Pages - Menu

Wednesday, February 6, 2008

41-திராவிடம் மற்றும் தமிழ்மொழி இலக்கியம்

திராவிடம் என்ற சொல் சற்றேறக்குறைய 60 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அனைவரும் அன்றாடம் கேட்கும் சொற்களில் ஒன்று எனச்சொன்னால் அது மிகையல்ல;திராவிடம் என்ற சொல் வழங்கி வருகிறதே தவிர திராவிடம் என்ற சொல்லின் பொருள் என்ன என்பது பற்றியோ,அதன் வேர்ச்சொல்,பொருள் பற்றியோ இன்றைய திராவிடக் குடிதாங்கிகள் அறிவார்களா என்பது சந்தேகமே.
ஒரு காலத்தில் இந்திய தேசம் முழுதுமே ஒரே மொழி பேசப்பட்திருக்கக் கூடிய சாத்தியம் இருந்திருக்கிறது;அதை ‘பழந்திராவிட மொழி’ என ஆராய்ச்சியாளர்கள் குறிப்புச் சொல்லாக அழைக்கிறார்கள்.காலப் போக்கில் வட இந்தியாவில் வடகிழக்குக் கணவாய் வழியாகத் துரானியர்களும்,வடமேற்குக் கணவாய் வழியாக ஆரியர்களும் வந்து வட இந்திய மக்களோடு கலந்து ஒன்றானார்கள்.இதனால் வட இந்தியப் பகுதியில் பேசப்பட்டு வந்த மொழி பல மாறுதல்களுக்கு உட்பட்டு,பிராகிருதம்,பாலி முதலிய மொழிகள் தோன்றின.
வட இந்தியாவின் வடமேற்கே பலூசிஸ்தானத்தில் ஒரு சாரார் பேசும் மொழி பிராகூய்(Brahui).இம்மொழியின் இரட்(இரண்டு),முசிட்(மூன்று) முதலான எண்ணுப் பெயர்களும்,வாக்கிய அமைப்பும்(Syntex),மூவிடப் பெயர்களும்(தன்மை,முன்னிலை,படர்க்கை) போன்ற இயல்புகளும் தமிழைப் போலவே இருப்பதும்,வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தமிழுக்குமான வாக்கிய அமைப்பு இன்றளவும் பெருமளவு ஒத்திருப்பதாலும்,இந்த ‘பழந்திராவிட’ மொழி தமிழாகவே இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் பெருமளவு சாத்தியம் என்பதும் ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
இந்த திராவிடம் என்ற சொல் பிற்காலத்திலேயே ஏற்பட்டது;இது தமிழ் என்ற சொல்லின் திரிபே என்பதும் நூலாய்வர்களின் முடிவு.திராவிடம் என்ற சொல் தமிழ்,தமிள,த்ரமிள,த்ரமிட,திரபிட,திரவிட என்று திரிந்தமைந்தது என்று விளக்கம் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆயினும் துரானியர்,ஆரியர் கலப்பிற்குப் பிறகு வட இந்தியாவில் பிராகிருதம்,பாலி போன்ற மொழிகள் செல்வாக்குப் பெற,தென்னிந்திய அளவில் பழந்திராவிட மொழி-தமிழ்- குறுகவேண்டிய நிலை ஏற்பட்டது.
காலப்போக்கில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள்,மக்கள் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குப் செல்வதில் உள்ள சிரமங்கள் இவற்றால் இந்த வேற்றுமைகள் தென்னிந்திய அளவிலும் பல பிராந்தியங்களில் வேறுபட்டன.

தெற்கே இருப்பவர்கள் பேசிய மொழி தமிழ் எனவும்,திருப்பதி மலைக்கு வடக்கே இருப்பவர்கள் பேசிய மொழி தெலுங்கு எனவும்,மைசூர்ப்பகுதி பேசிய மொழி கன்னடம் எனவும் வேறாக வளர்ந்தது;இவை வெவ்வேறு மொழிகளாக வளர்ந்தது.இந்த நான்கு மொழிகளுக்குள் இன்றளவும் சுமார் ஐந்தாயிரம் சொற்கள் பொதுவானவையாக உள்ள விதயம்,சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஆயினும் தமிழுக்கு மட்டுமே நீண்ட இலக்கிய வரலாறு இருக்கிறது.



-இன்னும் வரும்

5 comments:

  1. சிவகாமியின் சபதத்தில் புலிகேசி, பிராகிருதமும் தமிழும் கலந்து பேசிய மொழிதான் பிற்காலத்தில் கன்னடம் என்றழைக்கப்பட்டது என்று கல்கி குறிப்பிட்டிருப்பார். இது எந்த அளவிற்கு உண்மை?

    ReplyDelete
  2. உங்கள் தொடர் பல விஷயங்களைத் தெளிபுவடுத்துகிறது..இன்னும் தகவல்கள் அறிய ஆவல்

    ReplyDelete
  3. லெமூரியன்,பாசமலர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    லெமூரியன்,உங்கள் வினாவிற்கு இரண்டாம் பகுதியில் விளக்கம் அளிக்கிறேன்.
    மலர்,பாராட்டுகளுக்கு நன்றி..தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete
  4. விடாது கருப்பு அவர்களை கூப்பிட்டு உனக்கு பதில் எழுதச் சொன்னால்தான் நீ ஒத்து வருவே போல தெரியுது பாப்பார நாயே.,

    உன் வலப்பக்கம் உள்ள தொடுப்பெல்லாம் பாப்பார நாய்களும் பார்ப்பன அடிவருடி பரதேசிகளுமா தெரிகிறதே?

    ReplyDelete
  5. வாலைக் காலுக்குள் நுழைத்துக் கொண்டோடும் ஒரு குரைக்கும் நாய் என் கண்ணில் தெரிகிறது !!!!

    ReplyDelete