அறிவாலயத்தின் மறுபக்கம் !
1972-73ல் சென்னையில் காஷ்மீரைச் சேர்ந்த தார் என்கிற ஜாதி அடையாளம் தெரிகிற ஒரு பிராமண முகமதியர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் பிராமணராயிருந்தவர்கள் என்று பெருமையுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவர் ஒரு டாக்டர். குவைத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவியும் டாக்டர்தான். மலையாளி. ஆனால் தங்கள் தொழிலுக்குச் சம்பந்தமில்லாமல் போல்ட்டும் நட்டும் உற்பத்தி செய்யும் சிறு தொழிலை அவர்கள் சென்னையில் தம் உறவினர் பொறுப்பில் நடத்தி வந்தனர்.
அவர்களது சிறுதொழில் கூடத்தையொட்டி வேறு சிலரும் பல்வேறு சிறு தொழில்களை
நடத்தி வந்தனர். இன்று தி முகழகத்தின் தலைமை நிலையமாக இருந்துவரும் அண்ணா அறிவாலயம் உள்ள இடத்தில்தான் அந்தச் சிறு தொழில் கூடங்கள் இருந்து வந்தன!
தி மு கழகம் அந்த இடத்தை வாங்கியதும் அங்கிருந்த சிறு தொழில் முனைவோருக்குப் போதிய அவகாசம் கொடுக்காமல், ஒரு நாள் இரவோடு இரவாக புல்டோசரைக் கொண்டு வந்து எல்லாச் சிறுதொழில் கூடங்களையும் தரை மட்டமாக்கி இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. சிறு தொழில் கூடங்களில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எல்லாம் குப்பை கூளங்களைப் போல வாரி எறியப் பட்டன!
ஆளும் கட்சியான தி மு க வின் அத்து மீறிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் முனைவோர் செய்வதறியாது திகைத்தனர். அந்தச் சமயத்தில் நான் அண்ணா தி மு க வினருடன் நெருக்கமாக இருந்தபோதிலும் முதலமைச்சர் கருணாநிதிக்கே ஆலோசனை கூறும் மதியூகியாக இருந்துவந்த முரசொலி மாறனுடனும் எனக்கு நட்பு இருந்து வந்ததை அந்த காஷ்மீரி டாக்டரும் அவர் மனைவியும் யார் மூலமாகவோ கேட்டறிந்து ஒரு பொது நண்பர் மூலமாக என்னை அணுகி நடந்த அட்டூழியத்தைத் தெரிவித்து பரிகாரம் தேட உதவுமாறு கேட்டார்கள்.
நீஙக்ள் என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது லட்சக் கனக்கான ரூபாய் நஷ்டமாகிவிட்டது; எதேனும் இழப்பீட்டுத் தொகை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்கள்.
நடந்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான போக்கிரித்தனம். நீங்கள் ஏன் இதனை எதிர்த்துப் போராடக் கூடாது என்று கேட்டேன். மற்ற சிறுதொழில் முனைவோரையும் சேர்த்துக்கொண்டு ஒரு குழுவாகச் செயல்பட முன் வந்தால் இதனை ஓர் அரசியல் பிரச்சினையாக்கிப் பெரிய கிளர்ச்சியாகவே நடத்தலாம் என்று சொன்னேன். அவர்கள் போராடும் வர்க்கமல்ல. அதிலும் அடாவடிச் செயல்களுக்குத் தயங்காத தி மு க என்கிற ஆளுங் கட்சியுடன் பொருதும் துணிவு அவர்களுக்கு இல்லை. சுமுகமாகப் பேசி அனுதாபத்தைப் பெற்று இழப்பீடாகச் சிறிது தொகையை வாங்கிக் கொண்டு நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளவே விரும்பினார்கள்.
முன்னறிவிப்பின்றிஇரவோடு இரவாக புல்டோசரை வைத்துச் சிறு தொழில் கூடங்களையெல்லாம் தி மு கவினர் தரைமட்டமாக்கிய சட்ட விரோதச் செயல்பற்றி அப்போது சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக இருந்த ஷெனாயிடம் தொலைபேசி மூலமாகப் புகார் செய்தேன். விசாரித்துச் சொல்வதாக என்னிடம் கூறியவர் பத்து நிமிடங்கள் கழித்து அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சொல்லிவிட்டார்!
ஷெனாய் ஒரு நேற்மையான அதிகாரிதான். ஆனால் ஆளுங் கட்சியான தி மு கவால் முடக்கிப் போடப்பட்ட பல அதிகாரிகளுள் அவரும் ஒருவர். அவரால் எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்காது என்பது உறுதியானதும் முரசொலி மாறனிடமே பேசி அவர்களுக்கு இழப்பீடு ஏதாவது கிடைக்க முடிவு செய்தேன்.
1958-59 ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மவுண்ட் ரோடில் முல்லை சத்தியின் முல்லை அச்சகத்திற்குத் தினசரி மாலை வந்து அரட்டை அடிப்பார், முரசொலி மாறன். அந்த அரட்டையில் நானும் பங்கு கொள்வதுண்டு. அதன் மூலமாகவே அவர் எனக்குப் பழக்கமாகியிருந்தார். ஆனால் நான் மட்டும் போனால் போதாது என்று துணைக்கு முல்லை சத்தியையும் அழைத்
தேன்.
கருணாநிதியுடன் தனக்குச் சில மனக் கசப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மாறனைச் சந்திக்க வருவது சரியாக இருக்காது என்றும் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி ஏதாவது செய்யுமாறு வேண்டுவதாகவும் முல்லைசத்தி கூறிவிடவே மாறனிடம் அவர்களை நான் மட்டுமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.
அந்தச் சமயத்தில் நான் எம் ஜி ஆரோடு நெருக்கமாக இருந்ததால் அவருக்குத் தெரியாமல் மாறனைச் சந்திக்கச் செல்வது என் மீது தவறான அனுமானங்கள் தோன்ற இடமளித்துவிடும் என்பதால் அவரிடம் தகவல் தெரிவித்தேன். அட, இதைப் பெரிது படுத்தி தி முக வுக்கு ச் சங்கடத்தைக் கொடுக்கலாமே என்று எம் ஜி ஆர் ஆர்வமாகக் கேட்டார். ஆளுங் கட்சியை எதிர்த்துக்கொள்ள சிறுதொழில் முனைவோர் துணிய வில்லை என்று விளக்கினேன். நஷ்டப்பட்டுக் கிடக்கும் சிறுதொழில் முனைவோருக்கு தி மு க தலைமக் கழகத்திடமிருந்து ஏதாவது இழப்பீடு கிடைத்தால் நல்லதுதானே என்று நான் சொல்லவும் சரி போகட்டும் முயற்சி செய்து பாருங்கள் என்று எம் ஜி ஆர் விஷயத்தை அதோடு விட்டு விட்டார்.
காஷ்மீரி டாக்டரையும் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு முரசொலி மாறனைச் சந்தித்தேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தலைமைக் கழகத்தை இதில் சம்பந்தப் படுத்த முடியாது; வேறு ஏதாவது வழியில் இழப்பீடு கிடைக்க முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். ஆனால் பலமுறை அவர்களை இழுத்தடித்துவிட்டுக் கடைசியில் கையை விரித்துவிட்டார்!
மேற்கண்ட செய்தி மலர்மன்னன் என்ற தன்னிச்சைப் பத்திரிக்கையாளரின்-Freelance Reporter-குறிப்புகளில் இருந்து படிக்கக் கிடைத்தது.இதன் மூலம் நம்மை ஆள்வோர்களின் விழுமியங்களை நாம் ஓரளவு அறிய முடியலாம்.
பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites
-
வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...
-
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...
-
பெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...
-
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...
-
நீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...
-
பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்தர் த...
-
வர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...
-
சூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...
-
இந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...
-
ஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...
பார்வைப் புலம்...
-
தபால்கார அப்துல்காதர் - எம். எஸ். கல்யாணசுந்தரம்
-
சென்ற வருஷம் பெர்னாட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது, “இவ்வூரில் பார்க்கத்
தகுதியானவை என்னென்ன?” என்று விசாரித்தார்.
“நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்ட...
1 year ago
-
ஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி
-
திரு.ஐராவதம் மகாதேவனைப் பற்றிய புத்தகத்தை varalaaru.com 2008-ம் ஆண்டு
வெளியிட்டது. அதில் ராமதுரை எழுதிய கட்டுரை இது.
கட்டுரையின் முதல் பகுதி முன்னர் வெளியா...
3 years ago
-
Last Post
-
Dear Readers, It is with great grief that I wish to inform you all of the
demise of Kadugu Sir. He was unwell for 2 months, but seemed to be getting
bette...
4 years ago
-
பேஸ்புக்
-
இங்கே ஒருவரும் வருவதில்லை என்று நினைத்திருந்தேன்..ஆனால் சிலர் இன்னமும்
வருகிறீர்கள் போல. மன்னிக்கவும் இங்கே தற்போது பதிவுகள்
எழுதுவதில்லை...பேஸ்புக்குக்கு ...
4 years ago
இதுபோன்ற அரசியல் அத்துமீறல்கள் வெட்டவெளிச்சமாக நடந்துகொண்டிருப்பது நாட்டு நடப்பறிந்த அனைவரும் அறிந்ததே. கண்டிக்கத்தக்கதே. ஆனால் இதற்கு ஒரு பதிவு தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நாட்டைப் பற்றியும் ஆளுவோர் பற்றியும்(எல்லா கழகங்களையும் பற்றியே சொல்கிறேன்,நானொரு சார்பு வாதியல்ல)பொதுக்கருத்து நீங்கள் சொன்னபடி நிலவுவது யாவரும் அறிந்ததே.
ஆயினும் பலர் அறியாத சில செய்திகள்,முக்கியமாக இப்பொதைய முப்பதின்மர் கேள்விப்படாத,ஆனால் பொது வாழ்வு மற்றும் அரசியல் நோக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவையாக நான் கருதுகிற செய்திகளை ஊடகப் படுத்துவது அவசியம் என்றே நான் கருதுகிறேன் !