Pages - Menu

Friday, August 15, 2008

70.வாழிய பாரத மணித்திரு நாடு !




பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)




வாழிய பாரத மணித் திரு நாடு !

*********************************************

அகிலமெங்கும் இருக்கும் ஒவ்வொரு இந்தியத்

தோழனுக்கும்,தோழிக்கும்

சுதந்திரதின வாழ்த்துக்கள் !

Let's be a PROUD INDIAN by our thoughts,words & deeds !!!

**********************************************

1 comment:

  1. அறிவன்

    நன்றிகள், உங்களுக்கும் குடும்பத்தினர்க்கும, நண்பர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    இந்தியா வில் இருக்கும் பேச்சு, எழுத்து சுதந்திரம் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது.

    வேற்றுமையில் ஒற்றுமை காணும் மகிழ்ச்சியும் கூட வேறு எங்கும் கிடையாது.

    இங்குதான் சிலம்பு அதிகாரமும் உண்டு, சிலுக்கு அதிகாரமும் உண்டு.

    வாழ்த்துக்களுடன்

    குப்பன்_யாஹூ

    ReplyDelete