Pages - Menu

Wednesday, September 10, 2008

***** 74.பகுத்தறிவும்,சில நுண்கலைகளும்

நமது தமிழ் மண் மிகப் பழமையான மனித குல நாகரிகமும்,பண்பாடும் கொண்ட ஒரு சமூகம் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மண்.

உலகின் மிகப் பழமையான,இன்னும் உயிர்ப்புடன் இருக்கக்கூடிய,பெரும்பாலும் தடைபடாத தொடர்ச்சி கொண்ட மொழியும்,சமுதாயமும் உலகில் மிகச் சிலவே.

அவற்றில் தமிழ் மொழியும்,தமிழ்ச் சமுதாயமும் குறிப்பிடத்தக்க அளவில் முதன்மையானவை.

இன்னும் சொல்லப் போனால் உலகின் முதல் முழு நாகரிக மனிதன் தமிழ்ச் சமுதாய மனிதனே,உலகில் முதல் முழு வளர்ச்சியடைந்த மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன.(இது பற்றிய தனியே ஒரு பதிவில் எழுத உத்தேசம் இருக்கிறது.)

தமிழ்ச் சமுதாயம் உலகில் தோன்றிய பகுதி சொல்லத் தேவையன்றி இந்திய தீபகற்பத்தின் கீழ்க்கொண்டைப்பகுதி;அது கடல் கொள்வதற்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவை இணைத்த மிகப் பரந்த நிலப்பரப்பரப்பில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான கூறுகளும் கிடைக்கின்றன.

இந்த தமிழ்ச் சமுதாயம் மிகுந்த நாகரிகத்துடன் வாழ்ந்து மனித வாழ்வுக்குப் பயந்தரக் கூடிய பல நுண்கலைகளை வளர்த்து,அனுபவித்து வாழ்ந்திருக்கிறது.

இந்த 64 கலைகளுக்கும் பல பண்பட்ட அடிப்படைக் கட்டுமான விதி நூல்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும்.அவை என்னவாயின,ஏன் வடமொழி ஆதிக்கம் இந்தியா முழுதும் பரவின என்பதற்கான சமூக,அரசியல் காரணங்கள் பெரும் ஆய்வுக்குட்பட்டவை.(இவை பற்றி சிறிது எனது ‘தமிழும்,சிவமும் இன்ன பிறவும் என்ற தொடரில் சிறிது தொட்டிருக்கிறேன்,இது இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது.இந்த விண்மீண் வாரத்திலாவது அதை முடித்து விட உத்தேசித்திருக்கிறேன்.)

இப்போது தொடங்கிய விதயத்துக்கு வருவோம்.

64 கலைகள் என்ன என்று சிறிது ஆய்ந்தோமனால்,அவற்றின் பட்டியல் பின்வருமாறு:


அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

இந்த கலைகளுக்கான வடமொழிச் சொற்களும் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப் பட்டுள்ளன.

இவற்றில் சில இன்னும் பெருமளவு பயன்பாட்ட்டில் இருக்கின்றன,சில அருகிவிட்டன.

பயன்பாட்டில் இருக்கும் சில கலைகளில் நான் தொடப்போவடுது கணிதம்,கணியம் சார்ந்த சோதிடம்,எண்கணிதம் மற்றும் கைரேகை பற்றிய சில விதயங்கள்.

இவற்றைப் படிப்பதோ,கற்பதோ அல்லது நம்புவதோ இன்றைய ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை,இவற்றை முற்றிலும் ஓட்ட வேண்டும்,இவை நமக்குத் தேவையானவை அல்ல என்பது பகுத்தறிவாளர்களின் வாதம்.

இது பற்றிய பெரும் ஒட்டு/வெட்டுப் பேச்சுகள் சமீபத்தில் பதிவுலகில் நடந்தது.

இந்த கலைகளில் ஒன்றைப்பற்றி எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்.சுப்பையா அவர்கள் பெருமளவு கேள்விகளை எதிர்கொண்டு,அவரின் பதிவுத் தொடரில் அவர் ஒரு வேறுபடுகூற்று (டிஸ்கியை இப்படி சொல்லலாம்தானே !) போட்டு எழுத வேண்டிய நிலைக்கு ஆளானார்.

இவை பற்றிய சில அலசல்களை நான் முன்வைக்க விரும்பினேன்,எனவே இப்பதிவு.

முதலில் பகுத்தறிவு என்றால் என்ன?

கண்ணதாசன் அவர்கள் தன்னுடை அர்த்தமுள்ள இந்துமதத்தில்,பகுத்தறிவு என்ற சொல் பரவலாகவும்,பெருமிதமாகவம் உபயோகிக்கப்பட்ட கால கட்டத்தில்,பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு ஒரு ‘புள்ளிக்குறி(Point Blank) விளக்கம் அளித்திருப்பார்,அதை அப்படியே கூறினால் சிலர் மனம் புண்படுமாதலால் அதைக் குறிப்பிட இயலவில்லை.

பகுத்தறிவு என்பது நமக்கு முன் உள்ள விதயங்களை அலசி,இவை நமக்கு நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா,இந்தக் காரியத்தை கைக்கொள்ளலாமா அல்லது தள்ளலாமா என முடிவெடுக்க உதவும் அறிவு.அந்த பகுத்தறிவின் பால் பார்த்தால் இந்தக் கலைகளை முதலில் அலசி ஆராய வேண்டும்,பின்னர் அது கொள்ளத்தக்கதா அல்லது தள்ளத்தக்கதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அலசி ஆராய வேண்டுமெனில்,முதலில் அந்தக் கலைகளைக் கற்க வேண்டும்;பின் அதில் உள்ள குறை நிறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்;அவ்வாறு யோசித்து அந்த அறிவை,தனக்கான வாழ்வுக்கான நன்மை தீமைக்குப் பயன்படுத்துதல்தான் பகுத்தறிவே தவிர,அந்தக் கலைகளைப் படிப்பவரை அல்லது பயிற்சி கொள்பவரை நிந்திப்பது பகுத்தறிவு அல்ல.

கடலில் பயணம் செய்கிறோம்;வானிலை மிக மோசமாக இருக்கிறது,பெரும்புயல் அடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது எனபதைச் சொல்வது ஒரு கலையில் தேர்ச்சி பெற்றவர் அளிக்கும் அறிவு;அதைப் பகுத்தறிந்து இந்தப் பயணத்தைக் கொள்ளலாமா அல்லது தள்ளலாமா என முடிவெடுப்பது,தன் சொந்த முடிவு;அது அந்த கலையாளரின் முடிவுக்குட்பட்டதல்ல.

இதை மறந்து அந்தக் கலை அல்லது கலையாளர் பகுத்தறிவுக்கப்பாற்பட்டு நடக்கிறார் என்பது,சொல்பவருக்கு உண்மையில் பகுத்து அறியும் அறிவு இருக்கிறதா அல்லது அவர் பிறர் சொல்வதைக் கேட்டு ஒப்பிக்கும் கிளிப்பிள்ளை போன்றவரா என்ற கேள்வியை எழுப்பக்கூடிய ஒன்று,உண்மையான பகுத்தறிவின் படி !

இதில் கலையாளரின் குறைபாடுகளுக்கு வாய்ப்புண்டு-உண்மையில் அதுதான் பெரிய குறை-இந்த சூழலில் இரண்டு வித வாய்ப்பு(Choice) பொதுவானவர்களுக்கு இருக்கிறது:

-ஒன்று இந்தக் கலையறிவு அளிக்கும் முடிவு வாய்ப்புகள் எனக்குத் தேவை அல்ல;நான் இவை அன்றியே முடிவெடுக்க முடியும் என்பது.

-அல்லது இக்கலையாளரின் கலைத் தேர்ச்சி குறைபாடுடையது,நல்ல தேர்ச்சியாளரை நாடுவேன்;அல்லது நானே இக்கலையை முடிந்த அளவு கற்று அதன் பயன்/அபயனை அறிய முயற்சிப்பேன் என்பது.

இவ்வகையில் இந்தியாவில் மட்டுமல்ல சில மேற்கத்திய கலையாளர்கள் கூட இக்கலைகளில் அபூர்வத் தேர்ச்சி பெற்று மனித குலத்திற்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.(கெய்ரோ-எண்கணிதம்/கைரேகை ,பி.வி.ராமன் - சோதிடம் ...)

இந்த இரண்டிலும் இல்லாத மூன்றாவதான,இந்த குறைபாடுடைய கலையாளரை உதைப்பேன் என்பது வன்முறையின் பாற்பட்டதே தவிர பகுத்தறிவின் பாற் பட்டதல்ல.

அல்லது அப்படி உதைக்க முற்பட்டால்,அந்தக் கலையாளரின் தரப்பு அதை விட மிகுந்த வன்முறை காட்டக் கூடிய வாய்ப்பிருந்தால்,தானே உதைபட வாய்ப்பிருக்கிறது என்பதை வேண்டுமானால் பகுத்தறிவின் பாற்பட்ட முடிவாக கருத முடியும்.

:))))

எனவே இந்த வகையில் பார்க்கும் போது,இந்த ‘அலசி ஆராயும் பகுதிக்கு வெளியே நின்று கொண்டே,இவை மனித சமுதாயத்திற்குத் தேவை இல்லை,என முன் முடிவுக்கு வருவதுதான் பகுத்தறிவா என்பதில் எனக்கு மிகுந்த ஐயப்பாடு இருக்கிறது.

நான் மேற்சொன்ன இரண்டாம் வித வாய்ப்பை மேற்கொள்ளும் வகை.

கண்ணை மூடிக் கொண்டு ஒன்றை ஆதரிப்பதோ,விலக்குவதோ பொதுவாக நன்மை பயப்பதில்லை,அதற்கான அறிவிக்கப் பட்ட சான்று இருக்கும்வரை ! நெருப்பில் கை வைத்தால் சுடும் என்பது அறிவிக்கப் பட்ட சான்று,ஆனால் சோதிடக் கலையைப் படித்தால் செத்துப் போவாய் அல்லது உருப்படாமல் போவாய் என்பதற்கான அறிவிக்கப் பட்ட சான்று இருந்தால் அவற்றைத் தள்ளலாம் !

இனி,இவற்றை ஆய்வதால்(கவனிக்கவும்,நம்புவதால் அல்ல !) என்ன பயன் அல்லது அபயன்கள் விளையக் கூடும் ??

பொதுவாக மனிதர்களில் சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றன.நமது ப்ண்டைய அறிவு இந்த பொதுவான குணாதிசயங்களை வரிசைப்படுத்த முயன்று கிடைத்த வ்டிகட்டப்பட்ட(Trial & Error filteration) அறிவுதான் சோதிடம் போன்ற கலைகள் என்பது என் அறிந்த முடிவு.

இது கணித நிகழ்தகவின்(Probability) விதிகளுக்கு உட்பட்டது,ஏனெனில் இது மனித சமுதாயம் தோன்றிய காலத்தில் இருந்து,பல்வகைப்பட்ட மனிதர்களை அவ்ர்களின் வாழ்வை ஆய்ந்து,அந்த முடிவுகளை அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை வகைப்படுத்தி வந்த சில முடிவுகளின் தொகுப்பு.இந்த விதிகளின் கூறுபாடுகள் அல்லது விளைவுகள் நிகழ்தகவு வாய்ப்புக்கு வெளியே இருக்கும்,சூழலும் மறுக்கப்படக் கூடியதல்ல.(The decision arrived at based on these arts can still fall outside of the probable decision domain, in which case they prove to be false) ஆனால் இதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என்பது,இந்தக் கோட்பாடுகள் எவ்வளவு முறை பயன்படுத்திப் பார்க்கப் பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அமையும்.

இந்தக் கோணத்தில் சிந்தித்தால்,மனித சமுதாயத்தின் காலம்,நாகரிக தமிழ்ச் சமுதாயத்தின் காலம் இரண்டும் பெருமளவு ஒத்துப் போகும் வாய்ப்புகள் இருப்பதால்,பயன்பாட்டுக் குறைபாடு (Error of Judgement ) பெருமளவு குறைந்தே இருக்கும் என்பது என் அறிந்த முடிவு.

சரி,இக்கலைகளினால் என்ன பயன்?

சில குறியீடுகள் இக்கலைகளால் கிடைக்கிறது என்பது என்னுடைய அனுபவ உண்மை.


காட்டாக, கைரேகை விதிகளின் படி மெல்லிய நீண்ட, நகங்களும் விரல்களின் கீழ்ப்பகுதியும் நேரான கோட்டில் இருக்கும் படி அமைந்த நேரான விரல்களும், தொடுதலுக்கு மென்மையான உள்ளங் கைகளும் கொண்ட நபர்கள் நுண்ணறிவும்,கலைகளின் மீதான ஈடுபாடு/தேர்ச்சி கொண்டவர்களாகவும்,எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பினராகவும் இருப்பார்கள் என்பது ஒரு விதி.

இது அனுபவத்தில் பெரும்பாலும் சரியாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

அதே போல் 2ம் தேதி பிறந்த நபர்கள் பெரும்பாலும் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும்,எளிதில் திடமான முடிவெடுக்காத வழவழா நபர்களாகவும் இருப்பார்கள் என்பது எண்கணித விதி.

இதுவும் என் அனுபவத்தில் பெரும்பாலும் சரியாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.

இதே போல் இந்த வகையில் 2ம் தேதி பிறந்த நபர்களின் சோதிடக் கட்ட அமைப்பில் சந்திரன் வலுவான இடத்தில் இருக்கும் பட்சத்தில் இந்த குணாதிசயங்கள் சோதிட ரீதியாகவும் மறு உறுதிப்படுத்தப்(Re-confirmed)படுகின்றன.

இதே போல் தேதி 4ல் பிறந்தவர்கள் மிகவும் உறுதியான மனம் படைத்தவர்களாகவும்,எதிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் திறமை பெற்றவர்களாகவும்,பல்துறை அறிவைத் தேடிப் படிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது ஒரு விதி.

இவ்வகை நபர்கள் புதன் வலுவாக அமைந்த சாதக் கட்டத்தைக் கொண்டிருந்தால்,அது மறு-உறுதிப்படுத்தும் சுட்டியாக இருக்கும்.

எனவே,இந்தக் கலைகளை கண்ணை மூடிக் கொண்டு மறுப்பதுதான் பகுத்தறிவுக்கு மீறிய செயல்;இவற்றை ஆராய்ந்து அவை நமக்கு ஏதேனும் செய்திகள் சொல்கின்றனவா எனப் பார்ப்பது பகுத்தறிவின்பாற் பட்டது என்பதே நான் சொல்ல விழைவது....

51 comments:

  1. 39-வது கலையை கொஞ்சம் விளக்க உரையுடன் கூற முடியுமா

    ReplyDelete
  2. ஆகா,வால்பையனோட வால் இப்போ தெரியுதே..

    வால்பையன்,கவலைய விடுங்க,நெறையப் பேரு அதை ஆராய்ந்து(!) உரை எழுதியிருக்காங்க.

    Jhonson & Master's Book on Sexuality அப்படின்னு ஒரு புத்தகம் இருக்கு.

    அவர் உண்மையிலேயெ இதை ஆராய்ந்தார்;எப்படித் தெரியுமா?

    ஒரு அழகான அற்புதமான அறை படுக்கை வசதிகளுடன் அமைத்து,அதில் சுமார் 10000 சோடிகளுக்கு மேல் காதல் புரிய அனுமதித்து-அவர்களின் மன,உடல் ரீதியான மாற்றங்களை ஆவணப்படுத்தி,அப்புறம் அந்த Sex Manual நூலை வெளியிட்டார்.

    எல்லாம் முழு அனுமதியுடனேயே நடந்தது.

    நவீன மேற்கத்திய அறிவில் காமத்தை ப் பற்றிய பல புரிதல்களை ஏற்படுத்திய புத்தகம் அது.

    ஆனால் இவற்றிற்கெல்லாம் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய காம சாஸ்திரம்,கொக்கோகம் முதலியன எழுதப்பட்டு விட்டன.

    20 நூற்றாண்டுகளில் காமம் உளவியல் ரீதியாக மேலும் பகுக்கப்பட்டது.

    ஆனா வள்ளுவர்,'மலரினும் மெல்லியது காமம்,சிலர் அதன் செவ்வி வயப்படுவர்' அழகா அதையும் தொட்டுச் சென்றவர் !

    ReplyDelete
  3. ஆரம்பப்பள்ளியிலேயே கிரகம் என்றால் என்ன?சூரியனின் கிரகங்கள் எத்தனை?அவற்றின் பெயர் போன்றவற்றை நமக்கு சொல்லிக்கொடுக்கின்றனர்.நாம் என்ன கற்றோமோ அதில் இல்லாத கிரகங்களை வைத்து தான் ஜோதிடம் சொல்கின்றனர்.அதனால் ஜோதிடத்தின் அடிப்படையே தவறு.கற்ற கல்வியின் படி நிற்கும் ஒருவன் ஜோதிடத்தை மறுக்கத்தான் முடியும்.இப்படி மறுப்பதற்கு பகுத்தறிவு தேவையில்லை,ஐந்தாம் வகுப்பு அறிவு இருந்தாலே போதும்.

    ReplyDelete
  4. அற்புதமான பதிவு! எழுதியமைக்கு நன்றி!

    //ஆனா வள்ளுவர்,'மலரினும் மெல்லியது காமம்,சிலர் அதன் செவ்வி வயப்படுவர்' அழகா அதையும் தொட்டுச் சென்றவர் !//

    ' . . . செவ்வி தலைப்படுவர்' இல்லையோ?!

    -முத்துஸ்வாமி

    ReplyDelete
  5. ஜாலி ஜம்பர்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    சோதிட கிரகங்கள் ஒரு குறியீடு மட்டுமே..மேலும் சூரியன்,சந்திரன்,புதன்,குரு,சுக்கிரன்(வெள்ளி),சூரியன்(ஞாயிறு) ஆகியவை இருக்கின்ற கிரகங்கள் தாமே..
    இதுதவிர ராகு/கேதுவைப் பற்றி சோதிடம் பேசுகிறது,அவை சாயா கிரகங்கள் என்ற தனிப்பட்ட கிரகங்களாகவே குறிப்பிடப் படுகின்றன.
    இவை தவிர மாந்தி,குளிகன் போன்ற சிலவும் சொல்லப் படுகின்றன..இவை யுரேனஸ்,நெப்ட்யூன்,ப்ளூட்டோ வுக்கு ஈடானவையாக இருக்கும் வாய்ப்பும் இருக்கிறதல்லவா ?

    ஒன்று சரியானது அல்லது தவறானது என்பதற்கான அறுதிக்கூறு இல்லாதவரை அது பரிசீலனைக்குட்பட்டது/ஆய்வுக்குட்பட்டது என்பதே நான் சொல்வது..

    மேலும் ஐந்தாம் வகுப்பு அறிவை வைத்தே மறுக்கலாம் என்று நீங்கள் சொல்வதுதான் இடிக்கிறது;ஐந்தாம் வகுப்பு அறிவுக்கு பகுத்தறியும் அறிவு இருக்க வாய்ப்பில்லையே...
    :)

    ReplyDelete
  6. அனானி முத்துசுவாமி,
    நன்றி..திருத்தி விட்டேன்.

    ReplyDelete
  7. ///எனவே,இந்தக் கலைகளை கண்ணை மூடிக் கொண்டு மறுப்பதுதான் பகுத்தறிவுக்கு மீறிய செயல்;இவற்றை ஆராய்ந்து அவை நமக்கு ஏதேனும் செய்திகள் சொல்கின்றனவா எனப் பார்ப்பது பகுத்தறிவின்பாற் பட்டது ///

    உண்மை!நிதர்சனமான உண்மை!
    ஆராய்ந்து பார்க்க யாருக்கும் நேரமில்லை!
    அடுத்தவன் சொல்வதைக் கேட்கப் பொறுமையும் இல்லை.
    காலம் வரும்போது அவரவர் தானாக உணர்ந்தால்தான் உண்டு.
    இல்லையென்றால் கட்டை வேகும்வரை அது நடக்காது!
    ஒருகாலத்தில் நானும் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தவன்தான்
    இறைவனையே மறுப்பவர்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?
    மறுப்பவர்கள் மறுத்துவிட்டுப்போகட்டும்.
    அதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை!
    it is their problem!

    ReplyDelete
  8. மிகமிக சரியான அருமையான பதிவு.

    கடவுள் இல்லை என சொல்பவர்கள், அல்லது அறிவியல் பால் மயக்கம் கொண்டு இருப்பவர்கள் இங்கு ஒன்றை கவனித்தாக வேண்டும்.

    சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு சிறிய பெட்டித் திரையில்( அதாங்க t.v) பார்க்கலாம் என்று சொன்னால் நிச்சயமாக சிரித்திருப்பார்கள். அதுவும் குலுங்க குலுங்க கேலி செய்து.

    இப்போது இங்கு சிரிக்கவேண்டுமா அல்லது சிந்திக்க வேண்டுமா என முடிவுவெடுங்கள்

    தொலைகாட்சியில் தெரிவது ஒளியும் ஒலியும் மட்டுமே. இந்த ஒலியும் ஒளியும் மனிதனின் உடல், அறிவு தொகுப்பில் இருங்கும் இரண்டு ஆற்றல்கள். இந்த இரண்டு ஆற்றல்கள் அச்சுவார்க்கப்படும்போது மனித தொகுப்பில் உள்ள அத்தனை ஆற்றல்களையும் அச்சு வார்க்க முடியாதா என்ன? அந்த சாதனையை தான் ஆன்மீக ஞானிகள் கலையாக நமக்கு போதித்துள்ளார்கள்.

    செவ்வாய் கிரகத்தில் நீர் எடுத்து விட்டோம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோம். அனால் இந்த நாளில் இங்கு மழைபெய்யும், இந்த விதை விளையும் என்றால் நீ என்ன கடவுளா என கேட்கிறோம்.

    இன்று வானியல் விஞ்ஞானிகள் செய்வது என்ன? ஹப்பில் என்ற தொலைநோக்கியை வைத்து காணும் ஒளிகளை எல்லாம் நிறப்பட்டையில் பாய்ச்சி இந்த நட்சத்திரம் இத்தனை தொலைவில் இருக்கிறது. இப்படி வெடிக்கிறது இப்படி வளைகிறது என்கிறார்கள். இதெல்லாம் கணிப்புகள் மட்டுமே தானே தவிர நிரூபணங்கள் அல்ல.

    சோதிடம் என்பதை தமிழில் கணிப்பு என்பார்கள். இந்த கணிப்பு தானே கணக்காவும் அறிவியலாகவும் இன்று நம்முன் நிற்கிறது.

    சோதிடத்தில் ஜாதகம் புகுத்தியது தான் சோதிடத்துக்கு வந்த சாபக்கேடு.
    மருத்துவத்தில் எத்தனை போலி மருத்துவர்கள் மருத்துவங்கள்., அதற்காக இன்று மருத்துவத்தையே முட்டாள்தனமாகவா சொல்கிறோம்? அதே போல தான் சோதிடம் உட்பட ஆன்மீக கலைகளும்.

    என்றோ அரசியல் செய்த தவறுக்காக (ஜாதிபிரித்தல், சமஸ்கிருதம் போற்றல்) இன்று குறிப்பாக தமிழர்கள் ஆன்மீகத்தையே ஒதுக்கி நாத்திகம் பேசுவது பெரியமுட்டாள் தனம்.

    தலையில் முடியை வளர்ப்பது அல்ல கடவுளின் வேலை. உடலில் அறிவை வளர்ப்பது தான் கடவுள் தத்துவம்.

    தொலைந்த தொலைத்த ஆன்மீக கலைகளை மீண்டும் ஆக்கப்பூர்வமாக கொண்டுவாருங்கள். அது தான் இந்த மனித குலத்தின் மிக மிக அவசரத்தேவை.

    தங்களின் இந்த முயற்சிக்கு எனது கம்பீரமான பாரட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  9. நண்பர் சுப்பையா அவர்களுக்கு நன்றிகள்..

    அர்த்தமுள்ள இந்துமதம் அல்லது மனவாசம்-எது என சரியாக நினைவில் இல்லை,கண்ணதாசன் கூறுவார்;உலகின் இருவிதமான ஆத்திகர்கள் உண்டு,தமது 60 வயதுக்கு மேல் ஆத்திகர்களாகும் நபர்கள்,மற்றவர் 60 வயதுக்கு முன்பே ஆத்திகராபவர்கள்,நாத்திகர்கள் என எவருமே இல்லை என.

    எம்.ஜி.ஆர் அவர்களும் ரோஸ் பவுடர் எனப்படும் ஓப்பனைக்குப் பயன்படும் தூளை திருநீறாகப் பயன்படுத்துவார் என சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    கருணாநிதி அவர்கள் வடபழனி கோவிலில் கதவைச் சாத்திக் கொண்டு வழிபட்ட நாடகம் பார்த்து 1990 களில் தமிழ்நாடே சிரித்தது..

    ஆனால் எனது பார்வை ஆத்திக நாத்திகம் சார்ந்தது என்ற நோக்கிலேயே அல்ல;ஒரு நுண்கலை என்ற அளவில் மனிதர்களை எடைபோடும் கருவியாக அது உதவி செய்யும் என்றே நான் கருதுகிறேன்.

    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. நண்பர் அறிவகம்..
    மிக நீண்ட விளக்கங்களுக்கு நன்றிகள்.

    நீங்கள் சொல்வது மெத்தச் சரி.

    நான் ஆன்மீக நம்பிக்கை உள்ளவனே;அதே சமயத்தில் 1000 லிட்டர் பால் இறைவன் என்னும் உருவகத்தில் கற்சிலையின் மீது ஊற்றப்படுவது எனக்கும் உடன்பாடானதல்ல.

    நமது சடங்குகள் அனைத்தும் நமது வழிபடு மனத் திருப்திக்காக நடத்தபடுபவை.

    சடங்குகளை முன்வைத்து இறைத்தத்துவத்தையோ,நுண்கலைகளையோ மறுப்பது மூடத்தனம்.

    உங்களது பாராட்டுக்கள் மகிழ்வு கொடுக்கின்றன.நன்றி.

    ReplyDelete
  11. இதுவரை வந்த நட்சத்திர பதிவுகளிலேயே அபத்தமான, அலுப்பூட்டும் பதிவு. ம்ம்... என் ஆறு நிமிடம் வீண்!! :-(

    ReplyDelete
  12. //ஆரம்பப்பள்ளியிலேயே கிரகம் என்றால் என்ன?சூரியனின் கிரகங்கள் எத்தனை?அவற்றின் பெயர் போன்றவற்றை நமக்கு சொல்லிக்கொடுக்கின்றனர்.நாம் என்ன கற்றோமோ அதில் இல்லாத கிரகங்களை வைத்து தான் ஜோதிடம் சொல்கின்றனர்.அதனால் ஜோதிடத்தின் அடிப்படையே தவறு.கற்ற கல்வியின் படி நிற்கும் ஒருவன் ஜோதிடத்தை மறுக்கத்தான் முடியும்.இப்படி மறுப்பதற்கு பகுத்தறிவு தேவையில்லை,ஐந்தாம் வகுப்பு அறிவு இருந்தாலே போதும்.//

    அன்புள்ள சாலிசம்பர் ... இல்ல ... மகிழ்துள்ளி(?) வெச்சிக்கலாமா ... இல்ல வேண்டாம் ... ஜாலிஜம்பரே இருக்கட்டும்!

    ஐந்தாம் வகுப்பினளவே தங்கள் அறிவு என்று நிரூபிக்கிறீர்கள்!

    ஐந்தாம் வகுப்பில், 5-லிருந்து 3-ஐக் கழிக்கலாம்; ஆனால் 3-லிருந்து 5-ஐக் கழிக்க இயலாது, என்றே சொல்லிக் கொடுப்பார்கள். ஆயினும், 6-ம் வகுப்பிற்குச் செல்லும் போது தான், அந்த இரண்டாவதும் எப்படிச் சாத்தியமாகும் என்பது புரிபடும் (the concept of negative integers).

    "ஐந்தாம் வகுப்பு அறிவு இருந்தாலே போதும்" என்று நினைப்பவர்களுக்கு, அதற்கு மேற்பட்ட தத்துவங்கள் விளங்காதவைகளாக மாத்திரமல்ல, (தங்கள்) அறிவுக்கு மாறுபாடானவைகளாகவும் தோன்றுவதில் வியப்பேதுமில்லை தான்.

    குறைபாடு தத்துவத்தில் இல்லை.

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  13. //நாம் என்ன கற்றோமோ அதில் இல்லாத கிரகங்களை வைத்து தான் ஜோதிடம் சொல்கின்றனர்.//

    ஆமா, அது சரி தான்! சடக்குமடங்கை, திகிற்றமீடல், தாக்குருத்தி, நிடம்பஸ்தாடனை, முத்திச்சம், ஸமலவிலாம்பகம் போன்ற கிரகங்களைத் தானே சொல்கிறீர்கள்!

    ஏதாவது சொல்லீரப் போறேன்!

    புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனின்னு புரியிற மாதிரி சொன்னா அது "இல்லாத கிரகங்கள்", அதையே இங்கிலிபீசுல Mercury, Venus, Mars, Jupiter, Saturn அப்புடீன்னு அஞ்சாப்புல சொல்லிக் குடுத்தா அது தான் "அறிவு", இல்லையா?!

    வெளங்கலைன்னா, இப்பிடியெல்லாம் அடாவடி அடிக்கப்பிடாது! "அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன்" எம்பெருமான் முருகனிடம், சிவபெருமானே சிஷ்ய பாவத்துடன், கை கட்டி வாய் பொத்திக் கேட்டது போல் கேக்கணும்.

    ராகு கேதுவுக்கெல்லாம், வானவியல் விளக்கங்கள் இன்றளவும் உண்டு. இவை இரண்டும், சந்திரனின் நீள்வட்டப் பாதையின் தளம் பூமியின் நீள்வட்டப் பாதையின் தளத்தை சந்திக்கும் இரு நகரும் புள்ளிகள் என்று சொன்னால், தங்கள் ஐந்தாம் வகுப்பு அறிவுக்கு எட்டவா போகிறது?!

    அப்புறமென்ன வீண் ஜம்பம், "அதனால் ஜோதிடத்தின் அடிப்படையே தவறு. கற்ற கல்வியின் படி நிற்கும் ஒருவன் ஜோதிடத்தை மறுக்கத்தான் முடியும்", இதெல்லாம்?!

    உங்கள அஞ்சாப்பு அறிவோடயே காலந்தள்ளச் சொல்லி யாருமிங்கே கட்டாயப்படுத்தலே! தேடல் இருந்தா ... விடுங்க! இதையெல்லாம் போயி உங்ககிட்ட சொல்லிக்கிட்டு நான் வேற!

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  14. நண்பர் முத்துசுவாமி,நன்றி.

    நண்பர்களே,கருத்துக்கள் எவ்வளவு காரசாரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,தனிநபர் புண்படும் வண்ணம் தூற்றலோ,கீழ்த்தர வசவுகளோ தயவுசெய்து வேண்டாம்,முழுதாக வெட்ட நேரிடும்.

    இயன்றவரை அனைவரும் கூகிள் ப்ரொபைல் வைத்தாவது பின்னூட்டமிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. நண்பர் லக்கி,தமிழ்மணத்தில் இதுவரை வந்த நட்சத்திரப் பதிவையெல்லாம் ஒப்புநோக்கும் வெட்டி ஆபீஸர் வேலை பார்க்கிறீர்கள் எனத் தெரியாமல் போயிற்று,மன்னிக்கவும்.

    தவிரவும்,மூனறாம் வகுப்பளவே படிக்கும் அறிவுநிலை கொண்ட யாராவது ஒப்பியல் தத்துவம்(Relativity Theory) வகுப்புக்குள் நுழைந்துவிட்டால்,6 நிமிடமோ,6 மணி நேரமோ,மிகுந்த மண்டையிடியாகத்தான் இருக்கும்;என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,தயவுசெய்து சிரமப்படாதீர்கள்.

    (10 வருடங்களுக்கு முந்தைய சப்பற்ற விதயங்களான) மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்,டி.ஆர்.பி ரேட்டிங்,டாக்டர் பிரகாஷ் போன்ற மனித குலத்தை உய்விக்கும் விதயங்களில் உங்கள் நேரத்தைச் செலவிட்டால் இவ்வாறு வருந்த வேண்டியிருக்காது !

    ReplyDelete
  16. முத்துஸ்வாமிகாள்,
    ராகு,கேது ஐந்தாம் வகுப்பில் இல்லை.ஆனால் உயர் கல்வியில் இருப்பது போல் நீங்கள் கூறுகின்றீர்கள்.அதற்கு ஆதாரம் இருக்கிறதா?
    (ஆதாரம் என்ன ஆதாரம் எங்க பிஜேபி ஆட்சி வரட்டும் அப்புறம் பாருங்கடா டேய் அப்புடீன்னு சவுண்டு வுடுறீங்களா. அதுவும் சரிதான்)

    ReplyDelete
  17. ஜாலி ஜம்பர்,
    நன்றி...

    பிஜேபி ஆட்சிக்கும்,இந்த பதிவுக்கும் என்ன ஐயா தொடர்பு????

    ReplyDelete
  18. சில அஃறினைப் பன்றிகள் பதிவில் வந்து கழிந்து விட்டுப் போயிருக்கின்றன.

    சிலரின் கொண்டைகள் தெரிகின்றன.

    கூட்டத்தில் நின்று கல்லடிக்கும் மனோபாவம் போல மனச்சிதைவு கொண்ட இது போன்ற முட்டாள்கள் எழுதி என்ன கிழிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    சிலமுறை மாட்டியும் புத்திவரவில்லை போலிருக்கிறது.

    ReplyDelete
  19. //சோதிட கிரகங்கள் ஒரு குறியீடு மட்டுமே..மேலும் சூரியன்,சந்திரன்,புதன்,குரு,சுக்கிரன்(வெள்ளி),சூரியன்(ஞாயிறு) ஆகியவை இருக்கின்ற கிரகங்கள் தாமே..//
    சூரியன் என்பது கிரகம்(planet) இல்லை.அது நட்சத்திரம்(star).மேலும் ஜோதிடம் சொல்வது புவி மையக்கோட்பாடு.விஞ்ஞானம் நிரூபித்திருப்பது சூரிய மையக்கோட்பாடு.

    ReplyDelete
  20. நண்பர் சிபி,கோள்களும் சாதக கிரகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை நோக்கியே உங்கள் கேள்விகள் இருக்கின்றன.

    நான் சொல்வதே சோதிடத்தின் கிரகங்களே ஒரு குறியீடு மட்டுமே என்கிறேன்,அதாவது symbol.

    சோதிடம் இரு பகுதியாலானாது-ஒன்று பிறந்த அமைப்பு,அது என்றும் மாறாதது.

    கோள்களின் மாறுதல்கள் எனப்படுபவை கோசார மாறுதல்கள் எனப் படுகின்றன.

    ஆனால் சோதிடத்தின் அடிப்படை மாறுதல்கள் இல்லாதவை..

    ReplyDelete
  21. //உண்மை!நிதர்சனமான உண்மை!
    ஆராய்ந்து பார்க்க யாருக்கும் நேரமில்லை!
    அடுத்தவன் சொல்வதைக் கேட்கப் பொறுமையும் இல்லை.
    காலம் வரும்போது அவரவர் தானாக உணர்ந்தால்தான் உண்டு.
    இல்லையென்றால் கட்டை வேகும்வரை அது நடக்காது!
    ஒருகாலத்தில் நானும் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தவன்தான்
    இறைவனையே மறுப்பவர்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?
    மறுப்பவர்கள் மறுத்துவிட்டுப்போகட்டும்.
    அதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை!
    it is their problem!//

    போலி பகுத்தறிவாளர் களுக்கும் ..பரபரப்பிற்காக எதிர்வினை பின்னூட்டம் போடுவதையே தொழிலாக இருப்பவர் களுக்கும் சரியான பதில்...சுப்பையா சார் ..
    சரியான நேரத்தில் ,சரியான பதிவு..நன்றி ..
    எண்கணிதம் பற்றி விளக்கம் போட்டமைக்கும் நன்றி.

    ReplyDelete
  22. ஜோதிடத்தை அறிவியல் அடிப்படையில் அனுகுவதற்கும்,வெறும் நம்பிக்கை கொண்டு பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நடந்த எந்த அறிவியல் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் வெறும் நம்பிக்கை சார்ந்து நிரூபிக்க முயல்வது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
    மேலும் அறிவியலின் அனைத்து சாராம்சங்களையும் உள்வாங்கியிருக்கும் தங்களைப் போன்றோர் இதைப்பற்றிக்கொண்டிருப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

    ReplyDelete
  23. நண்பர் அருண் என்ற பட்டர்ஃப்ளை-
    தங்கள் பதில் தொடர்பற்று இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி இருந்ததால் வெளியிட இயலவில்லை,மன்னிக்கவும்.

    பதிவு மாற்றி அடித்து விட்டீர்களோ?????

    ReplyDelete
  24. ஆர்கே.சதீஷ்குமார் அவர்களுக்கும் நன்றி..

    எண்கணிதம் பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடலாமென்றுதான் ஆசை..ஆனால் கம்பன் அயோத்தியை வருணிக்கும் போது சொன்னபடி,'கொடுப்போர் இல்லை ஓர் கொள்வோர் இலாமையால்' எவருக்காக அதைத் தெளிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிளம்பியதாலும்,நேரப்பற்றாக் குறையாலும் விட்டு விட்டேன்...

    ReplyDelete
  25. கோவை சிபி,நான் சோதிடத்தை அறிவியலின் அங்கமாக அணுகுகிறேன்,அதிலிருந்து ஏதேனும் பயன் மனித வாழ்க்கைக்குக் கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன்.
    விடை ஆம் எனக் கிடைக்கிறது.

    அறிவியலின் கூறே அதுதானே ?

    I do the experiment,when results are within acceptable range,I decide that the test has quality acceptance,if it doesn't it fails.

    சோதிடம் முழுதாகத் தோற்றுவிட்டதாக சொல்லமுடியவில்லை !

    அதற்காக தெருவெங்கும் கடை விரித்திருக்கும் ஒவ்வொரு சோதிடராகப் பார்த்துக் சாதக ஏடை நீட்டிக் கொண்டிருந்தோமானால் வேறு வேலை பார்க்க ஏலாது..

    ReplyDelete
  26. //
    //சோதிட கிரகங்கள் ஒரு குறியீடு மட்டுமே..மேலும் சூரியன்,சந்திரன்,புதன்,குரு,சுக்கிரன்(வெள்ளி),சூரியன்(ஞாயிறு) ஆகியவை இருக்கின்ற கிரகங்கள் தாமே..//
    சூரியன் என்பது கிரகம்(planet) இல்லை.அது நட்சத்திரம்(star).மேலும் ஜோதிடம் சொல்வது புவி மையக்கோட்பாடு.விஞ்ஞானம் நிரூபித்திருப்பது சூரிய மையக்கோட்பாடு.
    //

    ஆங்கிலத்தில் "What's in a name?" என்று சொல்வார்கள். ஒரு மாங்கனியைப் "பாகற்காய்" என்று அழைத்தாலும் அதன் குணமோ சுவையோ மாறிவிடுவதில்லை, மாறிவிடப்போவதுமில்லை. அதே போலத் தான் சூரியன் கிரகமா நட்சத்திரமா என்பதும்; அதே போலத் தான் ராகு-கேதுவும். பெயர்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தாலும், பல செய்திகள் சொல்பவையாக இருந்தாலும், சில நேரங்களில் பெரும் உண்மைகளை உணர்த்துபவையாக இருந்தாலும், அடிப்படையில் அவை குறியீடுகளே (symbols) என்பதை மறக்கலாகாது.

    (ராகு-கேது பற்றிய எனது முந்தைய விளக்கத்திற்கு, பிஜேபி என்று ஏதேதோ தொடர்பில்லாமல் சவுண்டு விட்டு, ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருக்கும் சாலி சம்பர் அவர்களுக்கு: ஆதாரம் நிறையவே இருக்கிறது; ஆனால், நான் உங்களுக்கு ஊட்டி விடுவதாக (spoon-feeding) இல்லை. இணையம் இருக்கிறது; லட்சக்கணக்கில் வலைத்தளங்கள் இருக்கின்றன; தங்களுக்கு, நான் ஏற்கெனவே குறிப்பிட்ட "தேடல்" இருக்கிறதா என்பது தான் இங்கு கேள்வி.)

    மற்றொன்று, அறிவன் அவர்கள் பொருத்தமாக எடுத்தாண்ட ஒப்பியல் தத்துவம் ("relativity theory") மூலமாகவே சிலவற்றை விளக்கலாம்:

    "சூரியன் கிழக்கில் உதிக்கும்" என்று சொன்னால் உடனே அது புவி மையக்கோட்பாடாகி விடுமா என்ன? ரயிலில் பயணிக்கையில் "செங்கல்பட்டு வந்துருச்சா?" என்று கேட்டால், அதற்காக, அப்படிக் கேட்டவருக்கு, "நாம் பயணிக்கும் ரயில் தான் அந்த ஊரைச் சென்றடைகிறது, அந்த ஊர் வருவதில்லை; இது கூட இவருக்கு விளங்கவில்லை!" என்றா பொருள்?! இதையெல்லாம், anthropocentric என்று சொல்வார்கள்; இவை மனிதனை மையமாக வைத்து, அவன் கோணத்தில் மற்றவை எங்கிருக்கின்றன (relavity; that is, relative to the human being) என்பதைச் சொல்வது.

    உணர்த்தலில் எளிமைக்காக இப்படி மனிதனைச் சார்ந்தவாறு சொல்லப்பட்டாலும், அடிப்படைத் தத்துவங்களைப் பற்றிய புரிதலில் பொதுவாகவே இவற்றில் பெரிய குறைபாடுகள் அதிகம் இருப்பதில்லை. (சிறு குறைபாடுகள் நிறையவே உண்டு; இவை திருத்தப்பட வேண்டியவை; அதற்கான ஆராய்ச்சிகளை, நம்மூரிலும் சரி, மேலை நாடுகளிலும் சரி, தக்கவர்கள் மேற்கொண்டு தான் இருக்கிறார்கள். ("தக்கவர்கள்" என்று ஏன் சொன்னேன் என்றால், தெரியாத ஒன்றைத் திருத்தி அமைக்க முடியாதல்லவா? ஒன்றைத் திருத்தியமைக்க முற்படுமுன் அதைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இன்றியமையாததல்லவா? அத்துறையைப் பற்றிய அடிப்படைகளைக் கரைத்துக் குடித்து, கேள்விகளுக்கு விடை கண்டு, சிக்கல்களைச் சீரமைத்துப் பொருள் கண்டு, அதற்குப் பின்பு தான் துறையின் தொடுவானத்தை விரிவுபடுத்தும் (expanding its horizons) முனைப்பு என்பது பொருள் தரும். ஐந்தாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஸ்ரீனிவாச ராமானுஜன் தீர்க்காமல் விட்டுச் சென்ற கணித சிக்கல்களைத் தீர்ப்பேன் என்று கிளம்புவது எத்தகையது?)

    இவை யாவும் புவி மையக் கோட்பாட்டைச் சொல்பவை என்று கூறுபவர்களுக்கு, இன்னொரு எளிமையான ஆதாரம்: கோவிலில், நவக்கிரகங்களில், சூரியன் எப்போதும் மத்தியில் இருப்பதைக் கண்டதில்லையா?

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  27. அன்பு அறிவன்,

    சில தேவையற்ற சாயங்களையும் முத்திரை குத்தல்களையும் தவிர்க்கவே நான் அனானிமஸ் ஆப்ஷன் பயன்படுத்திப் பின்னூட்டம் இடுவது. (இதற்கே, பிஜேபி என்கிறார் ஒருவர்!)

    தாங்கள் கேட்டுக் கொண்ட பின்பும் அனானி பின்னூட்டம் இட்டதற்குத் தவறாக நினைக்க வேண்டாம். தங்களைச் சங்கடப்படுத்துவது என் நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    தங்களுக்கு இது ஒப்புதல் இல்லையென்றால், நான் இதற்கு முந்தைய பின்னூட்டத்தில் சொன்ன "கருத்துக்களை" மாத்திரமாவது தங்கள் கணக்கிலிருந்தே கூட பதிப்பிக்கவும். "முத்துஸ்வாமி" என்ற பெயருடன் தான் அவை வெளிவர வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் இல்லை. தங்கள் கணக்கைப் பயன்படுத்தி வெளியிட்டாலும் மகிழ்வேன். சொல்லப்படுகிற சேதி தான் இங்கு தலையாயதே தவிர, மற்றெல்லாம் இரண்டாம்பட்சமானவை தானே, இல்லையா?

    புரிந்துணர்வீர்களென்று நம்புகிறேன்.

    நன்றி.

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  28. நண்பர் முத்துஸ்வாமி,எவருடைய கருத்தையும்,அது தனி மனித தூற்றுதலாகவோ அல்லது கீழ்த்தரமாகவோ இல்லாத பட்சத்தில் அவற்றை நான் வெளியிடவே செய்வேன்,அவை என்னை மறுதளித்து விமர்சித்திருந்தால் கூட.

    எனவே அனானி ஆப்ஷன் கருத்துக்களை மறுப்பேன் என்று நினைக்க வேண்டாம்.

    பெயருடன் வரும்போது ஒரு நம்பகத்தன்மை வரும்;ஆனால் பதிவுலகில் பல மனநோயாளிகள் இருக்கிறார்கள்.

    தனிமனித கருத்து சுதந்திரத்தை மதித்து நான் திறந்து வைத்த அனானி ஆப்ஷன்,என்னைக் கீழ்த்தரமாக தூற்ற சிலரால் பயன்படுத்தப்படுகிறது.

    ஆனாலும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வால்டேரின் கூற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நான் இவைகளை மீறியே செல்ல வேண்டியிருக்கிறது.

    மற்றபடி நீங்கள் எந்தவகையிலும் கருத்தளிக்கலாம்,நன்றி.

    உங்கள் கருத்தை நான் என் பெயரில் வெளியிட்டால், proxy யாக நானே பின்னூட்டிக் கொள்கிறேன் எனவும் (அப்படி சிலர் இருக்கிறார்கள் என அறிகிறேன்) என்றும் சிலர் எண்ணக்கூடும்,அதற்கு அனானி ஆப்ஷன் எவ்வளவோ மேல்...

    மற்றபடு நான் சுருக்கமாக சொன்ன symbol ஐ விரிவாக எடுத்தாண்டிருக்கிறீர்கள்,நன்றி.

    ReplyDelete
  29. முத்துஸ்வாமிஜி,
    பிஜேபி பற்றி நான் குறிப்பிட்டதற்குக்காரணம் அன்றைய தினம் வெளிவந்த ஒரு செய்தி தான்.கீழே உள்ள சுட்டியில் சென்று பாருங்கள்.
    http://www.dinamalar.com/fpnnews.asp?news_id=1760&ncat=&archive=1&showfrom=9/12/2008
    ஜோசியம் பார்த்து ஆட்சியைப்பிடிக்க போகிறார்களாம்.2004ல் ஜோசியம் பார்க்காமலா போட்டியிட்டார்கள்?பிறகு ஏன் தோற்றார்கள்?

    நாம் இருப்பது நவயுக மனிதர்களின் மத்தியிலா?அல்லது அமேசான் காட்டு ஆதிவாசிகளின் மத்தியிலா? என்ற என்னுடைய அறச்சீற்றத்தின் விளைவு தான் பிஜேபியை தொடர்புபடுத்தி எழுதியது.

    ராமானுஜம் அளவு அறிவு இருந்தால் தான் ஜோசியம் புரிந்து கொள்ள முடியும் என்பது போல் கூறியுள்ளீர்கள்.தமிழ்நாட்டில் உள்ள ஜோசியர்களுக்கு அந்த அளவு அறிவு இருக்கும் என்றா நீங்கள் நினைக்கின்றீர்கள்.1000 கோடி என்பதை எண்ணால் எழுதச்சொன்னால் நூறுக்கு இரண்டு ஜோசியராவது தேறுவார்களா என்பது சந்தேகமே?.அதே போன்று ராமானுஜம் போன்ற மேதைகள் ஜோசியத்தை ஏற்றுக்கொண்ட மாதிரியும் தெரியவில்லை.

    ReplyDelete
  30. //முத்துஸ்வாமிஜி,//

    முத்துஸ்வாமி என்றே அழைக்கலாம். :)

    //பிஜேபி பற்றி நான் குறிப்பிட்டதற்குக்காரணம் அன்றைய தினம் வெளிவந்த ஒரு செய்தி தான்.கீழே உள்ள சுட்டியில் சென்று பாருங்கள்.//

    சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.

    ஆனால், தாங்கள், அடிப்படை தர்க்கத்தில் சில விஷயங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். "The converse is not true" என்று சொல்வார்கள். அதாவது, பிஜேபி கட்சிக்காரர்கள் ஜோதிடம் பார்க்கிறார்கள் என்றால், அதற்காக, ஜோதிடம் பார்ப்பவர்கள் எல்லோரும் பிஜேபி-காரர்கள் என்ற முடிவுக்குப் பாய்வது, சரியான தர்க்கமாகாது.

    புரிதல் தொடர்பாக, இது போன்ற தர்க்கத் தவறுகளே தொடர்ந்து செய்கிறீர்கள் என்பது (அதாவது, ஒன்றைச் சொன்னால் வேறொன்றைப் புரிந்து கொள்வது) உங்கள் மறுமொழிகளிலிருந்து விளங்குகிறது.

    //ஜோசியம் பார்த்து ஆட்சியைப்பிடிக்க போகிறார்களாம்.2004ல் ஜோசியம் பார்க்காமலா போட்டியிட்டார்கள்?பிறகு ஏன் தோற்றார்கள்?//

    Forecasting என்பது ஜோதிடத்திற்கு மட்டுமே உரியதன்று. Weather forecasting, Sales forecasting என்று பல துறைகளிலும், தற்போதுள்ள நிலவரத்தை வைத்தும், இதுவரை சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புள்ளியியல் விவரங்களை வைத்தும், நாளை இவ்வாறு நிகழலாம் என்று கூறப்படுவதும், அப்படிக் கூறப்படுபவை சில நேரங்களில் நிகழ்வதும் சில நேரங்களில் நிகழாமல் போவதும் நாம் அன்றாடம் காணும் நடைமுறையே! அதற்காக, weather forecasting என்பதே பொய், பித்தலாட்டம்; meteorological department என்ற ஒன்றே ஏமாற்றுக்காரர்களின் கூடாரம் என்றெல்லாம் பேசுகிறோமா என்ன? பிழைகளை வைத்து மட்டுமே ஒரு துறையைப் பற்றிய மொத்த மதிப்பீட்டிற்கு வருவது முறையன்று.

    //நாம் இருப்பது நவயுக மனிதர்களின் மத்தியிலா?அல்லது அமேசான் காட்டு ஆதிவாசிகளின் மத்தியிலா? என்ற என்னுடைய அறச்சீற்றத்தின் விளைவு தான் பிஜேபியை தொடர்புபடுத்தி எழுதியது.//

    ஏன், அமேசான் காட்டு ஆதிவாசிகள் என்றால் கேவலமா? இல்லை, ஆதிவாசிகள் என்றாலே கேவலமா? 2000 ஆண்டுகளுக்கு முன்பே, தொலைநோக்கிகளோ இன்ன பிற கருவிகளோ கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பே, சனி கிரகமானது சூரியனைச் சுற்றி வரும் நீண்ட நேரத்தைக் கணக்கிட்டுத் தெரிந்து கொண்டு, "சனைஸ்சரஹ" ("சனைஹி + சரஹ", அதாவது "மெதுவாகச் செல்பவன்"; நமக்குக் கற்பிக்கப்பட்ட "சனீஸ்வரன்" என்பது பின்னாளில் ஏற்பட்ட, இதன் திரிபே!) என்று பெயரிட்டவர்கள் கூட, தாங்கள் மெச்சும் "நவயுக மனிதனின்" பார்வையில் ஆதிவாசிகள் தானே! தற்போதைய "நவயுக மனிதன்" தனது குழந்தைகளுக்கு ஐந்தாம் வகுப்பில் கற்றுக் கொடுக்கும் "Mars is a red planet" என்பதனை 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துணர்ந்து அதற்கு "செவ்வாய்" (சிவந்த நிறத்தைக் குறிக்க "செவ்வாய்") என்று பெயருமிட்ட எனது, உங்களது முப்பாட்டன் "ஆதிவாசி", இல்லையா?! :(


    //ராமானுஜம் அளவு அறிவு இருந்தால் தான் ஜோசியம் புரிந்து கொள்ள முடியும் என்பது போல் கூறியுள்ளீர்கள்.//

    அய்யய்யய்யோ! எப்படிங்க இவ்வளோ கரெக்ட்டா தப்பா புரிஞ்சிக்குறீங்க!
    :D

    ஒரு படத்துல, கமல், பிறவியிலிருந்தே பார்வையற்றவரான ஸ்ரீதேவியிடம், எதற்கோ "வெள்ளை நிறம்" பற்றி ஏதோ சொல்லிருவாரு. அவங்க கேப்பாங்க: "வெள்ளைன்னா எப்புடிங்க இருக்கும்?"; அதுக்கு அவரு எப்புடி சொல்றதுன்னு புரியாம, "இந்த அன்னப்பட்சி வெள்ளை நிறம் இல்லீங்களா; கேள்விப்பட்டிருப்பீங்க; அந்த அன்னப்பட்சி நிறம் போன்றது வெள்ளை" என்பாரு. அவங்க, "அன்னப்பட்சி எப்புடிங்க இருக்கும்?" அப்புடீம்பாங்க. இவரு கைய வளைச்சு வெச்சுக்கிட்டு, அவங்களைத் தொட்டுணர்ந்து பார்க்கச் சொல்வாரு. அவங்களும் வளைந்த அவரின் கையைத் தொட்டுப் பார்த்திட்டு, ஒரு சந்தோஷப் பூரிப்புடன் சொல்வாங்க: "ஹை! அன்னப்பட்சி இப்புடித் தான் இருக்குமா! அப்போ, வளைஞ்சிருக்குறதெல்லாம் வெள்ளை!"

    உங்களுக்குப் புரிய வைப்பதும் இப்படித் தான் இருக்கிறது! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் . . . அப்பா!

    ஐயா! ராமானுஜம் பத்தி சொன்னது ஒரு எடுத்துக்காட்டுக்காக! ராமானுஜத்தையே விடுங்க! பத்தாங்கிளாஸ் போகனும்னா கூட, அஞ்சாங்கிளாஸுலேந்து நேரடியாப் பாய முடியாதில்லையா, படிப்படியாத் தானே போகணும், அதச் சொல்ல வந்தேன்!

    (நெசமாவே, இது புரியலீங்களா உங்களுக்கு?! அப்ப, கொஞ்சம் கஷ்டந்தேன்!) :(


    //தமிழ்நாட்டில் உள்ள ஜோசியர்களுக்கு அந்த அளவு அறிவு இருக்கும் என்றா நீங்கள் நினைக்கின்றீர்கள்.1000 கோடி என்பதை எண்ணால் எழுதச்சொன்னால் நூறுக்கு இரண்டு ஜோசியராவது தேறுவார்களா என்பது சந்தேகமே?//

    யாரு, இந்த நடைபாதையில உக்கார்ந்துக்கிட்டு, நடிகர் சிவகுமார் கூட, எம்ஜியார் கூடவெல்லாம் எடுத்த ஃபோட்டோவெல்லாம் வெச்சிக்கிட்டு, அந்த மாதிரி ஜோசியரச் சொல்றீங்களா?

    ஐயா, நீங்க சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவனையெல்லாம் டாக்டர்ன்னு நெனைச்சீங்கன்னா அது உங்க தப்பு.

    எத்தனை ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க ஜோதிட அமைப்புகள்ல உறுப்பினரா இருக்காங்க தெரியுமா? எவ்வளவு பேரு அதுல ஆராய்ச்சி செய்யிறாங்க தெரியுமா? ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆவதற்கு எந்த அளவு அறிவாற்றலை நிரூபித்திருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்னு நெனைக்கிறேன்.


    //அதே போன்று ராமானுஜம் போன்ற மேதைகள் ஜோசியத்தை ஏற்றுக்கொண்ட மாதிரியும் தெரியவில்லை.//

    ஜொஹானஸ் கெப்ளர் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க; கோள்களின் நீள்வட்டப் பாதையைப் பற்றிய கோட்பாட்டை முதன்முதலில் தந்தவர். தற்சமயம் நினைவுக்கு வந்த ஒரு எடுத்துக்காட்டு இவர். இவர் போன்ற சிலபல அறிஞர்கள், ஜோதிடத்தை ஆராய்ந்தவர்கள் என்றே அறிகிறோம். இவர்களின் ஆராய்ச்சிகளின் முடிவுகளில், குறைந்தபட்சம், "ஜோதிடத்தை முழுவதும் பொய்யென்று நிராகரித்துவிட முடியாது, அதில் ஏதோ விஷயம் இருக்கும் போலத் தான் தெரிகிறது" என்ற கருத்தே திரும்பத் திரும்பத் தட்டுப்படுகிறது.

    ஒரு விஷயத்தை, சார்பு நிலைகள் இல்லாமல், கூர்ந்து நோக்கி, சரியாக மற்றும் முழுமையாக ஆராய்ந்துணர முற்படாமல், கண்டதே காட்சியென எல்லாம் உண்மையென்று நம்புவது மூடநம்பிக்கையென்றால், மறுபுறம், முன்முடிவுகளோடு மற்றும் சார்புநிலைகளோடு, இவையெல்லாமே ஏமாற்று வேலையாக மட்டுமே இருக்க முடியும் என்ற நம்பிக்கையோடே கண்களை இறுக்க மூடிக்கொள்வதும் கூட, சந்தேகத்துக்கிடமில்லாமல், மூடநம்பிக்கையே.

    -முத்துஸ்வாமி

    ReplyDelete
  31. முத்துஸ்வாமி,

    மிக நீண்ட விளக்கங்கள் !

    நன்றி.

    உண்மையில் உங்களுடைய விளக்கங்கள் என் பதிவின் விரிப்புரை போல இருக்கிறது.நான் ஓரிரு வரியில் சுட்டிய சில விதயங்களை மிக விரித்திருக்கிறீர்கள்..

    >>"ஜோதிடத்தை முழுவதும் பொய்யென்று நிராகரித்துவிட முடியாது, அதில் ஏதோ விஷயம் இருக்கும் போலத் தான் தெரிகிறது" >>

    இதேதான் நான் பொதுவாகச் சுட்ட விரும்பியது.

    என்னைடைய அறிவுக்கு இப்போதுதான் சோதிடத்தை ஆழப் பயில முயற்சிக்கிறேன்...

    மீண்டும் நன்றிகள்...

    நண்பர் ஜாலி ஜம்பர்,கேள்விகளுக்கான நன்றி..

    ReplyDelete
  32. நண்பர் முத்துஸ்வாமி..முன்னர் என் பதிவுகளைப் படித்திருக்கிறீர்களா என அறியேன்..

    நீங்கள் யாரென அறியாத சூழலில் உங்கள் பதிவையும் அறிய இயலவில்லை...

    ஏதேனும் வகையில் உங்கள் பதிவுகளை அறியத் தர இயலுமெனில் அறியத் தரவும்,வாசிக்க ஆவலாயிருக்கிறேன்...

    நன்றி..

    ReplyDelete
  33. //Weather forecasting, Sales forecasting என்று பல துறைகளிலும், தற்போதுள்ள நிலவரத்தை வைத்தும், //

    முத்துஸ்வாமி,
    Weather forecasting, Sales forecasting போன்றே ஜோதிடமும் அறிவியல் என்றே உறுதியாக நம்புகிறீர்கள்.பின் ஏன் இதை பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கவில்லை?பிஜேபி ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    //இதுவரை சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புள்ளியியல் விவரங்களை வைத்தும், நாளை இவ்வாறு நிகழலாம் என்று கூறப்படுவதும், அப்படிக் கூறப்படுபவை சில நேரங்களில் நிகழ்வதும் சில நேரங்களில் நிகழாமல் போவதும் நாம் அன்றாடம் காணும் நடைமுறையே! அதற்காக, weather forecasting என்பதே பொய், பித்தலாட்டம்; meteorological department என்ற ஒன்றே ஏமாற்றுக்காரர்களின் கூடாரம் என்றெல்லாம் பேசுகிறோமா என்ன?பிழைகளை வைத்து மட்டுமே ஒரு துறையைப் பற்றிய மொத்த மதிப்பீட்டிற்கு வருவது முறையன்று.?//

    உண்மை தான்,ஆனால் பிழைகளுக்கான வரம்பு இருக்கிறதே.மக்கள் தொகையில் ஆண்,பெண் விகிதம் 50:50 என்று இருந்தால் பிழையில்லை.55:45 அல்லது 60:40 கூட ஏற்றுக்கொள்ளலாம்.70:30 என்று இருந்தால் பிழை தானே.இதே போல் தான் சோதிடத்தில் 30%தான் பலிக்கிறது,இன்னும் சொல்லப்போனால் 30கூட இல்லை ,10% தான் பலிக்கும்.அதுவும் மனி்தர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விசயங்கள் தானே.நடக்கமுடியாத ஒரு விசயத்தை எந்த ஜோதிடரும் சொல்லிவிடுவதில்லை.(எ.கா-நீ அடுத்த மாதம் சந்திரமண்டலம் போவாய்)

    //எத்தனை ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க ஜோதிட அமைப்புகள்ல உறுப்பினரா இருக்காங்க தெரியுமா? எவ்வளவு பேரு அதுல ஆராய்ச்சி செய்யிறாங்க தெரியுமா? ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆவதற்கு எந்த அளவு அறிவாற்றலை நிரூபித்திருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்னு நெனைக்கிறேன்.//

    நமது கலாச்சாரத்தின் சாபக்கேடு.அறிவியலையும்,ஆன்மீகத்தையும் போட்டு குழப்புவதால் ஏற்படும் நிலை.ஆன்மீகம் நம்மை ஆங்கிலேயனிடம் அடிமைப்படுத்த தான் உதவியது.அறிவியல் மனிதனை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கும் ஒரு கருவி,அந்தக்கருவியை எவ்வளவு லாவகமாக பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும்.ஆனால் நாம் எது உண்மையான அறிவியல் என்பதிலேயே முட்டிமோதிக்கொண்டிருக்கிறோம்.

    //இவர்களின் ஆராய்ச்சிகளின் முடிவுகளில், குறைந்தபட்சம், "ஜோதிடத்தை முழுவதும் பொய்யென்று நிராகரித்துவிட முடியாது, அதில் ஏதோ விஷயம் இருக்கும் போலத் தான் தெரிகிறது" என்ற கருத்தே திரும்பத் திரும்பத் தட்டுப்படுகிறது.//

    கெப்ளரின் காலம் 350ஆண்டுகளுக்கு முற்பட்டது.இந்தியர்களின் அபாரமான வானியல் அறிவு கெப்ளரின் கண்டுபிடிப்புகளுக்கு நிச்சயம் உதவியிருக்கும்.கெப்ளரின் காலம் நவீன அறிவியலின் மிக ஆரம்பகாலக்கட்டம்.இந்த 350ஆண்டுகளில் அறிவியல் உலகின் சாதனைகள் மகத்தானது.அப்படியே கெப்ளர் சோதிட ஆதரவாளராயிருந்தாலும் அது அவருடைய நாட்டு சோதிடம்.ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் சோதிட முறை வேறுபடும்,இதிலிருந்தே அதன் நம்பகமற்ற தன்மையை புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  34. //முத்துஸ்வாமி,
    Weather forecasting, Sales forecasting போன்றே ஜோதிடமும் அறிவியல் என்றே உறுதியாக நம்புகிறீர்கள்.//

    சொல்லச் சொல்ல, திரும்பத் திரும்ப தப்புத் தப்பாவே புரிஞ்சிக்கணும்னு ஏதாவது வேண்டுதலுங்களா? நான் எங்கேங்க அப்படிச் சொன்னேன்?! என் பின்னூட்டத்தை வேணும்னா இன்னொருக்கா படிச்சுப் பாத்திருங்க; எதுக்கு சந்தேகம்?

    அது மட்டுமில்ல, "sales forecasting" என்பது அறிவியல்ன்னு உங்களுக்கு யாருங்க சொன்னது?

    முழுவதும் அறிவியல் என்பது என்ன, என்பது போன்ற கேள்விகளுக்கு சில துறைகளைப் பொறுத்த மட்டில் ஆம்/இல்லை என்று இரண்டிலொன்றாக பதிலிறுப்பது எளிதல்ல.

    மனவியல் துறையை எடுத்துக்கொள்ளுங்கள். நான் கல்லூரியில் படித்த நேரத்தில், சில கல்லூரிகளில் B.A. Psychology என்றும் வேறு சில கல்லூரிகளில் B.Sc. Psychology என்றும் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருந்து வந்தது. தத்துவம் கூட கலைப்படிப்பு தானே தவிர அறிவியல் படிப்பு இல்லையே! அப்படியென்றால், அறிவியல் என்கிற வரையறைக்கு கீழே முழுமையாக வராத எந்தத் துறையுமே பித்தலாட்டம் என்றாகி விடுமா?

    இன்னொரு புறம், Political Science, Social Science என்றெல்லாம் சொல்கிறோமே, இவை முழுமையான அறிவியல் துறைகள் என்று சொல்லிவிட முடியுமா?

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  35. //பின் ஏன் இதை பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கவில்லை?//

    இதே கேள்வியைத் தான் சில தீவிர ஜோதிட ஆய்வாளர்களும் கேட்கிறார்கள். மேலும், பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்படவில்லை என்பதே கூட முழுமையான உண்மை அன்று.

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  36. //பிஜேபி ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.//

    இதாங்க உங்க கிட்ட பிரச்சனையை. "ஜோதிடம்–பிஜேபி" அப்புடீன்னு உங்க மனசுல நீங்க ஒரு முடிச்சு போட்டுக்கிட்டீங்க. இந்த முடிச்சு இன்னும் வேறென்னென்ன விஷயங்களைத் தொட்டுச் செல்லுமோ நானறியேன்! ஆனால், பகுத்து அறியப்படவேண்டிய இந்த விஷயங்களை மொத்தமாக முடிச்சுப் போட்டுப் பார்த்துக்கொண்டிருப்பது பகுத்தறிவாகாது.

    என் நண்பர்களில் சிலரே கூட, ஜோதிடத்தில் ஈடுபாடு காட்டும் நாத்திகராய் உள்ளனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? இதுவும் "நமது கலாச்சாரத்தின் சாபக்கேடு" தானோ?!

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  37. //உண்மை தான்,ஆனால் பிழைகளுக்கான வரம்பு இருக்கிறதே.மக்கள் தொகையில் ஆண்,பெண் விகிதம் 50:50 என்று இருந்தால் பிழையில்லை.55:45 அல்லது 60:40 கூட ஏற்றுக்கொள்ளலாம்.70:30 என்று இருந்தால் பிழை தானே.//

    அந்தந்தத் துறையும், மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளாலும், சுயதிருத்தங்களாலும் (self-correction) முன்னேற முன்னேறத் தான் பிழை வரம்பு குறையும். நான் ஏற்கெனவே கூறிய, திருத்தப்பட வேண்டிய பல சிறு குறைபாடுகள் திருத்தப்படும் வேளையில், துறையின் பிழை வரம்புகள் படிப்படியாகக் குறைந்து வரவும் நம்பகத் தன்மை உயர்ந்திடவும் வாய்ப்பு உள்ளதென்று தோன்றுகிறது.

    இன்று முன்னேற்றம் அடைந்து விட்டதாகக் கூறப்படும் அனைத்து துறைகளுமே, ஒவ்வொரு காலகட்டத்தில் நகைப்புக்கிடமாகும் நம்பகத் தன்மையோடே இருந்து வந்திருக்கின்றன என்பதை மறக்கலாகாது. மிகவும் முன்னேறி விட்டதாகக் கூறப்படும் வானியல் துறையில் கூட, ராக்கெட்டுகள் நடுவானில் வெடித்துச் சிதறுவதும், மனித உயிர்கள், அங்கங்கள் கூடக் கிடைக்காமல் அநியாயமாய்ப் போவதும், இதோ நேற்றைய கல்பனா சாவ்லா வரையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

    இது போன்ற நிகழ்வுகள், மனிதன் தன் அறிவின் எல்லைகளை விரிவுபடுத்தும் ஆவலுக்குக் கொடுக்கும் விலையாக இவற்றைக் கொண்டு, ஆய்வுகள் மேலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. யாரும் வானியல் துறையை இழுத்து மூடுங்கள் என்று கூப்பாடு போடுவதில்லை. தங்கள் துறையையும் ஆய்வையும் நித்தம் நித்தம் காப்பாற்ற வேண்டிப் போராடிகொண்டிருக்கும் தேவையோ கவலையோ இல்லாது, அவர்களும் தங்களால் முடிந்த ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்விதமே, ஜோதிடத்தை ஒரு துறையென ஆய்வோருக்கும் ஒரு நிம்மதியான சூழல் வாய்க்குமானால், யார் கண்டார், இனி வரும் வருடங்களில், கணினிகளின் துறையோடு அவர்களால் சிறப்பாகவே கூட இயங்க முடியலாம்.

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  38. //இதே போல் தான் சோதிடத்தில் 30%தான் பலிக்கிறது,இன்னும் சொல்லப்போனால் 30கூட இல்லை ,10% தான் பலிக்கும்.அதுவும் மனி்தர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விசயங்கள் தானே.நடக்கமுடியாத ஒரு விசயத்தை எந்த ஜோதிடரும் சொல்லிவிடுவதில்லை.(எ.கா-நீ அடுத்த மாதம் சந்திரமண்டலம் போவாய்)//

    நான் ஏற்கெனவே சொன்ன meteorological department எடுத்துக்காட்டைத் தான் திரும்ப நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அவர்களால் கூடத் தான் சுனாமியை வருமுன் உரைக்கமுடியவில்லை. அவர்களும் தான் "அன்றாடம் நடக்கும்" விஷயங்களான வெயில், மழை, தட்பவெப்பம் போன்றவற்றையே சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அதுவும் கூட, மழை வரும் என்று சொன்னால், ஒரு 10% கூட பலிக்க வாய்ப்பு இருப்பதில்லை என்கிற நிலை தான் இருந்து வருகிறது. இதற்காக அந்தத் துறையை நாம் தவறாகச் சொல்வதில்லை; அந்தத் துறையின் இன்றைய வளர்ச்சி நிலையில் இவ்வளவு தான் சாத்தியம் என்பதைப் புரிந்து கொண்டு, அந்தத் துறையை வளர்க்க அல்லவா முயலவேண்டும்? அந்தத் துறையில் ஆராய்ச்சிகளையும் முன்னேற்றங்களையும் கொண்டு வருவதற்கு மேன்மேலும் முயல வேண்டும் என்பதையல்லவா இது காட்டுகிறது?! இதே தானே ஜோதிடத்திற்கும்!

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  39. //நமது கலாச்சாரத்தின் சாபக்கேடு.//

    உங்கள் நிலைப்பாட்டிற்கு ஒவ்வாததாக இருக்கிறது என்பதால் உடனே அதை "நமது கலாச்சாரத்தின் சாபக்கேடு" என்று ஒதுக்கி விட்டால், பூனை கண்ணை மூடிக்கொண்ட கதை தான்!

    முதலில் தாங்கள், இதையெல்லாம் நிராகரிப்பதற்கு ஐந்தாம் வகுப்பு அறிவே போதுமானது என்று சொன்னீர்கள். இப்போது நான், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரே இதில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினால், உடனே இப்படி அந்தர்பல்டி அடித்தால், வேறு எப்படி விளக்கினால் தான் உங்கள் மனம் கொஞ்சமாவது திறக்கும்?

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  40. //அறிவியலையும்,ஆன்மீகத்தையும் போட்டு குழப்புவதால் ஏற்படும் நிலை.ஆன்மீகம் நம்மை ஆங்கிலேயனிடம் அடிமைப்படுத்த தான் உதவியது.அறிவியல் மனிதனை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கும் ஒரு கருவி,அந்தக்கருவியை எவ்வளவு லாவகமாக பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும்.ஆனால் நாம் எது உண்மையான அறிவியல் என்பதிலேயே முட்டிமோதிக்கொண்டிருக்கிறோம்.//

    நாத்திகர்களில் சிலர் ஜோதிடத்தில் ஆர்வம் காட்டுகிறார்களே, அவர்கள் விஷயத்தில் ஆன்மிகம் என்பதே வராது என்பதால், நீங்கள் சொல்லும் அறிவியல்-ஆன்மிகம் சார்ந்த குழப்பமும் வராதே, பின்பு எப்படி?

    கண்ணால் காணும் உண்மையை ஒப்புக்கொள்வதற்குக் கூட, ஒரு அடிப்படை நேர்மை தேவைப்படுகிறது. அந்த நேர்மை இருக்கும் பட்சத்தில், தான் கொண்ட கொள்கைக்கு விரோதமாக இருப்பது போல் தோன்றினாலும், தன் மூளைக்கு எட்டும் உண்மையைத் தன்னிடமிருந்தே மறைத்துக் கொள்ள எத்தனிக்க வேண்டிய தேவை இராது.

    அந்தர்பல்டிகளும் அவசியமற்றுப் போகும்!

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  41. //அப்படியே கெப்ளர் சோதிட ஆதரவாளராயிருந்தாலும் அது அவருடைய நாட்டு சோதிடம்.ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் சோதிட முறை வேறுபடும்,இதிலிருந்தே அதன் நம்பகமற்ற தன்மையை புரிந்து கொள்ளலாம்.//

    இன்னும் எத்தனை முறை இதே தவறை செய்யப் போகிறீர்கள்?

    "What's in a name?" என்பதை நான் என்னுடைய முந்தைய பின்னூட்டத்திலேயே தெளிவு படுத்தினேன்.

    நம் முறைப்படி நாம் 'லக்னம்' என்று சொல்வதையே தான் மேற்கத்திய ஜோதிடத்தில் Ascendant என்று சொல்கிறார்கள். நாம் 'பார்வை' என்று சொல்வதைத் தான் அவர்கள் aspect என்று சொல்கிறார்கள். மேஷம் முதல் மீனம் வரை நம் முறையில் உள்ள அதே ராசிகள் தான் அவர்கள் முறையில் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள்.

    அவ்வளவு ஏன், வட மாநிலங்களில் ஜாதகம் என்று நாம் சொல்வதைக் குண்டலி என்று சொல்கிறார்கள்; உடனே அது அவர்களுடைய மாநில ஜோதிடம் என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே!

    அது மட்டுமல்ல, அவர்கள் ஜாதகத்தை, நம்மைப் போலல்லாமல் வட்டவடிவில் போடுவார்கள்; அதனால் மட்டுமே அது வேறாகி விடுமா?

    (என்னங்கய்யா சொல்றீங்க? பின்னூட்டம் போடுமுன் கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்தீர்களென்றால் நன்றாயிருக்கும். பரவாயில்லை, இப்பவும் ஒண்ணும் Not too late! திறந்த மனம் இருந்தாலே போதும், எப்போதும் கற்கலாம்!) :)

    புள்ளியியல் துறையில் தகவல்களைப் படங்களாக்கிக் காண்பிப்பார்கள்; ஒரே data-வை pie chart கொண்டும் காண்பிக்கலாம், bar chart கொண்டும் காண்பிக்கலாம், line chart கொண்டும் காண்பிக்கலாம்; வெறும் data-வாகவும் காண்பிக்கலாம். அது போலத் தான் இதுவும்.

    கணிதத் துறையில் ஒரு சிக்கலைத் தீர்க்க பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு அணுக முடியும். உலகத்துக்கெல்லாம் ஒரே அணுகுமுறை இருந்தாலொழிய, ஒரு விஷயத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்காமல் இருக்க முடியாது என்பது எந்தத் துறைக்கும் சரிவராது.

    பல அணுகுமுறைகளின் போட்டியாலும், பரஸ்பர கொடுக்கல் வாங்கல்களாலும், மற்றும் சுயதிருத்தங்களாலும் யாவற்றிலும் சிறந்த முறைகள் காலத்தால் மேலோங்கி வரும்.

    நீங்கள் இன்னமும் ஆரூட முறைகளுக்கும், வருவது உரைத்தல் முறைகளுக்கும், ஜோதிடத்திற்குமான வேறுபாட்டையே அறியத் துணியவில்லை என்று தோன்றுகிறது. Divination, prophesy, astrology இதெல்லாம் வெவ்வேறானவை.

    எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டுக் குழப்பிக்காதீங்க. பகுத்து அறியுங்க.

    :)

    அன்புடன்,
    முத்துஸ்வாமி.

    ReplyDelete
  42. //இப்போதுதான் சோதிடத்தை ஆழப் பயில முயற்சிக்கிறேன்...//

    தங்கள் முயற்சிக்கும் பயிற்சிக்கும் எனது வாழ்த்துக்கள், அறிவன்!

    :)

    -முத்துஸ்வாமி.

    ReplyDelete
  43. //நண்பர் முத்துஸ்வாமி..முன்னர் என் பதிவுகளைப் படித்திருக்கிறீர்களா என அறியேன்..//

    தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவுகள் வாயிலாகவே எனக்குத் தங்கள் பதிவுகள் அறிமுகம்.

    அலுவல் பணிகளுக்கிடையில் மிகுந்த நேரம் கிடைப்பதில்லை; இருப்பினும், கொஞ்சகொஞ்சமாகப் படிக்க நினைப்பதுண்டு. Information explosion என்பதை நன்கு உணரமுடிகிறது! பதிவுகள் இடப்படும் வேகத்திற்கு ஈடுகொடுத்துப் படிப்பதே கடினமாக உள்ளதால், நமக்கு அறிமுகமாகுமுன் ஒரு வலைப்பதிவில் எழுதப்பெற்றிருந்த சில நல்முத்துக்கள் கண்ணில் படாமலே போய்விட மிகுந்த வாய்ப்பு உள்ளது! என்ன செய்ய, ஒரு நாளில் 24 மணிநேரங்கள் தானே உள்ளன! :(

    //நீங்கள் யாரென அறியாத சூழலில் உங்கள் பதிவையும் அறிய இயலவில்லை...//

    நான் இன்னும் பதிவு துவக்கவில்லை. மேற்கூறிய நேரமின்மையால், எனக்கென்னவோ தொடர்ந்து எழுத இயலுமோ என்று ஐயமாகவே உள்ளது.

    //ஏதேனும் வகையில் உங்கள் பதிவுகளை அறியத் தர இயலுமெனில் அறியத் தரவும்,வாசிக்க ஆவலாயிருக்கிறேன்...//

    வலைப்பதிவு துவக்குவதென முடிவு செய்து, துவக்கும் நேரம், இதை மனதில் கொண்டு, நிச்சயமாக உங்களுக்குச் சொல்வேன்! :) நன்றி!

    அன்புடன்,
    முத்துஸ்வாமி.

    ReplyDelete
  44. //கணிதத் துறையில் ஒரு சிக்கலைத் தீர்க்க பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு அணுக முடியும். //

    ஆனால் விடை ஒன்று தான், சோதிடத்தில் அவ்வாறு இல்லை.ஒரே ஜாதகத்தை பத்து சோதிடர்கள் பத்து விதமாக விளக்குவார்கள் என்பதை ஒப்புக்கொள்வீர்கள்.அவர்கள் எல்லாம் போலி சோதிடர்கள் என்று சொல்லிவிடுவீர்கள்.சோதிடத்தை உண்மையிலேயே கற்றுத்தேர்ந்தவர்கள் என்று கருதும் பலரை அறிமுகப்படுத்துங்கள்.தமிழ்மண வாசகர்களாவது பயன்பெறட்டும்.

    முத்துஸ்வாமி,தங்களது விளக்கங்கள் சோதிடத்தின் மீதான நம்பிக்கையை சிறிதேனும் கூட்டவில்லை.சோதிடம் பற்றிய இரு அறிஞர்களின் கருத்தை இங்கு பதிவு செய்து விட்டு விடைபெறுகிறேன்.நன்றி.

    //Astronomy is a science, the study of the universe as it is.Astrology is a pseudoscience-a claim,in the absence of good evidence,that the other planets affect our everyday lives. CARL SAGAN//

    //வானியல் பற்றிய புத்தகங்களில் பித்தனானேன்.விண்வெளி மண்டலங்கள் பற்றிப்படிப்பதும் தேனாய்த் தித்தித்தது.விண்கலங்கள் தொடர்பாக நண்பர்கள் கேள்வி கேட்கும் போது எங்கள் பேச்சு சில சமயங்களில் ஜோதிடஇயல் பற்றியும் திசைமாறும்.

    சூரியக்குடும்பத்தில் வெகு தொலைவில் உள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும்,அக்கறையும் வந்திருக்கிறது?அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படி பிணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நிஜமாகவே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.ஜோதிடம் ஒரு கலை என்ற அளவில் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    கிரகங்கள்,நட்சத்திர மண்டலங்கள்,துணைக்கோள்கள் பற்றியெல்லாம் கூட எப்படி மக்களுக்கு மாயை பிறந்தது?தங்கள் வாழ்க்கையை அவை ஆட்டிப்படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை.விண்கோள்களின் அசாதரணமான இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக்கழித்து பகுத்துப்பார்த்து,இட்டுக்கட்டி ஒரு முடிவுக்கு வருவது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அப்துல் கலாம்//

    ReplyDelete
  45. //கணிதத் துறையில் ஒரு சிக்கலைத் தீர்க்க பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு அணுக முடியும். //

    //ஆனால் விடை ஒன்று தான், //

    . . . என்று எல்லா நேரங்களிலும் கூறிவிட முடியாது. காட்டாக, சுண்ணத்தைச் சுண்ணத்தால் வகுக்க முற்படும் போது, அதற்கு விடையே கூற இயலாது என்பதே உண்மை. (Indeterminate என்று பெயர்.) அதைப் போலவே, quadratic equation வகையறாக்களைத் தீர்க்கும் போது, x = 3 OR x= -2 என்பது போன்று இருவேறு விடைகள் பெறலாம். அவ்வளவு ஏன், Complex Numbers கட்டமைப்பில், எண்களிலேயே உண்மைப் பகுதி (Real part) என்றும் கற்பனைப் பகுதி (Imaginary part) என்றும் உண்டு.

    நீங்கள் வீட்டுப்பாடம் செய்வதே இல்லை! வருந்தத்தக்க விஷயம்! :( மாற்றிக்கொண்டால் இன்னும் பொருள் பொதிந்த உரையாடல் நிகழ்த்தலாம்.

    ReplyDelete
  46. //சோதிடத்தில் அவ்வாறு இல்லை.ஒரே ஜாதகத்தை பத்து சோதிடர்கள் பத்து விதமாக விளக்குவார்கள் என்பதை ஒப்புக்கொள்வீர்கள். அவர்கள் எல்லாம் போலி சோதிடர்கள் என்று சொல்லிவிடுவீர்கள்.//

    போலி ஜோதிடர்களை விட்டுத் தள்ளுங்கள். போலி டாக்டர்களைப் போல் அவர்கள்.

    நாம் நிஜ டாக்டர்கள் விஷயத்துக்கே வருவோம்.

    என் நண்பர் ஒருவருக்குக் கால் மூட்டுகளில் வீக்கத்துடன் கூடிய வலி என்று, பார்க்காத டாக்டர் இல்லை, எடுக்காத எக்ஸ்ரே இல்லை, விழுங்காத மாத்திரை இல்லை. ஆர்த்தோவைப் பார்த்தால் ஈ.என்.டி.யைப் பார்க்கச் சொல்கிறார், ஈ.என்.டி.யைப் பார்த்தால் ருமடாலஜிஸ்ட்டைப் பார்க்கச் சொல்கிறார். இத்தனைக்கும், இந்த டாக்டர்கள் அனைவருமே பெரிய பெரிய படிப்புகள் படித்து பெரிய பெரிய மருத்துவமனைகளில் பணி செய்பவர்கள். போலி்கள் அல்லர். அப்படியிருக்க, அவர்கள் ஏன் அவர்களுக்குள் ஒரே மாதிரி பார்வைகள் கொள்ளாமல், ஒவ்வொருவர் ஒவ்வொரு விதத்தில் சொல்கிறார்கள்? மருத்துவத் துறையே நம்பகத்தன்மை இல்லாதது என்று சொல்லிவிடலாமா?

    அது அவ்வாறல்ல.

    இதிலிருந்து அறியப்பட வேண்டியது என்னவென்றால், துறையின் நுட்பம் மிக மிக, எளிய மற்றும் உடனடித் தீர்வுகள் வழங்கும் இயல்பு குறையத் தான் குறையும். இரண்டொரு கூறுகளை வைத்து மட்டுமே ஆராயும் நிலையில் எளிதாயிருக்கலாம், ஆனால் அந்நிலையில் நம்பகத்தமையும் அவ்வாறே இருக்கும்; ஜோதிடத்தின் அடுத்தடுத்த நிலைகளில் பற்பல கூறுகளை வைத்து ஆராயும் நேரத்தில், சிக்கல்கள் மிகுவதால் ஒரே ஜாதகத்தை, ஒன்றுக்கு மேற்பட்ட விதங்களில் பொருள் கண்டுரைப்பதென்பது (interpret) சாத்தியமாகிறது. ஆனால், இவை ஒன்றோடொன்று தொடர்பே இல்லாத வகையில் மாறுபட்டிருக்க வாய்ப்புகள் மிகக் குறைவே. (தவிரவும், விதிகள், விதிவிலக்குகள், விதிவிலக்குகளுள் விலக்குகள் என்று, வழிமுறையின் அடுத்தடுத்த படிகளில், எதிலாவது தவறு செய்திருந்தால், இறுதித் தீர்வு தவறாகத் தான் இருக்கும். மூன்று பேர், ஆளுக்கொரு படியில் தவறு செய்திருந்தால், மூவரின் விடைகளும் வெவ்வேறாகத் தான் இருக்கும். இதுவும் அடிப்படைத் தர்க்க விதி.)

    ReplyDelete
  47. //சோதிடத்தை உண்மையிலேயே கற்றுத்தேர்ந்தவர்கள் என்று கருதும் பலரை அறிமுகப்படுத்துங்கள்.தமிழ்மண வாசகர்களாவது பயன்பெறட்டும்.//

    ஏற்கெனவே சொல்லிவிட்டேன், நான் ஊட்டிவிடுவதில்லை. வயிற்றுவலிக்காரன் வைத்தியரைத் தேடிச் செல்லட்டும்.

    இந்தக் கதை இங்கு பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

    ReplyDelete
  48. //முத்துஸ்வாமி,தங்களது விளக்கங்கள் சோதிடத்தின் மீதான நம்பிக்கையை சிறிதேனும் கூட்டவில்லை.//

    ஆம். ஏனெனில், அவை தங்கள் "நம்பிக்கையைக்" கூட்டுவதற்காக அளிக்கப்பட்டவையே அல்ல. (நீங்கள் உண்மையிலேயே தூக்கத்தில் இருக்கிறீர்கள் என்ற நினைப்பில்,) தூக்கத்திலிருந்து விழிப்பூட்டுவதற்காகவே அளிக்கப்பட்டவை. (விழிப்பு ஏற்படும் வரை, கனவை உண்மையென நம்புவதென்பது இயல்பே; அதில் தவறொன்றும் இல்லை—கனவில் உளறுவதையும் சேர்த்தே சொல்கிறேன்.) ஆனால், கண்ணை இறுக்க மூடிக்கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்தால், நம்பிக்கையையாவது கூட்டுவதாவது! ரொம்பத் தான் காமெடி பண்றீங்க போங்க! :D

    ReplyDelete
  49. //சோதிடம் பற்றிய இரு அறிஞர்களின் கருத்தை இங்கு பதிவு செய்து விட்டு//

    தர்க்கத் தவறுகள் செய்வதை நீங்களும் நிறுத்தப் போவதில்லை போலத் தான் தெரிகிறது. இதைத் தான், தர்க்கத் தவறுகளுள் (logical fallacies) "appeal to authority" என்று சொல்வார்கள். பார்க்க


    அவர் சொன்னார் இவர் சொன்னார்ன்னு பேசத் தொடங்கினால், நானும் மேற்கோள் காட்டினால், பிறகு அது மேற்கோள் போராகத் தான் ஆகுமே தவிர, அறிவு சார்ந்த தர்க்கவாதமாகாது.

    (நான் கெப்ளரைச் சுட்டியது கூட, மேதைகளும் ஜோதிடமும் பற்றிய தங்கள் கருத்துக்கு ஒரு எதிர்நிலை எடுத்துக்காட்டு தருவதற்காகவேயன்றி, அதன் பலத்தில் ஜோதிடத்தை நிறுவுவதற்காக அன்று.)

    மேலும், நீங்கள் உங்கள் முதல் பின்னூட்டத்தில் "அதில் இல்லாத கிரகங்களை வைத்து தான் ஜோதிடம் சொல்கின்றனர்" என்று கூறியதிலிருந்து, "ஐந்தாம் வகுப்பு", "பிஜேபி", என்று தர்க்கத் தொடர்பின்றியே திசை திருப்ப முயன்றுகொண்டேயிருந்தாலும், அவ்வப்போதே ஒவ்வொன்றிற்கும் பொறுமையாக நான் விடையிறுத்துக்கொண்டு தான் வந்திருக்கின்றேன். கடைசியில், சுப்பையா ஐயா தொடக்கத்திலேயே சொன்னது தான் மீண்டும் நிரூபணமாகிறது.

    ReplyDelete
  50. //விடைபெறுகிறேன்.நன்றி.//

    சென்று வாருங்கள். வேறொரு முறை சந்திப்போம். நன்றி.

    அன்புடன்,
    முத்துஸ்வாமி.

    ReplyDelete
  51. நண்பர் முத்துஸ்வாமி மற்றும் ஜாலி ஜம்பர்,
    வேறு ஒன்றைத் தேடிய போது இந்தப் பதிவை மீள வாசிக்க நேர்ந்தது..

    உங்கள் இருவரின் நல்ல அலசலுக்கு ஒரு நன்றி கூட சொல்லாதது உறுத்தியது..

    தாமதமானதாக இருப்பினும்,நன்றி இருவருக்கும்..

    ReplyDelete