Pages - Menu

Monday, October 12, 2009

106-கமலஹாசனின் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி.


கிடைத்த சிறு விடுமுறையில் இந்தியாவுக்குச் சென்று வந்தேன்.


முட்டாள் பெட்டியின் எந்த சானல் என்பது நினைவில் இல்லை,கமல் கலந்து கொண்ட உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சியைப் பெரும் விளம்பரத்துடன் வெளியிட்டார்கள்..


அது ஒரு போன்-இன் நிகழ்ச்சி.ரசிகர்கள் அழைத்துக் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.


கமல் மய்யம் நடத்திய நாட்களில் அவரின் எழுத்துக்கள் அவ்வப்போது கவரும்;மேலும் சுஜாதா போன்ற நபர்களின் நீடித்த நட்பு ஏற்படுத்திய பரந்த வாசிப்பனுபவம் அவருக்கு இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுத்திய ஆர்வத்தாலும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.


பார்த்தால் அனைத்து திரைப் பிரபலங்களும் ஒருவர் பின் ஒருவராக அவரை அழைத்துக் கொண்டிருந்தார்கள்;ரவிக்குமார்,எஸ்.பி.பி,கவிஞர் புவியரசு,நாசர் என்று நீண்டது பட்டியல்..நடிகர் சிவக்குமார் கூட வந்தார்..வராதது பாலசந்தரும்,ரஜினியும் மட்டும் தான் என்று நினைக்கிறேன்..


இரண்டு மூன்று அழைப்பாளர்களின் பெயரைப் பார்த்த வுடன் எனக்கே ஒரு சந்தேகம் ஏற்பட,இது போன்ற அபத்தக் காரியங்களில் எல்லாம் சாதாரணமாக ஈடுபடாத நான் கொடுக்கப்பட்ட எண்ணை முயற்சித்தேன்..


சுமார் அரைமணி நேரம் முயற்சித்தும் அந்த எண்ணை அழைக்க முடியாது என்ற பதிலே கிடைத்த போது,திரையில் பலர் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்..


ஒரு அப்பட்டமான செட்-அப் நிகழ்ச்சியாகவே அது தோன்றியது;அதிலும் ஓயாத புகழ்பாடல்..


தன்னைப் பற்றிய புகழுரைகளை அரங்கேற்றி விட்டு தானே அதை முன்னின்று ரசிப்பது ஒரு வெட்கப் படும் செயல் என்றே எனக்குத் தோன்றுகிறது.நமது அரசியல் பிரபலங்கள் இந்த அசிங்கத்தை அடிக்கடி அரங்கேற்றுவார்கள்.கமல் போன்ற ஒரு படிப்பாளியும் இந்த நோய்க்குழிக்குள் அடக்கம் என்று அறிந்த கணத்தில் வெறுப்பாக இருந்தது.


இந்த லட்சணத்தில் பாசாங்கான வியப்பை கமலகாசன் அடிக்கடி வெளிப்படுத்தினார்; ஓ,நீங்களா? என்ன சொல்லி வச்ச மாதிரி நண்பர்கள் எல்லாம் ஒரே நாளில் அழைக்கிறீர்கள்..வியப்பாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது..etc..etc..’ என்ற ரேஞ்சில் அளந்து கொண்டிருந்தார்..


ஒரே வார்த்தையில் சொல்வதானால் கன்றாவி..


கமல் போன்ற பிரபலங்களுக்கு,சமூகத்தில் ஏற்கனவே நல்ல மதிப்பையும் அங்கீகாரத்தையும் அடைந்தவர்களுக்கு எதற்கான இந்த விளம்பர மோகம் என்று தெரியவில்லை.


இடையில் ஒன்றோ,இரண்டோ பெயர் தெரியாத நபர்களுக்கும் வாய்ப்பு அளித்தார்கள்.


ஒரு பெண்மணி கேட்டார.. உன்னைப் போல் ஒருவனில் நீங்கள் நஸ்ருதீனை விட நன்றாக நடித்ததாக நினைக்கிறீர்களா என்ற கேள்வி கேட்டார்..


பணிவு வேஷம் காட்டிக் கொண்டிருந்த கமலகாசனின் ஆணவமுகம் அப்போது சட்டென்று தலைதூக்கியதைப் பார்க்க முடிந்தது.


ஒரு வினாடி கடினப்பட்ட அவர் முகத்தை சகஜ பாவத்திற்கு கொண்டுவர மிகவும் முயன்றார்..


அவர் அளித்த பதில்: நீங்கள்,நான் அவரை விட நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொல்வேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்(இத பார்றா..)நான் அப்படி சொல்ல மாட்டேன்.அவர் பாணியில் அவர் நடித்திருக்கிறார்,என் பாணியில் நான் நடித்திருக்கிறேன்..இதை எல்லாம் ஒப்பிட முடியாது..


ஏன் ஒப்பிட முடியாது என்று தோன்றவில்லை.


உபோஒ. ஒரு மொழிமாற்றுப் படம்.அதன் ஒரிஜினல் வெர்ஷன் வெட்னஸ்டே படம்.


அது ஒரு நல்ல விறுவிறுப்பான படமாக மாறியதற்குக் காரணம்,ஷாவின் டௌன் டு எர்த் பொது ஜனத்தைப் பிரதிபலித்த விதமும்,கெர்ரின் இயல்பான காவல்துறை கமிஷனர் பாத்திர பிரதிபலிப்பும்.


தமிழ் வெர்ஷனில் லால் கூட ஒரளவு நன்றாகச் செய்திருந்தார் என்று தோன்றுகிறது; சாதாரணமாக சென்னை பல்லவன் பேருந்தில் காணப்படும் ஒரு மனிதர்தான் உபோஒ நாயகர்;

ஆனால் கமல் செய்தது ஒரு மேட்டுக்குடி கனவானின் பிரதிபலிப்பான பாத்திரம்.


அந்தப் பாத்திரம் முழுதாக சொதப்பி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.


இதெல்லாம் ஒரு பக்கம் போக அந்த நிகழ்ச்சி நடந்த விதத்தில் என் மதிப்பில் கமல் பலபடி சறுக்கினார்..


உங்களைப் போன்ற புகழ்பெற்ற ஒரு நடிகருக்கு,படிப்பாளிக்கு,திறனாளர் என்று பரவலாக நம்பப் படும் ஒருவருக்கு இந்த வகை செட்-அப் நிகழ்ச்சி தேவைதானா நண்பரே????


நானும் கூட வழமைக்கு மாறாக அழைக்க முயன்றேன் என்று சொன்னேன் இல்லையா?

நானும் இரண்டு கேள்விகள் கேட்க எண்ணியிருந்தேன்..

அவை என்ன தெரியுமா?

முதல் கேள்வியை அந்தப் பெண்மணி கேட்டு விட்டார்..


இரண்டாம் கேள்வி நடிகர்களின் தமிழகத்தின் இந்தியாவின் சகல பிரச்னைகளுக்கும் தீர்வளிப்பவர்களாக,மீட்பர்களாக,தலைமைத்துவத்துக்குத் தேவையான முதல்நிலை நபர்களாகப் பார்க்கப்படும் 2000ங்களின் நிலை பற்றிய அவர் கருத்து என்ன?


ஒரு வேளை இணைப்பு கிடைத்து,ஒரு வேளை இந்தக் கேள்வி அனுமதிக்கப்பட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார் ?????

3 comments:

  1. //இரண்டாம் கேள்வி – நடிகர்களின் தமிழகத்தின் இந்தியாவின் சகல பிரச்னைகளுக்கும் தீர்வளிப்பவர்களாக,மீட்பர்களாக,தலைமைத்துவத்துக்குத் தேவையான முதல்நிலை நபர்களாகப் பார்க்கப்படும் 2000’ங்களின் நிலை பற்றிய அவர் கருத்து என்ன?//

    நீங்கள் என்ன சொல்ல வரீங்க அப்படின்னு சரியாய் புரியலை.. அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்களை பற்றி கேட்கறீங்களா?

    தெளிவா கேள்வி கேட்டாலே கமல் பதிலை குழப்பி சொல்லுவாரு, நீங்க கேள்வியே இப்படி கேட்டா கமல் சொல்லும் பதிலை நினைச்சா வயிறு கலங்குது ...

    ReplyDelete
  2. நண்பர் கோகுல்,
    நன்றி..

    \\
    தெளிவா கேள்வி கேட்டாலே கமல் பதிலை குழப்பி சொல்லுவாரு, நீங்க கேள்வியே இப்படி கேட்டா கமல் சொல்லும் பதிலை நினைச்சா வயிறு கலங்குது ...\\

    ஒரு வேளை கேட்பது கமலிடம் என்பதால் அப்படி ஆகி விட்டதோ?

    இருந்தாலும் உங்கள் கமெண்ட்'ஐ ரசித்தேன்.

    ReplyDelete
  3. நண்பர் உ.த.

    உங்கள் கமெண்ட்'ஐ அனுமதித்து விட்டேன்..ஆனாலும் வர மறுக்கிறது..

    என்னவோ டெக்னிகல் ப்ராப்ளம்...

    மன்னிப்பீர்.

    ReplyDelete