நீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் அந்த நிகழ்ச்சி துவக்கப் பட்ட போது வெளியான தொடர் விளம்பரங்கள்;குறிப்பாக கௌசல்யா சுப்ரஜா ஏகாம்பரம்!
சிங்கப்பூரில் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளி வெளி வழியாக-லைவ் டெலிகாஸ்ட்- வருவதில்லை;இந்தியாவில் நடந்து ஓரிரு வாரங்கள் கழித்துத்தான் வருகிறது என்பது எனது அவதானம்.தொடங்கப்பட்ட போது நிகழ்ச்சி அவ்வளவு நன்றாக இல்லையெனினும் போகப்போக சூர்யா கொஞ்சம் தேறி ஓரளவு நன்றாகவே நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார்.இப்போது பருவத்தின் இறுதிப் பகுதி என்று சொல்லி நாம் அமைப்புக்கு உதவி செய்யும் செய்கையோடு நிகழ்ச்சி நிறுத்தப் பட்டிருக்கிறது.
இது ஒரு தற்காலிக நிறுத்தம் என்றும், சிறிது காலம் கழித்து வேறொரு நடிகர் மூலம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதும் என்னுடைய இப்போதைய அனுமானம். பெரும்பாலும் என்னுடைய அனுமானங்கள் சரியாக இருப்பதைப் பிற்காலத்தில் நானே உணர்ந்திருக்கிறேன்;இப்போதும் அந்த விருப்பம் இருக்கிறது.
ஏன், சூர்யா நன்றாகத்தானே நடத்தினார்,இளம் பெண்கள் வாயின் இருபுறமும் ஊற்றும் ஜொள்ளு தெரியாத அளவிற்குக் கூட நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்களே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்....சிறிது அலசலாம்.
ஊற்றும் ஜொள்ளு... |
தமிழக ஊடக சூழலில் இந்த நிகழ்ச்சியை இன்றைய நிலையில், வேறு எந்த நடிகர் நடத்தியிருந்தாலும் இந்த அளவுக்குக் கூட வரவேற்பு இருந்திருக்காது என்பது நிச்சயம்.
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பொங்கி வந்து ஏன் இருக்காது, தல நடத்தியிருந்தால் பட்டை கிளப்பியிருப்பார்,தளபதி நடத்தியிருந்தால் சரவெடி என்றெல்லாம் உதார் விட்டாலும், இன்றைய நடிகர்களில் தமிழை ஓரளவு சரியாக,அழகாக இல்லாவிட்டாலும் அபத்தமாக இல்லாத அளவில் உச்சரிக்கும், பேசும் இயல்புடைய நடிகர்கள் தமிழக ஊடக சூழலில் கமலகாசன்,பிரகாஷ்ராஜ்,சூர்யா,ஜீவா ஆகிய நால்வர் மட்டுமே முதல் வரிசையில் வருகிறார்கள்.
கமலகாசன் அவருக்கே வெளிச்சமான காரணங்களுக்காக விளம்பரப் படங்களில் கூட நடிப்பவர் அல்ல, எனவே அவர் தொலைக்காட்சி தொடரை நடத்துவதெல்லாம் வாய்ப்பில்லாத ஒன்று. பிரகாஷ்ராஜ் நன்றாகவே செய்வார் என்றுதான் தோன்றுகிறது,ஆனால் இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான நட்சத்திர மதிப்பு அவருக்கு இல்லை என்று தொகா கருதியிருக்கக் கூடும்.இதே காரணத்திற்காகவே ஜீவாவும் புறந்தள்ளப்பட்டு சூர்யா தெரிவு செய்யப்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம்.
ஏன் நடிகர்கள்தான் நடத்த வேண்டுமா,மற்ற புகழ் பெற்ற நபர்கள், பொதுச் சேவையில் இருப்பவர்கள் இல்லையா என்று கேட்டால்,நீங்கள் தமிழக சூழலில் வாழத் தகுதியற்றவர்கள்! இன்றைய தமிழகத்தில் நடிகர்கள் கு**வினால்தான் பொழுது விடியும் என்ற அளவில்தான் மாண்புமிக பொது சனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஊடகங்கள் இணைந்து தமிழகத்தின் மேல் திணித்திருக்கும் ஒரு மாயை.தகுதியில் இருந்து தலைவன் வரை அனைத்தும் திரைப்பட நடிகர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்று நோக்கில் ஊடகங்களின் செயல்பாடு இருக்கிறது.
எனவே இவற்றைத் தவிர்த்து விட்டு மெயின் மேட்டருக்கு வருவோம்.
டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தரவரிசைப் படியும் இந்த நிகழ்ச்சி முதல் நிலையில் இருந்ததாக செய்திகள் தெரிவிகின்றன.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியை ஏன் திடீரென்று நிறுத்துவானேன் என்பது கேள்வி..
எனக்குத் தோன்றும் பதில்கள்:
1. விஜய் தொலைக்காட்சிக்கு எதிர்பார்த்த டப்பு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்காது.டிஆர்பி எகிறினாலும் விளம்பரங்கள் எந்த அளவிற்கு வந்தன என்பது ஒரு புறமிருக்க நிகர லாபம் எவ்வளவு என்பது கணக்கீட்டுக்குரிய ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு மொத்த சம்பளமாக சூர்யாவிற்கு 20 கோடிகள் தருவதாகப் பேசியிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. பரிசுத் தொகை வழங்கிய பணம்,சூர்யாவின் சம்பளம், தயாரிப்பு செலவுகள் போக, விளம்பர வருமானம் மட்டுமே தொலைக்காட்சியின் நிகர வருமானமாக இருக்கும். குறைந்தது 100 சதவிகித மார்ஜின் ஆஃப் சேப்ஃடி இல்லாத ஒரு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகள் வழங்குவது அரிது என்று ஊடக வட்டாரங்களில் சொல்கிறார்கள்.(மார்ஜின் ஆஃப் சேஃப்டி என்றால் என்ன என்பவர்கள் இளங்கலை வணிகவியல் புத்தகங்களை நாடலாம்!)
2. இந்த 100 சதவிகிதப் பணமும்,சூர்யா நிகழ்ச்சியை நடத்திய விதத்தால் பயங்கரமாக அடி வாங்கியது. முடிவதற்கு மூன்று வாரங்கள் முன்னால் வரை,தவறான பதில் சொன்ன ஒருவரை சூர்யா, 'தேவைப்பட்டால் லைஃப் லைன் இருக்கு சார்' என்று சொல்லாமல் இருந்ததில்லை;அதே நேரம் சரியான பதிலைச் சொல்லிவிட்டால் சட்டென்று அவர் அந்த பதிலை உறுதி செய்து விடுவார்.(அவரது இந்த குணவிலாசம் பற்றிக் கடைசியாக விரிவாகப் பார்க்கலாம்!). இதனால் தொகா நிறுவனத்திற்கு வர வேண்டிய வருமானம் அடிவாங்கியிருக்கக் கூடும்.அதை வெளியில் அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்;ஆனால் சூர்யாவிடம் இது பற்றி நிச்சயம் பேசியிருப்பார்கள். இதன் விளைவு கடைசி மூன்று வாரங்களில் நன்கு தெரிந்தது. அந்த நேரங்களில்தான் சரியாக விடை சொன்ன மனிதர்களையும் சூர்யா குழப்ப முற்பட்டார்.
ஆனால் அமிதாப் இதை தவறாமல் எல்லோருக்கும் செய்தார் என்பதையும் சேர்த்துப் பாருங்கள்,ஏன் கேபிசி அவ்வளவு நாட்கள் ஓடியது என்றும் ஏன் நீவெஒகோ சட்டென்று நிறுத்தப் பட்டது என்றதற்குமான காரணம் புரியும்.
3. முர்டோக் போன்ற விற்பன்ன தொழில் முதலைகள், அவர்கள் வைத்திருக்கும் இலக்கில் லாபம் தராத எந்த ஒரு தொழிலையும் அல்லது தொழிலின் ஒரு கூறையும் தொடர மாட்டார்கள்.அவர்களுக்கு தொழிலில் லட்சியம்,தொலைநோக்கு,நேர்மை,கடமை என்பதெல்லாம் தனித்தனி வார்த்தைகளல்ல;அனைத்திற்கும் ஒரே பொருள்தான்-இலக்கு வைத்திருக்கும் அளவுக்குப் பணம்.
காட்டாக ரிலையன்ஸ் குழுமம் கூட்டு சதவிகித்ததில்-காம்பவுண்டிங் ரேட் பெர் ஆனம்- 35 சதவிகிதத்திற்குக் குறைவாக லாபம் தரும் எந்த ஒரு தொழிலையும் நடத்துவதில்லை என்பதை விதியாக வைத்திருக்கிறது.அப்பேர்ப்பட்ட ரிலையன்ஸ் குழுமம் கூட ஒன்லி விமல் என்ற, டெக்ஸ்டைல் பிரிவை,அது 15 சதவிகித லாபம் மட்டுமே தந்த போதிலும், சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.அதை 2012 ல் தூக்கிக் கடாசி விட்டார்கள்.ஒன்லி விமல் டெக்ஸ்டைல் பிரிவுத் தொழில் மட்டும் விற்கப் படப் போகிறது !
20 ஆண்டுகளுக்கும் மேலாக அதை முகேஷ் அம்பானி விடாது தொடர்ந்ததற்கு ஒரே காரணம்,அவரது தந்தை முதன்முதலில் பெரிதாக நிறுவிய தொழில் குழுமப் பிரிவு ஒன்லி விமல் என்பதால்.
ஒன்லி விமல் பிரிவு பிரசித்தமடைந்து கொண்டிருந்த நேரத்தில் அனில் அம்பானி நாடு முழுவதும் வியாபாரிகளைச் சந்திப்பதற்காகப் பயணப் பட்டார். அந்த நேரத்தில் அவரை மதுரையில் சந்தித்துப் பேசிய சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போது அவரை விட சில வருடங்கள் மட்டும் சிறியவனான(இப்போதும் தான் :) ) ஒரு மொட்டு விட்டுக் கொண்டிருந்த சிஏ வாக அவரைச் சந்தித்தேன். அவர்களது மூச்சும் பேச்சும் பிசினஸ் மயமாக இருப்பதை எளிதாக உணர வைத்தது அந்த சந்திப்பு.
அப்பேர்ப்பட்ட குஜராத்திகளுக்குக் கூட பிசினஸ் செண்டிமெண்ட் இருக்கிறது;தந்தையின் முதல் தொழில் என்பதால் இவ்வளவு காலம் அதை இழுத்து ஓட்டிய முகேஷ் போன்றவர் இல்லை முர்டோக். ஸ்டார் குழுமத்தில் ஒத்துவராத தொழில் அல்லது பிரிவை பட்டென்று வெட்டுவார்கள். இங்கிலாந்தில் முர்டோக் வைத்திருந்த ஒரு செய்தித்தாளுக்கு இது சமீபத்தில்(உண்மையிலேயே சமீபத்தில்!) நடந்தது.
அதேதான் நீவெஒகோ'க்கு இப்போது நடந்திருக்கிறது; ஆனால் திரும்பவும் துவக்குவார்கள்,வேறொரு நடிகரை வைத்து !
4. பின் ஏன் சூர்யாவை வைத்து துவக்கினார்கள் ? மேற்சொன்ன விதயங்களை முன்னரே யோசிக்காத அளவிற்கு விதொகா குழுமம் முட்டாள்தனமான மேலாண்மையைக்-மேனேஜ்மெண்ட்- கொண்டிருக்கிறதா?
நிச்சயமாக இல்லை !
இன்றைய நிலையில் ரஜினி அல்லது கமல் இந்த நிகழ்ச்சியைத் துவக்கியிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய முகவிலாசம் இந்த நிகழ்ச்சிக்கு சூர்யாவால் கிடைத்தது.இளையவர்கள்,முதியவர்கள்,இளம் பெண்கள்,குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமானவர்களையும் சூர்யா கவர்ந்திருக்கும் நிலையில்,சூர்யாவின் அந்த விளம்பரப் புகழ் பிம்பம், இந்த நிகழ்ச்சிக்கான சூப்பர் அடித்தளமாக அமைந்தது.
இந்த விளம்பர அனுகூலத்திற்கான அறுவடையை அடையாமல் தொகா இந்த நிகழ்ச்சியை விட்டு விடாது !
5.மேலே கண்டபடி சூர்யா அநியாயத்திற்கு நல்லவராக இருந்ததால் எளிய மனிதர்களை சந்தித்த போது அவர்களுக்காக உண்மையில் வருந்தி,உருகினார்;அவர்கள் இயன்ற அளவு வெற்றி பெற தன்னால் இயன்ற வரை அவர் உதவியதாகவே பட்டது.
இப்படியை நீடித்தால் கல்லா போண்டியாகி விடும் என்று தொகா'க்கு தெரிந்து விட்ட கணம் வந்தபோது, நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள் !
தொகா.யின் பார்வையில் மேலே கண்டவை நடந்திருந்தாலும் பொதுவான பார்வையில் இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்து என்ன?
சூர்யா என்னும் நடிகர் ஏற்கனவே நடிகராகப் புகழின் உச்சிக்கு சில அடிகள் தூரத்தில்தான் இருந்தார்; இந்த நிகழ்ச்சியில் அவரது நடத்தை,பங்களிப்பு,சாதாரண மக்களின் மீதான அவரது பார்வை ஒரு தமிழ்த் திரையுலகின் நடிகனது பார்வையாக இல்லாது,மனிதனின் பார்வையாக இருந்தது. திரையுலகின் வேறு எந்த ஒரு நடிகரும் இவரளவிற்கு மானுடத் தன்மையுடன் இருக்க முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நிதர்சனமாகத் தெரிந்தது.
ஒரு சாதாரண மனிதனாக அவர் எளிய மனிதர்களுடன் தன்னை எளிதில் இணைத்துக் கொள்ள முடிந்தது;அவர்களின் துக்கங்களும் துயரங்களும் அவரது கண்ணில் நீர் வர வைத்தன;அவரது திரையுலக நட்சத்திர அந்தஸ்து மற்றும் திகட்டும் அளவிற்கான பணம் ஒரு மனிதனாக அவரது மனத்தையும்,இயல்பான இரக்க மனத்தையும் மாற்றிவிடவில்லை என்பதை இந்த நிகழ்ச்சி தெற்றென எடுத்துக்காட்டியது. எல்லோரும் பார்க்கிறார்கள் என்ற காரணத்திற்காக ஒரு மனிதர் எப்போதும் நடித்துக் கொண்டிருக்க முடியாது.
இயல்பான அவரது நல்ல குணம் பல இடங்களில், நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.ஒரு சாதாரண பொது சனத்தின் வீட்டிற்கு அவரது அம்மா நடக்க இயலாத நிலையில் இருக்கிறார்;அவரது பெண் அவரைத் தனது மகள் போல்,தான் தாயாய் மாறிக் கவனிக்கிறார் என்ற அன்பை மதித்து அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த எளிய பண்பும்,அந்த பண்பின் வெளிப்பாடும் அவரை தமிழர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக்கும்.
சிகரங்களை நோக்கிய ஒரு பயணம்.... |
அதே போல் இந்த நிகழ்ச்சி எளிய துவக்கங்களில் தோன்றி, சாதிக்கும் மன உறுதியைத் துணைக் கொண்டு, மேல்நிலைக்கு வரும் வழியை முட்டித் திறந்து வரப் பலர் தயாராக இருக்கிறார்கள் என்பதை, சிஏ தேர்ச்சி அடையப் போகும் மீனவப் பெண்ணின் கதை மூலம் சொன்னது.அடிப்படை வசதிகள் இருந்தாலும் சாதாரண கிராமப் புறத்தில் இருந்து கிளம்பி, எந்த வழிகாட்டிகளும் இல்லாமல், 80 களின் இறுதியில் கல்வியின் மூலம் வாழ்வின் சிறிது மேல்நிலையை அடைந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்தப் பெண் வந்த எபிசோட் கண்ணில் நீர் வர வைத்திருக்கும்;எனக்கும் வந்தது.
கடைசி நாளன்று சிவகுமார் வந்து பங்கு பெற்று,இவன் தந்தை என்னோற்றான் கொல் என்று வியக்கும் படியான மகிழ்வை அனுபவித்தார்.
ஆனால் அவர் போகும் போது சொன்ன ஒரு வாக்கியம் என்னை நேற்று முழுவதும் சிந்திக்க வைத்தது.
பள்ளி வைத்து நடத்திய ஒரு மூதாட்டி, உங்கள் மகனை அற்புதமான மனிதனாக நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள் என்று சொன்ன போது, அவர் திருத்தமாக ஒரு வாக்கியம் சொன்னார்...
" நான் அவனை நல்ல மனிதனாக வளர்த்தேன் என்பதை விட,நல்ல ஒரு ஆத்மா எனது மகனது உடல் வடிவத்தில் இந்த உலகில் வாழ எங்கள் மூலமாக வந்தது, அதுதான் உண்மை " என்றார் !!!
அந்தக் கணத்தின் கனத்த உண்மையை சூர்யா உணர்ந்திருப்பார் என்றே அவரது அந்தக் கணத்தின் தோற்றம் உணர்த்தியது. இந்த நிமிடம் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நிமிடம் என்றே சூர்யாவும் சொன்னார். நல்ல ஒரு தகப்பனும், தகுதியான ஒரு மகனும் ஒரே கோட்டில் இணைந்த அழகிய ஒரு தருணம் அது !
அந்தக் கணம்.... |
ஒரு மனிதனாக உயர்ந்த சூர்யா என்னும் சரவணன்... |
பளிச்சென்று திரை விலகியது போல சைவ சித்தாந்தத்தின் முற்றான உண்மையை அந்த ஒரு வாக்கியம் உணர்த்தியதாக எனக்குப் பட்டது !
எந்தரோ மகானுபாவு அந்தகிரி வந்தனமு !!!
நல்ல அலசல்... வாழ்த்துக்கள்...
ReplyDelete///நான் அவனை நல்ல மனிதனாக வளர்த்தேன் என்பதை விட, நல்ல ஒரு ஆத்மா எனது மகனது உடல் வடிவத்தில் இந்த உலகில் வாழ, எங்கள் மூலமாக வந்தது... அதுதான் உண்மை///
எப்பேர்ப்பட்ட சந்தோசம்...!!!
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
நன்றி நண்பர் தனபாலன்...
Deleteபிறப்பின் நோக்கம் ஆன்மாவின் உயர்வு என்பதுதான் சாரம்..
என்னுடைய விநாயகர் அகவல் பதிவில் கூட அதைத்தான் விளக்க முயற்சித்தேன். :))
தமிழில் விஜய் தொலைகாட்சி மட்டும் இங்கு ஒளிபரப்பாகும்... ஒரு நிகழ்ச்சி மட்டும் தொடர்ந்து பார்ப்பேன்... சூர்யாவும் படிப்படியாக சிறப்பாகி கொண்டே வந்தார்.. திடீரென நிறுத்திவிட்ட காரணங்கள் நல்ல அலசல்.. சமரசங்கள் இல்லாமல் அமைதியாக விலகியதும் சூர்யாவின் குணநல சிறப்பு....
ReplyDeleteநன்றி பத்மநாபன்.
Deleteநீங்கள் சொன்னபடி துவக்கத்தில் சூர்யா சிறிது தடுமாறினாலும் படிப்படியாக சிறப்பாகவே செய்தார் என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் அவர் தொகா முழுக்க விரும்பியபடி நிகழ்ச்சியை நடத்தாதே பிரச்னையாக இருந்திருக்கலாம் :))
பொதுவாக சிந்தனையில் நேர்மை இருக்கும் மனிதர்கள் சமரசங்களுக்கு ஆட்படுவதில்லை !
படித்ததற்கும் பகிர்வுக்கும் நன்றி.
"..முகேஷ் போன்றவர் இல்லை முர்டோக்" - ஸ்டார் விஜய் தொகா, ராஜீவ் சந்திரசேகர், எம்.பி யிடம் இருக்கிறது என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன். இரவிச்சந்திரன், பெங்களூர்
ReplyDeleteநன்றி. பாகவதர் சார்..
Deleteவிஜய் டிவி முதலில் ஜேப்பியாரால் ஆரம்பிக்கப் பட்டு, பீர் புகழ் மல்லையாவால் வாங்கப்பட்டு விஜய் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முர்டோக் வாங்கிய போது ஸ்டார் விஜய் ஆக புனருத்தாரணம் நடந்தது.
நன்றி..
//முதலில் ஜேப்பியாரால் ஆரம்பிக்கப் பட்டு//
Deleteசாராய ஆலை முதலாளி ராமசாமி உடையாரால்?
ஆம்..அப்போது தொலைக்காட்சிக்கு வேறு பெயர் இருந்ததாக நினைவு.
DeleteGEC. Golden Eagle Communications
Deleteநன்றி அஜய் பாஸ்கர்...
Deleteஅப்போது முழு தொ.கா. சானலாக இல்லை என்று நினைக்கிறேன்..
மனைவி மீது அன்பு செலுத்துபவர் என்பதை பிரகடனம் செய்து வித்தியாச நபரை சந்தித்ததில் மகிழ்ச்சி :))
முதல் வருகைக்கும்,கமெண்டி'யதற்கும் நன்றி.
நிறைவு நாள் நிகழ்ச்சி பற்றிய என் பதிவைப் பாருங்களேன்.
ReplyDeleteசகாதேவன்.
vedivaal.blogspot.com
நன்றி நண்பர் சகாதேவன்...
Deleteஅவசியம் பார்க்கிறேன்.நன்றி
பல விஷயங்களை அலசி ஆராய்ந்திருக்கிரீர்கள்.நன்றாக இருந்தது.
ReplyDeleteநன்றி முரளிதரன்.
Deleteone of my favorite programme, NOT FOR THE ENTERTAINMENT CATEGORY, I LOVE QUIZ PROGRAMME, FROM MASTERMIND,KBC INDIA TO NVOK!
ReplyDeleteSIDDARTH BASU AND DENRIK O BRAIN ALSO VERY GOOD PERSONALITES TO CONDUCT THIS KIND OF SHOWS
நன்றி ஷர்புதீன்..
Deleteஎனக்கும் ரியாலிடி ஷோ'க்கள் பிடிக்கும்...
முதலில் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..அடிக்கடி வருக.
அழகாக எழுதி இருக்கிறீர்கள். நான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை.
ReplyDeleteநன்றி வித்யா ..
Deleteஓரளவு ரசிக்கம் படியாக இந்த நிகழ்ச்சி இருந்தது என்பது உண்மை..
சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரையும் இந்த நிகழ்ச்ச கவர்ந்திருந்தது என்பதும் தெரிந்தது.
விஜய் தொலைகாட்சி முடிந்த அளவுக்கு (மற்ற நிகழ்ச்சிகள் போல்) சூர்யாவை இதில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள், குரலில் மைக்ரோ செகண்டுகளுக்கு விட்டு விட்டு பேசினாலும் அவரோ இயல்பாக செய்தார்.
ReplyDeleteநீங்களும் வெல்லலாம் ஒருகோடி ஒவ்வொரு படப்பிடிப்பிற்கும் சூர்யா தான் வென்றிருப்பார் ஒரு கோடி.
:) விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ரொம்பவே டெம்ப்ளேட் தனமாக இருந்தாலும் சன்னுக்கு பரவாயில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ஆம் கண்ணன்..
Deleteசூர்யாவிற்கு 20 கோடி சம்பளம் பேசப்பட்டதாகத் தெரிகிறது..
எனக்கும் சன் நிகழ்ச்சிகளை விட விஜய் நிகழ்ச்சிகள் பிடிக்கும்;சன்'னில் சினிமா தொடர்பை எடுத்துவிட்டால் உருப்படியான நிகழ்ச்சிகள் வேறு ஒன்றும் இல்லை.
நன்றி.
முதலில் ஒரு டிஸ்க்ளைமர். நான் இந்த நிகழ்ச்சியை பார்த்ததில்லை.
ReplyDeleteநீங்கள் சொன்னபடி /திரையுலகின் வேறு எந்த ஒரு நடிகரும் இவரளவிற்கு மானுடத் தன்மையுடன் இருக்க முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நிதர்சனமாகத் தெரிந்தது./ செய்திருந்தால், அது எந்த விதத்தில் நியாயம்? அவர் பணம் வாங்கிக்கொண்டு அந்த தொலைகாட்சிக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அதனால், அவர் அந்த தொலை காட்ச்சிக்கு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் கொள்கையில் உடன் பாடு இல்லை என்றால், நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொண்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இது எந்த வித இரக்கம்? யாரோ பணத்தில் இவர் இரக்கம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?
கொள்கையில் உடன்பாடு இல்லாததால் வெளியே வந்த விபீஷணனும், உடன்பாடு இல்லாவிட்டாலும் கடமைக்காக முழு மனதுடன் ஒத்துழைத்த கும்ப கர்ணனும் தான் நினைவுக்கு வருகிறார்கள்..
|| கொள்கையில் உடன்பாடு இல்லாததால் வெளியே வந்த விபீஷணனும், உடன்பாடு இல்லாவிட்டாலும் கடமைக்காக முழு மனதுடன் ஒத்துழைத்த கும்ப கர்ணனும் தான் நினைவுக்கு வருகிறார்கள்.. ||
Deleteஅருமையான ஒப்பீடு... :))
முழுக்க ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் அவர் அப்படி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற எளிய மனிதர்களுக்கு அவர் உதவி செய்வது போல எனக்குத் தெரிந்தது என்றுதான் நான் சொன்னேன். அது சரி தவறு என்பதில் எனது கருத்தை நான் பதிவில் தெரிவிக்கவில்லை.
தொலைக்காட்சி அவ்வித அவரது நடவடிக்கையை நாம் கவனித்த விதத்திலேயே அவர்களும் கவனித்திருக்க வேண்டும்;அதனால்தான் நிகழ்ச்சிக்கு தற்காலிக இடைவேளை விட்டிருக்கிறார்கள் என்பதுதான் என் பார்வை..
ஆனால் இன்னொரு கோணம் இதில் இருக்கிறது..தொலைக்காட்சி உள்ளூற விரும்பிய வண்ணம் அவர் செயல்படாதிருந்திருக்கலாம்;ஆனால் தனது அறக்கட்டளையிலிருந்தும் இரு பங்கேற்பாளர்களுக்கு லட்சக் கணக்கில் பணத்தை அள்ளி விட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.ஆனால் அதை அவர் செய்தார்..
கோடிகளில் சம்பாதித்தும் கருமித் திலகங்களாகவே அறியப்படும் மற்ற நடிகர்களின் மத்தியில் ஒரு நடிகராக மட்டுமல்லாது,ஒரு நல்ல மனிதராகவும் அவர் தன்னை நடத்திக் கொண்டார்..
அது எனக்குப் பிடித்திருந்தது..அதைத்தான் பதிவின் கடைசிப் பகுதியில் சுட்டியிருக்கிறேன். :)))
அழகாக எழுதி இருக்கிறீர்கள்
Deleteநல்ல அலசல் அறிவன். பொதுவாக இந்த நீ.வெ.ஒ.கோ. நிகழ்ச்சியைக் கிண்டல் செய்தே பதிவுகள் வெளிவந்த நிலையில். உங்கள் பதிவு அதிலுள்ள நல்ல அம்சங்களைத் தொகுத்துள்ளது இதன் மற்றொரு கோணத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. நன்றிகள்.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteஅனைவருக் கிண்டலடித்து எழுதினார்கள் என்று சொல்லிவிட முடியாது..நிறையப் பேருக்கு இந்தத் தொடர் பிடித்திருந்தது.
ஆனால் நான் எல்லா விதமான பார்வைக் கோணத்திலும் இந்த நிகழ்ச்சியை அணுகியதோடு நிகழ்ச்சி பற்றிய எனது தனிப்பட்ட பார்வையோடும் இந்தப் பதிவை எழுதினேன்..
நன்றி.பாராட்டுக்கு..
நன்றி மாலதி..முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்..
ReplyDeleteI disagree. There is another income source for these programmes - SMS. I read somewhere, they used to get 8 crores in SMS revenue per episode, out of which 66 Lakhs go to Soorya. Its a big electronic lottery. 1 crore people send SMS (6 Rs per SMS) and one guy gets a few lakhs. Its just to increase the number of SMS responses, they are asking dumb questions to viewers. May be, its because of less SMSes received lately, they have stopped the programme. And its a gimmick they turned it as a sentimental farewell, in which Vijay TV is an expert.
ReplyDeleteAnd, its an illusion that Sivakumar sons are great human beings. Soorya has been helping convert a lot of black money of MK family by acting in their productions (Ah, not after they lost the power ofcourse. Smart guys they are!!). And they betrayed their best friend Ameer, by stealing his creation - Paruthi Veeran
Karthik,
ReplyDeleteThanks for the comment.
I haven't seen any SMS contest in NVOK program in singapore. May be, it is applicable in india only. Even if it is so, in what way it countered the info i gave in my post?
Vijay channel will for sure get money by SMS, but out of 5.5 crore people of tamilnadu, not every day that 1 crore people do send SMS for the program, unless it is given based on any valid statistics.
It was obvious that Surya, tried to help the needy through the days, when the program had been casted; channel might have worried on the way prize money had been increasing for every participant, by the way it had been anchored by surya.
And MK family-black money etc.., it is a joke to hear. They do not need to throw money in cine production just to convert it in to white money.Indeed they earned, lot of money with surya acted ventures in cinema too. What ever Surya received from them, will definitely be shown as white expense and surya for sure might have incurred taxes on that. My point is MK family might have made more money out of cine productions. How they made, is a separate storey, which can fill another post on itself. Even now if MK family can initiate a movie as surya starer, he may be ready to act; but MK family cannot have the advantage of power to tilt the distribution line to mint money.
At personal level,Surya and Sivakumar had been of helping tendency people, which is known through other sources of information too.
Thanks for commenting.
விஜய் தொலைக்காட்சி எப்போதும் சிற்பான நிகழ்ச்சிகளை தருவது. ஆனால் திரைமறைவில் நடப்பவற்றை சிறப்பாக தொகுத்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி கோபிநாத்..
Deleteபொதுவாக என்னுடைய அனுமானங்களைச் சொல்லியிருக்கிறேன்..
அவை உண்மையா என்பது சில நாட்களில் தெரிந்து விடும் :))
About 6 or 12 lakhs as prize money per episode is not big factor for such a show. Amitab is not as busy as Surya at this point, so there is a difference.
ReplyDelete6 to 12 lakhs may not be a big money; but still it is revenue foregone, so that counts.
DeleteAmit is not as busy as Surya, & hence his fee for compering the show will be lesser. But still he tries to make more money for channel. But surya, with higher cost tag, causes revenue forgoing. So that also counts.
Thanks for first arrival & commenting.
:)))
|| Amitab is not as busy as Surya at this point, so there is a difference. ||
Deleteதிரு குகி,
மேற்கண்ட உங்கள் கருத்தை மறுக்கும் செய்தி இன்றே வந்து விட்டது;கேபிசி பருவம் 6 க்கு ஸ்டார் குழுமம் அவருக்குக் கொடுக்கப் போகும் தொகை 140 கோடி.
சூர்யா வாங்கியது 20 கோடி.
பிசி இல்லாததாலா 140 கோடி கொடுக்கிறார்கள்? :))
You have written a fair judgement of the program. Someone has written something about MK+Surya .
ReplyDeleteSivakumar and famiy are remaining a honest family unlike most of the cine families. Ofcourse there are a few like Sivakumar's family .They have not cme to limelight and it is not the fault of Siva's.
You all aware Surya started a foundation Agaram with some of his friend. Only after its successful cmpletion of one year Vijay TV made a program on it.The students and their families were thoroughly analysed and selected - (points for marks/rural/socially downtrodden/first graduate/handicapped/parentless or single parent etc..) .The recipients and their families wept in joy and gratitude .
Next year the number of students got doubled.
Very few actors do such charities with kindness (while all of them earn in crores).even then it is a random one .Not an organised one like sury's by which many geniuine needy people got benefitted.
The love must come from the heart .It is preached by Swami Vivekanandha , Jesus Christ , Sathya sai Baba and by every other Saint on earth . Surya has inherited such a good heart from his father ( who for the past 20 years awarding the deserving students without any advertisement ).
So simply mudslinging at good people is an unwanted one .
திரு லாப வியாபாரிக்கு,
Deleteநன்றி.
முதல் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும்.
இன்னொரு நன்றி பாராட்டுகளுக்கு.
நீங்கள் சொன்ன கருத்துக்களில் பெரும்பான்மையையே என் பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
இயல்பாக நல்ல மனிதராக இருப்பதால்தான் எளிய மனிதர்களைப் பார்க்கும் போது,அவர்கள் துன்பைத்தை அறியும் போது அவரால் வருந்த முடிகிறது;அவரால் இயன்ற அளவுக்கு உதவி செய்ய முடிகிறது.
என் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தை..குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் தன்னை அறியும் படியும் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் படியும் வளர்க்க வேண்டும்;அப்படி வளரும் குழந்தைகள் நல்ல மனிதர்களாகவும்,நல்ல சமுதாய வாசிகளாகவும் இருப்பார்கள் என்று..
அதை நான் முற்றாக நம்புகிறேன்...சூர்யா போன்ற மனிதர்களிலும் பார்க்கிறேன்..
நீண்ட கருத்துக்கு நன்றி..அதைத் தமிழில் எழுதியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்..
:))
You have written a fair judgement of the program. Someone has written something about MK+Surya .
ReplyDeleteSivakumar and famiy are remaining a honest family unlike most of the cine families. Ofcourse there are a few like Sivakumar's family .They have not cme to limelight and it is not the fault of Siva's.
You all aware Surya started a foundation Agaram with some of his friend. Only after its successful cmpletion of one year Vijay TV made a program on it.The students and their families were thoroughly analysed and selected - (points for marks/rural/socially downtrodden/first graduate/handicapped/parentless or single parent etc..) .The recipients and their families wept in joy and gratitude .
Next year the number of students got doubled.
Very few actors do such charities with kindness (while all of them earn in crores).even then it is a random one .Not an organised one like sury's by which many geniuine needy people got benefitted.
The love must come from the heart .It is preached by Swami Vivekanandha , Jesus Christ , Sathya sai Baba and by every other Saint on earth . Surya has inherited such a good heart from his father ( who for the past 20 years awarding the deserving students without any advertisement ).
So simply mudslinging at good people is an unwanted one .
விட்டுப் போன ஒன்று..
Deleteஎல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமோ,எல்லோரும் சரியான பார்வையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமோ சமுதாயத்தில் இல்லை..
அதை எதிர்பார்க்கவும் முடியாது..எனவே ஏற்றுக் கொண்டு,கடந்து செல்வோம்..
:))
Thanks .I wish to write in Tamil. But still i have not learnt typing in tamil .laziness and business are the reasons. Next time i will try to make the comments in tamil.
ReplyDeleteஆங்கிலத்தில் அடிப்பது போலவே தமிழில் அடிக்கலாம்..அதாவது தமிழ் என்று அடிக்க thamiL என்று அடித்தால் தமிழ் என்று திரையில் அடிக்கும் ட்ரான்சிலியேட்டரி மென்பொருள்கள் இப்போது இலவசமாக தரவிறக்கக் கிடைக்கின்றன.
Deleteபத்ரி வழங்கிய என்எச்எம் NHM செயலியைத் தரவிறக்கினால் இம்முறைப்படி மட்டுமல்லாமல் டாம்99 முறையில் தமிழ்த் தட்டச்சுப் பலகை மூலமும் அடிக்க முடியும்..
பார்க்க இந்தப் பக்கத்தை.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சூர்யாவின் மதிப்பு அதிகரித்து விட்டிருப்பது இன்று வந்திருக்கின்ற செய்திகளில் தெரிகிறது..
ReplyDeleteமாற்றான் படம் அவுட்ரைட் சேல் முறையில் 84 கோடிகளுக்கு விற்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது..முதல் வாரக் கலெக்ஷன் பல படங்களுக்கு 50 கோடிகளுக்குக் குறைவாகவே இருக்கும் இந்த நாட்களில் இது அதிக விலையென்று சொல்கிறார்கள்..
இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு சினிமாக் காரர்கள் என்னதான் செய்வார்கள்?
:))
எனது பார்வையில் வைரமுத்து மற்றும் சிவகுமார் இருவருமே கொடுத்து வைத்தவர்கள். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தனது குழந்தைகளை மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் நல்ல திறமைசாலிகளாக மட்டுமல்லாது மற்றவர்கள் பாராட்டும் வண்ணமும் வளர்த்துள்ளார்கள்.
ReplyDeleteவைரமுத்துவின் விதயத்தில் அவர் தனது பொன்மணியை மிகவும் கட்டுப்படுத்தி, மன உளைச்சலில் வைத்திருந்ததாக ஒரு வதந்தி உண்டு.
Deleteஅதனால் அவர் குழந்தைகளின் மீது அதிகம் அக்கறையுடன் இயங்கியதாகவும் கேள்வி.பலருக்கும் தெரியாத இன்னொரு செய்தி பொன்மணி ஆழ்ந்த ஆன்மிகப் பற்றுள்ளவர், வைரமுத்துவுக்கு நேர் எதிராக !!!
சிவகுமாரின் விதயத்தில், இது போன்ற எதிர்மறை விதயங்கள் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.
நன்றி..முதல் வருகை என்று நினைக்கிறேன் !
Delete:))
உண்மை, கவிஞர் தற்போது முழு நேர வியாபரி. அவருடன் கை குலுக்க கூட காசு கேட்கிறார். 2009-ல் பெஃட்னா விழாவிற்க்கு வந்த போது நேரில் சில கசப்பான அனுபவங்கள்.
Delete|| உண்மை, கவிஞர் தற்போது முழு நேர வியாபரி. அவருடன் கை குலுக்க கூட காசு கேட்கிறார். 2009-ல் பெஃட்னா விழாவிற்க்கு வந்த போது நேரில் சில கசப்பான அனுபவங்கள். ||
Deleteஎன்னவென்று எழுதுங்களேன்..பதிவின் வாயிலாக...
பிம்பங்கள் உடைக்கப்படுவது பொதுநலனுக்கு நல்லது ! :))
வணக்கம் அறிவன், நிறைய முறை சங்கப்பலகையை வாசித்து இருக்கிறேன், பின்னூட்டம் இட்டதாக நினைவு இல்லை. இது ஒரு நல்ல அலசல். நிச்சயம் என் கணிப்பும் உங்களைப் போலதான். சூர்யா கண்ணியமாக் வெளியேறவே இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
ReplyDeleteபாரதி பற்றிய பதிவில் - புத்தகத்தில் சிங்கையின் என்.எல்.பி இலச்சினையை கண்டதும் மீண்டது என் சிங்கை நினைவுகள் - அதற்கு என் நன்றிகள்.
|| வணக்கம் அறிவன், நிறைய முறை சங்கப்பலகையை வாசித்து இருக்கிறேன், பின்னூட்டம் இட்டதாக நினைவு இல்லை.||
Deleteஏன் ?????????? :))
|| இது ஒரு நல்ல அலசல். நிச்சயம் என் கணிப்பும் உங்களைப் போலதான். சூர்யா கண்ணியமாக் வெளியேறவே இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். ||
நன்றி பாராட்டுக்கு..
|| பாரதி பற்றிய பதிவில் - புத்தகத்தில் சிங்கையின் என்.எல்.பி இலச்சினையை கண்டதும் மீண்டது என் சிங்கை நினைவுகள் - அதற்கு என் நன்றிகள்.||
அடிக்கடி வாருங்கள்..சிங்கை நினைவுகள் வருமல்லாவா?
:))
KBC யின் ஏதோ ஒரு சீசனில், மொத்த பரிசுத் தொகை 17 கோடி ரோபாய் என்று அமிதாப்பே நிகழ்ச்சியின் போது ஒரு முறை சொன்னார், ஆனால், விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? ஐநூறு கோடி ரூபாய், ஆமாங்க 500 கோடிதான்......இது பத்து வருடத்துக்கும் முந்தைய நிலவரம். தமிழில் என்ன வருமானம் என்று தெரியவில்லை. மேலும், ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் SMS வழியாக கேள்வி கேட்டு பரிசு அறிவித்தார்கள் அல்லவா, அவை ஒவ்வொன்றுக்கும் ஆறு ரூபாய் கட்டணம் செல் போன் சேவை நிறுவனம் வசூலிக்கும், அதிலும் வருமானம். ஆகையால், பங்கேற்றவர்களுக்கு கொடுத்த பரிசுப் பணம் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.
ReplyDelete\\தவறான பதில் சொன்ன ஒருவரை சூர்யா, 'தேவைப்பட்டால் லைஃப் லைன் இருக்கு சார்' என்று சொல்லாமல் இருந்ததில்லை;அதே நேரம் சரியான பதிலைச் சொல்லிவிட்டால் சட்டென்று அவர் அந்த பதிலை உறுதி செய்து விடுவார்.\\ இதன் மூலம் அவர்கள் ஜெயிக்கும் பணம் ஒரு பிரச்சினையே இல்லை, ஆனாலும் எல்லோரும் நிறைய பணம் ஜெயித்தாலும் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு திரில் போய்விடும், பார்ப்பவர்கள் குறைய ஆரம்பித்துவிடுவார்கள், அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வரும் விளம்பரதாரர்களும் குறைவார்கள், வருமானமும் குறையும். ரெண்டுபேர் ஐம்பது லட்சம் ஜெயிக்கணும், சிலர் வெறுங்கையோட வெளியேறனும், எப்போ ஏதோ நடக்கும்னு சொல்ல முடியாதுங்க மாதிரி இருக்கணும், அது தான் திரில், அதற்காகத்தான் இதைப் பார்க்கிறார்கள்.
மேலும், சூர்யா இரக்கமானவர் என்ற குணவிலாசம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனா இந்த நிகழ்ச்சியில் இரக்கமானவராக நடித்திருக்கிறார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.
லாஸ் ஃபோர்கோன் இஸ் ப்ராஃபிட் என்ற தத்துவத்தைத்தான் இந்தப் பதிவில் பொதுவாகச் சொல்லியிருக்கிறேன்..
Deleteஅந்த வகையில் தொகா சேமித்த தொகை அவர்களுக்கு லாபமே;நன்றாகவே நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தததாகச் நண்பர்கள் வட்டாரத்தில் சொன்னார்கள்.எனவே நிறுத்துவதற்கான காரணம் வேறு எதுவும் தெரியவில்லை.
|| மேலும், சூர்யா இரக்கமானவர் என்ற குணவிலாசம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனா இந்த நிகழ்ச்சியில் இரக்கமானவராக நடித்திருக்கிறார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.||
திரைத்துறையில் பெருமளவு சம்பாதித்த நபர்களை ஒப்பிடுகையில் சூர்யா இரக்கமானவர் என்றே என் பார்வை சொல்கிறது.
:))
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ப்ரிய அறிவன்! பல நாட்கள் வலைமேயாது நான் முடங்கலாயிற்று. இந்தப் பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன். உங்கள் அலசல் மிக நுணுக்கமாயும் தர்க்கரீதியாயும் அமைந்திருந்தது. பாராட்டுக்கள். இந்த நிகழ்ச்சியை நானும் சில எபிசொடுகள் பார்த்தேன். இறுதி நிகழ்ச்சியையும் கண்டேன். அது குறித்த உங்கள் கருத்துக்கள் அட்சர லட்சம் பெறும்.
ReplyDeleteவிமரிசனம் என்பது ஒரு கூர்மையான கலை. பெரும்பாலும் அவை மேலோட்டமாயும்,அல்லது காழ்ப்பின் அடிப்படையிலும் செய்யப் பட்டு ஒரு போர்க்கலையாய் ஆகிவிட்டிருக்கிறது. ஆரோக்கியமான விமரிசன சூழல் பெரும்பாலும் இங்கு இல்லை என்பதே உண்மை. படைப்புகள் பண்பட நல்ல விமரிசனம் இன்றியமையாதது.
உங்களிடம் தெளிவான விமரிசனப் பார்வை இருப்பதை அறிவேன்.. இன்னமும் பெரிய தளத்தில் நீங்கள் இயங்க வேண்டும் என்பது என் அவா. அன்பு...
மோகன்ஜி
ஹைதராபாத்
||உங்கள் அலசல் மிக நுணுக்கமாயும் தர்க்கரீதியாயும் அமைந்திருந்தது. பாராட்டுக்கள். இந்த நிகழ்ச்சியை நானும் சில எபிசொடுகள் பார்த்தேன். இறுதி நிகழ்ச்சியையும் கண்டேன். அது குறித்த உங்கள் கருத்துக்கள் அட்சர லட்சம் பெறும்.||
Deleteமிக்க நன்றி மோகன்ஜி..
|| விமரிசனம் என்பது ஒரு கூர்மையான கலை. பெரும்பாலும் அவை மேலோட்டமாயும்,அல்லது காழ்ப்பின் அடிப்படையிலும் செய்யப் பட்டு ஒரு போர்க்கலையாய் ஆகிவிட்டிருக்கிறது. ஆரோக்கியமான விமரிசன சூழல் பெரும்பாலும் இங்கு இல்லை என்பதே உண்மை. படைப்புகள் பண்பட நல்ல விமரிசனம் இன்றியமையாதது. ||
மிக உண்மை.இன்னும் சொல்லப்போனால் எழுதுவதைக் காட்டிலும் தேடிப் படிப்பது மிக முக்கியம்;படித்ததை மேலும் சிந்திக்க இயன்றவர்களுக்கே அதைப் பற்றிய மேலதிகமான எண்ணங்களோ, சிந்தனைகளோ வரும்..இந்த சிந்தனைப் பார்வையால் விளையும் கருத்து எத்திசையும் சாயாதிருக்கும் நிலையில் உளத்தை வைத்துக் கொள்ள முடிந்தவர்களே, தேர்ந்த விமர்சகர்களாக வர இயலும்...
|| உங்களிடம் தெளிவான விமரிசனப் பார்வை இருப்பதை அறிவேன்.. இன்னமும் பெரிய தளத்தில் நீங்கள் இயங்க வேண்டும் என்பது என் அவா. அன்பு...||
உங்களது அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..
டெம்ப்ளேட் பின்னூட்டங்களே, முதல்தர இடுகைகளைத் தீர்மானிக்கும் இந்த 'நவ'யுகத்தில், உங்களைப் போன்றவர்களின் சரியான பாராட்டும் அன்பு வார்த்தைகளுமே, நல்ல எழுத்துக்கான உரமும், எழுதுபவர்களுக்கான நோபலு'ம்.
தன்யனானேன்!
how accurate you have been! இந்த நிகழ்ச்சியை முதன் முறையாக சமீப இந்தியப் பயணத்தில் பார்த்தேன். உங்கள் கணிப்பு எத்தனை கச்சிதமாக இருக்கிறது!!
ReplyDeleteசிவகுமார் சொன்னது மறக்க முடியாது. இத்தனை பண்பட்டவரா அவர்!
|| how accurate you have been! இந்த நிகழ்ச்சியை முதன் முறையாக சமீப இந்தியப் பயணத்தில் பார்த்தேன். உங்கள் கணிப்பு எத்தனை கச்சிதமாக இருக்கிறது!!
Delete||
நன்றி நண்பரே..
||
சிவகுமார் சொன்னது மறக்க முடியாது. இத்தனை பண்பட்டவரா அவர்!
||
தமிழிலக்கியங்களுக்குள் நுழையத்தொடங்கும் எவருக்கும் இந்தப் பண்பட்ட தன்மை எளிதில் கைகூடி விடும் என்பது நான் உணர்ந்து அறிந்தது..
ஒரு நடிகராகவும் ஓவியராகவும் குடும்பத்தலைவராகவும் எளிய அணுகும் மனநிலையிலேயே தன்னை எப்போதும் வைத்துக் கொண்டிருந்த அவர், நடிப்பிலிருந்து முற்றாக விலகிய பிறகு-அதாவது சூர்யா தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்ற நிலை வந்த போது, ஆழ்ந்து தமிழிலக்கிப் படிப்பில் இறங்கினார்.
ஒரு மாற்று ஆர்வமாகக் கூட அதனை அவர் மேற்கொண்டிருக்கலாம்...ஆனால் அதற்குப் பிறகான அவரது பொதுப் பேச்சு,நடைமுறைகளில் ஒரு மாற்றம் வந்ததை நான் பார்க்க முடிந்தது;அவருடன் நெருக்கமாகப் பழக முடிந்த சிலரும் அவரது மேன்மைக் குணங்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்தே வந்திருக்கின்றன என்றே கூறுகிறார்கள்.
இந்த இடத்தில் ஒரு சுய அனுபவத்தையும் பகிர விழைகிறேன்.
சிறு வயதிலிருந்தே தமிழ்'ச் சூழலில் வளர்ந்தவன் நான்.அம்மாவும்,அம்மாவின் தந்தையும் தமிழ்ப் பண்டிதர்கள். தமிழையும், தமிழிலக்கியத்தையும் வாழ்வியல் நோக்கில் அணுகியவர்கள்.
அம்மா இன்னும் ஒரு படியில் சைவ சித்தாந்தத் துறையில் கற்றல், போதித்தல் என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டவர்.
எனது பதின்ம வயதுகளில் இருந்தே, மேற்கண்ட காரணங்களால், தமிழில் மீது பொதுவாக இற்றை நாளில் இளைஞர்களுக்கு இருக்கும் 'தள்ளி வைக்கும் தன்மை'-ரிசர்வேஷன்- எனக்கு இருந்ததில்லை;ஆனாலும் தமிழிலக்கியத்தை ஆழக் கற்றவனாகவும், அதற்கான ஆர்வம் நிரம்பியவனாகவும் நான் பதின்ம வயதுகளில் இல்லை.
இதில் அம்மாவுக்கு நிரம்பவும் வருத்தம் இருக்கும்; நல்ல புத்திசாலியான நீ(எல்லா அம்மாக்களும் புதல்வர்களை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...நிஜம் தவறாகவும் இருக்கலாம் :)) தமிழிலக்கியத்தையும் கற்றால், உனது ஆன்ம நிலை மேம்படும், சிந்தனை உயரும், எனக்காகவாவது தமிழைப் படி' என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்..
கல்லூரிக் காலத்தில், பரிசு பெறும் வேட்கையில் ஆய்வுக் கட்டுரைப் போட்டிக்காக கம்ப காதையைத் தொட்ட என்னை அது பிசாசாக ஆட்கொண்டது; பின்னர் ஒவ்வொன்றாகவும், மனம் போன படியிலும் ஒவ்வொரு இலக்கிய,நீதி,பக்தி,பழமொழி எனப் பல நூல்களைத் தொடத் தொடங்கினேன்..
கடந்த இரு பத்தாண்டுகளில் எனது சிந்தனையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் எனக்கு நிச்சயம் தெரிகிறது.வாழ்வின் எந்த நிலையிலும் சமனமான மனநிலை கைவருகிறது.சில பெரும் உலகியல் வாழ்வின் அழுத்தங்களை சிரமமில்லாமல் நான் கடந்திருக்கிறேன்..
தமிழ் பிழைப்புக்கான மொழி அல்ல; வாழ்விற்கான,ஆன்மாவிற்கான மொழி..படிக்கக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் என்பேன்.