்தப் படுவது அவனது தோற்றம் மற்றும் உடம்பால்.பின்னர் அவரது குணநலன்கள்,அறிவு,திறமை போன்றவை அந்த நபரின் இயல்பு,குணநலன்களாக அறியப்படுகின்றன.
- அந்த மனிதரின் உடம்பு அழியும் போது,அந்த நபர் இறந்ததாக|அழிந்ததாக அறியப்படுகிறார்.
- அவரின் அறிவு,திறமை,குண இயல்புகள் அந்த நபரது உடம்பில் இயங்கிய உயிர் அல்லது ஆன்மாவுடன் இணைகிறது.இவற்றில் கல்வி மட்டுமே ஏழு பிறப்புகளுக்கு அந்த ஆன்மாவுடன் பயணம் செய்கிறது என்கிறது தத்துவ நூல்கள்.
- மற்ற அனைத்து குண நலன்களும் உடம்பு அழியும் போது,அந்த உடம்புடன் சேர்ந்து அழிகின்றன.
- உடம்பு அழியும் போது ஆன்மாவின் இலக்கான மெய்ஞானத்தை அடையும் குறிக்கோள்-task- தடைபடுகிறது.அவ்வாறு தடைபெறாமல்-திடம்பட என்று கூறுகிறார்-உறுதியாக ஆன்மா அதன் இலக்கில் நிலைத்திருக்க,உடம்பு நிலைத்திருத்தல் அவசியம்.
- உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் என்பதன் மூலம்,உடம்பை அழியாது நிலைநிறுத்தும் உபாயத்தை,தந்திரத்தை அறிந்து விட்டதாகவும்,அதை செயல்படுத்தி விட்டதாகவும் திருமூலரே கூறுகிறார்.
- உடம்பை வளர்த்தேன்-உயிர் வளர்த்தேன் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் ஒரு candid statement ஆக, உறுதியாக,ஒப்புக் கொள்கிறார் திருமூலர்
6 | 365
டிட் பிட்ஸ் விளக்கம் அருமை... நன்றி…
ReplyDeleteஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
நன்றி நண்பர் தனபாலன்..
Delete