பெல்லி டான்ஸ் என்றவுடன் ஏதோ விவகாரமான நடனம் என்று எண்ணுவதுதான் இயல்பு.(தாய்லாந்து சென்று வந்தவர்களுக்கு ஏதேனும் மலரும் நினைவுகள் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல).ஆனால் இந்த செய்தி சுவாரசியமானது.
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படும் நடனம் இந்த லேட்டஸ்ட் பெல்லி டான்ஸ்.(இதை தொப்பை நடனம் என்று தமிழ்ப்படுத்தினால்,படுத்துவது போல இருப்பதால் அப்படியே அழைக்கிறேன்!).
படத்தைப் பார்த்தவுடன் இது கருவுக்கோ குழந்தைக்கோ ஊறு விளைவிக்கும் என்ற எண்ணம்தான் முதலில் வரும்.ஆனால் இல்லை என்கிறார் கிழக்கு வர்ஜீனியா மருத்துவப் பல்கலையின் Dr.Sue Kelly Sayegh.இதை வேகமாக fast pace dance போல செய்யாமல்,மெதுவான,எளிதான அசைவுகளில் மேற்கொள்வது பெல்விக் தசைகளுக்கு பேறுகால நேரத்தின் தேவைகளுக்கு ஏதுவான பயிற்சியாக இருக்கும் என்கிறார்.
பேறுகாலம் நெருங்கும் வரைக்கும் இந்த பெல்லி டான்ஸ் பயிற்சியை மேற்கொண்ட ஒரு பட்டமேற்படிப்பு மாணவி,எந்தவித வலியோ வேதனையோ இன்றி பிரசவித்ததாக சொல்கிறார்.
டைம் வலைத்தளத்தின் செய்தி (27/08/2007), அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்த parental belly dance குறுந்தகடு விற்பனைத்தர வரிசையில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகச் சொல்கிறது.
Uncle Tom சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதுதான் கீழை நாட்டினர் பலரின் நம்பிக்கை!
ஆனால் இந்திய யோகமுறைகளின் பயிற்சி பற்றி ஆர்வம் உள்ளவர்கள் யோகாச்சார்யா சுந்தரம் எழுதிய 'யோக சிகிச்சை' புத்தகத்தில் 'கருவுற்ற மகளிருக்கான பயிற்சித் திட்டம்'ஐ ஒருமுறை புரட்டிவிடுங்கள் !
சோதனை
ReplyDelete