குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (48) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, October 16, 2024

206 - உயிருக்கு நேர் - எனது நூல்

MadrasPaper இதழில் கடந்த 52 வாரங்களாக நான் எழுதி வந்த உயிருக்கு நேர் தொடர் வரும் புதன்கிழமை வெளியாகப் போகும் இதழுடன் நிறைவடைகிறது.  அதற்காக எழுதிய ஒரு நிறைவுரை இது. 
கடைசிக் கட்டுரையை அலங்கரிப்பது யார், என்ன என்ற விவரங்களை இதழ் வெளிவருகின்ற புதன்கிழமையன்று வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் 

o O o 

உயிருக்கு நேர் : ஒரு நிறைவுரை: 

உயிருக்கு நேர் தொடரைத் திட்டமிட்டது சரியாக ஓராண்டுக்கு முன்னர். Madras Paper இதழின் ஆசிரியரும், எனது இனிய நண்பருமான திருமிகு.பா.இராகவன், எனது வரலாறு முக்கியம் தொடருக்குப் பின்னர் இன்னொரு தொடர் முயற்சி செய்யலாம் என்று சொல்லி, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தோன்றித் தமிழுக்கு மாபெரும் தொண்டு செய்த 52 தமிழறிஞர்களின் வாழ்வையும், ஆக்கங்களையும் ஆவணப்படுத்தும் தொடரைப் பற்றிய எண்ணத்தைச் சொன்னபோது, எனக்கு முதலில் சிறிது மலைப்பு ஏற்பட்டது. காரணம் இருநூறு ஆண்டுகளின் வரலாறு ஒழுங்காகக் கிடைக்குமா என்ற கவலை.




 விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கிய போது, அந்தக் கவலை கூடியது. பின்னர் பல தமிழ்த் தளங்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட இந்திய

205 - தமிழ் என்னைத் தேடிப் பிடித்த கதை

கீழுள்ள இந்தப் பதிவை இரண்டாண்டு முன்னர் பகிர்ந்திருக்கிறேன். அப்போது நண்பி Gayathri Ramakrishnan எப்படி ஐயா இப்படித் தமிழில் உழல்கிறீர் என்று கேட்டிருக்கிறார்; கேட்டிருந்ததை இன்றுதான் பார்த்தேன். அவருக்குப் பதில் சொன்னேன். 
அது ஒரு பதிவாகவும் படிக்கத் தக்க வடிவில் இருந்தது. எனவே ...

()

|| எப்படி என்று சிறிது நேரம் கழித்து விரிவாகச்சொல்கிறேன்.|| 
சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன் என்று இரண்டு வருடம் போய்விட்டது. 🙂.
சரி சொல்லிவிடுவோம், 

()

மரபணுவில் எங்கோ தமிழ் நிச்சயம் இருந்தது. 




ஏனெனில் அம்மாவின் அப்பா, பாண்டித்துரைத்தேவர் மதுரையில் 1901'ல் நிருமாணித்த தமிழ்ச்சங்கத்தில் வித்வான் தேர்வுக்கு அமர்ந்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தங்கப் பதக்கம் வாங்கியவர். 

204 - உயிருக்கு நேர் - சுவாமி சித்பவானந்தர்

16 வயதில் அந்தக் கல்லூரியில் நான் சேர்ந்த போது எனக்கு அந்தக் கல்லூரியைப் பற்றிய பெரிய அறிமுகம் கிடையாது.  மதுரை அமெரிக்கன் கல்லூரி அல்லது சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில்தான் சேருவேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த என்னை, எனது பெற்றோரும், பெரியப்பாவும் சேர்ந்து இந்தக் கல்லூரிக்குத் தள்ளி விட்டார்கள். தள்ள முயற்சி செய்து அவர்கள் வென்றதன் காரணம் எளிது; பெரியப்பாவின் மகனும் எனது ஒன்றுவிட்ட தம்பியுமான சொக்கன் அந்தக் கல்லூரியோடு இணைந்த பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான். 




எனது பள்ளித் தோழர்கள் எல்லாம் , நான் அந்தக் கல்லூரியில் சேரப் போகிறேன் என்றதும் என்னைப் பார்த்து அத்தனை அனுதாபப் பட்டார்கள்.

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...