Pages - Menu

Monday, July 2, 2012

145.அமெரிக்கா உடைத்தால் மண்குடம்;மற்றவர் உடைத்தால் பொன்குடம் !


போபாலில் நடந்த விஷ வாயுக் கசிவும் அதைத் தொடர்ந்த தலைமுறைகளைப் பாதிக்கும் சோக விளைவுகளும் நாம் அனைவரும் அறிந்தது.

அந்த விபத்து நடந்த போது முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் போபால் மக்களுக்கு என்ன நடந்தது,அவர்களுக்கான உடனடி உதவிகள் என்ன என்று பார்ப்பதை விட,யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சிஇஓ'வான அமெரிக்கர் வாரன் ஆண்டர்டனை தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்புவதில்தான் குறியாக இருந்தார்.

போபால் மக்கள் அடைந்த பாதிப்புகளுக்கும்,இரண்டு தலைமுறைகள் தாண்டியும் அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதும் நிலத்தடி நீர் விஷநீராக மாறி அதனால் வரும் நோய்த் தொற்றுகளும் கணக்கற்றவை.


இந்தியாவில் போபால் விபத்து நடந்த போது விஷவாயு வெடித்த நாளில் மட்டும் இறந்தவர்கள் 2259, இரண்டு மூன்று வாரங்களில் 3787 பேர் இறந்தார்கள். காயமடைந்தவர்கள் 5,58,127. அந்த பாதிப்பினால் பின்னர் இறந்தவர்கள் எண்ணிக்கை 8000 பேர்.இது தவிர ஊனம் மற்றும் மற்ற உபாதைகள் 38,478 பேரைப் பாதித்தன.

நொடியில் மறித்த குழந்தைகள் !

கால்நடைகள் கொத்துக் கொத்தாக இறந்தன !!

வரிசை வரிசையாக !! 
எண்ணற்ற குழந்தைகளின் பிணங்கள் எண்களால் மட்டுமே அறியப் பட்டன !
எண்களே அடையாளம் !
வீட்டுக்கொருவர் அல்லது இருவர் இறந்திருந்தார்கள் !! 

வீட்டிற்கொரு பிணம் !
















பிணங்கள் வரிசை வரிசையாக விழுந்து கொண்டிருந்தன !!!
தொடர்ந்த மரணங்கள் !












பிபிசி நிறுவனம் தொழிற்சாலைகள் சார்ந்த விபத்ததுகளில் உலக அளவில் மிக அதிகமான
உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்படுத்திய விபத்துகளில் ஒன்றாக இதை வகைப் படுத்தியது.




இந்த விபத்திற்கு அதிகபட்சமாக எடுக்கப் பட்ட சட்ட நடவடிக்கை என்ன தெரியுமா? யூனியன் கார்பைடு(டவ் கெமிக்கல்ஸ் என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இது இயங்கியது;தோண்டினால் இதில் எவனாவது காங்கிரஸ் அரசியல் வியாதி-சொற்பிழை அல்ல- முக்கியப் பங்குதாரராக இருக்கக் கூடும்) இந்தியாவின் 7 அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு ஒரு லட்சரூபாய்...ஆம் ஜஸ்ட் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மத்தியப் பிரதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது !
அர்ஜூன் சிங்கும் ராசீவும் வழியனுப்பி வைத்த ஆண்டர்சன் !
அதுவே சட்டத்தின் படி அதிக பட்ச அபராதத் தொகை என்று சொன்னது நீதி மன்றம் !!

சிலருக்கு ஆயுள் தண்டனை அளித்தது;அவ்வாறு தண்டனை விதிக்கப் பட்டவர்கள் தீர்ப்பு வருமுன்னேயே இயல்பாக வாழ்ந்து இறந்து போனார்கள் !!!

அவ்வளவுதான் அரசு செய்து கிழித்தது.


இந்நிலையில் அரசு முன்னின்று எதுவும் கிழிக்காத நிலையில் தனிநபர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் மன்ஹாட்டன் மாநிலத்தில் யூனியன் கார்பைடின் மீது வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கில் வந்திருக்கும் தீர்ப்பு அலாதியான அமெரிக்கத் தீர்ப்பு.போபால் விபத்தின் பின்னால் நடந்த உயிரிழப்பு,சுற்றுச்சூழல் மாசு,நிலத்தடி நீர் மாசு போன்ற எவற்றிற்கும் யூனியன் கார்பைடு நிறுவனம் பொறுப்பல்ல.மத்தியப் பிரதேச மாநில அரசுதான் அவற்றிற்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்க வேண்டும்'என்ற அதி அற்புதமான தீர்ப்பை வழக்கி,வாரன் ஆண்டர்சனோ,யூனியன் கார்பைடு நிறுவனமோ சல்லிக் காசு தரும் அளவுக்குக் கூடக் குற்றமற்றவை என்று சொல்லி விட்டார்கள்.

இது தொடர்பாக இன்றைய தினமணியின் தலையங்கத்தின் ஒரு பகுதி ... முழுத் தலையங்கம் இங்கே இருக்கிறது.

டைம்ஸ் இந்தியாவிலும் இது பற்றிய செய்தி வந்திருக்கிறது. ஒரு முறை இந்தச் செய்திகளைத் தேடிப் படித்து விடுங்கள்;பொறுமையற்றவர்கள் பின்வரும் சில பத்திகளையாவது படிக்கலாம் !

போபால் விஷவாயு விபத்தில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் வாரன் ஆண்டர்சன் அந்த சம்பவத்துக்குப் பொறுப்பல்ல என்று அமெரிக்காவின் மேன்ஹாட்டன் மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, போபால் மக்களுக்காக இழப்பீடு பெற்றுத்தரப் போராடும் அமைப்புகளுக்குப் பெரும் அதிர்ச்சி என்பதோடு, அன்னிய நேரடி முதலீடுகளில் இனிமேலாவது இந்திய அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளது.
 யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் விட்டுச்சென்ற சயனைடு கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து கடந்த இரு தலைமுறைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்று பாதிக்கப்பட்டோர் சார்பில் ஜானகிபாய் சாஷூ என்பவரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனுவை இரண்டுமுறை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மூன்றாவது மனுவை ஏற்று விசாரித்த நீதிபதி ஜான் கீனன் அளித்துள்ள தீர்ப்பு, இனிமேல் இந்த வழக்கில் எந்தவிதமான இழப்பீட்டையும், நியாயத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் எதிர்பார்க்க முடியாது என்பதைத் தெளிவாக்குகின்றது.

 ""....யூனியன் கார்பைடு வேறு, யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் வேறு. இந்தியாவில் பல ஆயிரம் பேர்களது மரணத்துக்குக் காரணமான போபால் விஷவாயு விபத்துக்கு யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்தான் பொறுப்பு. யூனியன் கார்பைடு நிறுவனமோ அல்லது அதற்கு அன்றைய தேதியில் தலைவராகப் பொறுப்பு வகித்த வாரன் ஆண்டர்சனோ பொறுப்பல்ல'' என்கிறது மேன்ஹாட்டன் மாகாண நீதிமன்றத் தீர்ப்பு.
 யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் எடுத்த முடிவுகள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு எடுத்த முடிவுகள்தான் என்று வழக்குத் தொடுத்தவர்கள் வாதிட்டதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

பரிசோதிக்கப்படாத புதிய தொழில்நுட்பத்தை போபால் ஆலையில் புகுத்திய வாரன் ஆண்டர்சன், கடும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுவிழக்கச் செய்ததுதான் விபத்துக்கு அடிப்படைக் காரணம் என்று கூறியதையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

 ""...யூனியன் கார்பைடு நிறுவனம், போபாலில் இருந்த யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்டின் தாய் நிறுவனம் என்பது உண்மையே. ஆனால், இந்திய நிறுவனத்தின் ஒவ்வொரு முடிவுகளிலும் யூனியன் கார்பைடு தலையிட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இந்தத் தொழிற்சாலையை நிறுவுவதற்கான இடத்தைத் தேர்வு செய்தவர் ஆண்டர்சன் அல்ல. மத்தியப் பிரதேச மாநில அரசுதான் இடத்தை வழங்கியது. விபத்துக்குப் பின்னர் மூடப்பட்டுவிட்ட ஆலையில் ஏற்பட்ட நச்சு மாசினை அகற்ற வேண்டிய வேலையும் மாநில அரசையே சாரும்..'' என்கிறது தீர்ப்பு.
 ""யூனியன் கார்பைடு நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அமெரிக்காவில் இருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலையீடு இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லையா? அல்லது அதற்கான ஆவணங்களையும் தகவல் பரிமாற்றங்களையும் இல்லாமல் செய்துவிட்டார்களா? இந்த வழக்கில் இதற்கான ஆவணங்களைக் கைப்பற்ற இந்திய அரசு தவறியது ஏன்?'' - 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

இப்போது ஒரு ஃப்ளாஷ் பேக்.


2010'ம் ஆண்டு அமெரிக்கக் கடற்கரையோரமான கல்ஃப் ஆப் மெக்சிகோ பகுதியில் இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் நிறுவனக் கிணறு ஒன்றில் நடந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் பதினொரு பேர் இறந்ததோடு 17 பேர் காயமடைந்தார்கள்.அதோடு எண்ணெய்கிணற்றிலிருந்து வெடிப்பினால் வெறியேறிய எண்ணெய் சுமார் 4200 சதுரமைல்களுக்கு கடல்நீரில் பரவியது.


இந்த விபத்தினால் கடல் உயிரினங்கள் மற்றும் கடல்நீர் மாசு ஏற்பட்டது.மனித இழப்பு என்று பார்த்தால் பதினொரு பேர் மற்றும் காயமடைந்தவர்கள் 18 பேர்,அவ்வளவுதான்.அவர்களும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஊழியர்கள் ! அவர்களுக்கு நிறுவனத்தில் இருந்து நிச்சயம் தனியான இழப்பீடு வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் அப்பகுதி கடல் வாழ் உயிரினங்களில் பல பாதிப்புகள் இருப்பதாகக் கூவினார்கள்.அமெரிக்க நிர்வாகமும் ஒபாமாவும் சேர்ந்து கூவினர்.மீன்களும் திமிங்கிலங்களும் பரிதவிப்பதாகவும் கடல்நீர் எண்ணெய் கலந்து அமெரிக்காவே பாதிக்கப் பட்ட ரேஞ்சில் நாசா விண்கலங்கள் எடுத்த படங்களைப் போட்டு அதகளம் செய்தது அமெரிக்கா.



பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் அமெரிக்க செனட்டுக்கு வந்து மன்னிப்புக் கேட்க வைக்க வற்புறுத்தப் பட்டு மன்னிப்புக் கேட்டார்,

அதோடு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகுப்புநிதி உருவாக்கப்பட்டு அதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் பணம் கொடுத்தது. அந்த விபத்தின் காரணமாகப் கடற்கரையோரம் வசிப்பவர்கள் அல்லது கடல் சார்ந்த தொழில் முகவர்கள்,தங்களது தொழிலுக்கோ அல்லது உடமைகளுக்கோ அந்த எண்ணெய்க் கசிவின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கருதினால் அந்த நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போது 2012.

போபால் விஷ வாயு விபத்திற்கு அரசு முனைந்து நின்று அமெரிக்க நிறுவனங்கள்,அமைப்புகள்,நீதிமன்றங்களில் முறையீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் இழப்பீடு பெற வேண்டும் என்பது போக, ஒன்றும் நடக்காத விரக்தியில் தனிப்பட்டவர்கள் முயற்சித்து எடுத்த வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றம், போடா போக்கத்த பயல்களா.. என்று சொல்லி ஊற்றி மூடி விட்டது.

போபால் விஷ வாயு விபத்து வரலாற்றில் ஒரு வழியாக கல்லறைக்கு அனுப்பப் பட்டு விட்டது.


எனக்கு எழும் சில கேள்விகள் :

1.அமெரிக்கக் கடற்கரையோரத்தில் நடந்த விபத்தில் 30 பேருக்குள் காயமும் உயிரிழப்பும் நேர்ந்து ஒரு விபத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா குய்யோ முறையோ என்று கத்தி, பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் தலைவரை அமெரிக்காவிற்கு வரவழைத்து மன்னிப்பு வாங்க முடிகிறது. மீன்களும் திமிங்கிலங்களும் தவளைகளும் கடலில் இருந்து எழுந்து வந்து நஷ்ட ஈடு கேட்கும் என்று பிலாக்கணம் படித்து 20 பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வாங்க முடிகிறது. ஆனால் லட்சக் கணக்கில் மக்கள் மடிந்த ஒரு விபத்து நடந்ததற்கு ஒரு மயிரும் தர மாட்டோம் என்று அதே அமெரிக்கா சொல்கிறது.காங்கிரஸ் கட்சியின் சொம்பு நக்கிகள் அமெரிக்க அதிகாரிகளின் கால்களில் விழுந்து கிடக்கிறார்கள் !
லட்சக் கணக்கில் மடிந்த மக்களின் உயிரிழப்பு ஒரு பொருட்டே அல்ல. என்ன விதமான தலைவர்களை நாம் பெற்றிருக்கிறோம்????

2. அமெரிக்கக் கடற்கரையில் வாழும் மீன்களை விட இந்தியாவில் வாழும் எண்ணற்ற உழைக்கும் மக்கள் பொருட்டற்றவர்களாகப் போனார்களா?

3.நமது தலைவர்கள் இந்தியாவின் குடிமக்களா அல்லது இன்னும் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கக் குடிமக்களாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. இன்னும் நாம் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கக் காலனி நாடுகளில் ஒன்றாக அவர்களது வைஸ்ராய்களால் ஆளப்படும் மக்களாக இருக்கிறோமா?

4.சாதாரண மனிதனான எனக்கே இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒப்பு நோக்க, எரிச்சலும் கோபமும் மண்டுகிறதே. நமது ஆட்சியாளர்கள் இவற்றைப் பற்றிக் கிஞ்சித்தும் யோசிப்பார்களா மாட்டார்களா?

நாம் சுதந்திர நாட்டின் பிரஜைகளா ? அல்லது இன்னும் மேற்குலத்தின் அடிமை நாடுகளில் ஒன்றா??

நன்றி- தினமணி,சுலேகா,டுடே இதழ் 

10 comments:

  1. அமெரிக்கா, அரசியல்வாதிகள் அனைவருக்கும் தமக்கு ஒன்று என்றால் மட்டும்தான் கொதிப்பார்கள். அப்பாவிகளை வதைப்பார்கள். எல்லாம் நம்ம தலையெழுத்து சார். இவங்களையெல்லாம் நிக்க வைச்சு சுடனும்

    ReplyDelete
    Replies
    1. || இவங்களையெல்லாம் நிக்க வைச்சு சுடனும் ||

      அவர்களையல்ல கோபிநாத்,நமது அரசியல் வாதிகளைத்தான் நிற்க வைத்துச் சுட வேண்டும்...ஆனால் நீங்களோ நானோ அவர்கள் வாகனத்தில் பறந்து செல்லும் சாலையின் ஓரத்தில் நின்று கூவக் கூட முடியாது..

      என்று இந்தியாவில் அரசியல்வாதிகளும் ஆள்பவர்களும் மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்ற நிலை வருமாறு மக்கள் நடந்து கொள்கிறார்களோ அன்றுதான் நமக்குச் சுரணை வருகிறது என்று பொருள்.

      நாம் 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் கூட்டமாக இருக்கும் வரை இப்படி அனாதைகள் மாதிரி செத்து மடிந்தாலும் கேட்பார் இருக்க மாட்டார்கள்.

      :((

      Delete
  2. இதைத் தட்டிக் கேட்பதற்கு நம் அரசியல் வாதிகளுக்கு எங்கே நேரம் இருக்கிறது.? எத்தனை உயிர்கள் எத்தனை இழப்புகள் மனம் கலங்குகிறது.தலைப்பு மிகப் பொருத்தமானது.பல தகவல்களை உரைக்கிற மாதிர சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு முரளிதரன்.

      அரசியல்வாதிகளுக்கு அதற்கு நேரம் இருக்க வேண்டும்;அப்படி அவர்களை நினைக்கும் வண்ணம் வைத்திருக்க வேண்டியது நமது பணி.

      படித்துவிட்டுப் பேசியதற்கும் நன்றி.

      Delete
  3. Replies
    1. நன்றி திரு தனபாலன். முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

      ஆதரவிற்கும் தொடர்வதற்கும் நன்றி.

      Delete
  4. Replies
    1. பாராட்டுக்கு நன்றி செல்வேந்திரன்.

      Delete
  5. இந்தக் கட்டுரைக்கான உங்கள் உழைப்பு மகத்தானது. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆர்விஎஸ்...
      இப்படி ஆஜர் மட்டும் போடுவதற்காகவா, உங்களை டபாய்த்து அழைத்தது?!

      :)

      Delete