Pages - Menu

Monday, April 15, 2013

183.நிகழ்ந்து மறைந்த அற்புதம் - பிபி ஸ்ரீனிவாஸ்



நேற்று பாடகர் பிபி ஸ்ரீநிவாஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்.

பாடகர் பிரதிவாதி பயங்கர சீனிவாஸ்


திரையிசையின் ஒரு அற்புத காலகட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தவர்; எம்எஸ்வி, கண்ணதாசன் கூட்டணி நிகழ்த்திய அற்புதங்களின் ஒரு வெளிப்பாடாக இருந்தவர்.


திரையிசையில் பாடல்கள் உருவாவதில் ஏதாவது ஒரு கட்டத்தில் சொதப்பல் ஏற்பட்டாலும் பாடல் வலுவிழந்து போகும். ஆனால் மேற்கண்ட இருவர் கூட்டணி, எளிதாக, அநாயாசமாக பல அற்புதப் பாடல்களை வழங்கியது. அவற்றில் பல பாடல்களை அமர கீதங்களாக்கியவர் பிபிஎஸ்.

கடைசி வரையிலும் இசையுலகோடான தொடர்பில் இருந்தவர். விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் புண்ணியத்தில், இளைய தலைமுறையினர் பலருக்கு அறிமுகமாயிருப்பார் என்று நினைக்கிறேன்.

குணம்...குணம்...அது கோவிலாகலாம்' ...அவரது குரலில் இந்த வரிகள்  ஏற்படுத்தும் உணர்வை வார்த்தைகளில் வடித்து விட முடியாது.

இவரைப் போன்றவர்களுக்கு மரணம் ஏதும் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியாது என்றே தோன்றுகிறது ; அவரது பாடல்களால் அவர் காற்றுவெளியெங்கும் நிறைந்திருக்கிறார்.

நிறைவான வாழ்வையும், பலரின் வாழ்வின் பெரும்பாலான கணங்களை நெகிழ்ந்து,உருகி,மகிழ்ந்து,சிரித்து,அழுது, நிறையச் செய்ததுமான ஒரு வாழ்வு வாய்ப்பது எவ்வளவு பெரிய கொடை !

அந்தக் கொடைக்குச் சொந்தக்காரர் பிபிஎஸ்.

பிபிஎஸ்...தூல உடம்பினால் அமைதியடைந்து விட்ட நீங்கள், ஆன்ம வடிவில் இன்னும் பலகாலம் பலரை அமைதிப் படுத்திக் கொண்டிருப்பீர்கள்...

உங்களது அர்த்தம் பொதிந்ததான இந்தப் பூவலக வாழ்விற்காக இறைனுக்கு நன்றி பல !!!!


7 comments:

  1. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்... இனிமையான தாலாட்டும், மனதை அமைதிபடுத்தும் குரல்...

    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நினைவஞ்சலியில் இணைந்ததற்கு நன்றி நண்பர் தனபாலன்..

      Delete
  2. பாடுவது மட்டுமல்ல தமிழ் ஞானமும் உடையவர். பேச்சில் தற்பெருமை இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. ஆம்...அணுகுதற்கு எளியவர் என்று பலர் சொல்லக் கேள்விப் படுகிறேன்..

      || தமிழ் ஞானமும் உடையவர் ||

      கிட்டத்தட்ட பத்தாயிரம் கவிதைகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் எழுதியிருக்கிறார் என்று இராமகிருஷ்ணன் பகிர்ந்திருக்கிறார்..வியப்பூட்டும் ஒரு மனிதர்..ஒருவர் ஒரு துறையில் மிகுந்த புகழ் பெறும் போது அவர்களது மற்றைய திறமைகள் வெளியுலகில் அதிகம் தெரியாது போவது ஒரு பாழ்நிலை!(துரதிருஷ்டம்)

      Delete
  3. விரும்பிக் கேட்டவள் என்ற இராமகிருஷ்ணன் எழுதிய கதையை இன்று படிக்க நேர்ந்தது..

    பிபிஎஸ்'க்கு இந்தக் கதையை விட ஒரு அருமையான அஞ்சலியை எவரும் எழுதி விட முடியாது!

    ReplyDelete
  4. கொடை என்பது சரி.
    இது போன்ற எத்தனையோ கொடைகளினால் உலகில் இன்னும் அர்த்தமுள்ளதான வாழ்வை வாழ முடிகிறது.

    ReplyDelete