சூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்...
இந்த தலைப்பில் ஏற்கனவே சில அசட்டுப் பதிவுகள் வந்து விட்டன; இருப்பினும் இந்த நிகழ்ச்சியை நேற்று இரவு பார்த்த போது எழுந்த சிந்தனைகளைப் பகிரலாம் என்பதால் இந்தப் பதிவு.
இப்போது முதல் 5 போட்டியாளர்களுக்கான தேர்வுக்கான சுற்று நடைபெறுகிறது.(இந்தியாவில் இந்த சுற்று முடிந்திருக்கலாம்;சிங்கையில் இப்போதுதான் போய்க் கொண்டிருகிறது!)
இறுதிப் போட்டியின் வடிவம் எப்படி என்று தெரியவில்லை.ஆனால் அன்ப்ளக்ட் சுற்று முடிந்ததில் ஜயந்த் போட்டியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.ஆனாலும் சிறப்பான சலுகையாக அதிரடி சுற்று வாய்ப்பாக-வைல்ட் கார்ட் ரவுண்ட்- இறுதிப் போட்டியில் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டிருகிறார்.
இறுதிப் போட்டியாளர்கள்-இப்போதைய நிலையில்! (அளிக்கப்பட்ட தர வரிசைப் படி)
பிரகதி
சுகன்யா | ரக்க்ஷிதா
அனு | யாழினி
கௌதம்
ஜயந்த் (ஆறுதல் பரிசு கிடைக்கலாம்)
ஜயந்த் (ஆறுதல் பரிசு கிடைக்கலாம்)
(எனது வரிசைப்படி)
பிரகதி | ரக்க்ஷிதா
பிரகதி |
அமெரிக்க வாழ்க்கையும் படிப்பும் தந்திருக்கும் முதிர்ச்சி, தோழமை, புத்திசாலித்தனம் இவரின் நடவடிக்கைகளில் எளிதில் தெரியும்; நிகழ்ச்சிகளில் பார்க்கும் போதே இந்தக் குணங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தன.
அவரிடம் இருக்கும் இசை மற்றும் பாடும் திறன் நிச்சயம் அசாத்தியமானது.இயல்பான இசைத் திறனும், ஏற்கனவே இருக்கும் பயிற்சியும், திரு.அனந்தநாராயணன் அவர்களின் பட்டை தீட்டலும் இந்தப் பெண்ணிடம்(ஏன் மற்ற போட்டியாளர்கள் அனைவரிடமும்) ஏற்படுத்தியிருக்கும் திறன் கூர்ப்பு அசாத்தியமானது.இந்தப் பெண் பாடும் போது பாடலுடன்,இசையுடன் ஒன்றும் நிகழ்வு பார்த்து மகிழ வேண்டிய ஒன்று. இவர் நிச்சயம் இறுதி இரண்டு நபர்களில் ஒருவராக இருப்பார் என்பது எனது நம்பிக்கை.
பிரகதி அளவுக்கு திறனில்லா விடினும் ரக்ஷிதாவை எனக்கு மிகவும் பிடிக்கக் காரணம் அவர் போட்டியிலும், வாழ்க்கையிலும் சூழலை எதிர்கொள்ளும் விதம், பாடும் திறனில் அவரிடம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்ற மாறுதல், அவரது தனிப்பட்ட குடும்ப சூழலில் இந்த நிலையிலும் இந்தப் பெண் கம்போஸ்ட்(இதை சரியாகத் தமிழில் விளக்க நிபுணத்துவம் வேண்டுமோ?) ஆக இருப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் அன்ப்ளக்ட் சுற்றில் இந்தப் பெண் பின்னி எடுத்தார்.
கலையார்வமும் ஊக்கமும் அளித்த அன்பான தந்தையை இழப்பது என்பது பதின்ம வயதுகளில் ஒரு பெண்ணுக்கு ஒரு மாபெரும் இழப்பு, அது தரும் சுமை கொடியது ; அதை எளிதாக வெற்றி கொண்ட இந்தப் பெண் உயரங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது எனது பேரவா. செல்லும் திறனும்,உள உறுதியும் இந்தப் பெண்ணுக்கு நிச்சயம் இருக்கிறது!
இவரும் முதல் மூன்று இடங்களுக்குள் வரும் வாய்ப்பு இருப்பினும், முதல் இரண்டு இடங்களில் ஒன்றை பிரகதியுடன் பங்கிட வேண்டும் என்பது என் விருப்பம்.
யாழினி | அனு
யாழினி மற்றும் அனு இருவரிடமும் பாடும் திறனைப் பொறுத்த வரை பெரிய வேறுபாடு சொல்லி விடமுடியாது. ஒருநாள் ஒருவர் பின்னினால், இன்னொரு நாள் இன்னொருவர் பெடலெடுப்பார். ஆனால் யாழினிக்கு வயதின் அனுகூலம் சிறிய பெண்ணாக இருப்பதால் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் போட்டியாளர்களில் மிகவும் வயது குறைந்தவர் இவரே.
யாழினி- காரம் குறையாத கடுகு |
அனுவைப் பற்றித் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லும் படி ஏதுமில்லை; யாழினியும் அனுவும் நான்கு மற்றும் ஐந்தாவது நிலையில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் எனது விருப்பம் இவர்களில் ஒருவராவது மூன்றாம் இடத்திற்கு வர வேண்டும் என்பது. சிறப்பாக யாழினி..
சுகன்யா
இந்தப் பெண்ணும் முறையாக சங்கீதம் பயின்றவர்; நல்ல திறனுடன் பாடக் கூடியவர்.
முதல் அல்லது இரண்டாம் இடத்திற்கு வருதற்கு வாய்ப்பு இந்தப் பெண்ணுக்கு இருக்கிறது.
சுகன்யா-நடிகையர் திலகம் |
காரணங்கள் மூன்று.
1.பாடும் போதும் மற்ற நடவடிக்கைகளிலும் இந்தப் பெண்ணும் இந்தப் பெண்ணின் தாயும் காட்டும் நாடகத் தனம். பாடும் திறனைக் காண்பிப்பதை விட, அதிகமாக நடிப்பது ! நடிப்பின் மூலம் பார்வையாளர்களைக் கவரவும் வாக்கு வாங்கவும் முயற்சிப்பது
2.நூற்றாண்டுகளாக தமிழர்களின் மீது வெறுப்புமிழும், கேரளத்திலிருந்து வந்திருக்கும் இந்தப் பெண்ணுக்கும் இவரது தாய்க்கும் தமிழை சரியாக பேசக் கூட வராது. ஆனால் தமிழகத்தின் டிவி சானல் வழங்கப் போகும் பரிசும், தமிழக ரசிகர்களின் அன்பும், தமிழ் நாட்டின் இசை, திரையுலக வாய்ப்புகளும் இவர்களுக்குத் தேவை. இதே குண விலாசம் கொண்ட சென்ற போட்டியில் வெற்றி பெற்ற அல்காவையும், எனக்கு இதே காரணங்களால் சற்றும் பிடிக்காது,அவரது இசைத்திறன் அசாத்தியமாக இருந்தும் ! நம்மீது ஓயாது வெறுப்புமிழும் ஒரு பகுதியின் மக்களில், ஒரிருவரைத் தனிப்பட்ட முறையில் நண்பர்களாகக் கொள்வதில்(அவரவர் குணாதிசயங்களின் படி) தவறில்லை; ஆனால் பொதுவெளியில் ஒரு உயர்ந்த நிலையை இத்தகைய வெறுப்பாளர்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒரு தமிழகத்தின் குழந்தைக்கு கேரளத்தின் எந்த சானலாவது வாய்ப்பு அளிக்கிறதா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.
3. தமிழ்த் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில், தமிழக ரசிகர்கள் ஓட்டளித்து(ஒரு ஓட்டுக்கு ஐந்து ரூபாய் கைத் தொலைபேசிகளில் பிடிக்கப்படும் என்கிறார்கள்.மொத்தமாக ஐந்து கோடி சனத் தொகையில் இரண்டு கோடிப் பேர் வாக்களித்தாலும் பொதுமக்கள் ஓட்டில் மட்டும் எளிதாகப் பத்துக் கோடி கிடைத்து விடும்) வெற்றி பெறும் நிகழ்ச்சியில், தமிழைப் பேசக் கூடத் தெரியாத ஒரு போட்டியாளர் வெற்றி பெறுவது சிறிதும் நியாயமில்லை !
கௌதம்
இந்தப் பையன் இசை மற்றும் கலைகளுக்கு அவ்வளவு புகழ் பெறாத தமிழகத்தின் தென்கோடியிலிருந்து வந்தவன். தனிப்பட்ட முயற்சியாலும், இசைப் பயிற்சியாலும் ஓரளவுக்கு நன்கு பாடக் கூடிய பையன். கர்நாடக சங்கீத சுற்றில் கர்ணனின் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலைப் பாடி அனைவரையும் அசைத்துப் பார்த்தவன்.( அப்படி அனைவரும் கலங்கும் அளவுக்கு அவன் பாடிய விதம் இருந்தது என்று என்னால் நம்ப இயலவில்லை,ஆயினும் பாராட்டும் அளவுக்கு சிறப்பாகப் பாடினான் என்பது உண்மை)
கௌதம்- மண்ணின் மைந்தன் |
குடும்பத்தினர் வசதிகளும் பயிற்சிகளும் கொடுக்கும் அளவுக்கு இருந்தாலும், இவனது சூழலைப் பொறுத்த வரை 'இசைச் சூழல்' நிரம்பிய பையன் அல்ல.அப்படி இருந்தும் இந்தப் பையனின் முயற்சியும் ஆர்வமும் போற்றத் தக்கது. பெற்றோரும் மிகுந்த ஊக்கம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.(பயமுறுத்தலுடனான ஊக்கம்!)
இவன் மூன்றாவது இடத்திற்குப் சரியான போட்டி அளிக்கலாம் என்பது எனது அனுமானம்.
ஜயந்த்
இந்தப் பையன் சிறிதளவு மாற்றுத் திறன் கொண்டவன் என்று தோன்றுகிறது; மற்றவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்வதில் இவனுக்கு சிரமங்கள் இருந்தன.
அன்ப்ளக்ட் சுற்றில், டை'யில் முடிந்த போட்டியில் நடுவர்கள் அளித்த சுவரக் குறிப்புகளைக் கேட்டு மனதில் ஏற்றிக் கொண்டு பாடுவதில் இவனுக்கு சிரமங்கள் இருப்பது கண்கூடாகத் தெரிந்தது.
ஜயந்த்-தளரா முயற்சி |
மனதில் இரக்கம் எழுந்தாலும், இவனது திறன் அடிப்படையில் இந்தப் பையன் இறுதிப் போட்டில் ஒரு கருதத் தக்க திறனாளராக இருக்க வாய்ப்பில்லை.
()
அஜீத்
ஆஜீத் என்று உச்சரிக்கிறார்கள், முகமதிய சமூகமாக இருப்பதால் இருக்கலாம்.
நம்ப இயலாமல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் நடந்த ஒரு நிகழ்வு என்றால், அது அஜீத்'தின் வெளியேற்றம். ஏனெனில் இந்தச் சிறுவனும் ஒரு அற்புதமான இசைத்திறன் கொண்ட பையன்.
எந்த வடிவத்திலும் தன்னை அடைத்துக் கொள்ளாத, ராக்,மெலடி,கர்நாடிக்,ஃபோக் என்று எதை எடுத்தாலும் அதிரடியாகவும் மென்மையாகவும் பாடும் திறன் பெற்றவன்.
இவனிடத்தில் பெரிய குறை பாடல் வரிகளை மறப்பது. இது நான் பார்த்த சமயங்களிலேயே இரண்டு முறை நடந்து விட்டது; போட்டியில் இருந்து நீக்கப்பட்ட சுற்றில் கூட இதனால்தான் நீக்கப் பட்டான் என்று நினைக்கிறேன்.
அதிரடி சுற்றுக்கு-வைல்ட் கார்டு- இந்தப் பையனும் அஞ்சனாவும் தேர்வாகியிருக்கிறார்கள்;மேலும் சிலரும் இந்த சுற்றுக்குத் தேர்வாகலாம்.ஆனால் இந்த அதிரடி சுற்றில் தேர்ந்து யார் இறுதிப் போட்டியில் நுழைவார்கள் என்பது, பங்கு பெறும் அனைவரும் முடிவான பிறகே தெரியவரும்.
ஆனாலும் அஜீத்'த்துகு அதிரடி சுற்றில் வெல்லவும், இறுதிப் போட்டியிலும் மூன்றாவது இடத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.
()
அஜீத்
ஆஜீத் என்று உச்சரிக்கிறார்கள், முகமதிய சமூகமாக இருப்பதால் இருக்கலாம்.
அஜீத் - டார்க் ஹார்ஸ் |
நம்ப இயலாமல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் நடந்த ஒரு நிகழ்வு என்றால், அது அஜீத்'தின் வெளியேற்றம். ஏனெனில் இந்தச் சிறுவனும் ஒரு அற்புதமான இசைத்திறன் கொண்ட பையன்.
எந்த வடிவத்திலும் தன்னை அடைத்துக் கொள்ளாத, ராக்,மெலடி,கர்நாடிக்,ஃபோக் என்று எதை எடுத்தாலும் அதிரடியாகவும் மென்மையாகவும் பாடும் திறன் பெற்றவன்.
இவனிடத்தில் பெரிய குறை பாடல் வரிகளை மறப்பது. இது நான் பார்த்த சமயங்களிலேயே இரண்டு முறை நடந்து விட்டது; போட்டியில் இருந்து நீக்கப்பட்ட சுற்றில் கூட இதனால்தான் நீக்கப் பட்டான் என்று நினைக்கிறேன்.
அஞ்சனா |
ஆனாலும் அஜீத்'த்துகு அதிரடி சுற்றில் வெல்லவும், இறுதிப் போட்டியிலும் மூன்றாவது இடத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.
()
இறுதிப் போட்டியின் வடிவம் எப்படியிருக்கும் என்பது தெரியாது.ஆனால் தமிழக மக்கள் கூத்து,நாடகம்,நடிப்புக்கு இயல்பாகவே மயங்கி சொக்குபவர்கள். பாட்டுடன், பயங்கரமான நடிப்பையும் அரங்கேற்ற சுகன்யா போன்ற பலர் காத்துக் கொண்டிருப்பார்கள்.
பார்க்கலாம் !
()
எல்லாப் போட்டியாளர்களும் முகப்பக்கத்தில் இருக்கிறார்கள் !
முகப்பக்கத்தின் மதிப்புறு பயன்பாட்டில் (usage of add value) எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன;நான் பார்த்தவரை பலரும் ஜங்க் புகைப்படங்களில் கமெண்டுகளோடு அல்லது தன்னுடைய கல்யாணம் முதல் கருமாதி(!) வரை அனைத்துப் புகைப்படங்களையும் பகிர்கிறார்கள்.
ஆயினும் படங்களை எளிதாக இந்தப் பக்கங்களிலிருந்தே எடுக்க முடிந்தது.
அதற்கு ஒரு நன்றி.
()
எல்லாப் போட்டியாளர்களும் முகப்பக்கத்தில் இருக்கிறார்கள் !
முகப்பக்கத்தின் மதிப்புறு பயன்பாட்டில் (usage of add value) எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன;நான் பார்த்தவரை பலரும் ஜங்க் புகைப்படங்களில் கமெண்டுகளோடு அல்லது தன்னுடைய கல்யாணம் முதல் கருமாதி(!) வரை அனைத்துப் புகைப்படங்களையும் பகிர்கிறார்கள்.
ஆயினும் படங்களை எளிதாக இந்தப் பக்கங்களிலிருந்தே எடுக்க முடிந்தது.
அதற்கு ஒரு நன்றி.
hi,
ReplyDeleteexcept gowtham, yaazhini,
rest belongs to other states.
even pragathi.. (could be US citizen). though tamil.
Vijay TV. better filter..
i have seen Malayalam TV... super singers. nobody is from other states. even all judges all malayalees.. and they all speak malayalam.
nothing wrong in it.
they follow their identity.
we miss it.
thanks,
|| i have seen Malayalam TV... super singers. nobody is from other states. even all judges all malayalees.. and they all speak malayalam.
Deletenothing wrong in it.
they follow their identity.
we miss it. ||
நன்றி திரு அருள்ராஜ்.
பொதுவாக தமிழர்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகம்;கலை என்றால் உச்ச ரசனைகளுடனேயே இருக்க வேண்டும் என்பதில்லை.சாதாரண கூத்தும் பாட்டும் கூட கலையே.
கலைகளை முன்னிட்டு கலைஞர்களையும் வரவேற்கும் சமூகம் நமது சமூகம்.
இதில் நம்மை எப்போதும் விரோதிப்பவர்களையும் நாம் மறந்து அவர்களை ஆதரிக்கிறோம். இதைத் தவிர்க்க வேண்டும் என்பது எனது பார்வை.
|| except gowtham, yaazhini,
rest belongs to other states.
even pragathi.. (could be US citizen). though tamil. ||
56 நாடுகளாக இருந்து இந்தியாவாக பிரித்தானியாவினால் ஆளப்பட்டது இன்றைய இந்திய நாடு.
சுதந்திரம் வழங்கிய போது கூட, வில்லத்தனத்துடன், சமஸ்தானங்கள் அனைத்தும் தனித்து இருக்க விரும்பினால் இருக்கலாம் என்று சொல்லியே சுதந்திரப் பிரகடனத்தை வழங்கி விட்டுச் சென்றது பிரித்தானியா.
மொழி வாரி மாநிலங்களை ஒரேநாடு என்ற கட்டுமானத்தில் நாம் 60 ஆண்டுகளை ஓட்டி விட்டாலும், ஒருவருக்கொருவரை அழிக்க நினைக்கும் வெறுப்பினால், இந்த கட்டுமானம் சிதைந்து கொண்டிருக்கிறது.
அந்த நிலையில் ஒரு நாகரிகம்,பண்பாடு என்பதை பெரும்பாலும் மொழியை மையப்படுத்தியே வளரவும் திகழவும் முடியும்.மொழி அடிப்படையில் ஒரு இனத்தவரை இன்னொரு இனத்தவர் வெறுக்க முடியும் என்றால், அவர்கள் அளிக்கும் பலன்கள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்பதைத்தான் நான் எதிர்க்கிறேன்.
எந்த மாநிலத்தில் வேண்டுமானால் போட்டியாளர்கள் வசிக்கலாம்; குறைந்த அளவில் தமிழை நன்றாகப் பேசவும் படிக்கவுமாவது தெரிந்திருக்க வேண்டும் என்றதை ஒரு விதியாகத் தொலைக்காட்சி வைக்க வேண்டும்.
நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்..
சில எபிசோடுகளை (Power Cut) பார்க்க முடிவதில்லை... இறுதிப் போட்டி பார்க்க வேண்டும்... விளக்கமான பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஇந்தியாவில் இருக்கும் மின்தடையில் விரும்பிய அனைத்து தொடர்களையும் பார்ப்பது இயலாத காரியம் தான்...
Deleteசில இணையத் தளங்களில் முக்கியமான தொடர்களின் அனைத்து எபிசோடுகளும் பார்க்கக் கிடைக்கின்றன.
நீங்கள் அதை முயற்சி செய்யலாம் தனபாலன்...
உங்களுக்கு எப்படி பலருடைய தளங்களில் பின்னூட்டமிட சமயம் கிடைக்கிறது என்பது வியப்பான மகிழ்ச்சியாக இருக்கிறது !
நன்றி தனபாலன்..
அருமையா சொல்றிங்க சூப்பர் சிங்கர் பட்டியலை நன்றி சகோ
ReplyDeleteநன்றி நண்பர் மோகன்.
Deleteமுதலில் வந்ததற்கும் என்னுடைய முருகு தமிழ் தளத்தைப் பகிர்ந்திருப்பதற்கும் இன்னொரு நன்றி.
அடிக்கடி வருக.