Pages - Menu

Monday, December 1, 2008

84,மும்பை பயங்கரவாதமும் அது பற்றிய சில செய்திகளும் எண்ணங்களும்



தீவிரவாதிகள் கடல்மார்க்கமாகத்தான் வந்தருக்கிறார்கள் என்பதும் கராச்சியிலிருந்துதான் வந்திருக்க முடியும் என்ற புலனாயவு உண்மையும் வெளிவந்திருக்கின்றன.

செப்டம்பர் இறுதியில் அமெரிக்க சிஐஏ நிறுவன இந்திய கிளை ரா’வுடன் ஒரு அவசர சந்தப்புக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்த சந்திப்பில் லக்ஷர் இ தொய்பா மும்பையின் மீது ஒரு தாக்குதல் நடத்தலாம் என்ற ஊகம் இருப்பதாகவும் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த தாக்குதல் கடலிலிருந்து நடக்கக் கூடும் என்ற ஊகமும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உளவுத் தகவல்கள் வேறுசில ஏஜென்ஸிகளில் இருந்தும் உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றன.

செப்டம்பர் 24 வாக்கில் இந்திய உளவுத்துறை சில உறுதிப் படுத்த முடியாத தகவல்களைப் பெற்றிருக்கின்றன.அவை:

-ல இ தொ.கராச்சியில் மும்பையை கடல் மார்க்கமாகத் தாக்கும் வழிகளுக்கான பயிற்சிகளை சுமார் மூன்று மாதமாக அளித்துக் கொண்டிருக்கிறது.
-ல இ தொ.வின் செயல் நிர்வாகத் தலைவன் பங்களாதேஷ் நிர்வாகப் பிரிவிடம் பன்னாட்டு உபயோக சிம்கார்டுகளை தயார் செய்யப் பணித்திருக்கிறான்.
-இந்தப் பணி(!)க்கான பயிற்சி சாச்சா என்றழைக்கப் படும் ல இ தொ’வின் ஆஸ்தானப் பயிற்சியாளனிம் மேற்பார்வையில் நடந்திருக்கிறது.

()

இந்திய உளவுத்துறை கடலிலிருந்து தாக்குதல் வரலாம் என்ற நிலையில் அது தாஜ் ஒட்டலின் மீது இருக்கலாம் என்றும் எதிர்பார்த்ததாகச் சொல்லப் படுகிறது.நவம்பர் 18 அன்று கோஸ்ட் கார்ட் என்றழைக்கப்படும் கடலோரக்காவல் படைக்கு குறிப்பான தகவலாக கராச்சியிலிருந்து வர வாய்ப்பிருக்கக் கூடிய பாகிஸ்தான் கலங்களின் மீதான கண் வைக்கும்படி செய்தி அளிக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் புத்திசாலித்தனமாக செயல்பட்ட பயங்கரவாதிகள் ஆழ்கடலில் மீன்பிடிக்குச் சென்ற குபெர் என்ற படகைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்;அதில் இருந்த அறுவரில் ஐந்து பேரைக் தலையை வெட்டி கடலில் எறிந்த அவர்கள் அமர்சிங் சோலங்கி என்ற ஒருவனை மட்டும் மும்பைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்ல ஏதுவாக விட்டு வைத்திருக்கின்றனர்;மும்பை கடல் எல்லைக்குள் நுழைந்து கரையை நெருங்கும் சமயம் அவனுக்கும் பரலோகப் பிராப்தி அளித்துக் கடலில் வீசி விட்டனர்.

கரையோரக் காவல்படை சினிமா போலீஸ் மாதிரி பாக் படகுகளுக்காகக் காத்திருக்க திவிர வாதிகள் எப்போதோ இந்திய மீன்பிடி படகு மூலம் வந்து கரையேறி தாஜிலும் மற்ற இடங்களிலும் சென்று அளித்த பணியை துவக்கி விட்டனர் !


()

கடல் காவல் படையினர் அந்த மீன்பிடி படகில் இருந்து ஒரு ஜிபிஎஸ் சாதனத்தைக் கைப்பற்றி இருக்கின்றனர்.அதில் கராச்சியிலிருந்து மும்பைக்கும் பின்னர் மும்பையிலிருந்து கராச்சிக்கு செல்லவும் இரு கடல் வழிப் பாதைகள் நிறுவப் பட்டிருக்கின்றன(செட்).இது தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு திரும்பிச்சென்று விடும் நோக்கத்தில் இருந்திருக்கலாம் என்ற நோக்கில் புலனாய்வாளர்களை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கின்றது.

ஆனால் தீவிரவாதிகளுக்கு திரும்பி விடலாம் என்ற ஒரு பொய்யான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகக் கூட இது செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பவும் இடம் இருக்கிறது.

அல்லது உண்மையிலேயே அவர்கள் தாக்கிவிட்டு திரும்பிவிடும் திட்டத்தில் இருந்திருந்தால் அதில் தாவூத்தின் பங்கு இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் இது கிளப்பி இருப்பதாகத் தெரிகிறது.


()


கரையை நெருங்கிய தீவிரவாதிகள் இரண்டிரண்டு பேராக பிரிந்து ஜோராக வேலையை ஆரம்பித்ததை உளவுத்துறை பல்குத்திக்கொண்டு வேடிக்கை பார்த்ததை நாம் அறிவோம்!


()

தாக்குதல் ஆரம்பமான சில மணித்துளிகளேயே,அதாவது களத்தில் நுழைந்த 10 நிமிடங்களுக்குள்ளேயே தீவிரவாத எதிர்ப்புக்குழுத் தலைவரும் மற்றும் எண்கவுன்டர் திறனாளரும் கொல்லப் பட்டு விட்டதாகத் தெரிகிறது.

இது உண்மையில் எவ்வாறு நடந்தது என்பதில் தெளிவில்லை.அவ்வளவு தீவிரமான தாக்குதல் தளத்துக்குள் நுழைந்த அவர்கள் எப்படி அவ்வளவு அலட்சியமாக இருந்திருக்க முடியும் என்பது வியப்பான ஒரு விதயம்;அல்லது அவர்கள் குற்றவாளிகளை மிகவும் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும்.

அவர்களின் உயிர்த்தியாகம் தவிர்த்திருக்கப் படக்கூடியது,அவர்கள் மேலும் சிறிது எச்சரிக்கையாக இருந்திருந்தால் !


அவர்கள் குறிவைத்துக் கொல்லப் பட்டிருப்பது,தீவிரவாதிகள் தெளிவான செயல் திட்டத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

()


நாரிமன் கட்டடத்தில் மீட்கப் பட்ட பிணையாளர்களின் உடல்கள் விவரிக்க இயலா சித்ரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விவரங்களை சொல்ல மறுக்கும் அவர்கள் மும்பையின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்த அளவுக்கு சிதைத்துக் கொல்லப் பட்ட உடல்களை இப்போதுதான் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

()


தீவிரவாதிகள் எதிர்பார்க்காத ஒரு விதயம் உயிரோடு ஒருவன் மாட்டியிருப்பது.சிறிது புத்திசாலித்தனம் காட்டிய காவலர்களால் இது சாத்தியமானது.மேலும் விவரங்கள் வரும்போது பல முடிச்சுகள் அவிழலாம்.


இந்த சூழலில் பல 'தியரிகளை' அவிழ்த்து விடும் சில முஸ்லிம் நண்பர்களின் பதிவுகள் அவர்களின் உத்தேசங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன்.

()


சிதம்பரம் உள்துறைக்கு மாற்றப்பட்டிருப்பதும்,பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உயர் அதிகாரியை அனுப்புவதிலிருந்து பின்வாங்கியதும்,பாக் படைகள் எல்லையில் குவிக்கப் படலாம் என்பதும் மேலதிக செய்திகள்.


இந்த மயான சூழலில் அப்பாவி மும்பைக்கர்களும் மும்பைக்குச் அடிக்கடி செல்லும் தேவையிருப்பவர்களும்தான் தாங்க முடியாத உள்ளக் கொதிப்பில் இருக்கிறார்கள்.

ஒரு ட்வின் டவர் தாக்கப் பட்டவுடன் உலகம் முழுக்க சந்தேகப் பட்ட இடங்களில் எல்லாம் குண்டு மழை பொழிந்தார் அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு ஜோக்கர் பிரசிடெண்ட் என்று கருதப் படும் புஷ்;ஒரு பேருந்து நிலைய,ரயில் நிலையக் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தீவிரவாதிகளுக்கெல்லாம் ஆப்படித்து வைத்திருக்கிறது இங்கிலாந்து; 12 முறை மும்பையும் நாட்டின் பல பகுதிகளும் தாக்கப் பட்டபோதும் மமோசிங் மட்டும் தாடியைத் தடவிக் கொண்டு டிவியில் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்.

வெட்கத்தில் நாம் நாமே தூக்கு மாட்டிக் கொள்ளலாம் !


குண்டடி படாமலாவது சாவோம் !!!!



-அவுட்லுக் மற்றும் ரீடிஃப் தளங்களுக்கு நன்றியுடன்

6 comments:

  1. நாரயணன் போன்ற அதிகாரிகளையும்(சொந்த விறுப்பு வெறுப்புகளுக்காக நாட்டின் தலயாய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், முக்கியத்துவம் குறைந்த பிரச்சனைகளில் நாட்டின் ஒட்டு மொத்த பாதுகாப்பு படையினரையும் திசை திறுப்பி மக்களின் பாதுகாப்பை கோட்டை விட்டவர்) , சிவராஜ் போன்ற அமைச்சர்களையும்(நாட்டிற்கு தேவையானவற்றை focus செய்து bureaucrats ஐ முடுக்கி விட தெரியாதவர்.Home ministry என்பது நேரு குடும்பத்தினரின் வீட்டை மற்றும் பார்த்து கொள்வது என்று தவறாக புரிந்து கொண்டவர்) வைத்து கொண்டு இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும். இதை பற்றிய என்னுடைய பதிவு

    ReplyDelete
  2. //12 முறை மும்பையும் நாட்டின் பல பகுதிகளும் தாக்கப் பட்டபோதும் மமோசிங் மட்டும் தாடியைத் தடவிக் கொண்டு டிவியில் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்.//

    படுகேவலம், இன்னேரம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையே அழித்திருக்க வேண்டாமா ? பாகிஸ்தானுக்கு பாடம் நடுத்தி தீவிரவாதிகளுக்கு உணர்த்தி இருக்க வேண்டாமா ?

    பொம்மை அரசுகள் ! :(

    ReplyDelete
  3. //12 முறை மும்பையும் நாட்டின் பல பகுதிகளும் தாக்கப் பட்டபோதும் மமோசிங் மட்டும் தாடியைத் தடவிக் கொண்டு டிவியில் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்.//

    ஹ்ம். வேதனையான உண்மை இது.

    ReplyDelete
  4. @சதுக்கபூதம்:
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    தங்கள் இடுகையைப் பார்த்தேன்.
    உள்துறைக்கு ஒரு அதிகாரி சரியான பங்களிக்க முடியுமா என்பதில் எனக்கு சந்தேகங்கள் இருக்கின்றன.
    உள்துறை அமைச்சர் ஒரு தலைவராகவும் இருக்க வேண்டிய அவசியங்கள் அரசியலில் இருக்கின்றன.

    இணை அமைச்சராக வேண்டுமானால் துடிப்பான அதிகார்களை அமர்த்தலாம்.

    @கோவி.கண்ணன்

    நன்றி,உங்கள் லைனில்தான் பலரும்-நானும்,யோசிக்கிறோம்.

    பாக்.கின் தீவிரவாத பயிற்சிக் களங்களை தாக்கி இந்திய அரசு அழிப்பதை எது தடுக்கிறது என்பது புரியவில்லை.

    இந்தியாவிடம் சரியான ஆதாரங்கள் இருக்கும் போது இந்தியா செயல்படவேண்டும்.

    அமெரிக்காவும் இங்கிலாந்தும் சுற்றிவளைத்துச் சொல்லியும் விட்டார்கள்,இந்தியா எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவாய் இருப்பதாக!

    அதற்கான உளத்திண்மை இந்தியாவிடம் இல்லை என்றே சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

    @சர்வேஸ்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    நீங்கள் சுட்டியிருப்பதும் சரி.பிபிசி கூட மிக அதிக கவரேஜ் கொடுத்தது.ஒருவேளை பிரிட்டிஷ் பிரஜைகள் மாட்டிக் கொண்டிருந்ததால் இருக்கலாம்.

    ReplyDelete
  5. //பாக்.கின் தீவிரவாத பயிற்சிக் களங்களை தாக்கி இந்திய அரசு அழிப்பதை எது தடுக்கிறது என்பது புரியவில்லை.
    //

    இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள். அணு ஆயுத போர் வந்தால் பொருளாதார ரீதியாக இழப்பதற்கு பாக்கிஸ்தானிடம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் இந்தியா நிலை அப்படி அல்ல.இந்தியா இப்போது தான் உலக அளவில் பொருளாதார ரீதியாக குறிப்பிட்டு சொல்லும் படி முன்னேறி வருகிறது. அணு ஆயுத போர் வந்தால் இந்தியாவுக்கு இழப்பு மிக அதிகம்.அதை ஈடு செய்ய பல வருடங்கள் ஆகலாம். அந்த இடைபட்ட காலத்தில் உலகில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையை பிற நாடுகள் ஆக்கிரமித்து கொள்ளும். பாக்கிஸ்தானை பொருத்த வரை என்றுமே அது மேலை நாடுகள் மற்றும் அரபு நாடுகள் போடும் பிச்சையில் தான் வாழ்ந்து கொன்டிறுக்கிறது

    ReplyDelete