Pages - Menu

Wednesday, February 22, 2023

203 - அரசாண்மை என்றால் என்ன (அல்லது) ஏன் லீ க்வான் யூ ஒரு மிகச்சிறந்த தலைவர் ?


அரசாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. 

சூழல் இதுதான் : 1990'ல் லீ பதவியிலிருந்து விலகி, இரண்டாம் தலைமுறைத் தலைவராக கோ சிங்கையின் பிரதமராகிறார்.

லீ எவ்வாறு செயல்படுபவர், எவ்வாறு செயல்பட்டார் என்பதை உலகம் 30 ஆண்டுகளாக அப்போது கண்டிருந்தது. ஒப்பு நோக்க கோ, எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும், லீ பெயருக்குத்தான் பதவி விலகுகிறார், உண்மையில் ஆளப்போவது அவர்தான் என்ற ஊகங்களும் நிலவிய காலகட்டம். 

அந்த நேரத்தில் சிங்கை தேசியப் பல்கலையில் மாணவர்களிடைய நடைபெற்றது இந்த உரை. 

இந்த உரையில் மூன்று பொருண்மைகளை நான் மிக இரசித்தேன். 

1. ஒரு தலைவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை வட்டாரத்தின் பல நாடுகளின் தலைவர்களோடு ஒப்பு நோக்கி லீ கொடுக்கும் காட்டுகள். அதில் கோ எப்படிப்பட்டவர் என்பதை அவரறிந்த பார்வையில் ஒரு கோடு போட்டு அளிக்கும் சாமர்த்தியம்.

2. கடந்த சில சம்பவங்களில் உண்மையில் அரசில் முடிவெடுத்தது யார் என்று வெளிப்படப் பேசுகின்ற தேவையும் நுட்பமும்.

3. இந்த 55 நிமிட உரையில் அவரது உரை 14 நிமிடம்தான். 40 நிமிடங்கள் பல்கலை மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். 
இந்தியாவில், தமிழகத்தில் இப்படி ஒரு தலைவர் உரையும், பொதுவாகக் கேள்விகளைச் சந்திக்கும் திறமும் இருக்கிறதா என்ற எண்ணமும், அந்த நிலை வந்தால் நாடு எப்படி மாறி விடும் என்ற ஏக்கமும் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. 

ஏன் லீ ஒரு மிகச் சிறந்த தலைவர், நிர்வாகி என்பதற்கும்,  மிகப்பெரிய மாற்றம் ஒன்றை ஒரு தலைவன் எப்படி நிகழ்த்தி அதனோடு இயைந்து போக வேண்டும் என்பதையும் பாடம் போல அறிந்து கொள்ள இயலும் காணொளி. 

அடுத்தது லீ எப்போதும்  தன்னியல்பாகப் (எக்ஸ்டெம்போர்) பேசுவபவர்; எழுதிவைத்துப் படிப்பவர் அல்ல.  இந்த உரை வித்தியாசமாக, எழுதி வைத்து வாசித்த உரை. எனவே உரையின் முக்கியத்துவமும் கூடுகிறது !! 

2 comments:

  1. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM திரட்டியிலும் இணையுங்கள்.
    https://bookmarking.tamilbm.com/register

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ஆனால் தொடுப்பு வேலை செய்யவில்லை

      Delete