உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக் கொண்டு வருகிறதென்பதை தமிழ்நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனதைப் பதியவைத்துக்கொண்டு வெளிஉலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விஷயங்களிலும்,அற்பச்செய்கைகளிலும் நாளையெல்லம் கழியவிட்டு கிணற்றுத்தவளைகளைப் போல் வாழ்வதிலே பயனில்லை.
வர்த்தஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப்புழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேட வேண்டும்.படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களையும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத் தேர வேண்டும்.ராஜ்ய விவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு,மற்ற ராஜதந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகள் செய்து நிறைவேற்றிப் புகழ் பெற வேண்டும்.கைத்தொழில்கள் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடந் தருகின்றன.
திருஷ்டாந்தமாக,நேர்த்தியான சித்திரங்களும் வர்ணங்களுல் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும் அழகான் ஆடைகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள்.இவர்களுக்குப் படிப்பில்லை;வெளிஉலகின் நிலை தெரியாது;கையிற் முதற் பணமுமில்லை.நமக்குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக் கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து அவற்றை நமது தொழிலாளிகளைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாபமுண்டாகும்.
இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமும் கொடுப்பது.எல்லாவிதமான கைத்தொழில்களும் தற்காலத்தில் இரும்பு எந்திரங்களினாலே செய்யப்படுகின்றன.ஆதலால் நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பல விதங்களிலே அறிவு விருத்தியும் ஜீவன ஸௌகர்யங்களும் ஏற்பாடு செய்து கொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத்தொழில் வளர்க்க வேண்டும்.
இனி வர்ணப் படம்,தையல் வேலை,மைத்தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களில் அறிவு மிகவும் சிறந்தது.கொஞ்சம் சிரமப்பட்டால்,இத்தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிடலாம்.சிறிது காலத்துக்கு முன்பு சீனத்திலிருந்தும் ஜப்பானிலிருந்தும் பல சித்திர வேலைகளைக் கொண்டு போய் அமெரிக்காவில் காட்டியபோது,அங்கே அவற்றிற்கு மிகுந்த புகழ்ச்சியும் பிரியமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதை நாமேன் செய்யக்கூடாது?
வெளிநாட்டுக்கு கப்பலேறிப் போங்கள்.புறபடுங்கள்.தொழிலாளிகளே,வியாபாரிகளே,வித்வான்களே,புத்திமான்களே,எப்படியேனும் யாத்திரைச் செலவுக்கு பணம் தயார் செய்து கொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள்.நமது தொழில்களுக்கும்,கலைகளுக்கும்,யோசனைகளுக்கும் வெளிநாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும்.சந்தேகப்பட வேண்டாம்.
பரோடாவிலிருந்து இநாயக்கான் என்ற சங்கீதவித்வான் சில வருஷங்களுக்கு முன்பு தென் ஜில்லாக்காளில் யாத்திரை செய்து வந்தது நம்மிலே சிலருக்கு ஞாபகமிருக்கலாம்.அங்கே அவர் சாதாரணமாக இருந்தார்.பின்னிட்டு அவர் பல தேசங்களில் சஞ்சாரம் செய்து பிரான்ஸ் தேசத்திலே போய் நல்ல கீர்த்தியடைந்திருக்கிறார்.அங்கே பல பெரிய வித்வான்களும் பிரபுக்களும் அவருடைய தொழிலை அற்புத்திலும் அற்புதம் என்று கொண்டாடுகிறார்கள்.சங்கீத ஞானமுடைய தமிழ்ப்பிள்ளைகள் முதலாவது கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுக் கொண்டு பிறகு ஐரோப்பிய சங்கீதத்தின் மூலாதாரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.இது மிகவும் சுலபமான காரியம்.தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்.இந்தத் தேர்ச்சி கொஞ்சமிருந்தால் பிறகு நமது சங்கீதத்தை ஐரோப்பியர் அனுபவிக்கும்படி செய்தல் எளிதாகும்.அப்பால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய் நமது சங்கீதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினால் மிகுந்த கீர்த்தியும்,செல்வமும் பெறலாம்.
எவ்விதமான யோசனை,எவ்விதமான தொழில்,எவ்விதமான ஆசை,எதையும் கொண்டு பிற தேசங்களுக்குப் போக வேண்டும்.ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவியமில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம்.வெளிஉலகம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.நமது வரவுக்குக் காத்திருக்கிறது.நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது.வெளியுலகத்தில் நாம் மேம்பாடு பெற்றாலொழிய,இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை.ஆதலால்,தமிழ்ப் பிள்ளைகளே,வெளிநாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும்,மன வுறுதியினாலும்,பல விதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும்,செல்வத்துடனும்,வீர்யத்துடனும் திரும்பி வாருங்கள்.
உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க !

-மகாகவி பாரதி கட்டுரைகள்(சமூகம்-எதிர்காலம்)
தீர்க்கதரிசியான அந்த மீசைக் கவிஞனை நினைவு கூரும் நாள் இது !!!
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்;கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
பிகு:படம் எனது கைங்கர்யம்...
பிகு:படம் எனது கைங்கர்யம்...
We really missed him
ReplyDeleteமுதல் வருகை,கருத்துக்கு நன்றி கீதா..
ReplyDeleteமகாகவியைப் போன்றோர்கள் யுகத்துக்கொருவர்தான்!
நீங்க வரைந்ததா? அருமையா இருக்கு புகைப்படம்!! வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலையரசன்,
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
ஆம்,படம் நான் வரைந்ததுதான்..
கட்டுரை உபயோகமானது, சரியான நாளில் பிரசுரிக்கப்பட்டது. அதை விட படம் அருமை! நானும் பாரதியின் ரசிகன்... நான் அடிக்கடி நினைத்து சிலிர்க்கிற பாரதியின் வரிகள் பல. அவற்றில் முக்கியமானவை இரண்டை இங்கே பகிர்ந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்:
ReplyDelete"வெள்ளக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தவிராதோ" - பராசக்திக்கு விண்ணப்பம்.
"அட மண்ணில் தெரியுது வானம், அது நம் வசப்படல் ஆகாதோ" - ஆன்ம சக்தி.
http://kgjawarlal.wordpress.com
This comment has been removed by a blog administrator.
ReplyDelete