Pages - Menu

Monday, September 3, 2007

எவை இனிது-சிந்திக்க சிறிது இலக்கியம்

நாமெல்லாம் சிறுவயதில் பள்ளியில் முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு படிக்கும் போது நன்னெறி,நல்வழி,இன்னாநாற்பது,இனியவை நாற்பது போன்ற சிறு வெண்பா நூல்கள் பாடப்பகுதியில் இருக்கும்.
இப்போதைய சிறார்களுக்கு(பல பெரியவர்களுக்கும் கூட) இது போன்ற பாடல்களின் பரிச்சயம் இல்லாதே போயிற்று.
இவை வழக்கொழிந்து போவது நமது குழந்தைகளுக்கும்,எதிர் கால தலைமுறைக்கும் நேரக்கூடிய பெரும் விபத்து என்றே நான் நினைக்கிறேன்.
அதனால் அவ்வப்போது இந்த பாடல்களை,எனக்குத் தெரிந்த கருத்துரையுடன் கொடுக்காலாம் என உத்தேசித்திருக்கிறேன்.
பசி இருப்பவர்கள் புசிக்கலாம்.
******************************************************************
வாழ்க்கையிலே குழந்தைப்பேறு’ங்கறது முக்கியமான் ஒன்னு.பெரும்பாலான்வர்களுக்கு குழந்தைகள் இருக்கும்;அவங்க நல்லாவும் படிச்சு,கிடிச்சு ஆளாவாங்க..ஆனா எத்தனை பேருக்கு பெத்தவங்க சொல்றதைக் கேட்டு அவங்க ஆசையையும் கொஞ்சம் கணக்குல வச்சுக்குவம்னு நினைக்கிற பிள்ளைங்க அமையுறாங்க?கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தானே?
இன்னுஞ்சில பேரு இருப்பான்..பெத்தவங்க கஷ்டப்பட்டும் பிள்ளைங்களை படிக்க அனுப்புவாங்க..ஆனா பசங்க எங்கையாயானும் ஊரை சுத்திபுட்டு கரெக்டா பள்ளிக்கூடம் விட்ற நேரத்துக்கு வீட்டுக்கு போயி நிப்பாங்க...இந்த நிலமையில செய்யுற தொழிலுக்குத் தேவையான கருவி இருக்காது;உழுகப் போறவன் கலப்பை இல்லாம வயலுக்குப் போனாப்பலதான்..என்ன பிரயோஜனம் இருக்கும்கிறீங்க..வரப்புல உக்காந்து வானத்தைப் பாக்க வேண்டியதுதான்...சரி அக்கம் பக்கம் இருக்குறவங்க கிட்ட உதவி,ஒத்தாசை கேக்காலாமேன்னு நமக்கு யோசனை சொல்லத் தோணும்...ஆனா மனுசப்பய குடியிருக்குற ஊருல ஒரு பயலோடவும் இவன் சேக்காளிய இருக்குறதில்லை..கேட்டா நான் உண்டு;என் வேலை உண்டுன்னு இருக்கேன்’னு கித்தாப்பா பதில் வேற சொல்லுவான்.
வாழ்க்கை என்னமோ ஓடும்...ஆனால் மனுசப்பய சந்தோசமா இருப்பானா?

பூதஞ்சேந்தனார்’னு ஒரு ஆளு.நம்ம தோழர் தான்.அக்காலப் புலவர்ல ஒருத்தர்.
இனியவை நாற்பது அப்படின்னு ஒரு 40 பாட்டை எடுத்து விட்டிருக்கார்.
அதுல இதுவும் ஒன்று.

ஏவது மாறா இளங்கிளைமை முன் இனிதே
நாளும் நவை போகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினுது ஆங்கினிதே
தேரின் கோள் நட்பு திசைக்கு
.

ஏவது மாறா-ஏவுகின்ற அலுவலை,வேண்டுகோளை மறுக்காது இருக்கின்ற/செய்கின்ற, இளங்கிளைமை-மக்களை,குழந்தைகளை கொண்டிருப்பது முன் இனிதே-முற்பட,மிகவும் இனியது,நல்லது,
நாளும் கற்றல்- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திலும் கற்பது-கல்வியோ,அனுபவமோ எதுவாயினும்,நவை போகான் – குற்றங்களின் வழி செல்லாது ( சீர்பட,கேடு இல்லாத கல்வி),ஏருடையான் வேளாண்மை- ஏர்(கலப்பையும் உழும் சாதனங்களும்) உடையவனின் விவசாயம்,தேரின் – தெளிந்து சிந்தித்தால்,திசைக்கு- செல்லும் வழிக்கு,போகின்ற ஊருக்கு, கோள்நட்பு- தேடிக் கொள்கின்ற நட்பு
.

இனியவைகளைத் தெரிந்து,தெறிவோம்.

No comments:

Post a Comment