Pages - Menu

Tuesday, February 19, 2008

43-ஞாநியின் இடமாற்றமும்,விகடனின் முக மாற்றமும்

ஞாநி அனைவரும் அறிந்த பத்திரிகையாளர்களில் ஒருவர்;சுமார் 33 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர்.அவரது ஒரு நாவல்-ஒரு டிவி மீடியா நபருக்கும்,அவரது இளமைக் கால தோழிக்கும்,அரசியல் பித்தலாட்டங்களுக்குமிடையான சம்பவங்களின் தொகுப்பான கதை.எனக்கு ஓரளவு பிடித்த நாவல்களில் அதுவும் ஒன்று.

அவரது கட்டுரைகளின் கருத்துக்களில் பலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.எனக்கும் அவரது கருத்துக்கள் அனைத்திலும் முழு உடன்பாடு என்றும் பொருளில்லை.
அவர் சில மாதங்களாக(வருடங்களாக?) ஆவி.யில் 'ஓ பக்கங்கள்' எழுதிக் கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரியும்.சமீபத்தில் அது நிறுத்தப்பட்டது;போன வாரத்திலிருந்து அவர் குமுதம் இதழில் ஓ பக்கங்களைத் தொடர்கிறார்.

பின்புலத்து விதயங்களில் சில சுவாரசியமானவை.

ஞாநி எழுதிய அரசியல் கட்டுரைகளில் சில ஆளும் திமுக தரப்புக்குப் பிடிக்காதவை என்பது ஊரறிந்த ரசசியம்,குறிப்பாக திமுக தலைமைக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற பொருளில் அவர் எழுதிய கட்டுரை,மற்றும் வேறு சில.

அதற்குப் பரவலான எதிர்வினை எழுந்தது;எவரது எழுத்துக்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே.ஆனாலும் அவரின் கட்டுரைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களும்,கண்டனக் கூட்ட்ங்களும் நடந்தன.

திமுக’வின் சமீப வெளிச்சப் பிரமுகர் தமிழச்சி கூட்டிய கூட்டத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் உதிர்க்கப்பட்டன. குறிப்பாக ஒருவர் ஞாநி இலக்கியப் பத்திரிகையில் எழுதினால் ஒன்றும் பிரச்னையில்லை;வெகுஜனப் பத்திரிகையில் எழுதுவதுதான் பிரச்னை எனக் கூறினாராம்.

சிறிது காலத்தில் விகடனிலிருந்து அவர் வெளியேற்றப் பட்டார்.

விகடன் !

இதே பத்திரிகைதான் எம்ஜிஆர் காலத்தில் பிஹெச்.பாண்டியனின் கருத்தை விமர்சித்து வெளியிட்ட கார்ட்டூனை மறுக்கவோ,திரும்பப் பெறவோ முடியாது என் உறுதியாக மறுத்து,சட்டமன்ற உரிமைப் பிரச்னையை எதிர்நோக்கி,ஆசிரியர் பாலு சிறை சென்று,பின் வழக்காடி,அரசை வென்று,அபராதம் வசூலித்து,அக் காசோலையை பணமாக்காது,சட்டமிட்டு ஆசிரியர் பாலு’வின் அறையில் மாட்டி பெருமிதப்பட்ட பத்திரிகை.

இன்று அரசின் தலைமையை ஒருவர் விமர்சித்தார் என்பதற்காக அதே பத்திரிகை ஒரு நிரூபிக்கப் பட்ட எழுத்தாளரை வெளியேற்றியிருக்கிறது !

நிச்சயம் அரசின்,கட்சியின் அழுத்தங்கள் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அரசின் தலைமை ஒரு அறியப்பட்ட பத்திரிகையாளரும்,அப்படி அழைக்கப்படுவதில் பெருமை கொள்பவரும்,பத்திரிகையாளர்களுடன் சுமுகமான உறவைப் பேணுவதில் கவனம் வைப்பவர் என்றும் பரவலாக அறியப்படுபவர்;
செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தர்கள்
ஆண்ட நாட்டைத் தான் அவரும் ஆட்சி செய்கிறார்;அந்த சொற்றொடரை ஆய்ந்தும், பொருள் விரித்தவர் அவர்,ஆனாலும் இப்போது அதை நினைவில் கொள்ளவோ, பொறுக்கவோ இயலவில்லை போலிருக்கிறது !

குமுதம் எத்தனை நாளைக்குப் புகல் அளிக்கும் என்பதும் பொறுத்துப் பார்க்க வேண்டிய ஒன்று !

காலங்கள் மாறும்;காட்சிகள் மாறும்;அரசியல் என்பது பொய்வேஷம் !!!!

17 comments:

  1. என்னை பொறுத்தவரை இதன் பின்னும் ஞானி அரசை விமர்சிப்பதில் இருந்து பின்வாங்ககூடாது. யாருமே கேள்வி கேட்க கூடாதென்றால் அது ஜனநாயகம் அல்ல சர்வாதிகாரம்

    வால்பையன்

    ReplyDelete
  2. முதலில், நீங்கள் குறிப்பிடுபவர் ஞானி அல்ல. ஞாநி. தமிழ் எழுத்துலகில் ஞானி என்ற பெயருக்குரியவர் நிகழ் என்ற சிற்றிதழை நடத்திய, மார்க்ஸிய விமரிசகரான கோவை ஞானி ஆவார். ஞாநி, பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வந்ததால் பரீக்ஷா ஞாநி என்றும் அறியப் படுபவர்.

    //அக் காசோலையை பணமாக்காது,சட்டமிட்டு //

    இது தவறான தகவல். உண்மையில் அந்தக் காசோலை ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு, பின்பு பணமாக்கப்பட்டு, நகலும் பணமும் சேர்த்து சட்டமிடப்பட்டன. இதை மதன் தன் பதில்கள் பகுதியில் அப்போதே தெளிவு படுத்தியிருந்தார்.

    வலையில் எழுதுபவர்கள் சிறுசிறு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  3. டெஸ்ட்

    ReplyDelete
  4. வால்பையன்,மற்றும் பெயரிலி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வால்பையன்,உங்கள் கருத்தே எனக்கும்.
    நீ எழுதிய,தெரிவித்த கருத்தில் எனக்கு முழுக்க,முழுக்க உடன்பாடில்லை;ஆனால் அதைத் தெரிவிக்கும் உன் உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் எனச் சொன்ன(வால்டேய்ர்?) கருத்தை மதிப்பவன் நான்.

    பெயரிலி,
    நீங்கள் சொன்னது சரி.பிறிதொரு கோவை 'ஞானி'யையும் அறிவேன் எனினும் பின்னிரவில் பதிந்த பதிவில் தவறு ஏற்பட்டுவிட்டது.சுட்டியத்ற்கு நன்றி.
    காசோலை சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டது என்று படித்த நினைவு;நீங்கள் சொன்னதும் சரியாக இருக்கலாம்.
    ஆனால் காசோலை மாற்றப்பட்டு சட்டமிடப்பட்டதற்கும்,மாற்றப்படாமல் சட்டமிடப்பட்டதற்கும்,இப்பதிவின் சாரத்திற்கும் ஏதும் மிகு தொடர்பு இல்லாத்தால்,ஒன்றும் பாதிப்பில்லை என்றே நினைக்கிறேன்;என்றாலும் எழுதும் முன் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. எனது குடும்பத்தாரை தொடர்பித்து,தேர்ந்த வசவு மொழிகளில் ஐந்து ஜந்துக்கள்-பெயரிலிகளாகவும்,பொய்ப் பெயர்களிலும் பின்னூட்டமிட்டிருந்தார்கள்;இருவர் சிங்கப்பூரில் வாழ்பவர்கள் என்பது எனக்குத் தெரியவந்தது.அவற்றின் மொழி-எனக்கு சிறுவயதில் காதில் விழுந்த,பரிச்சயமான,மொழிதான்;தேவையெனில் அதைவிடவும் தேர்ந்த மொழியை நான் அவர்களுக்குப் பரிசளிக்கவும் முடியும்;ஆயினும் சூரியனைப் பார்த்துக் குரைக்கும் நாய்களாக அவை இருப்பதால்,அவை குப்பைக்குச் சென்றன.
    அவர்களின் பேரன்பு வார்த்தைகள் அவர்களுக்கே உரித்தாகின்றன;அன்னார்களின் மனைவியரும்,அன்னையர்களும் என்னை மன்னிக்க !
    கருத்தையும்,அரசாண்மை விதயங்களையும் சிறிதும் யோசிக்காத,அந்த எதிர்வினை,ஒருவகையில் எனது எழுத்தின் கருத்து நேர்மைக்கு ஒரு உறைகல் .இதைப் பற்றி எழுதியதற்கே அடிப்பொடிகள் இப்படி எழுர்வினையாறும் போது,ஞாநி என்னவற்றை சந்தித்திருப்பார் என்பது தெற்றென விளங்குகிறது.
    அடிப்பொடிகள் காலவிரயம் செய்ய வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறேன்;ஏனெனில் கீழ்த்தர விமர்சனங்கள் பதிவுப் பார்வையைப் பொறுத்தவரை நேரடியாகக் குப்பைக்குச் செல்லும்;இரண்டாவது அவை என்னால் ஏற்கப்படாத போது உங்களுக்கேயானவை,உங்கள் மனைவியருக்கும்,அன்னையருக்கும் உங்களால் பரிசளிக்கப்படுபவை !!!!

    ReplyDelete
  6. குமுதத்தில் வெளிவந்த 'ஓ-பக்கங்களின்' இரண்டு பகுதியை குமுதத்திற்கு நன்றி தெரிவித்து இங்கே வெளியிட்டுள்ளேன்.

    முடிந்தால் ஒருமுறை இங்கே பார்க்கவும்


    http://tamizh2000.blogspot.com/2008/02/2.html

    http://tamizh2000.blogspot.com/2008/02/1.html

    ReplyDelete
  7. pls visit www.lightink.wordpress.com

    ReplyDelete
  8. //குமுதம் எத்தனை நாளைக்குப் புகல் அளிக்கும் என்பதும் பொறுத்துப் பார்க்க வேண்டிய ஒன்று !//

    இது சரியான கேள்வி.

    எனக்கு இரண்டு அடிப்படை சந்தேகங்கள்:

    1. விகடனில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதற்கு (அல்லது தேனே வெளியேறியதற்கு ஞாநியே சொல்லாத காரனத்தை ஊகித்து கருணாநிதியைக் கண்டித்து எழுதுவது சரிதானா?

    2. தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக பத்திரிக்கையை மாற்றிக் கொள்ளும் இந்த "எழுத்தாளர்கள்" எந்தத் தகுதியில், கொள்கை வேறுபாடுகளுக்காகக் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகளைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சனம் எழுதுகிறார்கள்?

    //அரசியல் என்பது பொய்வேஷம் !!!!//

    இப்படியே சொல்லிப் பிழைப்பு நடத்துவோரின் செயல்கள் மட்டும்????

    ReplyDelete
  9. தமிழ்நெஞ்சம்,சக்தி,ரத்னேஷ்,
    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    தமிழ்நெஞ்சம்,எனக்கு எந்த அரசியல் நிறமும் இல்லை;என் சிந்தனைக்கு நேர்மையாகத் தோன்றுவதை சுட்டுகிறேன்.
    தங்கள் சுட்டிகளையும் படித்தேன்.

    சக்தி,
    எதற்காகச் சுட்டி அளித்தீர்கள் எனத் தெளிவு பெறமுடியவில்லை.
    ரத்னேஷ்,
    ஞாநியின் குமுத ஓ பக்கங்களை ஒருமுறை படித்துவிடுங்கள்;உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கக்கூடும்..

    ReplyDelete
  10. after I read rathnesh comments about GNANI ,now I understand his comments about Kamaraj.He is a thondaradipodi of tamilina thalaivar karunanidhi.(kindly forget kalaignar's 67 koottani with rajaji,71 koottani with Indira after with pandara paradeshi katchy.)for the sake of power his leader is ready to do anything.so mr.rathnesh you have no any moral right to comment on anybody weather it is gnani or kamaraj.

    ReplyDelete
  11. பெயரிலி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி;ஆயினும் நீங்கள் சொந்தப் பெயரில் வந்திருக்கலாம்.

    ரத்னேஷ்,
    பெயரிலியின் பின்னூட்டம் உங்களை மையப்படுத்தி இருந்ததால்,வெளியிட வேண்டாமென நினைத்தேன்;ஆயினும் நீங்கள் அளித்த கருத்தையும் ஒட்டிச் சென்றதால் வெளியிட நேர்ந்தது;சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  12. >>>2. தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக பத்திரிக்கையை மாற்றிக் கொள்ளும் இந்த "எழுத்தாளர்கள்" எந்தத் தகுதியில், கொள்கை வேறுபாடுகளுக்காகக் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகளைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சனம் எழுதுகிறார்கள்?>>>

    இப்படி எழுதும் அளவிற்கு பதிவர் அப்பாவியா அல்லது அபத்தமானவரா என்பது தெரியவில்லை.
    ஞாநி ஒரி அரசியல் விமர்சகர்;இதைத் தெரிந்தே விகடன் அவரை அம்ர்த்தியிருக்கும்;ஞாநி எழுதிய கட்டுரைகளை வெளியிடும் போதும் விகடன் அதை படித்து விளைவுகளை எதிர்நோக்கியே வெளியிட்டிருக்கும்.
    ஆக வெளியிட்ட பிறகு அவர் மேலும் எழுத முடியாத சூழல் பத்திரிகையால் கொடுக்கப்பட்டால்,அதற்குப் பத்திரிகைக்கும் பின் உந்துதல்கள் இருந்திருக்க வேண்டும்;ஒன்று மறுப்பு வெளியிடு அல்லது ஞாநியை வெளியேற்று என்று choice கொடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.இந்த சூழ்நிலையில் ஒரு அரசியல் விமர்சகப் பத்திரிக்கையாளர் இன்னொரு வெகுஜனப் பத்திரிகை வெளியிட இடம் தரும்போது அங்கு எழுதுவது இயல்பான ஒன்று.
    ஆனால் அரசியல் கட்சிகள் கூட்டணி மாறுவது 'கொளுகை' வேறுபாடால் அல்ல;அது பதவி படுத்தும் பாடு.
    ஒரு தேர்தொழிலையும்-profession-,பதவிப் பொறுக்கித்தனத்தையும் பதிவர் எப்படி ஒரே கோணத்தில் பார்க்கிறார் என்பது புரியவில்லை.

    ReplyDelete
  13. //தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக பத்திரிக்கையை மாற்றிக் கொள்ளும் இந்த "எழுத்தாளர்கள்" எந்தத் தகுதியில், கொள்கை வேறுபாடுகளுக்காகக் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகளைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சனம் எழுதுகிறார்கள்?//

    உங்க கருத்து எவ்வளவு அபத்தமா இருக்குன்னு திரும்ப (நேராகவே) ஒரு தடா படிச்சு ப்பாருங்க.

    இவர்கள் கருத்து சொல்ல முடியவில்லை என்று தானே பத்திரிக்கை மாறுகிறார்கள். பத்திரிக்கை மாறினாலும் சொல்லும் கருத்துக்கு கேடு ஒன்றும் வந்துவிடப்போவதில்லை. ஆனால், அரசியல் வியாதிகள் கொள்கை வேறுபாடுகளுக்காகக்(?, இதுவே கேள்விக்குட்பட்டது) கூட்டணியை மாற்றிக் கொள்கிறார்கள்? யப்பா...என்ன கண்டுபிடிப்பு...

    ReplyDelete
  14. பெயரிலி,சீனு,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. People who cannot tolerate Dr.MK's work write these. How to confirm his exit from A.V is due to the pressure. Can he dare to write such serious matter about J.

    ReplyDelete
  16. Hi Anony,
    Thanks for the arrival & opinion.
    If you read his 'O Pakkangal' in Kumudam,it is more than clear that politics is behind his exit from vikatan.It is very obvious.
    It's not a question of whether he can write the same against J,but what is political righteousness.
    We had seen 'Nakkeeran' Gobal doing the same against J fearlessly.
    And it is quite in explicable that lot of writers guild's had assembled at that time to condemn government at that time.
    At personal level,I reiterate again,that I try to point out that appears politically incorrect from a justified mind's view.

    ReplyDelete