Pages - Menu

Sunday, August 12, 2012

* * * * * 160. நட்சத்திர வாரம்- மீண்டும் வந்தேன் !

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்.
இந்த வார நட்சத்திரமாக தமிழ்மணம் அன்புடன் அழைத்திருக்கிறது; இது இரண்டாவது முறையாக நட்சத்திரமாக இருந்த எழுதக் கிடைத்த வாய்ப்பு.

ஒரு வித்தியாசமான ஒற்றுமையை நான் இந்த அழைப்பில் பார்த்தேன். சென்ற அழைப்பு நான் சுமார் 80 பதிவுகள் எழுதியிருக்கும் பொழுது வந்தது; இப்போது கிட்டத்திட்ட 160 பதிவுகள் எழுதியிருக்கிறேன், இரண்டாவது வாய்ப்பு !

2008 வாக்கில் வந்த முதல் வாய்ப்பின் காலக் கட்டத்தில் நட்சத்திரமாக எழுதக் கிடைக்கும் வாய்ப்பைச் சிறிது பெருமையுடனே ஏற்று நாங்கள் எழுதினோம்; இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் என்னுடைய இயக்கம் பதிவுலகில் விறுவிறுப்பானது கிடையாது,இன்னும் சொல்லப்போனால் 2007-2008 கால கட்டத்தை விட, இப்போது நான் எழுதும் பதிவுகள் ஆண்டுக் கணக்கில் பார்த்தால்,மிகக் குறைவானவையே. எனினும் தமிழ்மண நிர்வாகம் இரண்டாவது வாய்ப்பை நல்கியிருக்கிறது.

பதிவுலகில், பதிவு எழுதுகிறவர்களில் மிகச் சிறுபான்மையினர் வர்க்கம் ஒன்று உண்டு; அவர்கள் எழுதும் பதிவுகள் மிகக் குறைந்த அளவில்,ஆனால் பெரும்பாலும் கனமான விதயங்களைத் தொட்டு இருக்கும். நான் அந்த வகை வலைப்பதிவாளன். இவர்கள் எழுதுவது அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கவும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்; ஆனால் அவை அனைவருக்கும் தேவையானதாக இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

இருப்பினும், தமிழ்மண நிர்வாகம் அன்பினில் வைத்த அழைப்பை, முன்னர் போலவே, எழுத்தின் அடக்கத்திற்குக் கிடைத்த வாய்ப்பாகவே நான் கருதிக் கொள்கிறேன்.

தமிழ் மண நிர்வாகத்திற்கு நன்றிகள் !

படித்து, ஊக்கமளித்து, உரையாடப் போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் !

()

எனக்கு முன்னர் கிடைத்த நட்சத்திர வாய்ப்பின் காலத்திற்கும், இப்போதைக்கும் இடையில்,என்னுடைய  வலைப்பதிவு சார்ந்த இயக்கத்தில், எழுத்தில் பெரும் வேறுபாடுகள் ஏதும் இல்லை, பின்வரும் வார்த்தைகள் தவிர.


...எந்த மாற்றமுமில்லை, பதிவுகளில் எழுதுவது குறைந்து,படிப்பது மேலும் அதிகரித்திருக்கிறது என்பதைத் தவிர. 
எப்போதும்,எதையாவது,எவருக்காவது அறிவித்துக் கொண்டிருக்க வேண்டியிருப்பது, இருத்தலியல் சார்ந்த ஒரு நோய் என்று  சமீப காலங்களில் மனதிற்குப் படுகிறது. 
ஆயினும் சொல்லித்தானாக வேண்டிய செய்தியோ,தேவையோ எழும் போது, அதை எப்போதும் மானுடக் கடமையாகவை நினைக்கிறேன்.   
நல்ல வாசிப்பை அளிப்பதற்கு எப்போதும் போல இப்போதும் முயற்சிப்பேன். 
வாய்ப்புக்கு தமிழ்மணத்திற்கும்,வாசிப்பதற்காக உங்களுக்கும் நன்றி !
வாசிப்பைத் தொடர்ந்த தளங்களில் உரையாடல் நிகழ்ந்தால்,உரையாடல் வழங்கிய சிந்தனைகள் கிளர்ந்தால் அதுவே எழுதுவதன்,படிப்பதன் பயனும் வெற்றியும் !
நன்றி மீண்டும்.

()


ஒரு quick recap ஆக, சென்ற வாய்ப்பில் எழுதிய நட்சத்திர வாரப் பதிவுகளைப் பற்றிய சிறிய ஒரு அறிமுகம். பதிவுலகில் புதிதாக வந்திருக்கும் நண்பர்களுக்கு எளிதாக மீண்டும் ஒரு பார்வை,பார்க்க ஏதுவாக !



1.***** 71.எது அறிவு ?????? 
எது அறிவு என்ற கேள்வியை எழுப்பினால், அறுதியிட்டு என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள் !

2.***** 72 - ஃபிபோனாக்கி எண் தொடரும்,மனித வாழ்வும்
பங்குச் சந்தை, நிதி வணிகம்-currency trading, ஊகவணிகம்-Futures & Options, போன்ற துறைகளில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான செய்தியை அடக்கியிருக்கிறது, இந்தப் பதிவு. நிதித் துறைகளில்-finance domain- பணியிலோ அல்லது சுய தொழிலிலோ இருப்பவர்களுக்கும் இந்தப் பதிவு பிடித்திருக்கலாம்.

விதய ஞானத்தைத் தேடும் அனைவருக்கும் கூடப் பிடிக்கலாம்.

3.***** 73.ஒரு இரங்கல்,ஒரு தலையங்கம்
என்னைப் பொறுத்த வரை மற்றும் ஒரு சாதாரணப் பதிவு..ஆனால் இதிலும் சிந்தனைக்கு வேலை இருக்கிறது.


4.***** 74.பகுத்தறிவும்,சில நுண்கலைகளும்
நிறைய விவாதத்தைக் கிளப்பிய ஒரு பதிவு.
நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் பதிவுகளில் எழுப்பப் பட்ட பின்னூட்டங்களுக்கும், இப்போது எழுப்பப் படும் பின்னூட்டங்களுக்கும், பளிச்சென வெளித்தெரியும் ஒரு வேறுபாடு உங்களுக்கு இந்தப் பதிவைப் படிக்கும் போது தோன்ற வேண்டும் !
இல்லையெனில் நீங்களும் ஜோதியில் ஐக்கியமாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். :))

5.***** 75-In Lighter Vein-Some Cartoons
சில கேலிச் சிந்திரங்கள். எளிய ரசனைக்கும், அனுபவிப்பதற்கும்.

6.***** 76.ஒரு நடிகரின் பேட்டி
இந்தப் பேட்டி 60 களின் மத்தியில் வெளிவந்தது.
பேட்டியளித்த நடிகர் ஏன் அவ்வளவு ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார் என்பது அவரது இந்தப் பேட்டியைப் படிக்கும் போது புரியும் !

7.***** 77.கூத்தாட்டு அவைக்குழாம்
இன்னொரு ரசமான பதிவு. இலக்கியமும்,குறளும் இணைந்த இன்னொரு பதிவு.

8.***** 78.மறுபாலின நட்பும்,கார்த்திக் பட கிளைமாக்ஸும்
என்னைப் பொறுத்த வரை, ஒரு சாதாரணப் பதிவு. இதை எழுதிய போது, இதுவும் விவாதங்களைக் கிளப்பலாம் என்று எதிர்பார்த்தேன்..ஆனால் அமைதியாகக் கரையைக் கடந்தது இது.. :))

9.***** 79.நட்சத்திர வாரத்துக்கான ஒரு பருந்துப்பார்வை
இது நட்சத்திர வாரத்திற்கு முன்னால் வரை, நான் எழுதிய பதிவுகளில் எனக்கே  திருப்தியும், மகிழ்ச்சியோ,நெகிழ்ச்சியோ கொடுத்த பதிவுகள். அவற்றை படிக்காதவர்களுக்காக ஒரு தொகுப்பு.

இப்போது படிக்கும் உங்களுக்காகவும்..

10.***** 80.பாரதியின் - கண்ணம்மாவும்,செல்லம்மாவும்
பாரதியின் மனிதக் காதலிக்கும்,கனவுக் காதலிக்குமான ஒரு ஒப்பீடு.
இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இல்லாவிட்டால் ஏன் என்று கூறுங்கள் !



இந்தப் பதிவுகளை ஏன் இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் என்று சிலருக்குக் கேள்வி வரலாம்; மேலும் பலருக்கு இது விளம்பர உத்தியோ என்று எண்ணம் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

நட்சத்திர வாரத்தில் பதிவெழுதும் நபருக்கு, தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் அனைத்துப் பதிவுகளையும் காட்டி, ஒரு மரியாதை செய்கிறது; அந்த வாரத்தின் நட்சத்திரம் எந்த வகைப் பதிவுகளை எழுதுவார், எந்த விதப் பதிவுகளை அந்தப் பதிவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்பது போன்ற ஒரு Curtain Raiser இந்தப் பதிவு.

இந்த முறையும் இதே போன்ற பதிவுகளே வரும் என்று அர்த்தமல்ல. இதே போன்ற பதிவுகளாகவும் இருக்கலாம், அல்லது முற்றிலும் வேறானதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

நீங்களே பாருங்களேன், பொறுத்திருந்து !

படித்து, வாக்களித்து, விவாதிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி.

தமிழ்மண சேவையை காசியிடம் இருந்து பொருள் கொடுத்து வாங்கி, தமிழ் வலைப் பதிவர்களுக்கு ஒரு நல்ல திரட்டியாகத் திகழும் வண்ணம் முயற்சியெடுத்து நிலைநிறுத்தியிருக்கின்ற நண்பர்கள் குழுமமான, தமிழ்மண நிர்வாகத்திற்கும், தமிழ்மண சேவைக்காக தனியான நன்றிகள்.


9 comments:

  1. ரொம்ப சந்தோசப்படுகிறேன்... நன்றி...

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. உங்கள் மகிழ்வுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர் தனபாலன்.
    :))

    ReplyDelete
  3. அறிவன் சார், நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.கண்ணன்.
      நட்சத்திர வாரத்தில் அடிக்கடி வருவீர்கள் என்று நம்புகிறேன்.. :))

      Delete
  4. நட்சத்திர வாழ்த்து(க்)கள் அறிவன்.

    அப்போ 240 இடுகை வந்ததும் மூன்றாம் முறை, நட்சத்திரம் ஆகப்போறீங்க!!!!!

    அதுக்கும் முன்கூட்டிய இனிய வாழ்த்து(க்)கள்.:-)

    ReplyDelete
    Replies
    1. || நட்சத்திர வாழ்த்து(க்)கள் அறிவன்.||

      நன்றி டீச்சர். நட்சத்திரம் ஆனாத்தான் உங்கள மாதிரிப் பெருந்தலைகளை பதிவுப் பக்கம் இழுக்க முடியுது.. :))

      || அப்போ 240 இடுகை வந்ததும் மூன்றாம் முறை, நட்சத்திரம் ஆகப்போறீங்க!!!!!||

      இதத்தான் டீச்சர் பஞ்ச்'னு சொல்லணுமோ? :)

      அப்பாதுரை சார் தன்னுடைய லேட்டஸ்ட் பதிவில் லேட்டஸ்ட்டா உங்களப் பத்தி பாராட்டியிருக்காரே..

      Delete
    2. ஆனாலும் உங்க ஆசிகளோட மூன்றாம் முறையும் ஆகிவிட்டால் போகிறது..
      :))

      Delete
  5. வாழ்த்துகள் ஐயா..!

    ReplyDelete