நண்பர்களே,
வலைப்பதிவில் நமது எண்ணங்களை எழுதுகிறோம்;சிந்தனைகளைப் பகிர்கிறோம்;சில சமயம் மொக்கைக் கும்மிகளும் அடிக்கிறோம்;சின்னஞ்சிறு கதைகள் பேசுகிறோம்;மனம் வாடி வருந்துகிறோம்;பிறரை மகிழவும் வாடவும் வைக்கிறோம்...
சில சமயம் ஆக்கபூர்வமான நிகழ்வுகளும் நடக்கின்றன.(பாலா ஒரு முயற்சி எடுத்து இயற்கையின் உடலியல் சவாலுடன் இருந்த ஒரு வாலிபருக்கு மடிக்கணினி வழங்கிய நிகழ்ச்சிகள் செய்திகளாக வந்தன)
என்னுடைய நல்ல நண்பரும்,ஒத்த சிந்தனையுடையவரும்,பணி சகாவுமான ஒருவர் இப்போது தாயகம் திரும்பி பெங்களூருவில் ஒரு நிரந்தப்பணியில் அமர்ந்திருக்கிறார்.பிறப்பால தெலுங்கரான அவர் ஒரு நல்ல முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.
நல்ல கல்வித் திறம் கொண்ட,ஆனால் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கிய மாணவ,மாணவியருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ஒரு அமைப்பை உருவாக்க விரும்பி,முன்னோடியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.
90 % க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற,ஆண்டு வருமானம் 25000 க்குள் இருக்கும் சூழலில் இருக்கும் மாணவ மாணவியர் இந்த உதவித் திட்டத்தில் வருகிறார்கள்;இவர்கள் பொறியியல் படிப்பிற்கான நான்கு ஆண்டு கல்லூரிச் செலவை மேற்கொள்ளும் நீண்ட காலத் திட்டம் இது.
வெளிநாடுகளில் பணியாற்றும் மென்பொருளாளர்கள்,எனது நண்பரின் சொந்த ஊரைச் சார்ந்தவராக இருந்து,இந்த இணைப்புக் கண்ணியில் பங்கேற்கும் விருப்பம் இருப்பவர்கள்,அவரைத் தொடர்பு கொள்ளலாம்.விவரங்கள் இங்கே.
அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இல்லாவிட்டாலும்,இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்;தமது சொந்த ஊர் என்று வரும் போது ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பதால் மேற்சொன்னவாறு குறிப்பிட்டேன்;எவரும் இணையலாம்.
அவர் இந்த தொடர்பு உதவி பெரிய அளவில் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று நம்புகிறார்.இதற்கான தனி வலை மனையும்,ஒரு ட்ரஸ்ட்டும் தொடங்கும் முயற்சிகளில் இருக்கிறார்.
வாழ்த்துவோம்;விருப்பமுள்ளவர்கள் கை கோர்ப்போம் !
It is good news I wish all the success friend.Arivan and your AP friend.
ReplyDeletepuduvai siva
முழு கருத்து சுதந்திரம் இருந்தது அறிவன். ஜீன் 1 என் கவிதை நூல் வெளியீடு நடந்த அன்றே தொலைக்காட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்ளக்கேட்டு மூன்றாம் நாள் ஒளிப்பதிவு செய்தார்கள்.
ReplyDeleteமேடையில் பேச நேரும்போதெல்லாம் நான் எப்போதுமே எழுதிக்கொண்டு வந்துவிடுவது வழக்கம்.
இது போன்று தொலைக்காட்சி கலந்துரையாடல் என்பது முதல் முறை, மேலும் அவர்கள் என்ன கேள்வி கேட்பார்கள் என்பதும் நிகழ்ச்சியின் போதுதானே தெரியும்.
என் மனதில் தோன்றியவற்றையே பேசினேன்.
பொதுவாக இது போன்ற நிகழ்ச்சி எதிரொலியின் மூன்று பகுதிகளில் ஒரு பகுதியில் இடம்பெறும் ஆனால் அன்று கருத்துகள் நிறைய இருந்ததால் இரண்டு பகுதியில் இடம்பெற்றதாம்.
நிச்சயமான நல்ல முயற்சி. இதுவரை அனைவரும் தொடக்ககல்விக்கு தான் உதவி புரிந்து வந்தனர். நாங்கள் ஒருமுறை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு டிரஸ்ட் பண்டை உபயோகபடுத்த முயன்ற பொழுது கடும் எதிர்ப்பை சந்தித்தோம். முயற்சியை கடைசியில் கைவிட்டோம். உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeletedear brother
ReplyDeletei am happy that you could give me a good lead
i believe in that if you are not capable of organising on your own at least try to support some genuine people who are already at it and i find one in sri p mallikarjuna rao and i have committed for one sponsorship
thanks once again
r radhakrishnan
நண்பர் ராமசாமி,
ReplyDeleteமிகவும் நன்றி.
உங்கள் முகவரியோ தொடர்பு விவரமோ அளித்தால் மகிழ்வோம்.