சிறுவயதின் தேவதைக் கதைகள்
உயிர் பெற்றெழுந்தன
உன்னைப் பார்க்கையில்,
உந்தன் வருகையில்....
உன் புன்னகைப் பொழுதுகளில்
எப்படிப் பூக்களின் மணம்?
அவை ஒளியேற்றிய மாலைகள்
நினைவின் வரிசைகளில்,
சுடரும் சுடராய்
உந்தன் இருப்பு...
இமைக்காத பார்வைகளில்
எத்தனை முறை கேட்டிருப்பாய்,
என்ன பார்வை என...
வார்த்தைகள் இல்லா மௌணக் கணங்கள்
எந்தன் பதிலாய்!
விரிந்த விழிகளின் விசாலத்தில்
வானமே வசப்படும் போது
என் மென்மனது எம்மாத்திரம்?
நினைவுச் சருகளில்
ஈர மலர்களாய் தவறிய முத்தங்கள்...
கை கோர்த்த மென்மை மட்டும்
மனதில் சுமையாக.
கன்னம் தொட்டு உச்சி முகப்பேன்
என் கைகளில் நீ இருந்தால்...
என்ன சாபம் எனக்கு மட்டும்,
கைக்கெட்டும் தூரத்தில்
எப்போதும்,
கலையும் ஓவியங்கள் !!!
உதிரம் கண்களில்
உன்னத ஓவியம் கலையும் பொழுதுகளில் !!!
தேவதைகள் எப்போதும் மறைதல் என்ன விதி ??!!!!!
மறையும் தேவதைகள்
ReplyDeleteமறைந்து
ஒரு மழைப்பொழுதில்
விரியும் நிதர்சன வாழ்க்கை.
நன்றி ஜோதி இராமலிங்கம்.
ReplyDeleteஆயினும்....
நிதர்சன வாழ்க்கை நனவுலகில்,
நினைவுகள் என்றும் பெட்டகமாய் !