Pages - Menu

Wednesday, April 20, 2016

190-வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்.

இன்றைய சூழலில் இந்திய தமிழக வழக்காடு மன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது பொதுவாக எவருக்கும் தெரிந்ததே. ஆனால் அரசியல் கட்சி சார்பற்ற, குண்டர்கள் தொடர்பில்லாத, வட்ட,மாவட்டங்களின் அடிப்பொடிகள் துணையில்லாத ஒரு சாதாரணன் தனக்கு ஏதேனும் அநீதி ஏற்பட்டால், தனக்கு நியாயம் வேண்டும் என்று நினைத்தால் செல்ல வேண்டிய இடமாக இருப்பது நீதி மன்றங்களும், காவல் நிலையங்களும்தான். இவற்றில் காவல் நிலையங்கள் ஒரு சராசரி மனிதனின் சுயமரியாதையைக் குலைத்து, அவனது தன்மானத்தைச் சிதைக்கும் குரூர வதை நிலையங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. உங்களது கல்வி, திறமை, பண்பாடு, அறம் போன்ற எந்த விழுமியங்களுக்கும் அங்கு வேலையில்லை.