அறிவு என்பது என்ன?
அதைக் கண்ணால் காண முடியுமா?
அதை எப்படி விளக்க முடியும்?
இதை எப்போதாவது ஆராய்ந்திருக்கறோமா?நாம் அறிவைப் பெற்றிருக்கிறோம் என்று எப்படிச் சொல்வது?
பொதுவாக அறிவுடையவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்;கெட்டவர்கள் அறிவற்றவர்களாக இருப்பார்கள் என்றும் சிந்திப்பது உலக வழக்கம்.
ஆனால் உலகில் நாம் பார்ப்பது என்ன?
ஓழுங்காகச் சாப்பிட்டுவிட்டு,உறங்கி ஓய்வெடுக்கும் குழந்தைகளை விட,ஓயாது சேட்டை செய்துகொண்டு,விரைவாகத் துன்பத்தை விளைவிக்கும் பிள்ளைகளே அறிவுள்ள பிள்ளைகள் என அறியப் படுகிறார்கள்;
பணத்தை முடிந்து தோளில் போட்டுக் கொண்டு செல்பவர்களை விட,அதை திருடிச் செல்லும் முடிச்சவிழ்க்கிகள் அதிக அறிவைப் பயன்படுத்துகிறார்கள்;
உயர்ந்த பொருளை வைத்து உள்ள விலை கூறி விற்கும் வியாபாரிகளை விட,மட்டமான பொருளை வைத்து அதிக விலை கூறி பொய்யான வாக்குறுதியுடன் விற்கும் பொல்லாத வியாபாரிகள் அதிக அறிவுடையவர்களாகத் தோன்றுகிறார்கள்;
நேர்மையாக வேலை செய்யும் உத்தியோகம் செய்பவர்களை விட கையூட்டு வாங்கி உத்தியோகஸ்தர்கள் அதிக அறிவாளிகளாகத் தோன்றுகிறார்கள்;
உடல் வருத்தி உழைத்து உண்ணும் கிராமத்து மக்களை விட அவ்வளவு அதிக உழைப்பு இல்லாத நகர மக்கள் அதிக அறிவாளிகளாகத் தோன்றுகிறார்கள்;
பொதுநலம் கருதி அரசியலில் இயங்கும் அரசியல்வாதிகளை விட,தன்னையும் தன் குடும்பம்,பேரன்,பேத்திகள் வரை அனுபவிக்க முறையற்ற பணம் சேர்க்கும் அரசியல்வாதிகள்தான் சிறந்த சாணக்ய,அறிவாளி அரசியல்வாதிகளாக வலம் வருகிறார்கள்;
ஆக அனைத்துவிதங்களிலும் நியாயமாக இருப்பவர்களை விட அநியாயமாக இருப்பவர்களே அறிவாளிகள் என்ற பிம்பம் எழுகிறது.இது சரியான கருத்துதானா?
நல்ல மனிதன் என்றால்,பாவம் ஒன்றும் தெரியாதவன்,பிழைக்கத் தெரியாதவன் என்று முத்திரை குத்தப் படுவதுதான் இயல்பாக நடக்கிறது.பொல்லாத மனிதன் என்றால் எவராலும் எளிதில் ஏமாற்றப் பட முடியாதவன் என்ற கருத்தும் பொதுக் கருத்தாக இருப்பது வழமையாகி விட்டது.
இப்போது சொல்லுங்கள்,எது அறிவு?
பொல்லாத மக்களிடம் காண்பதுதான் அறிவா?நல்ல மனிதர்களிடம் அது ஒளி வீசாதா?’ போன்ற கேள்விகள் எழுவது இயற்கை.
இவற்றிற்கு என்ன பதில்?
இந்தக் கேள்வியைப் பலரிடம் கேட்டுப் பாருங்கள்,எவராவது நல்ல பதில் கூறுகிறார்களா?
சரி,இன்னோரு இதற்கு இன்னோரு பார்வைக் கோணம் இருக்கிறது,என்னவென்று பார்ப்போம்.
மேற்சொன்ன அனைவரும் செய்யும் செயல்களில் திறன் இருக்கிறது,ஆனால் திறனும் அறிவும் ஒன்றா?
திறன் வேறு;அறிவு வேறு.(என்னுடைய முந்தைய ஒரு பதிவிலும்-திறனற்ற செயலும்,செயலற்ற திறனும்- இவற்றின் வேறுபாடுகளைப் பற்றி சிறிது பேசினேன்.)
திருடனுடைய மனம் திருட எண்ணுகிறது,திருடத் துணிகிறான்,திருடுகிறான்;
ஆனால் திருடும் போது நடுங்குகிறான்,ஏன்?
அது தவறு என அவனுடைய அறிவு அறிவுறுத்துகிறது.இந்த அறிவுரையை ஏற்காமல்,தூண்டப் படும் மனத்தின் வழி சென்று திருடுகிறான்.
இது அறிவையும் மீறி மனம் செயல்படும் செயலின் விளைவு.
திருடுவது,பொய் சொல்லுவது,கையூட்டு வாங்குவது,ஏமாற்றுவது,நெறி தவறுவது ஆகியவை எந்த அளவு திறனுடன் செய்யப்பட்டாலும்,அது அறிவின் பாற் பட்ட செயலன்று;அது ஆசையின் பாற்பட்ட மனத்தின் செயல்.இதைத் தடுத்து நிறுத்தி,நல்வழியில் செல்லத் தூண்டும் செயலே அறிவின் செயல்.
அருந்தமிழ்க் குறள் அழகாகக் கூறுகிறது.....
சென்ற இடத்தாற் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின் பால் உய்ப்பதறிவு.
“மனம் சென்றவிடமெல்லாம் அதனைச் செல்ல விடாமல் தடுத்து,அதைத் தீமைகளிலிருந்து விலக்கி,நல்லவைகளிடத்துச் செலுத்துவது எதுவோ அதுவே அறிவு’ என்பது இதன் பொருள்.
மனமே அறிவு என மயங்கியிருப்பதாலும்,மனத்தின் செயல் அனைத்தும் அறிவின் செயல் என்ற மயக்கம் இருப்பதாலும் மேற்கண்ட வாறு சந்தேகங்கள் ஏற்பட்டன.
இதனால்தான் மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என கவியரசரும் கேட்டார் போலும் !
மனம் வேறு,அறிவு வேறு என்பதும்,மனத்துக்கு அப்பாற்பட்ட,மனத்தை வழி நடத்தும் திறன் படைத்த ஒன்றே அறிவு என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.
ஆயினும் மனம் அறிவை புறப்படுத்தி தான் ஆசைப்பட்ட செயலைச் செய்யும் போது நாம் சிக்கலுக்குள்ளாகிறோம்;அங்கு அறிவு,மனதை தவறின் வழி செல்லாமல் தடுத்தாலும்,திருடனின் திருடத் தூண்டும் மனம் அறிவை வெற்றி கொள்வது போல,மனதின் வழி செல்பவன் அறிவற்றவனாகிறான்.
மனம் சென்றவிடமெல்லாம் செல்லாது மனத்தை நல்வழியில் செலுத்தும் திறன் படைத்தவன் உன்னதமானவனாகிறான்;மனம் போனபடி செல்லும் ஒருவன் கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும் சாதாரண மனிதனாக வாழந்து சுவடற்று மறைகிறான்...
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteநட்ச்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஒரு நாள் என் மகன் சொன்னான், " அப்பா, உலகத்துலயே மூன்றாவது வேகமானது ஒலி". அப்போ முதல் இரண்டு என்னன்னு கேட்டேன். இரண்டாவது ஒளி, முதலாவது மனசு!
ReplyDeleteஅது வேகமா எங்க வேணும்னாலும் போவும். புடிச்சு இழுத்து நல்லதுல உட்கார வைக்கிறதுதான் அறிவு. நல்ல பார்வை. நன்றி!
இந்த பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் விட அறிவு தான் மகத்தானது. அறிவுதான் கடவுளும். அறிவில் அத்தனையும் அடக்கம். அர்த்தமுள்ள ஆன்மீகம் என்பதே அறிவுதான்.
ReplyDeleteநட்சத்திர வாரத்தில் தங்களின் முதல் பதிப்பே அறிவாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள். இந்த மனிதகுலம் அறிவுபரிபூரணம் அடைய தொடர்ந்து அறிவை பாதுகாப்போம்.
நன்றி...
அருமையான விளக்கம்
ReplyDeleteவாழ்த்துகள்
நன்றி நண்பர் சுப்பையா அவர்களே,
ReplyDeleteதொடர்ந்து வாசித்து கருத்துக்கள் கூற வேண்டுகிறேன்
நன்றி நண்பர் கிரி..
ReplyDeleteதொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.
திகழ்மிளிர் வாங்க,நன்றி..
ReplyDeleteஅன்பு சுந்தரா,
ReplyDeleteநன்றி.
அடுத்த தலைமுறைக்கு அறிந்த அறிவையும் அறியா அறிவையும் கொண்டு செல்லும் பணியே மானுடத்திற்கு விதிக்கப் பட்டிருக்கும் கடமை.
ஆனால் பலரின் வாழ்வில் நமக்கே தெரிந்திருப்பதில்லை..
குழந்தைகளுக்கு வாழ்த்தும் அன்பும்.
அறிவக நண்பரே..
ReplyDeleteநன்றி.
அறிவிலும் அறியா அறிவு,அறிந்த அறிவு என இரு பார்வைகள் உள்ளன.
காட்டாக மனம் என்றால் என்ன?சித்தம் என்றால் என்ன?
இவைகளை பொருளறிவின் மூலம் விளக்க முடியுமா?
ஆனால் பண்டைய தமிழரிடம் அனைத்துக்கும் விளக்கம் இருந்திருக்கிறது !
இவை பற்றியும் ஒரு பதிவில் தொட உத்தேசம்,பார்ப்போம்..
நன்றி மீண்டும்.
அருமையான எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விளக்கம். விண்மீன் கிழமையின் சிறப்பான துவக்கம்.
ReplyDeleteஅய்யா, உங்கள் பதிவின் பின்னூட்டப் பகுதி தோன்ற வெகு நேரமாகிறது. சற்றுப் பாருங்களேன்.
//இல்லையெனில் அது வெளிப்படுவது என் கையில் இருக்கும் !!//
ReplyDeleteரொம்பக் காரசாரமா இருக்கய்யா? சிங்கையில் தான் இருக்கிறீர்கள். பதிவர் சந்திப்புக்கு வரலாமே!
அறிவன் சார் நட்சத்திர வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தி உள்ளவனே பலவான் என்பார்கள் !
ஏமாற்றத் தெரிந்தவனே அறிவாளி என்று நம்பும் உலகம்
//பணத்தை முடிந்து தோளில் போட்டுக் கொண்டு செல்பவர்களை விட,அதை திருடிச் செல்லும் முடிச்சவிழ்க்கிகள் அதிக அறிவைப் பயன்படுத்துகிறார்கள்;//
:))))))
முகவை மைந்தன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteபின்னூட்டப் பெட்டியில் ஒன்றும் இழுபறி தெரியவில்லை,நீங்கள் நெருப்பு நரி உலாவி உபயோகித்தால் சில சமயம் இந்தக் குறை தோன்றக் கூடும்.
சிங்கப்பூரில் இருப்பினும் பணி காரணமாகவும்,சொந்த நிறுவணத்தின் நேர மேலாண்மை சிக்கல்கள காரணமாகவும் வர இயலுவதில்லை.
நன்றி.
நன்றி கண்ணன்,வருகைக்கும் கருத்துக்கும்..
ReplyDeleteஅறிவையும் மனத்தையும் மிக அழகாக விளக்கினீர்கள். மிக நன்று.
ReplyDeleteவிண்மீன் வார வாழ்த்துகள் அறிவன்.
நண்பர் குமரன் ஐயா,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.