Pages - Menu

Tuesday, December 11, 2007

30.ஸ்டெம்செல்கள் சிகிச்சையில் ஒரு புரட்சி

உங்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஸ்டெம் செல்கள் மனிதக் கருவின் உருவாகும் முதல் செல்கள் ஸ்டெம் செல்கள் என்றழைக்கப் படும்;இவையே மனித உயிரில்-கருவில் அனைத்து மனித உடலின் பாகங்களும் ஸ்டெம் செல்களில் இருந்தே வளருகின்றன.
சமீபத்தில் கூட ஆவி யில் ஒரு இரத்தப் புற்றுநோய் கண்ட ஒரு 29 வயது இளைஞனுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் உடலின் மொத்த ரத்த செல்களும் வெளியேற்றப்பட்டு புதிய ரத்த செல்களின் கூறுகள்,ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் செலுத்தப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டது செய்தியாக வந்தது.
எனவே ஸ்டெம் செல்களைப் பற்றி ஆராய வேண்டுமெனில் மனித கருமுட்டைகளிலிருந்துதான் ஆராய்ச்சி செய்ய முடியும்.
இதுபோன்ற சிக்கல்களின் காரணமாக ஸ்டெம் செல் பற்றிய ஆராய்ச்சிகள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஊக்குவிக்கப்படாமலோ,அரசின் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவோ இருந்தன.
ஆனால் இப்போது ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டிருக்கிறது;மனித தோல் செல்களில் இருந்தே ஸ்டெம் செல்களை உருவாக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இது மனிதகுலத்தின் பல தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கும் கட்டத்தின் முதல்படி.
இந்த சாதனை ஒரு ஜப்பானிய விஞ்ஞானியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மின்னனுவியல் உபகரனங்கள் மட்டுமே செய்ய முடிந்த ஒரு நாடு என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு நாட்டின் விஞ்ஞானி இந்த சாதனையை செய்தது ஒரு திருப்புமுனையே.
ஜப்பானின் யமானகா (Dr.Yamanaka) என்ற மருத்துவ விஞ்ஞானியே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.45 வயதாகும் இவர் எலிகளில் இந்த சோதனையை வெற்றிகரமாக முதலிலேயே நிகழ்த்தி இருக்கிறார்.
சாதாரண செல்களில் இருக்கும் சில க்ரோமோசோம்களில் மாஸ்டர் ரெகுலேட்டர் என்றழைக்கப்படும் சில ஜீன்களை இணைப்பதன் மூலம் சாதரண தோல் செல்கள்,ஸ்டெம் செல்களப் போலவே செயல்படுகின்றனவாம்.
ஆயினும் இன்னும் ஒரு கட்டம் பாக்கியிருக்கிறது,இப்போதைய முறையில் ரெட்ரோவைரஸ்(Retroviruses) என்றழைக்கப்படும் வைரஸ் கிருமிகளே ரெகுலேட்டர் ஜீன்களை,க்ரோமோசோம்களில் செலுத்தப் பயன்படுகின்றன;இந்த ரெட்ரோவைரஸ் தான் செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் கேன்சர் செல்களையும் தூண்டுகின்றன;எனவே இந்த ரெட்ரோவைரஸ்களின் துணையில்லாமல் ரெகுலேட்டர் ஜீன்களை க்ரோமோசோம்களில் செலுத்தும் கட்டம் வெற்றி பெரும் போது இந்த சோதனை முழுவெற்றியாகும்.

4 comments:

  1. ஹோ! இங்கு தான் இருக்கிறீர்களா? அதான் சந்தோஷா படம் போட்டிருக்கிறீகளா?
    அந்த ஸ்டெம்செல் திறன் வளர்ந்து இன்னும் 50 வருடம் வாழலாம் என்று சொன்னால்??
    எனக்கு வேண்டாம் என்று தான் தோனும். :-)

    ReplyDelete
  2. Hello Kumar,
    Thanks for coming & comment.I had been out of town for quite some time but returned offlate.
    We do not want life expectancy,but if somebody is going to die at the age of 16 with blood cancer or something,now possibilities of survival is bright.Certainly it is a breakthrough...

    ReplyDelete
  3. நாங்க சொன்னதெல்லாம் வரவில்லையே
    அதான் நம் நாட்டுல இருக்கரவங்க ஏன் இதை முயற்ச்சிக்க மாட்டேங்கராங்க

    ReplyDelete
  4. பு.த,வருகைக்கு நன்றி,ஆமா என்ன சொன்னீங்க,என்ன வரலை?
    நம் நாட்டிலே எதை முயற்சிக்க மாட்டெங்கறாங்க?

    ReplyDelete