Pages - Menu

Wednesday, August 15, 2012

* * * * * 164. கொண்டாடுவோம் சுதந்திரத்தை !

வழிமொழிந்த கட்டபொம்மன் !



இந்திய முதல் விடுதலைப் போராளி!

இன்று 66 ஆவது இந்திய சுதந்திர தினம் !


நமது நாடு பெருமையும் குதூகுலமும் கொண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தினம் !

சுதந்திர இந்தியாவில் கேள்விப்படாத அளவிற்குச் செய்யப்பட்ட ஊழலும்,இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மைய அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள் என்றாலும்,அவர்களில் சிலர் மீண்டும் தத்தமது அமைச்சரவைகளுக்கு வருவதற்கு எந்த வித இடையூறும் இல்லாத சுதந்திரத்தை அவர்களுக்கு நாடு வழங்கியிருக்கிறது !


ன்று ஒரு தன்னந்தனியான இளம் பெண், உடல் முழுக்க நகையணிந்து, இரவு 12 மணிக்கும் மேல், தனியாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் என்றார் காந்தி. ஆனால் இன்றைய இந்தியாவில் பளிச்சிடும் பகலில் பெண்களை சனசந்தடி மிகுந்த இடங்களிலிருந்து காரில் கடத்திக் கொண்டு போய்,கற்பழித்து விட்டு, மீண்டும் சன சந்தடி மிகுந்த இடத்தில்,காவல் நிலையங்களுக்கு கூப்பிடு தூரத்தில், குப்பையைப் போல் தூக்கி எறிந்து விட்டுப் போவதற்கான சுதந்திரத்தை சிலருக்கு நாடு வழங்கியிருக்கிறது !

பெற்றோருக்கும் மேலாக வரையறுத்து வைக்கப்பட்டிருக்கும் குரு எனப்படும் ஆசிரியர்கள். தெய்வத்தை நம்புபவர்களுக்கு, தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்து வணங்கப் பட வேண்டியவர்களாக குருவை நிர்ணயித்திருக்கிறது இந்திய சமூக வாழ்வு.
தங்களது வாழ்வையும், பண்பையும், அறிவையும் தீட்டி கூர் பெறச் செய்யும் மரியாதைக்குரியவர்கள் ஆசிரியர்கள் என்ற நிலையில் ஆசிரியர்களை வைத்திருக்கும் சமூகத்தில், சிலர் மாணவிகளுக்கு, பானங்களில் மயக்க மருந்து கொடுத்து, நிலையிழக்க வைத்து, தனது வக்ரமான பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள முயல்வதற்கு, சுதந்திரத்தை நாடு வழங்கியிருக்கிறது !

ரசாண்மை என்பது மக்களுக்காக,மக்கள் வாழ்வு நலமாகவும், நிம்மதியாகவும் இருப்பதற்காக என்ற மக்களாட்சியின் கோட்பாட்டையே, ஆளும் அரசியல்+வன்முறையாளர்கள் கூட்டணி,மறந்து விடுவதற்கும், ஆட்சியும் ஆளும் பொறுப்பும் கணக்கு வழக்கற்ற முறையில் ஊழல் திருட்டு மூலம் நாட்டின் பணத்தை தனது குடும்பத்தின் பல தலைமுறைகளுக்கு சேர்த்து வைப்பதற்கான வாய்ப்பு என்று எண்ணும் சுதந்திரத்தை நாடு வழங்கியிருக்கிறது !

ந்நியர்களின் அடக்குமுறையிலிருந்த நாட்டை விடுவிப்பதற்கு பெயர் தெரியாத முகம் தெரியாத லட்சோப லட்சம் மக்கள் ரத்தமும்,உயிரும் சிந்தினார்கள்; பகத் சிங்,திப்பு,கட்டபொம்மு  போன்ற அந்த போராளிகளின் லட்சிய வெப்பம் பொசுக்கியதால், வேண்டிய மட்டும் சுரண்டி விட்டு, சுதந்திரத்தை அளித்து விட்டு மேற்குலகம் ஓடிப்போக, காந்தி என்ற பெயரை மட்டும் பிடித்துக் கொண்டு நாட்டின் கனிம வளத்தையும், தொழில் நுட்ப வளத்தின் பலனையும், சந்தடியின்றி கொல்லைப்புறமாகக் கொண்டு சென்று பதுக்கி வைத்துக் கொள்ள, சுதந்திரத்தை நாடு வழங்கியிருக்கிறது.

ழுதப்பட்ட எல்லா சட்ட விதிமுறைகளும் சாமான்ய மக்கள் பின்பற்றுவதற்கு மட்டுமே என்றும், மக்களின் நலனுக்காக என்ற பெயரில் கட்டி எழுப்பப்பட்ட அரசு, அரசை இயக்குபவர்கள், அதிகாரிகள் என்ற பிரிவுகளில் அடங்குபவர் எவருக்கும், சாமானிய மக்கள் பின்பற்றுவதாற்காக அமைக்கப்பட்ட எந்த ஒரு சட்ட விதிமுறைகளும் ஒரு தளை அல்ல- என்ற சுதந்திரத்தை நாடு வழங்கியிருக்கிறது !


ந்த எல்லாவிதமான 'சுதந்திரத்'த்திற்கு மத்தியிலும்.....

சாமானிய மனிதன் ஒருவன் எளிய முறையில் வாழ, அவசியத் தேவைகளான, வீடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், வன்முறைகளற்ற சமுதாய சூழல் என்பவற்றை எதிர்பார்ப்பதற்கும் சுதந்திரத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்புவதற்கான சுதந்திரமாவது சாமான்யனுக்கு இன்னும் மிச்சமிருக்கிறது !

அந்த உரிமையை நிலை நிறுத்துவதற்காகவேனும் இந்த தினத்தைக் நாம் கொண்டாட வேண்டும்.



அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் !!

29 comments:

  1. நொய்,நொய் அழுத்தம்-நாளொரு பாடல் 12 - படித்து அறிந்தேன்... நன்றி...


    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளரட்டும்...

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
  2. || ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளரட்டும்...
    ||

    அந்த சூழல் இருக்கிறதா என்ன?
    கொல்கத்தாவில் கேள்வி கேட்ட ஒரு விவசாயிக்கு பெய்ல் கொடுப்பது கூட மம்தா அரசால் மறுக்கப்படுகிறது. :))

    ReplyDelete
  3. நீங்கள் எழுதுவது போல் ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட வருத்தம் இருந்தது, இப்ப எக்கேடு கெட்டால் என்ன என்றே நினைக்க வைத்துவிட்டார்கள், கூசாமல் கோடிகளில் ஊழல் செய்து நாட்டை ஆளுகிறவர்களுக்கு இல்லாத அக்கரை பொது சனத்துக்கு இருக்கனுமா ? ன்னு கேட்டால் ஞாயம் தானே ?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கோவி,
      மக்கள் மந்தைகளாக இருப்பதற்கு ஒரு உளவியல் காரணம் இருக்கிறது.

      நீங்களும் நானும் இந்தியாவிலேயே இருந்திருந்தால், நாமும் எந்தக் கேள்வியும் கேட்காது, அமைப்பில் புதைந்து சுரணை கெட்டவர்களாகவே இருந்திருப்போம்.

      சிங்கை போன்ற ஒரு நாட்டில் அரசாண்மை எப்படி இருக்கிறது?
      சிங்கப்பூரர்களுக்கு சிறிது சுகக் குறைவு ஏற்பட்டால், எந்த அளவுக்கு சமூக வலைத் தளங்கள் மற்றும் முயன்ற இடங்களிலெல்லாம் அரசுக்கு எதிரான அவர்களின் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்?

      உங்கள் வட்டாரத்திலேயே பாஸிர் ரிஸ் மக்கள் வேண்டாம் என்று சொல்லும் போது அரசு வணிக வளாகம் கட்டுவதை யோசிக்கிறதல்லவா?

      ஏன் லீ க்வான் யூ, ஆள்பவர்கள் மெரிட்டோகிரஸியின் படிதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்? பிஏபி யில் சேர்ந்து டவுன் கவுன்சில் அளவிற்கு மேல் உயர்வது எவ்வளவு கடினம் என்பதை விசாரித்துப் பாருங்கள்..சகல விதமான சோதனைகளையும், தகுதிகளையும் பரிசீலித்துத்த்தான் பிஏபி ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறது. எனவே திறமை சாலியான, உயர்ந்த மனிதர்கள் மட்டுமே பொறுக்குகளுக்கு வருகிறார்கள்.

      ரிசர்வேஷனில் எவருக்காவது வேலையாவது, பொறுப்பாவது கிடைக்கிறதா? இந்தியாவில் என்ன நடக்கிறது?


      இந்தியாவில் அமைப்பு அடிமட்டத் தரத்துடன் இருக்கிறது;மக்கள் பெரிதாக அமைப்பைக் கேள்வி கேட்பதும் இல்லை !

      Delete
  4. //ரிசர்வேஷனில் எவருக்காவது வேலையாவது, பொறுப்பாவது கிடைக்கிறதா? இந்தியாவில் என்ன நடக்கிறது?//

    இங்கு ஐடி துறைத் தவிர்த்து இந்தியர்கள் பெரிய பொறுப்பில் செல்வதற்கு வாய்ப்புக் குறைவு என்றே நினைக்கிறேன், ஒரு சிலர் முன்னேறி இருக்கலாம், அது அவர்களில் மேம்பட்ட திறமை அல்லது அவர்கள் இல்லாது செய்ய முடியாது என்ற சூழலில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம், என்னை மாதிரி தனியார் நிறுவனங்களில் மேலாளர் நிலைக்கு உயர கல்வித் தகுதியும், அறிவுத் திறனும் மட்டுமே போதாது என்பதை நான் உணர்ந்துள்ளேன், அது இரண்டில் ஒன்று குறைந்தவர்கள் மேலாளர்களாக உயர்ந்துள்ளதையும் பார்த்திருக்கிறேன்.

    ரிசர்வேசனே இல்லை என்று சொல்ல முடியாது, பல மட்டங்களில் பல்வேறு சொல்லாடல்களில் அவை இருக்கத்தான் செய்கிறது, குறிப்பாக ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் எந்த இனம் எவ்வளவு வீடுகள் வரையில் வாங்க முடியும் என்கிற கட்டுபபாடு உள்ளது, தவிர இன அடிப்படையிலான மக்கள் தொகைகளின் ஏற்ற இரக்கங்கள் குறிப்பிட்ட விழுக்காட்டிலேயே வைக்கப்படுகிறது.

    இங்கேயும் ஒரு குறிப்பிட்ட இனம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின் தங்குகிறது அல்லது பின் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச் சாட்டு எழுந்தால் அப்போது ரிசேர்வசன் பற்றி பரிசீலனை செய்யவே மாட்டார்கள், அப்படி இருப்பது தான் ஞாயமான அரசிற்கு அழகு என்றும் சொல்லுவீர்களா ?

    நீங்கள் பதிவில் பேசியது சமூக மற்றும் அரசியல் ரீதியிலான ஒழுக்கம் / ஒழுங்கீனம் குறித்தது, அதில் நீங்க ஏன் ரிசர்வேசன் பற்றிய கருத்தை இப்பொழுது முன் வைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    ரிசர்வேசன் கூடாது என்பவர்கள் ஆகமம் என்ற பெயரில் நாங்க மட்டும் தான் அர்சகராக இருப்போம் மற்றவர்கள் அர்சகர் குறித்த படிப்பு படித்திருந்தாலும் வரக் கூடாது என்று எதிர்ப்பு காட்டுகிறார்களே இவையெல்லாம் கூட முரண் தானே.

    நான் பல ஆண்டுகளாக கேட்டுவரும் ஒரு கேள்வி சென்னை மாநாகராட்சி துப்புறவுப் பணிக்கு ரிசர்வேசனே இல்லை என்றால் எந்தந்த சாதிக்காரர்கள் வேலைக்கு விண்ணப்பிப்பார்கள் ?

    ReplyDelete
    Replies
    1. || இங்கு ஐடி துறைத் தவிர்த்து இந்தியர்கள் பெரிய பொறுப்பில் செல்வதற்கு வாய்ப்புக் குறைவு என்றே நினைக்கிறேன், ஒரு சிலர் முன்னேறி இருக்கலாம், அது அவர்களில் மேம்பட்ட திறமை அல்லது அவர்கள் இல்லாது செய்ய முடியாது என்ற சூழலில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம், என்னை மாதிரி தனியார் நிறுவனங்களில் மேலாளர் நிலைக்கு உயர கல்வித் தகுதியும், அறிவுத் திறனும் மட்டுமே போதாது என்பதை நான் உணர்ந்துள்ளேன், அது இரண்டில் ஒன்று குறைந்தவர்கள் மேலாளர்களாக உயர்ந்துள்ளதையும் பார்த்திருக்கிறேன். ||

      சிங்கையைப் பொறுத்தவரை ஒரே நிறுவனத்தில் வெளிநாட்டுக் காரரையும் சிங்கப்பூர் குடிமகனையும் ஒப்பிட்டீர்கள் என்றால்,குடிமக்களுக்கு அவர்கள் முன்னுரிமை தருவார்கள். அது நியாயமும் கூட.
      ஆனால் ஒரு போஸ்ட்'க்கு போட்டியிடுபவர்கள் சிங்கப்பூர் குடிமக்கள் மட்டுமே என்ற நிலையில் 99 சதம் தகுதி மட்டுமே பார்க்கப்படுகிறது.

      || ரிசர்வேசனே இல்லை என்று சொல்ல முடியாது, பல மட்டங்களில் பல்வேறு சொல்லாடல்களில் அவை இருக்கத்தான் செய்கிறது, குறிப்பாக ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் எந்த இனம் எவ்வளவு வீடுகள் வரையில் வாங்க முடியும் என்கிற கட்டுபபாடு உள்ளது, தவிர இன அடிப்படையிலான மக்கள் தொகைகளின் ஏற்ற இரக்கங்கள் குறிப்பிட்ட விழுக்காட்டிலேயே வைக்கப்படுகிறது. ||

      வீட்டுக்கான இன ஒதுக்கீடு, சமூக ஒழுங்கைப் பாதுகாக்க சிங்கப்பூர் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை.தகுதி, திறமையை இதில் பார்க்க ஒன்றுமில்லை.


      || இங்கேயும் ஒரு குறிப்பிட்ட இனம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின் தங்குகிறது அல்லது பின் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச் சாட்டு எழுந்தால் அப்போது ரிசேர்வசன் பற்றி பரிசீலனை செய்யவே மாட்டார்கள், அப்படி இருப்பது தான் ஞாயமான அரசிற்கு அழகு என்றும் சொல்லுவீர்களா ? ||

      ஏற்கனவே எழுத்திருக்கிறது..மலாய் இன மக்கள் சீனர்களைப் போலவோ,இந்தியர்களைப் போலவே முன்னேறவில்லை;படிப்பதில் பின்தங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு 7 ஆண்டுகளுக்கு முன்னரேயே எழுந்தது...ஆனால் சிங்கப்பூர் அரசு ரிசர்வேஷன் கொண்டுவரவில்லை;மாறாக மலாய் மக்களின் குழந்தைகள் படிப்பதற்கான பொருளுதவிகளை மேம்படுத்தினார்கள்..ஆனால் படித்த பின் வேலை என்று வரும் போது மலாய் மக்களும் அனைத்து மக்களோடு பொதுவில்தான் போட்டி போடுகிறார்கள் !!!


      ||நீங்கள் பதிவில் பேசியது சமூக மற்றும் அரசியல் ரீதியிலான ஒழுக்கம் / ஒழுங்கீனம் குறித்தது, அதில் நீங்க ஏன் ரிசர்வேசன் பற்றிய கருத்தை இப்பொழுது முன் வைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.||

      இல்லை. அரசு செயல்படும் விதம் பற்றி,அதில் ரிஷர்வேஷனால் நிகழும் ஒழுங்கினம்,திறன் குறைவு, அப்படி வேலையில் சேர்ந்தவர் வேலையில் காட்டும் அலட்சியம், அதனால் விளைந்த ஊழல் ஆகியவற்றின் மொத்த உருவம்தான் இன்றைய இந்தியாவின் நிலை. :))

      ||ரிசர்வேசன் கூடாது என்பவர்கள் ஆகமம் என்ற பெயரில் நாங்க மட்டும் தான் அர்சகராக இருப்போம் மற்றவர்கள் அர்சகர் குறித்த படிப்பு படித்திருந்தாலும் வரக் கூடாது என்று எதிர்ப்பு காட்டுகிறார்களே இவையெல்லாம் கூட முரண் தானே.||

      இதை நானும் ஒத்துக் கொள்வதில்லை. அர்ச்சகராக இருக்கத் தகுந்த தகுதியும்,வாழ்வு முறையும் கடைப்படிக்கும் எவரும் வரலாம் என்பதுதான் என் நிலை.


      ||நான் பல ஆண்டுகளாக கேட்டுவரும் ஒரு கேள்வி சென்னை மாநாகராட்சி துப்புறவுப் பணிக்கு ரிசர்வேசனே இல்லை என்றால் எந்தந்த சாதிக்காரர்கள் வேலைக்கு விண்ணப்பிப்பார்கள் ?||
      இந்த வேலையை மனிதன் இயந்திரங்களைக் கொண்டு எளிதாகச் செய்யும் வண்ணம் மாற்றுவது அரசின் கடமை. கீழ்த்தரமான வேலை என்று ஹரிஜனங்களோ, எந்த இனத்தவரோ அந்த வேலைகளையும் புறக்கணிக்கலாமே...

      இன்று கட்டட வேலைக்குச் சென்றால் கூட ஒரு நாளைக்கு ரூ 300 வீதம் மாதம் குறைந்தது 6000 கிடைக்கும். நான் துப்புறவு வேலையை ஒரு பிரிவு மக்களின் மேல் திணிப்பதை ஆதரிக்கவில்லை. ஆனால் அந்த வேலையின் தரம் கூட அதிகப் படுத்தப் படவேண்டும் என்கிறேன். அதில் அரசின் பங்கு பெருமளவு இருக்கிறது..

      நன்றி விவாதத்திற்காக..

      Delete
  5. அறிவன்,

    சமுகத்தின் பங்கினை விமர்சித்து இருக்கிறீர்கள், சமூகம் நமக்கென்ன ,நமக்கு பிரச்சினை இல்லை என்றால் எல்லாம் சுபமம் போகவே பழகிக்கொண்டுள்ளது, வலுத்தவன் அப்படித்தான் செய்வான் நாம தான் ஒதுங்கி போகணும் என ஒரு மனப்பான்மை அனைவருக்கும், இங்கே பதிவில் கூட ஒரு பிராபல்ய பதிவர் தப்பா சொன்னாக்கூட தப்புன்னு சொல்ல தயங்கும் அளவுக்கு தான் மக்களின் மனசாட்சி வேலை செய்யுது, இணையத்தில் நல்லவன் என பேர் வாங்கினால் அதை வைத்து என்ன வாங்குவார்களோ :-))

    அரசியல்வாதி ஊழல் செய்றான்னு சொல்லிட்டு அந்த அரசியல்வாதி மீண்டும் தேர்தலில் நிக்கும் போது ஜாதிப்பார்த்து நம்ம ஆளை தோக்க விடக்கூடாது என ஓட்டுப்போடுவதும் அதே மக்களே :-))

    ----------

    //நான் பல ஆண்டுகளாக கேட்டுவரும் ஒரு கேள்வி சென்னை மாநாகராட்சி துப்புறவுப் பணிக்கு ரிசர்வேசனே இல்லை என்றால் எந்தந்த சாதிக்காரர்கள் வேலைக்கு விண்ணப்பிப்பார்கள் ?//

    கோவி,

    இப்பொழுதும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், ஆனால் விண்ணப்பிக்க மாட்டார்கள்.

    சரி ஒரே வகுப்பு மக்கள் தான் விண்ணப்பித்து இருக்கிறார்கள் அதிலும் இந்த அரசு செய்யும் அநியாயம் என்ன தெரியுமா, 3000 மாநகராட்சி துப்புறவு பணியாளர்கள் இருக்கிறார்கள் எனில் அதில் 1500 பேர் தான் பணி நியமனம் பெற்றவர்கள், மற்றவர்கள் தினக்கூலி அடிப்படையில் ,இதனால் அவர்களுக்கு சம்பளம் குறைவு, மேலும் பலப்பணிக்கால கொடைகள் இல்லை, இது பல ஆண்டாக இருக்கும் அடக்கு முறை,ஆனால் எந்தக்கழகம் வந்தாலும் இதனை மாற்றவில்லை.

    ஏன் ஒரு அரசால் அனைவரையும் நிரந்தரப்பணியாளர்கள் ஆக்க முடியாதா? இவர்கள் வேலை செய்யவில்லை என்றால் ஊரே நாறிவிடும். இவர்களை மிரட்ட தனியாருக்கு ஒப்பந்தம் விடுவோம் என ஆங்காங்கு சில மண்டலங்களில் தனியாருக்கு விட்டுள்ளார்கள்.

    நகர சுத்திப்பணி மோசமான ஒன்று அதை செய்ய வருபவர்களையும் அடக்கி, அவர்களின் உரிமையைத்தான் எல்லா அரசும் பறிக்கிறது. இதனை எந்த அரசியல் கட்சியும் கண்டுக்கொள்வது இல்லை, ஆனால் எல்லாக்கட்சிக்கும் தொழிற்சங்கம் இருக்கு :-))

    சமூகத்தில் கடை நிலையில் இருப்பவருக்கு எதற்கு உரிமை ,சுதந்திரம் என நினைக்கும் கட்சிகளும், ஊடகங்களும் இருக்கும் நாட்டில் ,கண்னையும்,காதையும் மூடிக்கொண்டால் "எல்லாம் இன்பமயம்" தான் :-))

    ReplyDelete
    Replies
    1. || அறிவன்,

      சமுகத்தின் பங்கினை விமர்சித்து இருக்கிறீர்கள், சமூகம் நமக்கென்ன ,நமக்கு பிரச்சினை இல்லை என்றால் எல்லாம் சுபமம் போகவே பழகிக்கொண்டுள்ளது, வலுத்தவன் அப்படித்தான் செய்வான் நாம தான் ஒதுங்கி போகணும் என ஒரு மனப்பான்மை அனைவருக்கும், இங்கே பதிவில் கூட ஒரு பிராபல்ய பதிவர் தப்பா சொன்னாக்கூட தப்புன்னு சொல்ல தயங்கும் அளவுக்கு தான் மக்களின் மனசாட்சி வேலை செய்யுது, இணையத்தில் நல்லவன் என பேர் வாங்கினால் அதை வைத்து என்ன வாங்குவார்களோ :-)) ||

      சூப்பர்...எனக்கு இதே அனுபவம் வீடு திரும்பல் மோகன்குமார் பதிவில் நிகழ்ந்திருக்கிறது..எனது ஒரு கருத்தை வெளியிட்டால் அவரை நல்லவன் என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று மறுத்தார்...அவரது பதிவுகளில் பின்னூட்டமிடுவதை அதுமுதல் நான் தவிர்த்து வருகிறேன். :))

      || அரசியல்வாதி ஊழல் செய்றான்னு சொல்லிட்டு அந்த அரசியல்வாதி மீண்டும் தேர்தலில் நிக்கும் போது ஜாதிப்பார்த்து நம்ம ஆளை தோக்க விடக்கூடாது என ஓட்டுப்போடுவதும் அதே மக்களே :-)) ||

      இந்த அளவுக்குக் கூட யோசிக்க மாட்டார்கள்.அதிகமாகப் பணம் கொடுப்பவனுக்கு ஓட்டை விற்பார்கள் !


      ||இவர்கள் வேலை செய்யவில்லை என்றால் ஊரே நாறிவிடும்.||
      குறிப்பிட்ட வகுப்பினரின் மேல் அழுத்தம் இருந்தால்,அவர்கள் அந்த வேலையைத் தவிர்க்கலாம்..எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் கூட இப்போது துப்புறவுக்கு எல்லா இன மக்களுமே வேலை செய்கிறார்கள்.எங்கள் ஊர் இன்னும் டவுன் பஞ்சாயத்துதான்.தினக் குப்பைகளை வாளிகளில் கொட்டி வீட்டு முன் வைக்க அறிவுறுத்துகிறாது நகராட்சி. துப்புறவுப் பணியாளர்கள் அதை எடுத்து வண்டியில் சேகரித்துப் போக வேண்டும் என்பது விதி.

      ஆனால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு வந்து தனியாகக் காசு கேட்பார்கள். நகராட்சிக்குச் நாம் செலுத்துவது போக அவர்களுக்கு 100, 150 ஓ கொடுக்க வேண்டும். முடியாது என்று மறுத்தால் குப்பையை நாம் வைத்தாலும் அதை வண்டியில் சேகரித்துச் செல்ல மாட்டார்கள்..

      அவர்களது மாதச் சம்பளம்-பேசிக் பே=7500 ரூபாய். மேலும் லஞ்சம் கொடுத்தால்தான் நான் எனது வேலையைச் செய்வேன் என்று அவர்கள் சொல்வதை எந்த வாழ்வுரிமையில் சேர்ப்பீர்கள்?

      ஒரு தெருவில் 50 வீடுகளில், மாதத்திற்கு 100 வீதம் வாங்கினாலே, ஒரு தெருவுக்கு, ஒரு பணியாளருக்கு எவ்வளவு லஞ்ச வருமானம் வருகிறது?????

      :((

      ஒழுங்கீனம் இந்தியாவின் தேசிய குணமாக மாறிவிட்டிருக்கிறது. அந்த குணத்தை பேணி வளர்ப்பது அரசு,அதிகாரிகள், அரசியல்வாதிகள் சேர்ந்த கூட்டமைப்பு !

      Delete
    2. நன்றி வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் !
      :))

      Delete
  6. அறிவன்,

    //ஆனால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு வந்து தனியாகக் காசு கேட்பார்கள். நகராட்சிக்குச் நாம் செலுத்துவது போக அவர்களுக்கு 100, 150 ஓ கொடுக்க வேண்டும். முடியாது என்று மறுத்தால் குப்பையை நாம் வைத்தாலும் அதை வண்டியில் சேகரித்துச் செல்ல மாட்டார்கள்..

    அவர்களது மாதச் சம்பளம்-பேசிக் பே=7500 ரூபாய். மேலும் லஞ்சம் கொடுத்தால்தான் நான் எனது வேலையைச் செய்வேன் என்று அவர்கள் சொல்வதை எந்த வாழ்வுரிமையில் சேர்ப்பீர்கள்?

    ஒரு தெருவில் 50 வீடுகளில், மாதத்திற்கு 100 வீதம் வாங்கினாலே, ஒரு தெருவுக்கு, ஒரு பணியாளருக்கு எவ்வளவு லஞ்ச வருமானம் வருகிறது?????//

    நீங்கள் சொன்னது போலவும் நடக்கிறதா?

    நான் சென்னை ,மற்றும் கடலூர் நகராட்சிப்பகுதியில் வாழ்ந்த அனுபவம் உண்டு, வாழ்கிறேன், இங்கு அப்படி பணம் கேட்பதில்லை, தீபாவளி ,[பொங்கல் போன்ற சந்தர்ப்பங்களில் காசு கேட்பார்கள் , 50 ரூ அளவுக்கு தான் கொடுத்திருக்கிறேன்.

    ஆனால் உணவங்களில் காசோ, உணவோ கேட்கிறார்கள்.சென்னையில் சரவண பவன் உணவகத்தில் இரவில் குப்பை அள்ளும் மாநகரப்பணியார்களுக்கு தனியே பார்சல் கட்டி கொடுத்து வருகிறார்கள், இதனை நானே பார்த்துள்ளேன்(பெரும்பாலும் ரொம்ப லேட் ஆக சாப்பிட போனால் காணலாம்)

    உங்கள் ஒரு ஊரை வைத்து முடிவு செய்துவிட முடியாது,மேலும் 10 பேர் வேலை பார்க்கும் இடத்தில் 5 பேரை மட்டுமே நிரந்தர பணியாளர்களாக வைத்திருப்பதை கவனித்து இருக்க மாட்டீர்கள்.

    //சூப்பர்...எனக்கு இதே அனுபவம் வீடு திரும்பல் மோகன்குமார் பதிவில் நிகழ்ந்திருக்கிறது..எனது ஒரு கருத்தை வெளியிட்டால் அவரை நல்லவன் என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று மறுத்தார்...அவரது பதிவுகளில் பின்னூட்டமிடுவதை அதுமுதல் நான் தவிர்த்து வருகிறேன். :))
    //

    உங்களுக்குமா , சொல்லவேயில்லை, இப்போ என்னை மட்டும் ஒரு கும்பல் தொறத்திக்கிட்டு இருக்கு, நானும் நல்லா வாயிலவே மிதிச்சுக்கிட்டு இருக்கேன் :-))


    ஆக மொத்தம் நான் மட்டும் தனியா இல்லைனு தெரியுது, கம்பெனிக்கு நீங்களும் இருக்கிங்க, நன்றி :-))

    ReplyDelete
    Replies
    1. || உங்களுக்குமா , சொல்லவேயில்லை, இப்போ என்னை மட்டும் ஒரு கும்பல் தொறத்திக்கிட்டு இருக்கு, நானும் நல்லா வாயிலவே மிதிச்சுக்கிட்டு இருக்கேன் :-))


      ஆக மொத்தம் நான் மட்டும் தனியா இல்லைனு தெரியுது, கம்பெனிக்கு நீங்களும் இருக்கிங்க, நன்றி :-))||

      பொதுவாக இது வலைப்பதிவின் ஆசிரியர் சரியாக இருந்தால் நடக்காது என்பது என் நிலை.
      எவை தூற்றல், எவை கருத்திற்கான பதில் என்ற வரையறையில் இருக்கிறது சூட்சுமம்..

      சேம் ப்ளட்'க்கு இவ்வளவு சந்தோஷமா? :))

      Delete
  7. அறிவன்,

    //சேம் ப்ளட்'க்கு இவ்வளவு சந்தோஷமா? :))//


    இருக்காதா பின்னே இந்தியன் ஆச்சே ,அவனுக்கு வந்த கஷ்டம் அடுத்தவனுக்கும் வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவான் :-))

    அவன் மட்டும் கஷ்டப்பட்டு அடுத்தவன் நல்லா இருந்தால் ,நான் மட்டும் கஷ்டப்படுறேன் அவன் எப்படி சந்தோஷமாக இருக்கலாம்னு நினைப்பான் , அவன் கஷ்டம் தீர என்ன வழினு யோசிக்க மாட்டான் , அதுவும் தமிழ் நண்டுகள் இன்னும் மோசம், காலை வேற வாரிவிடும் :-))

    ReplyDelete
    Replies
    1. || இருக்காதா பின்னே இந்தியன் ஆச்சே ,அவனுக்கு வந்த கஷ்டம் அடுத்தவனுக்கும் வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவான் :-))

      அவன் மட்டும் கஷ்டப்பட்டு அடுத்தவன் நல்லா இருந்தால் ,நான் மட்டும் கஷ்டப்படுறேன் அவன் எப்படி சந்தோஷமாக இருக்கலாம்னு நினைப்பான் , அவன் கஷ்டம் தீர என்ன வழினு யோசிக்க மாட்டான் , அதுவும் தமிழ் நண்டுகள் இன்னும் மோசம், காலை வேற வாரிவிடும் :-)) ||

      வவ்வால், இந்த கதை வசனம் புரியாம இப்பதான் உங்க பதிவு, மற்றும் தொடர்புடைய நண்பர்கள் பதிவ எல்லாம் பார்த்தேன்..

      அது வேறு ட்ராக் மாதிரி இருக்கிறது...உங்கள் தகவலுக்காக.

      Delete
  8. அறிவன்,

    அது வேற டிராக் தான், இங்கே சொன்னது பொதுவாக நம் மக்களின் மனோபாவத்தினை, அவன் கஷ்டம் தீரணும் என்பதை விட அடுத்தவனும் கஷ்டப்பட்டால் சந்தோஷப்படுவான்னு சொன்னேன்.

    அதான் சேம் ப்ளட்டுக்கு சிரிப்பான் போட்டேன், இந்தியனாக :-)),தமிழனாக உங்களை வாரிவிடனும் இனிமேல் :-))

    ReplyDelete
    Replies
    1. || தமிழனாக உங்களை வாரிவிடனும் இனிமேல் :-)) ||

      ரொம்ப நல்லது. :))

      Delete
  9. சுதந்திர தினக் கொண்டாட்டமா இல்லை திண்டாட்டமா?
    சங்கப் பலகையில் தமிழ் பாடலுடன் அரசியலுமா? கலக்குங்க.

    சுதந்திர தின வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. || சுதந்திர தினக் கொண்டாட்டமா இல்லை திண்டாட்டமா?
      சங்கப் பலகையில் தமிழ் பாடலுடன் அரசியலுமா? கலக்குங்க.||

      ஏன் திண்டாட்டமா இருக்குதுன்ன ஒரு அலசல்தான்..

      தமிழ் இலக்கியம் பற்றி எழுதிய அதே அளவில் சமூகம்,அரசாண்மை பற்றியும் எழுதியிருக்கிறேன்னுதான் நினைக்கிறேன்...

      நீங்க இலக்கியம் பற்றிய பதிவுகளுக்கு மட்டும்தான் தலை காட்டுறீங்கன்னு நினைக்கிறேன்.

      அரசியல் என்று சொல்வதை விட அரசு செயல்படும் விதம், அரசு செயல்பட வேண்டய நோக்கம் இவற்றில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்..பெரும்பாலும் அந்த நோக்கத்தில்தான் பதிவுகள் இருக்கும்..

      Delete
  10. அரசியல் வியாதிகள் ஊரையும் நாட்டையும் முழுங்குவதிலேயே கவனமா இருக்காங்களே:(

    இது தெரிஞ்சும் சனம் ஊமையாக்கிடக்கே:(

    ReplyDelete
    Replies
    1. வாங்க டீச்சர்..

      || அரசியல் வியாதிகள் ஊரையும் நாட்டையும் முழுங்குவதிலேயே கவனமா இருக்காங்களே:(

      இது தெரிஞ்சும் சனம் ஊமையாக்கிடக்கே:(||

      இந்த அங்கலாய்ப்பு பெரும்பான்மை மக்களுக்கு கோபமாக மாறும் போது ஏதாவது மாற்றங்கள் வரும்னு நான் நினைக்கிறேன்;ஒருத்தர் இரண்டு பேருக்கு கோபம் வரும் போது, அரசும் அதிகார வர்க்கமும் சேர்ந்து அவங்களை நசுக்கிடுறாங்க...

      Delete
  11. //
    இல்லை. அரசு செயல்படும் விதம் பற்றி,அதில் ரிஷர்வேஷனால் நிகழும் ஒழுங்கினம்,திறன் குறைவு, அப்படி வேலையில் சேர்ந்தவர் வேலையில் காட்டும் அலட்சியம், அதனால் விளைந்த ஊழல் ஆகியவற்றின் மொத்த உருவம்தான் இன்றைய இந்தியாவின் நிலை. :))//

    படிச்சவன் சூதும்வாதும் செய்தால் அய்யோ என்று போவான்.......என்று சொன்னது யார் ? ஆனாலும் அது உண்மை தானே, எதோ ரிசர்வேசனால் அரைகுறைக் கல்வி கற்று வந்தவர்களால் பொருளாதாரம் நசுங்குவது போலவும் ஊழல் நடைபெறுவதும் போலச் சொல்கிறீர்கள். இராணுவத்தில் உடல்நிலை மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் தான் உயர்மட்டப் பொறுப்புவரை ஆள் எடுக்கிறார்கள், ஒருத்தன் இராணுவத்தில் சேரும் பொழது அவனது சாதிப் பிரிவு இரண்டாம் பட்சம் தான், தகுதி அடிப்படையில் தான் வேலை கொடுக்கிறார்கள். இராணுவத்தில் நடைபெறும் ஊழல்களுக்கெல்லாம் ரிசர்வேசன் தான் காரணம் என்று உங்களால் வாதிட முடியுமா ? இராணுவ உயர்பதவிகளில் அமர்ந்திருக்கும் எல்லாம் பிசி, எஸ்ஸி பிரிவில் இருந்து ரிசர்வேசன் அடிப்படையில் வேலைக்குச் சென்றவர்களா ? அரசியலில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பின்னனியில் ராசா போன்று விரல் விட்டு எண்ணத்தக்க அளவில் இருப்பவர்கள் சொற்பமே, நாட்டின் பெரும் ஊழல்களுக்கெல்லாம் ரிசர்வேசன் தான் பொறுப்பேற்க வேண்டுமா ? உயர் சாதி அரசியல்வாதிகள் எந்தத் கல்வித் தகுதி அடிப்படையில் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார்கள், அவர்களால் ஊழல் அற்ற அல்லது அவர்களே ஊழலில் நேரடியாக இடம் பெறாத சூழல் தான் நிலவுகிறதா ?

    நானோ இன்னொருவரோ ரிசர்வேசனில் படித்துவிட்டு வேலைக்கு வருகிறோம் என்றாலும் கூட எங்களுக்கெல்லாம் எந்த தகுதி அடைப்படையில் வெளிநாடுகளில் வேலை கிடைக்கிறது, நாங்கள் திறனைக் காட்டாவிட்டால் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து எங்களை வேலையில் வைத்திருக்குமா ? ஹர்சத்மேத்தா போன்றவர்கள் ரிசர்வேசனில் படித்தவர்கள் அல்ல என்றே நினைக்கிறேன்,

    விடுங்க, ரிசர்வேசன் குறித்து என்ன தான் விளக்கினாலும் விளங்கிக் கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு விளக்குவதாலும் பயனில்லை என்று தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. கண்ணன்,
      நான் சொல்வது இரண்டு விதயங்கள்.
      தினப்படி வாழ்க்கையில், வேலையைச் செய்வதற்கே லஞ்சம் தர வேண்டிருக்கிறது இந்தியாவில். இந்தப் போக்கு வந்தது 70 களுக்குப் பின்னால் துவங்கி, இரண்டு கழக அரசுகளிலும் வேகம் பெற்று, 2000'ங்களில் சக்கைப் போடு போடுகிறது;அரசு அலுவலகத் தொடர்பாக எந்த பொது நிர்வாக அமைப்புக்குப் போனாலும்,லஞ்சம் வாங்குவது அவர்கள் உரிமை என்பது போலத்தான் பேசுகிறார்கள்..இதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள்- அவர்களுக்கு மேல் இருக்கும் அதிகாரிகள், அந்த அதிகாரிகளுக்கும் மேல் அருக்கும் அமைச்சர்கள், அந்த அமைச்சர்களுக்கும் மேல் இருக்கும் முதல்வர்கள் வரை எல்லோரும் லஞ்சத்தில் மூழ்கித் திளைக்கிறார்கள் என்பதும்,அரசு அலுவலர்கள் அளவில் அவர்களுக்கு அவர்கள் செய்யும் வேலையைப் பற்றிய எதேச்சப் போக்கு மனநிலையும்தான்.
      இதை வேறு வார்த்தைகளில் விளக்குவதால், உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் கடுமையாக உழைத்து,உங்களை மேம்படுத்திக் கொண்டு, போட்டியிட்டுத்தான் ஒரு வேலையை வாங்க வேண்டும் என்ற நிலையில், அதை இழந்து விடக் கூடாது என்பதில் அக்கறையும் பயமும் இருக்கும்;ஆனால் உங்களுக்கு ஒதுக்கீட்டில் கிடைத்த வேலையில் உங்களது ஆர்வத்தை விட,உங்களுக்கு அலட்சியம்தான் மிகுதியாக இருக்கும். அந்த அலட்சியம் முதலில் திறன் குறைவிலும், இரண்டாவதாக தவறு செய்வதிலும் எந்த மனத்தடையையும் தராது.
      இதுதான் கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் அரசாங்கத்தில் நடந்தது.

      இரண்டாவது முக்கியமான காரணம்: அரசியல் பொறுப்புக்கு வருபவர்கள் கூட, திறமையினால் வராமல், ஒரு வித ஒதுக்கீட்டினால் வருகிறார்கள். லோக்கல் ரவுடியாய் இருந்தால் அவன் எளிதாக கட்சிக் காரனாகவோ வட்டச்செயலாளராகவோ எளிதாக வர முடிகிறது; அவர்கள் சாதி சார்ந்த அமைச்சர் இருந்தால் எம்எல்ஏ சீட்டும், லஞ்சம்,கட்டப் பஞ்சாயத்து போன்ற வழிகளில் பணம் சம்பாதித்து தலைமைக்குக் கப்பம் கட்ட முடியும் என்றால், அமைச்சர் பொறுப்பும் வழங்கப்படுகிறது.

      இதுவும் ஒரு வகையான ஒதுக்கீடுதான், திறமையை முதல் காரணியாக வைக்காத ஒதுக்கீடு.சிங்கப்பூரில் பிஏபி'க்கு ஆட்களைப் பொறுப்புக்கும், எம்பி ஆவதற்கும் தேர்தெடுப்பது எப்படி என்று கூகிளில் தேடுங்கள் அல்லது லீ க்வான் யூ வின் ஹார்ட் ட்ரூத் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்..தலைமையிலிருந்து கீழ்நிலை வரை திறனாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்பதில் சிங்கப்பூர் அரசாண்மைத் தத்துவம் உறுதியாக இருப்பதால்தான் லஞ்சம் பொது ஜனங்களின் வாழ்வில் பெருமளவு நுழையாமல் நீங்களும் நானும் சிங்கப்பூரில் நிம்மதியாக இருக்க முடிகிறது என்பது புரியும்.

      லோக்கல் பிஏபி கட்சிக் காரருக்கு, குடியேறி வந்து வேலை செய்பவர்கள் எல்லாம், மாதம் 100 வெள்ளியோ 200 வெள்ளியோ அவர்கள் வசூலுக்கு வந்தால் தர வேண்டும், இல்லையென்றால், உங்களால் வீட்டு வசதி வாரிய வீட்டில் நிம்மதியாக வாழ முடியாது,ரவுடி தொந்தரவு வரும் என்ற நிலையில் சிங்கப்பூர் வாழ்க்கை மாறுவதாக சிறிது கற்பனை செய்து பாருங்கள்..அப்போது உங்களுக்கு வித்தியாசம் புரியும்.

      ஒதுக்கீட்டினால் விளைந்த சிரழிவை, இந்தியாவிலும் வேலை செய்து, வெளிநாடுகளிலும் வாழ முடிந்த ஒருவரால்தான் எளிதாக சீர் தூக்கி அணுகமுடியும். நிச்சயம் உங்கள் அறிவு இவற்றை ஒத்துக் கொள்ளும்;ஆனால் உங்கள் உணர்ச்சி ஒத்துக் கொள்ளாது.

      முழுக்க முழுக்க இந்தியாவில் ஒதுக்கீட்டினால் பயன்பெற்று இந்தியாவிலேயே இன்னும் வேலை பார்த்துக் கொண்டு, மேற் சொன்ன எல்லாவற்றையும் செய்து அனுபவித்துக் கொண்டிருப்பவருக்கும் இதை ஒத்துக் கொண்டால் இழப்பு ஏற்படும் என்பதால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

      ஹர்ஷத் மேத்தா ஊழல் செய்யவில்லை; முறையற்ற வழியில் வங்கி வழங்கிய காரண்டிகளை அவர் பெற்று அந்தப் பணத்தை பங்குச் சந்தையில் பிரயோகித்தார்; அவருக்கு வங்கியின் காரண்டிகளைக் கொடுத்த வங்கி அதிகாரிகள் தான் ஊழ்ல் செய்தவர்கள். அவரது வழக்கு விவரங்களை இணையத்தில் தேடிப் பாருங்கள். மேலும் அவர் அரசு இயந்திரத்தின் சக்கரம் அல்ல !

      சமூக நிலையில் கீழ்த்தரத்தில் உள்ளவர்களுக்கு உதவி தேவை என்பதில் நான் உங்களை விட உறுதியாக இருக்கிறேன்;அவர்கள் கல்வியை அடையத் தேவையான உதவிகள்,சூழல் ஆகியவற்றில் அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
      ஆனால் அதற்கு இட ஒதுக்கீடு ஒரு தவறான தீர்வு என்பதிலும் நான் தீர்மானமாக இருக்கிறேன்.
      சிங்கை போன்ற நாடுகள் இட ஒதுக்கீடு இல்லாமலேயே இதற்கான தீர்வுகளை நடைமுறைப் படுத்துகின்றன.

      Delete
  12. //கோவி,

    இப்பொழுதும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், ஆனால் விண்ணப்பிக்க மாட்டார்கள். //

    வவ்ஸ்,

    துப்புறவு பணிக்கு ஊதியம் மாதம் ஒருலட்சம் என்ற அடைப்படையில் ஊதியம் வழங்கப்பட்டால் ஏன் வரமாட்டார்கள் ? :)

    நான் ஏற்கனவே பதிவில் எழுதியது "மதுவிலக்கு நடப்பில் இருக்கும் வரை சாராயம் விற்பது கேவலம், அரசே எடுத்து நடத்துப் போது அது ஒரு அரசுப் பணி" - இந்த வேலைக்கு விண்ணப்பிக்காத சாதி இருக்கிறதா என்று தெரியவில்லை. குறிப்பிட்ட சாதியினர் கூச்சமின்றி செய்யும் தொழில் தான் சாராயம் விற்பது, ஆனால் தற்பொழுது சாதியைக் கடந்த தொழில் ஆகிவிட்டது, ஒரு தொழில் இழிவோ, நழிவா என்பதெல்லாம் அதற்குக் கிடைக்கும் ஊதியத்தைப் பொறுத்ததே, இங்கெல்லாம் சூதாட்ட விடுதிகள் கொடிகட்டிப் பறக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. || துப்புறவு பணிக்கு ஊதியம் மாதம் ஒருலட்சம் என்ற அடைப்படையில் ஊதியம் வழங்கப்பட்டால் ஏன் வரமாட்டார்கள் ? :) ||

      ஒரு லட்சம் இல்லை; நியாயமான சம்பளம் கிடைத்தாலே வேறு பலரும் வருவார்கள்.
      எங்கள் ஊரில் நகராட்சிப் பணிக்கு, குறவர்கள் என்று அறியப் படும் சமூகத்தினர் மட்டுமே முதலில் இருந்தார்கள். கடந்த 20 வருடங்களில் நாயக்கர்,கட்டுமானம் பணி செய்யும் சமூகத்தினர் என்று பலர் துப்புரவுப் பணிக்கு வந்து விட்டார்கள்.

      ஒரு நாளைக்கு காலை அதிக பட்சம் 5 மணி நேர வேலை, 7500 ரூபாய் பேசிக் என்ற நிலையிலேயே மற்றவர்கள் அந்த வேலைக்கு வரும் நிலைதான் இருக்கிறது..இதற்காக ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதில்லை.

      இன்னும் துப்புறவு வேலை பார்க்கும் சூழல் மேம்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை;ஆனால் இப்போதும் அந்த வேலைகள் சிலர் மீது சுமந்தப் படுகிறது என்ற ரீதியிலான உங்களது கூற்று பிழையானது.

      Delete
    2. கோவி,

      ஒரு லட்சம் என்றால் இப்போ வேலை செய்யும் சமூகத்திற்கே வேலை கிடைக்காது, நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத கற்பனை , இப்போது நடைமுறையில் பணி நிரந்தரம் கூட செய்ய மாட்டேன் என அபாயகரமாக துப்புரவு பணி செய்ய வைக்கப்படுவதையே எந்த கழகமும் மாற்றவில்லை.

      //இப்போதும் அந்த வேலைகள் சிலர் மீது சுமந்தப் படுகிறது என்ற ரீதியிலான உங்களது கூற்று பிழையானது.//

      நீங்கள் பிழையானது சொல்லிட்டால் பிழை மாறிடுமா? உங்கள் ஊரினை வைத்து பார்க்காதீர்கள்,பொதுவாக என்ன நடக்கிறது எனப்பாருங்கள்.


      இன்றும் கிராமங்களில் தனித்தெரு,பகுதி, சுடுகாடு, சில இடங்களில் இரட்டைக்குவளை, இன்ன பிற அடக்குமுறைகள் இருக்கவே செய்கின்றது.

      இதே வலைப்பகுதியில் ஒருவர் எழுதினார், சாவுக்கு மேளம் அடிக்க கட்டாயப்படுத்தப்பட்டதை, அவர் அடிக்கவில்லை எனில் வயதான அவரது தந்தை செய்ய கட்டாயப்படுத்தப்படுவார் என்பதால் அவர் படித்திருந்தாலும் செய்வதாக.

      கோவி அவ்வலைப்பதிவை படித்திருப்பார் என நினைக்கிறேன். எனவே கட்டாயப்படுத்தும் சூழல் இன்றும் நிலவுகிறது, அல்லது வேலை இல்லாத கொடுமையால் அவ்வாறு செய்கிறார்கள்.

      Delete
    3. || நீங்கள் பிழையானது சொல்லிட்டால் பிழை மாறிடுமா? உங்கள் ஊரினை வைத்து பார்க்காதீர்கள்,பொதுவாக என்ன நடக்கிறது எனப்பாருங்கள்.


      இன்றும் கிராமங்களில் தனித்தெரு,பகுதி, சுடுகாடு, சில இடங்களில் இரட்டைக்குவளை, இன்ன பிற அடக்குமுறைகள் இருக்கவே செய்கின்றது.||

      வவ்ஸ், நான் ஒன்றும் இன்றைய தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் அனைத்து நிலவரங்களையும் அறிந்தவன் அல்லன்; ஆனால் பொதுவாக எனக்கு எதையும் கவனிக்கும், விசாரிக்கும் பார்வை உண்டு; சென்ற இடங்களிலெல்லால் சாமானிய மக்களுடன் அளவளாவுவதும் உண்டு.பெரும்பாலும் தவறாது செய்தித்தாள் படிக்கிறேன்.

      அங்கொன்றும் இங்கொன்றுமாக அடக்குமுறை பற்றிய செய்திகள் வருகிறது;பொதுக் கணிப்பு என்ன என்பதில் எனது பார்வை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலேயே பதிலிறுத்தேன்..

      தகவல் பரிமாற்றம் பெரிதும் வளர்ந்திருக்கும் இக்காலத்தில் அந்த அளவு அடக்குமுறை சாத்தியமற்றது என்பதும் எனது புரிதல்...தவறாக இருக்கலாம் எனில் அச் செய்தியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


      || இதே வலைப்பகுதியில் ஒருவர் எழுதினார், சாவுக்கு மேளம் அடிக்க கட்டாயப்படுத்தப்பட்டதை, அவர் அடிக்கவில்லை எனில் வயதான அவரது தந்தை செய்ய கட்டாயப்படுத்தப்படுவார் என்பதால் அவர் படித்திருந்தாலும் செய்வதாக.||
      கண்டிக்கப்பட வேண்டியதும் தடுக்கப் பட வேண்டியதுமானது..உண்மையாயிருக்கும் பட்சத்தில்.

      Delete
  13. //நழிவா //
    நலிவோ - என்றிருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை..உணர்வு வேகத்தில் அடிக்கும் போது எனக்கும் சில முறை தட்டச்சுப் பிழைகள் வருவதுண்டு..

      :))

      Delete
  14. Replies
    1. நன்றி மின்பதிவுத் திரட்டி'யாளர்களே..இணைக்க முயற்சிக்கிறேன்..

      Delete