சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு பற்றிப் பலர் எழுதி விட்டார்கள்.இதில் வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் என்று அறியப் பட்ட பதிவர்கள் அந்தந்த நோக்கிலேயே எழுதியிருக்கிறார்கள்; இதில் வியப்பு இருக்கப் போவதில்லை.(எடுத்துக்காட்டு-பத்ரி சேஷாத்ரி அரசின் இந்த முடிவை வரவேற்று எழுதியிருப்பது மற்றும் வினவு இந்த முடிவை எதிர்த்து எழுதியிருப்பது).
பதிவுலகைப் பொறுத்த வரை பலர் இதைப் பற்றி எழுதியிருந்தாலும், புரூனோ வின் பதிவும் சரியான கருத்தை எடுத்து வைத்தது(சற்று நீளமாக இருந்தாலும்). சுருக்கமாக அவர் சொன்னது, சில்லரை விற்பனையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விதயத்தையும் 1991 ன் பொருளாதார சீர்திருந்தங்களையும் ஒப்பிட்டு, முன்னதை வரவேற்ற பலர் பின்னதை எதிர்ப்பது ஏன்?' என்ற கேள்விக்குப் பதிலாக அவர் சொல்லியிருந்தது: முன்னதில் நாம் பயனாளர்(Service Provider, we provided some service and got benefited); பின்னதில் நாம் வாடிக்கையாளர்.(We are consumers, we consume and pay for the consumption).
1991 ல் நாம் சேவையின் மூலம் பயன் பெற்றது போல, அன்னிய நிறுவனங்கள் இப்போது பயன் பெறப் போகின்றன என்பது கண்கூடு.
()
நான் இதே பொருளில் எழுதிய சென்ற பதிவிற்குப் பிறகு நடந்த குறிப்பான ஒரு விதயம், அரசின் இந்த முடிவை வலுவாக ஆதரித்து,பிரதமர் மன்மோகன் சிங் நிகழ்த்திய தொலைக்காட்சி உரை. அதில் முக்கியமாக அவர் சொன்னது, நமது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நல்ல லாபம் பெறுவார்கள்; இதைத் தடுக்கு முயற்சிப்பவர்கள் தேசத் துரோகிகள் என்று உணர்ச்சிப் பிழம்பாகக் கர்சித்ததும் நடந்தது.
இது தொடர்பாக அற்புதமான இரண்டு கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது. ஒன்று ஜஸ்வந்த் சிங் தி இந்துவில் எழுதிய Money does Grow in Trees,Prime Minister என்ற கட்டுரை; இன்னொன்று குருமூர்த்தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய Reform at Nations Cost என்ற கட்டுரை.
இரண்டு கட்டுரைகளும் தவறாமல் படிக்க வேண்டியவை.
ஜஸ்வந்த் மிக மேம்பட்ட நையாண்டியுடன் எழுதியதை அப்படியேயான அழகுடன் தமிழில் மொழிபெயர்ப்பது சிறிது கடினம். குருமூர்த்தி எழுதிய கட்டுரையில் சரியான சில விதயங்களைச் சுட்டியிருந்தார்.
- இந்தியப் பிரதமர் மண்(எழுத்துப் பிழை அல்ல) சிவிஅமு(சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு) அனுமதித்த அதை நாளில்,அமெரிக்காவின் வால்மார்டினுடைய பெரிய கிளையான நியூயார்க் கிளையை மூடும் படி நகர நிர்வாகம் வால்மார்ட்டுக்கு உத்தரவிட்டதை மண் அறிவாரா? அது எதனால்?
- 'மரணம் பரப்பும் வால்மார்ட்' என்ற தலைப்புச் செய்தியில் அட்லாண்டிசிடிஸ் இணைய இதழ் எழுதிய செய்திக்கட்டுரையை காங்கிரஸ் அரசின் அதி புத்திசாலி பொருளாதாரப் புலிகள் படித்தார்களா?
- 2008 ல் அரிசி மற்றும் தானிய விலைகளை கட்டுக்கடங்காத அளவில் விலையேறிய போது, உலக நாடுகள் அனைத்தும் விழித்தன; அப்போதைய அமெரிக்க அதிபர் திருவாளர் புஸ்(எழுத்துப் பிழை அல்ல) அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் தானியங்களைத் தின்பதே விலையேற்றத்திற்குக் காரணம்' என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்போது இது தொடர்பாக எழுதிய பதிவில் ஏதோ விரும்பத்தகாத ஒன்று நடை பெறுகிறது என்றே நான் எழுதியிருந்தேன். வால்மார்ட்தின் மொத்த விற்பனை மற்றும் கொள்முதல் பிரிவான சாம்ஸ் கிளப் விவசாயிகளின் மொத்த உற்பத்திப் பொருட்களையும் முன்னோக்கிய பரிவர்த்தனை(ஃபார்வர்ட் ட்ரேடிங்) மூலமாக, எல்லா தானிய விளைச்சல்களையும் வாங்கிப் பதுக்கியதே அந்த விலையேற்றத்திற்குக் காரணம் என்று சிஎன்என் வெளியிட்ட செய்தி' பற்றி இந்திய அரசில் எவரும் கவலைப் படாதது.
- பெரும் வணிக நிறுவனங்கள் சில்லரை விற்பனையில் இறங்குவதால் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் என்று வேப்பிலை அடிக்கும் மண் அன்ட் கோ'வின் ஜல்லியடியும் பெரிய பொய். வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அமெரிக்க சூழலில், அமெரிக்க அரசு விவசாயிகளுக்கு மானியமாக ஐந்தாண்டுகளுக்கு சுமார் 307 பில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறது.(ஒரு பில்லியன் சுமார் 5000 கோடி ரூபாய்)
-சில்லரை விற்பனையில் பெரும் நிறுவனங்கள் இறங்கினால் விவசாயிகள் கொழித்துச் செழிப்பார்கள் என்றால், இவ்வளவு தொகையை அமெரிக்க அரசு மானியமாக தன்னுடைய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன??
குருமூர்த்தியின் இந்தக் கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
()
யுபிஏ அரசின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவிற்கு பிரதமர் அலுவலகம் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் சுமார் 650 பேர்; கலந்து கொண்டவர்கள் சுமார் 375 பேர்.
இந்த விருந்தில் ஒருவருக்கான உணவுத் தட்டுக்கு செலுத்தப்பட்ட தொகை-மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்- சுமார் 7721 ரூபாய் ! 375 பேர் கலந்து கொண்ட இந்த விருந்திற்கு பிரதமர் அலுவலகம் செலவு செய்த மொத்தத் தொகை சுமார் 29 லட்சம் ரூபாய் !!
இந்த அரசின் திட்டக்குழுவின் அதி புத்திசாலித் தலைவர் அலுவாலியா,சராசரி இந்தியனின் வறுமைக் கோட்டு வரையறையாக நிர்ணயித்த தொகை, கிராமப் புறத்திற்கு, ஒரு நாள் வருமானமாக ரூ 28;நகர்ப் புறத்திற்கு ரூ.32. அதாவது இந்தத் தொகையை ஒருநாள் வருமானமாகப் பெறும் எவரும் வறுமையை வென்றவர்கள் !!!
()
இந்தியப் பிரதமர் தான் ஆண்ட எட்டு ஆண்டுகளில் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் பம்மிக் கொண்டேயிருந்து பெற்ற புகழ் கொஞ்சநஞ்சமல்ல.
அவர் இரண்டை இரண்டு சமயத்தில்தான் பொங்கி எழுந்து 'சிங்கம்'( சூர்யா நடித்த சிங்கம் தான்!) போன்று பொங்கியிருக்கிறார்; ஒன்று இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த காலத்தில்; இரண்டாவது சிவிஅமு'ஐ அனுமதித்ததில்!
சொல்லி வைத்தாற் போல் இரண்டும் அமெரிக்காவிற்கு அணுகூலமளிக்கும் முடிவுகள்!!
சொல்லி வைத்தாற் போல் இரண்டு முடிவுகளும் அமெரிக்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தியாவில் எடுக்கப் பட்டவை !!!
மேற்கண்ட செய்தியை தன்னுடைய தேர்தல் உரையில் தெரிவித்துக் கேள்வி எழுப்பியிருப்பவர் குஜராத் முதல்வர் மோடி.
()
சிவிஅமு முடிவில் பலன் பெறப் போவது அமெரிக்க சில்லரை விற்பனையில் பெரும் நிறுவனமாக வால்மார்ட் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி; இந்திய அனுமதி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களுக்குள், இந்தியாவில் எங்களது முதல் தனிப்பட்ட விற்பனையகம் விரைவில் தொடங்கும் என அறிவித்ததும் வால்மார்ட் மட்டுமே!
கார்ஃபோர் மற்றும் இகியா நிறுவணங்கள் இந்தியாவில் கால்பதிக்கும் முடிவில் இன்னும் ஆலோசனையில் இருக்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் இடையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க மக்கள் சிறு வணிகர்களின் வியாபாரக் கூடங்களில் பொருட்களை வாங்கும் படியும், பெரும் வணிக மனைகளைப் (மால்) புறக்கணிக்கவும், தன்னுடைய மக்களை வேண்டியிருக்கிறார் !
()
சில்லரை என்ற சொல்லை சில்லறை,சில்லறை என்றே அனைவரும் 'அறை'ந்து கொண்டிருக்கிறார்கள். தினமணி போன்ற தரமான செய்தித் தாள்கள் சிலவற்றிலும் சில்லரை என்ற வார்த்தை சில்லறை' என்றே அறை'யப் பட்டிருக்கிறது.
சில்லரை என்ற சொல்லே பிழையற்ற பயன்பாடு என்று நான் நினைக்கிறேன். இதன் வேர்ச்சொல் சில்லரி என்பதாக இருக்கலாம் என்பது என் ஊகம். சில்லரி என்ற சொல்லுக்கு சிலம்பின் உள்ளிருக்கும் மணிகள் என்று பொருள்.
எனக்கு என்னமோ பண்ணுது...சந்திரமுகி!!! |

இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தினால் வரும் தலைவலி... ஸ்ஸ் ...அப்பா !!!!!! |

(நன்றி முகநூல் பகிர்வர்)
அறிவன்,
ReplyDelete"தேவைக்கு அதிகமாக உற்பத்தியானதால், உரிய விலை இல்லை.இதனால், திண்டுக்கல் பகுதிகளில், வயலில் இருந்து வெங்காயத்தை பறிக்காமல் விட்டுள்ளனர். சில விவசாயிகள், பறித்த வெங்காயத்தை ரோடு ஓரங்களில் கொட்டி வைத்துள்ளனர்.இதுகுறித்து ஜாதிக்கவுண்டன்பட்டி விவசாயி வீரன் கூறுகையில், ""ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. கிலோ 5 ரூபாய்க்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், செடியில் இருந்து பறித்து, அனுப்ப 5 ரூபாய் செலவாகும். இதனால் பறிக்கவில்லை. தெரிந்தவர்கள், இலவசமாக எடுத்துச் செல்கின்றனர்,'' என்றார்."
http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=20094&cat=1
இது போன்ற நிலை ஏன் விவசாயிகளுக்கு வருகிறது?
மேலும் 66 ஆண்டுகள் ஆயிற்று இந்தியா சுதந்திரமடைந்து இது நாளது வரையில் இந்திய வியாபாரிகள் தான் ,இவர்களால் விவசாயிக்கு என்ன நன்மை கிடைத்தது?
விவசாயம் செய்தவனோ கடனில் வாங்கி விற்பவனோ கோடிகளில் புரள்கிறான் இது எப்படி சாத்தியமானது?
சில்லரையில் அன்னிய முதலீடு வரவில்லை என்றாலும் நம் வியாபாரிகள் விவசாயிகளை கசக்கி பிழிவதை நிறுத்தப்போவதில்லை,இடைத்தரகர்களும்,வியாபாரியும் மட்டுமே வாழ்வார்கள்.
வவ்வால்,
Deleteஇது போன்ற சமயங்களில் அரசு அல்லது அரசுசாரா அமைப்புகளின் வழிகாட்டுதல் விவசாயிகளுக்குத் தேவை.
எந்தப் பருவத்தில் எந்தப் பயிரைப் பயிரிட வேண்டும் என்பதில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்கள் தேவை.
சர்வதேச,உள்நாட்டுத் தேவைகளைக் கணக்கில் கொண்டு அரசின் விவசாயத் துறை எளிதாக இதைச் செய்ய முடியும்.
இது இந்தியாவில் சுத்தமாக இல்லை.
விவசாயிகள் அவர்களாகத் தோன்றிய பயிரைப் பயிரிடுகின்றனர்.
இதனலாயே திடீரென்று வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்குப் போவதும், இப்படிச் சீரழிவதும் நடக்கிறது.
படிக்கவே வருத்தமாக இருக்கிறது.
ஆனால் எல்லாப் பகுதிகளிலும் இப்படிப்பட்ட நிலை இருக்காது என்றே நினைக்கிறேன். எங்கள் பகுதிகளில் விவசாயிகள் நேரடியாக சிறு விற்பனையில்(சந்தை என்று சொல்வார்கள்) நேரடியாக ஈடுபடுவது அல்லது காய்களிக் கடைகளைக்கு கூடை அல்லது மூடை என்ற கணக்கில் கொடுத்து விடுவதால் இப்படி வீணாவதைக் கண்டதில்லை !
அறிவன்,
Deleteஒரு பரந்த பகுதிக்கு தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு செய்ய இயலாது. சிறிய பகுதிகளில் மட்டுமே, மேலும் இயங்க நிதி வேண்டும்.
அரசு கிசான் நெட் ,இன்னும் சிலவும் செய்யுது ,ஆனால் வாங்கி விற்க ,முயல்வதில்லை. மேலும் விவசாயிகளுக்கு இணையம்,தகவல் தொழில்நுட்பம் எல்லாம் இன்னும் எட்டாக்கனி என்பதை நினைவில் கொள்ளவும்.
பெரும்பாலான பகுதிகளில் இப்படித்தான் விரயம் ஆகுது, குறைவாக பயிரிடும் பகுதிகளில் தான் விரயம் இல்லாமல் நீங்கள் சொன்னது போல நடக்கிறது.
நாங்கள் நெல் பயிரிடும் போதே அரசு கொள்முதல் நிலையத்தில் விற்க ரொம்ப மெனக்கெட வேண்டும், அதாவது ஒரு நாளைக்கு இத்தனை டன் தான் என அளவு, ஈரப்பதம் என திருப்பி அனுப்புதல், முன்னாடியே அறுவடை செய்தாலும்,லேட்டாக அறுவடை செய்தாலும் கொள்முதல் நிலையம் செயல்படாது,வெளியில் விற்கணும்.
மேலும் ஒரு மூட்டைக்கு அப்போது 20 ரூ லஞ்சம், அப்புறம் ஈரப்பதம் என மூட்டைக்கு 5 கிலோ மைனஸ் செய்வார்கள்.
அரசாங்கமே இப்படினா தனியார் என்ன செய்வாங்கன்னு நினைச்சுப்பாருங்க.
எங்க தாத்தா சிறந்த விவசாயின்னு அந்த காலத்தில காமராஜர் கையால என்னமோ பட்டயம் வாங்கினவர்னு எங்கம்மா மட்டும் அடிக்கடி பெருமையா சொல்வாங்க, மாடு வளர்ப்பில் சிறந்த உழவு மாடு என மெடலும் வாங்கினாராம்.(மாவட்ட அளவில் தேர்ந்தெடுத்து ,அதற்கு கொடுப்பது)
அதெல்லாம் இப்போ போயே போச்சு.
நான் பயிரிட வேண்டிய பயிர்கள்,அவற்றிற்கான தேவை-டிமாண்ட்- அல்லது உபரி நிலை இவை பற்றிய அறிவையே தர வேண்டும் என்று சொல்கிறேன்.
Deleteஇது ஒன்றும் சிரமமான காரியமல்ல.
ஒரு நாட்டிற்கான ஒரு ஆண்டுத் தேவைக்கான கணக்கீடும்,மொத்த விளைச்சல் புள்ளி விவரமும், எந்த மாநிலங்களில் அத்தகைய பயிர்கள் விளைவிக்கிறார்கள் என்பதும் நிச்சயம் எளிதாகத் தொகுக்கப்பட முடிந்தவையே.
இதற்குப் பிறகு வானொலி, எஃப் எம் என்று நிறைய சாதனங்கள் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்த அறிவுறுத்தல்கள் செய்ய முடியும்.
என்னுடைய தாத்தா தினமும் ஆல் இந்தியா ரேடியோவின் கிராம சேவை நிகழ்ச்சிகளையும், வேளான் நிகழ்ச்சிகளையும் கேட்பார், அதில் பல விவசாயம் தொடர்பான அறிவுறுத்தல்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.
தாத்தா செயலிழந்த பிறகு வந்த அடுத்த தலைமுறைகளே-கடந்த பதினைந்தாண்டுகளுக்குள்- விவசாயத்தை முற்றிலும் கைவிட்டன.எனக்குத் தெரிந்து நெல் மூடை ஒன்றுக்கு 250 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறோம்,சுமார் ஆண்டுகளுக்குள்..
இனி வாளியில் பணம் கொண்டு சென்று சட்டைப் பையில் அரிசி வாங்கும் நிலை வரும் !
விவசாயக் குடும்பத்ததில் பிறந்ததற்குப் பெருமைப் படுவோம்;அதை விட்டதற்கும் வெட்கப் படுவோம்! :((
//இனி வாளியில் பணம் கொண்டு சென்று சட்டைப் பையில் அரிசி வாங்கும் நிலை வரும் !
Deleteவிவசாயக் குடும்பத்ததில் பிறந்ததற்குப் பெருமைப் படுவோம்;அதை விட்டதற்கும் வெட்கப் படுவோம்! :((//
கேட்கும்போது எண்ணமோபோல இருக்கு.:((
|| கேட்கும்போது எண்ணமோபோல இருக்கு.:(( ||
Deleteகேட்கும் போது எப்படி இருந்தாலும் இந்த நிலையை நோக்கி நம்மை நமது அரசுகள் வெறி பிடித்து நகர்த்திக் கொண்டிருக்கின்றன. நாமும் எதையோ துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம்...
:((
அறிவன்,
Delete//நான் பயிரிட வேண்டிய பயிர்கள்,அவற்றிற்கான தேவை-டிமாண்ட்- அல்லது உபரி நிலை இவை பற்றிய அறிவையே தர வேண்டும் என்று சொல்கிறேன்.
இது ஒன்றும் சிரமமான காரியமல்ல.
ஒரு நாட்டிற்கான ஒரு ஆண்டுத் தேவைக்கான கணக்கீடும்,மொத்த விளைச்சல் புள்ளி விவரமும், எந்த மாநிலங்களில் அத்தகைய பயிர்கள் விளைவிக்கிறார்கள் என்பதும் நிச்சயம் எளிதாகத் தொகுக்கப்பட முடிந்தவையே.
இதற்குப் பிறகு வானொலி, எஃப் எம் என்று நிறைய சாதனங்கள் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்த அறிவுறுத்தல்கள் செய்ய முடியும்.
//
விவசாய பின்புலம் இருந்தும் சிரமமான காரியம் இல்லையே என்கிறீர்களே :-))
உண்மையில் நடைமுறைப்படுத்த கடினமான காரியம் இது, அதுவும் இந்தியா போன்ற எண்ணற்ற சிறுவிவசாயிகள் இருக்கும் நாட்டில்.
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன், 2007 இது குறித்து விதை என ஒரு திட்டம் வலைப்பதிவர்களாலே ஆரம்பிக்கப்பட்டது.மா.சிவகுமார் என்ற பதிவர் தான் முன்னெடுத்து சென்றார், விவாதத்தினை துவக்கியதில் அடியேனின் பங்கும் உண்டு, பல புள்ளி விவரங்கள் திரட்டி ,தேவை எவ்வளவு ,எவ்வளவு பயிரிட சொல்ல வேண்டும் என்பன போன்று தொகுத்து இணைய தளம் உருவாக்கி ,ஆங்காங்கு உள்ளப்பதிவர்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டலாம் என திட்டம்.
ஆனால் பாதியில் நின்று போச்சு.
அரசும் வானொலி, தொ.காவில் அறிவிக்கும் ஆனால் அதனைக்கேட்டு எல்லாரும் நாமும் செய்வோம் என செய்வார்கள், இத்தனை ஏக்கருக்கு மேல் பயிரிடக்கூடாது என கட்டுப்படுத்த யார் உள்ளார்கள்?
மேலும் நடப்பு பருவத்தில் தேவையான அளவுக்கு ஒரு குறிப்பிட்ட பயிர் நட்டாச்சு என உடனே தகவல் திரட்டப்படவும் வேண்டும் .
இதற்கு எளிய தீர்வாக பயிர்ப்பதிவு முறை என அரசு கொண்டு வரவேண்டும், ஆனால் அதனை செயல்ப்படுத்த அரசு எந்திரம் முழு வீச்சில் செயல்ப்பட்டால் தான் உண்டு.
சீனாவில் பயிர்ப்பதிவு முறை உண்டு, ஒரு மாவட்டத்தில் 1000 ஹெக்டேர் நெல் என நிர்ணயத்தால் , 1000 ஹெக்டேருக்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் நெல் நட முடியும், மற்றவர்கள் , அடுத்து எந்த பயிருக்கு ஸ்லாட் இருக்கோ அதனை தான் தேர்வு செய்ய வேண்டும்.
நம்ம ஊரில் அப்படி கண்டிப்பு காட்டினால் போராடுவார்கள்.
--------
விவசாய அலுவலகங்களுக்கு சென்றுப்பார்த்துள்ளீர்களா, நான் பல முறை சென்று அலுத்து போய் வந்தவன் ,இத்தனைக்கும் எனது உறவினர் விவசாய துறஈயில் உயரதிகாரியாக உள்ளார் அவரது பரிந்துரைக்கடிதத்துடன் போயும் எனது பருப்பு அங்கு வேகவில்லை.
நான் என்னமோ கோடிக்கணக்கில் கடன் கேட்டு போயிட்டேன்னு நினைக்காதிங்க , நுண்ணுயிர் உரம் மானியத்தில் கேட்டு தான் போனேன், அலைய விட்டு இப்போ ஸ்டாக் இல்லைனு ஒரு முறையும் ,உங்க வட்டத்துக்கான கோட்டா ஓவர்னு , அடுத்த முறையும் பதில் கொடுத்தார்கள், அதற்குள் எனது விவசாய ஆர்வமும் வடிந்து போச்சு :-))
|| விவசாய பின்புலம் இருந்தும் சிரமமான காரியம் இல்லையே என்கிறீர்களே :-))
Deleteஉண்மையில் நடைமுறைப்படுத்த கடினமான காரியம் இது, அதுவும் இந்தியா போன்ற எண்ணற்ற சிறுவிவசாயிகள் இருக்கும் நாட்டில்.
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன், 2007 இது குறித்து விதை என ஒரு திட்டம் வலைப்பதிவர்களாலே ஆரம்பிக்கப்பட்டது.மா.சிவகுமார் என்ற பதிவர் தான் முன்னெடுத்து சென்றார், விவாதத்தினை துவக்கியதில் அடியேனின் பங்கும் உண்டு, பல புள்ளி விவரங்கள் திரட்டி ,தேவை எவ்வளவு ,எவ்வளவு பயிரிட சொல்ல வேண்டும் என்பன போன்று தொகுத்து இணைய தளம் உருவாக்கி ,ஆங்காங்கு உள்ளப்பதிவர்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டலாம் என திட்டம்.
ஆனால் பாதியில் நின்று போச்சு.||
எளிதான காரியம் என்று சொல்லவில்லை;ஆனால் ஒரு அரசு இயந்திரத்திற்கு மிக சிரமமான செயல் இல்லை என்றே நம்புகிறேன்.
நமது மக்களுடைய மிகப் பெரிய பலம், அவர்களைப் புரிந்து கொள்ளச் செய்தால் அவர்கள் அளிக்கும் ஒத்துழைப்பு அலாதியானதாக இருக்கும்.
தனி மனிதர்களின் கூட்டமைப்பு என்ன முயற்சி எடுத்தாலும் அனைத்துப் பகுதி மக்களையும் தொட முடியாது;ஆனால் அரசால் நிச்சயம் முடியும், முடிய வேண்டும்.
நமது அரசு விவசாயத் துறை அமைச்சகத்தை நடத்தும் முறையைப் பார்த்தாலே தெரியும்;அமைச்சருக்கு விவசாயம் பற்றிய துறை அறிவோ அல்லது அனுபவ அறிவோ அல்லது கல்வி அறிவோ இருக்கிறதா?
||
சீனாவில் பயிர்ப்பதிவு முறை உண்டு, ஒரு மாவட்டத்தில் 1000 ஹெக்டேர் நெல் என நிர்ணயத்தால் , 1000 ஹெக்டேருக்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் நெல் நட முடியும், மற்றவர்கள் , அடுத்து எந்த பயிருக்கு ஸ்லாட் இருக்கோ அதனை தான் தேர்வு செய்ய வேண்டும்.
நம்ம ஊரில் அப்படி கண்டிப்பு காட்டினால் போராடுவார்கள்.||
இது போன்ற ஒரு முறையைத்தான் நானும் சொல்கிறேன். மிக எளிதான, தனி மனிதனுக்கும் பொருந்தக் கூடிய பாடம்தான் இது; நமக்கு ஒன்று ஒழுங்காக செய்யத் தெரியவில்லை என்றால், அதை ஒழுங்காகச் செய்பவன் எப்படிச் செய்கிறான் என்று அலசுவது..
இத்தனைக்கும் சீனாவின் பாசன வசதி நிலம் மொத்தப் பரப்பில் 16 சதம் மட்டுமே என்று சொல்கிறது விக்கி.
மக்களை இணைத்துக் கொள்வதுதான் முன்னேற்றத்தின் விசை. குஜராத்தில் மக்களின் பங்களிப்பால்தான் முன்னேற்றம் சாத்தியமானது.
|| மேலும் 66 ஆண்டுகள் ஆயிற்று இந்தியா சுதந்திரமடைந்து இது நாளது வரையில் இந்திய வியாபாரிகள் தான் ,இவர்களால் விவசாயிக்கு என்ன நன்மை கிடைத்தது?
Deleteவிவசாயம் செய்தவனோ கடனில் வாங்கி விற்பவனோ கோடிகளில் புரள்கிறான் இது எப்படி சாத்தியமானது?
சில்லரையில் அன்னிய முதலீடு வரவில்லை என்றாலும் நம் வியாபாரிகள் விவசாயிகளை கசக்கி பிழிவதை நிறுத்தப்போவதில்லை,இடைத்தரகர்களும்,வியாபாரியும் மட்டுமே வாழ்வார்கள். ||
இதற்குக் காரணம் விளைப்பவினிடரிருந்து உபயோகிப்பாளருக்கு வருவதற்குள் ஐந்து அல்லது ஆறு அடுக்கு மாற்றம் நடைபெறுவது முக்கியக் காரணம்.
இன்று அரிசி விளைவிப்பவரிடமிருந்து, மில் ஓனர்கள், பின் மண்டிக் காரர்கள், பின் மொத்த வியாபாரிகள் பின் சில்லரை வியாபாரி என்ற வரிசையில் உபயோகிப்பாளருக்குக் கிடைக்கிறது.
இதை மூன்று அடுக்கை மிகாமல் பார்த்துக் கொண்டாலே விவசாயிகளுக்கும் பயனாளருக்கும் நல்லது நடக்கும்.வால் மார்ட் வந்தால் இது நடக்கும் என்று மண் வகையறா உடுக்கையடிக்கிறது. ஆனால் வால்மார்ட் இரண்டை அடுக்கில் வியாபாரத்தை முடிப்பவர்கள்.!!!
மதுரையில் சகாயம் இருந்த போது உழவர் சந்தையை சிறிது மாற்றி, இந்த முயற்சியை எடுத்தார்;அவர் மாறிய பின் இது நின்று போனது.
அறிவன்,
ReplyDeleteஇந்தியிலும் சில்லரை என்பதனை "chillar"= சிறிய என்ற பொருளில் பயன்ப்படுத்துறாங்க,,ஸ்பானிஷில் chillara என்றால் சத்தமிடுதல்,
சில்லரை காசு குலுக்கினா கல கலன்னு சத்தமிடுவதால் கூட சில்லரை காசு என சொல்ல ஆரம்பித்து இருக்கலாம்.
எனவே சில்லரை தமிழுக்கு வந்த சொல்லாகவே இருக்க வாய்ப்புண்டு.
நான் அப்படிக் கருதவில்லை வவ்வால், தமிழில் இருந்தே இந்தச் சொல் சமத்கிருதத்திற்கும் பின்னர் இந்திக்கும் பரிமாறப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
Deleteசிலப்பதிகாரத்தில் பயன்பட்டிருக்கிறதா என்று பார்க்கிறேன்.
:))
வட்ட வடிவமான பொருளை சில்லு தமிழில் (sillu) என்பார்கள். சிறுவர்கள் வட்டமாக செய்யப்பட்ட ஓட்டை வைத்து விளையாடுவார்கள். அதற்கு பெயர் சில்லு ஓடு. சக்கரத்தை தமிழில் சில்லு என்பார்கள். இலங்கைத் தமிழர்கள் சக்கரத்தை சில்லு என்று தான் சொல்லுவார்கள்.
Deleteஹிந்தியில் சில்லர் (chillar) என்றால் change in coins, சில்லானா(chillana) என்றால் கத்துதல், சத்தமிடுதல் என பொருள்.
குட்டிப் பிசாசு,
Deleteஆம், சில் என்ற வார்த்தையின் திரிபே சில்லு. அதற்கு அற்பம்,உருளை,சிறிய என்று அகராதி பொருள் சொல்கிறது.
பல தூய தமிழ்ச் சொற்களை ஈழத்தமிழர்கள் தினப்படி வாழ்வில் பயன்படுத்தினார்கள்.
நன்றி.
ஞாநி எழுதியுள்ள சிவிஅமு(சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு) பற்றிய கட்டுரை.
ReplyDeleteஆச்சரியப்படத் தக்கவகையில் அவரும் மூன்று முக்கியமான விதங்களில் இந்தப் பிரச்னையை அணுகியிருக்கிறார்.
-விவசாயிகள் வளம் பெறுவார்கள் என்பது பம்மாத்து
-சீனாவின் பொருட்கள் இந்திய சந்தையில் விற்று, லாபம் அமெரிக்காவிற்குச் செல்லும்
-இந்திய கட்டமைப்பில் அந்நியர் முதலீடு செய்வார்கள் என்பது அடுத்த பம்மாத்து..