இதே தலைப்பில் நான் சென்றமுறை எழுதிய பதிவில் கடைசியில் எழும்பிய கேள்விக்கு,ஏன் நாமே ஆக்கபூர்வ சிந்தனைகளை முன்வைக்கக் கூடாது என்று தோன்றியதன் விளைவு இந்த இரண்டாம் பகுதி.
சமீப காலமாக இவர்கள் இருவரின் நடவடிக்கைகளையும்,அரசின் பதில் நடவடிக்கைகளையும் நோக்குபவர்களுக்கு,ஒன்று புலனாகலாம்.
ஆட்சியில் இருக்கும் திமுக அரசு,ஜெயலலிதா அம்மையாருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இவ்விரு நடிகர்-மாற்று-அரசியல் தலைவர்களுக்கு கொடுக்கிறது என்பது என் எண்ணம்.
விஜயகாந்த் சென்னையில் ஏற்பட்ட ‘குப்பைக்’ குழப்பத்தைப் பார்த்து பொங்கி எழுந்து,கெடு நாளுக்குள் குப்பைகள் அள்ளப்படாவிட்டால்,அவரே தொண்டர்கள் தலைமையில் இறங்கி குப்பைகளை அகற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டார்;அடுத்த நாளே,சென்னை மாநகர காவல்துறை,காவல் பணியை மிஞ்சும் செயல் வேகத்தில் பணி செய்து ‘குப்பைக்’ குழப்பத்தைப் (ஓரளவு)போக்கியது.
அதிமுக தலைமை,விஜயகாந்தை வழிமொழிந்து விட்ட அறிக்கை அரசியல் ஆட்டத்தில் யார் அவையத்து முந்தி இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது.
முன்னர் சரத்குமாரின் டாடா டைட்டானியம் ஆலை சம்பந்தமான அறிக்கை,மருத்துவரின் மணல் கொள்ளை படக்காட்சியை மங்கிப் போகச் செய்து,அரசின் அதிவேக நடவடிக்கையாக உயர்மட்டக் குழு உருவானதின் மூலம்,எது எரியும் பிரச்னை,எவர் முதலில் கவனிக்கப் பட வேண்டியவர் என்ற செய்திகளை சொல்லாமல் சொன்னது.
மேலும்,சரத்குமாரும்,விஜயகாந்தும் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையிலும்,நாளைய தமிழக அரசியலில்/ஆட்சியில் அவர்கள் பங்கும் இருக்கும் என அவர்கள் நம்புவதாலும்(நானும் கூட மெரும்பாலான அரசியல் பார்வையாளர்களைப் போலவே,இது நடக்க வாய்ப்புகள் இருக்கும் என்றே நம்புகிறேன்), மேலும் இவர்கள் இருவரும் அரசால் மிகவும் கவனிக்கப் படுகிறார்கள்,counter செய்யப் படுகிறார்கள் என்னும் நிலையிலும் (சோ இராமசாமி போன்றவர்கள் இதனை முழுமையாக மறுத்தாலும் !) இவர்கள் இருவரும் இந்த பதிவை படிக்கவேண்டும் என நான் விரும்பினேன்.
எனவே அவர்கள் இருவருக்கும் இந்த பதிவின் நகல்/இணைய முகவரி அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்,தமிழக அரசியலில் இவர்கள் இருவரும் ஓரளவு கவனிக்கப் படும் நிலையில்,இவர்கள் இருவருக்கும் ஒரு open letter ஆக இந்த கருத்துக்களை முன் வைக்கிறேன்.
முதலில் இவர்கள் இருவரின்,தனித்தனியான குறிக்கோள்கள் என்ன?இவர்கள் இருவரும் சினிமாவின் சீனியர் நடிகர்கள் வரிசைக்குப் போய் விட்டதாலும்,எஞ்சிய நாட்களுக்கு தங்கள் இருப்பு உணரப்படவும்,ஓரளவு ஒரு task ஆக மேற்கொள்ளவும் அரசியலைக் கருதினார்கள் என்றால்,நாம் சொல்ல ஏதுமில்லை;
ஆனால் இருவருக்கும் அரசியல் களத்தில் முழுஈடு பாட்டுடன் செயல்படும் விருப்பங்கள் இருப்பின்,தமிழக நலனுக்காக இவர்கள் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும்;ஆனால் இருவரும் ஒத்த கருத்துடன்,மாச்சரியங்கள் இல்லாமல் நடிகர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியது போல இணைய முன்வர வேண்டும். மேலும் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணியும் அமைக்கக் கூடாது.
அவ்வாறு நடந்தால் அது தமிழக அரசியலுக்கு ஒரு நல்ல திருப்பமாக இருக்கும்.
இருவரில் சரத்குமார்,தெளிவான திட்ட மேலான்மை முறைகளை கையாளுவது போலத் தோன்றுகிறது-அவரின் இணையப் பக்கம் ஓரளவிற்கு அவரின் அரசியல் சார்ந்த செயல்பாடுகளை/செய்திகளை முன்வைக்கிறது.ஆனால் விஜயகாந்த் வர வர சராசரி தமிழக அரசியல் வாதியின் பாதையில் போவது போலத் தோன்றுகிறது.எனவே இந்த குறிப்பு அவசியமாகிறது.முக்கியக் விஷயமாக இருவரும் இராமு வசந்தன்களையும்,சுதீஷ்களையும் அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவர்கள் விசுவாசம் மிக்கவர்களாக இருக்கலாம்.ஆனால் அரசு சார்ந்த அமைப்புகளுக்குத் தேவை தன்னலம் இல்லாத திறனாளர்கள் மட்டுமே.இதற்கு திறமையான,அப்பழுக்கற்ற,ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத ஓய்வு பெற்ற/பணியில் இருக்கும் ஐஏஎஸ் நண்பர்களை அமர்த்திக் கொள்ளலாம்.
அல்லது நாட்டுக்கு பணி செய்ய ஆர்வமாக இருக்கும் தன்னார்வ,சுயநலம் அற்ற பல்துறை வல்லுநர்களை உள்நாட்டிலோ,வெளிநாட்டிலோ தேடிக் கொணரலாம்.
(இந்த யோசனைகளை ஆக்கபூர்வமாக விவாதிக்கத் தயாரெனில்,என்னைப் போன்ற பலர் முன் நிற்பார்கள்)
அடுத்ததாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன என்று இவர்கள் இருவரும் அறிய வேண்டியது மிகவும் தேவையான ஒன்று.
அமெரிக்க பிரெசிடெண்டுகளில் ஜார்ஜ் வாஷ்ங்டன்,லிங்கன்,ரூஸ்வெல்ட்,ஹாரி ட்ருமன்,ஜான் எஃப் கென்னடி ஆகியோர் அவரவர் காலகட்டங்களில் என்னென்ன முறையில்,திட்டங்கள் தீட்டினார்கள்/அரசாங்கத்தை நடத்தினார்கள் என்பது எந்த ஒரு ஆட்சியாளரும்(அல்லது ஆட்சி செய்ய விரும்பும் நபர்கள்) அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
சிங்கப்பூரின் சீனியர் லீ’யும் இந்த பட்டியலில் தவிர்க்க முடியாதவர்.
குறைந்த பட்சம் இத்தலைவர்கள் பற்றிய புத்தகங்களையாவது இருவரும் படிக்கலாம்...ஏற்கனவே எல்லா வெளிநாடுகளுக்கும் இவர்கள் திரை படப்பிடிப்புக்காக சென்றிருப்பார்கள்,எனவே பல அந்நிய தேசங்கள் எவ்வாறு ஆளப்படுகின்றன என்ற மேம்போக்கான பார்வையாவது இவர்கள் இருவருக்கும் இருக்கும்.
இதற்கு மேல் தேவைப் படுவது ‘ஒரு மாறுபட்ட தமிழகத்தை உருவாக்குவோம்’ என்று மனதின் அடி ஆழத்தில் இருக்க வேண்டிய விழைவு !
பி.கு:முழுதும் படிக்கும் பலரும் இதை ஒரு முழுப் பிதற்றலாக எண்ணலாம்;ஆயினும் நல்ல மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கக் கூடிய எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விட்டுவிடக் கூடாது என்ற எண்ணமே இந்தப் பதிவின்/அனுப்பதலின் நோக்கம்.
சரத்குமாரின் இணைய மின்மடல் முகவரி: rsk@rskworld.com
விஜயகாந்த் இணைய மின்மடல் முகவரி,தேடிப்பார்த்தேன்,கிடைக்கவில்லை...எவருக்காவது தெரிந்தால் இந்த பதிவை ஒரு சுட்டியாக இடுங்கள்...........
தபால்கார அப்துல்காதர் - எம். எஸ். கல்யாணசுந்தரம்
-
சென்ற வருஷம் பெர்னாட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது, “இவ்வூரில் பார்க்கத்
தகுதியானவை என்னென்ன?” என்று விசாரித்தார்.
“நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்ட...
1 year ago
பல மாதங்கள் முன்பாக, விஜயகாந்த் அவர்களின் சார்பில் dmdk_captain@yahoo.co.in என்ற முகவரியிலிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது. முயற்சித்துப் பாருங்கள்.
ReplyDeleteநன்றி ஜான் அவர்களே.
ReplyDeleteநல்ல அலசல், சரத்குமாரிடம் தெளிவு இருந்தாலும், கேப்டன் அளவுக்கு அவருக்கு பாப்புலாரிட்டி இல்லை அல்லவா ?
ReplyDelete