நண்பர்களே,என்னுடைய நண்பர் ஒருவரின் கல்வி உதவித்திட்டம் பற்றி இங்கு சொல்லியிருந்தேன்.
அவர் தன்னுடைய முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
இந்த முயற்சிக்கான ஒரு தனி வலைமனை உருவாக்கப்பட்டு இப்போது 3 மாணவர்கள் உதவி பெற தயாராகி விட்டார்கள்.தற்போது இரண்டு ஸ்பான்சர்கள் முன்வந்திருக்கிறார்கள்.
விவரங்களை இணையப் பக்கத்தில் பார்க்கலாம்.
மேலும் இணைய விருப்பமிருப்பவர்களை,விவரம் அறிய விரும்புகிறவர்களை,பிற உதவிகள் செய்ய விரும்புபவர்களையும் வரவேற்கிறோம்.
Pages - Menu
▼
Saturday, August 16, 2008
Friday, August 15, 2008
70.வாழிய பாரத மணித்திரு நாடு !
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.
ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
வாழிய பாரத மணித் திரு நாடு !
*********************************************
அகிலமெங்கும் இருக்கும் ஒவ்வொரு இந்தியத்
தோழனுக்கும்,தோழிக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள் !
Let's be a PROUD INDIAN by our thoughts,words & deeds !!!
**********************************************