இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக செஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.
2012 ல் சாம்பியன் ஆன போது... |
கெல்ஃபாண்டுடன் விளையாட்டு... |
எனக்கு முதன் முதலில் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற போது தமிழகத்தில் எழுந்த செஸ் ஆட்டத்தின் எழுச்சி நினைவுக்கு வந்தது.
ஆனந்த் ஆழ்ந்த செஸ் ஆட்டத்தோடு அவரது மின்னல் வேக விளையாட்டுக்காகவே பெரிதும் சிலாகிக்கப் பட்டவர்;அப்படிப்பட்டவரின் விளையாடும் ஸ்டைல் சிறிது மாறி இப்போது நிதானமாக விளையாடுகிறார்.
இந்தப் போட்டியிலும் கூட டை பிரேக்கர் முறையில்தான் முடிவு எட்டப் பட்டது. எனவே அவர் மீதான விமர்சனங்கள் அதிகமாக முன் வைக்கப் பட்டன.
ஆனால் எப்போதும் சாதாரணர்களுக்கும் அசாதாரணத் திறனாளர்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. க்ளாஸ் ப்ளேயர்ஸ் என்று சொல்லப்படும் அசாதாதாரணத் திறனாளர்கள் சில சமயம் திறனில் வெளிறிப் போவது போல் தோன்றினாலும், நெருக்கடியான சூழலில் ரிஃப்ளெக்ஸ் ஆக்ஷன் போல் இயல்பாக மிளிர்வார்கள்.
ஆனந்தின் இந்தப் போட்டியும் அந்த வகையைச் சார்ந்தது.
அவரை வாழ்த்துவோம் !!
அம்மாவின் ஆனந்தம் ! |
இந்தத் திறனாளரை முதன் முதலில் இனம் கண்டு கொண்ட அவரது முதல் குருவான இந்தப் பெண்மணியும் வாழ்த்துக்கு உரியவர்.அவர் ஏற்கனவே மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்,ஏனெனில் அவர் ஆனந்தின் அம்மா !!!
திருமதி சுசீலாவுக்கு சல்யூட்ஸ் !
ஆனந்த் : ஒரு க்ரோனோக்ராஃபி
- 1983-ம் ஆண்டு தேசிய அளவிலான சப்-ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார் ஆனந்த். இதுதான் தேசிய அளவிலான போட்டிகளில் அவர் பெற்ற முதல் வெற்றி.
- 1984-ம் ஆண்டு தனது 15-வது வயதில் சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் செஸ் வீரர் என்ற பெருமைக்குரியவரானார்.
- தனது 16-வது வயதில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.
- 1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி கண்டார். இதில் வெற்றி கண்ட முதல் இந்தியர் ஆனந்த்.
- 1988-ல் கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி கண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
- 1991-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்றார். அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் அலெக்ஸீ கிரீவை வென்ற ஆனந்த், காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார்.
- 1995: ஃபிடே உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்காவின் கதா காம்ஸ்கியிடம் வீழ்ந்தார்.
- பிசிஏ உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கேரி காஸ்பரோவிடம் தோல்வி கண்டார்.
- 1997: ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெற்ற ஃபிடே உலக செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கார்போவிடம் தோல்வி கண்டார்.
- 2000: ரஷியாவின் அலெக்ஸீ ஷிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார்.
- 2001: உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் உக்ரைனின் இவான் சுக்கிடம் தோல்வி கண்டார்.
- 2005: அமெரிக்காவின் சான் லூயிஸில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பல்கேரியாவின் வேஸிலின் டோபாலோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
- 2007: மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் ஆனார்.
- 2008: ஜெர்மனியில் நடைபெற் உலக செஸ் போட்டியில் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
- 2010: பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் உள்ளூர் நாயகனான வேஸலின் டோபாலோவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
- 2012: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
* * * * * * * * *
இந்த ஆனந்தங்களோடு தினமணி மதி கார்டூன்கள் மற்றும் ஃபோட்டூன்கள் மூலம் அளித்த சில ஆனந்தங்களும் .... :)
பேச்சுத் திறனுக்காகவும், பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அவர் பேச்சில் காண்பிக்கும் லாகவத் திறனுக்காகவும் ஒரு காலத்தில் பெரிதும் சிலாகித்துப் பாராட்டப் பட்டவர் திமுக தலைவர்...
எப்படி இருந்த நான்ன்ன்ன்........இப்பிடி ஆயிட்டேன் ! தான் நினைவுக்கு வருகிறது.
* * * *
அப்புறம் திருவாளர் பரிசுத்தம் ! சுத்தம் !!!
80 களின் திருவாளர் பரிசுத்தம் மீள் நினைவில் வருகிறார் !!
-தினமணி பத்திரிகை மற்றும் மதிக்கு நன்றியுடன்