தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் இசைக்கான இடம் மிக முக்கியமானது.இன்னும் தமிழிலக்கியத்தின் ஏறத்தாழ அத்தனை பாடல்களுக்கும், அந்தப் பாடல்களை இசையுடன் பாடுவதற்கேற்ற இசைக் குறிப்புகளுடனேயே இயற்றப் பட்டிருக்கின்றன என்பது உண்மை.
ஆனால் முரண்தொகையாக இந்த உண்மை இன்றைய சராசரித் தமிழரில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
இன்றைய தமிழர்களின் பெரும்பாலானாவர்களுக்கு இசை என்றாலே திரைஇசையின் கூறுகள் மட்டுமே. தொலைக்காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு சமூகத்தவரால் சொந்தம் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் கர்னாடக சங்கீதம் மட்டுமே உயர்ந்த இசையின் வடிவம் என்றும் இந்த வடிவத்தை அமைத்தவர்கள்தான் தமிழர்களுக்கும் அல்லது தென்னிந்தியா முழுமைக்கும் இசையின் கூறுகளை கர்னாடக சங்கீதம் மூலமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் கருத்தை அவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.